Thursday, February 16, 2017

தமிழர்களின் அடையாளச் சிதைவும்,அரசியல் நீக்கமும்(depoliticize)(11)     'அடையாளம் சீர் மீட்பு' (Identity Rescue Operation):     

பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறம் 'கறுப்பு'

தமிழின், தமிழரின் அடையாள நிறம் 'காவியை' மீட்போம்


“1967க்குப் பின் முதல்முறையாக, முதல்வர் பன்னீர்செல்வத்தின் அரசானது, மக்களை மதித்து, உணர்ந்து, செயல்படத் தொடங்கிய போக்கானது, ராஜபட்சே பாணி சசிகலா குடும்ப சுயநல அரசியலில், 'கருச்சிதைவுக்கு' உள்ளாகியுள்ளது.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

தமிழக வரலாற்றில் 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் விட, அதிக முக்கியத்துவத்துடன் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டிய அளவுக்கு, அந்த 'கருச்சிதைவு' முக்கியமானதாகும்;

1938, 1965 போராட்டங்களில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களின் 'யோக்கியதையையும்' புரிந்து கொள்ள.

1967இல் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சியை பிடித்தபோது, என்ன நடந்தது? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

“1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த (முளையிலேயே கிள்ளும்) வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.” (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

1967இல் இருந்த பொதுவாழ்வு சூழலானது, அண்ணாவையும், ஈ.வெ.ரா அவர்களையும் மனம் வெறுத்து, பொது வாழ்விலிருந்து ஓதுங்கும் எண்ணத்தை தோற்றுவித்தது. 1944 முதல் அவர்கள் இருவரும் 'தொகுவிசைகளாக' (Resultant Forces) பயணித்த வழிமுறைகளே, அந்த விளைவிற்கு காரணம் என்ற ஆய்வில் ஈடுபட்டு, நிவாரணத்திற்கு முயற்சிக்கும் வயதை,  இருவரும் அன்று கடந்து விட்டார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1967இல் இருந்த பொதுவாழ்வு சூழலிருந்து, தலைகீழாக;

தமிழ்நாடானது கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில், சென்னை வெள்ள நிவாரணங்கள் மூலமாகவும், வெளியில் தெரியாமல், பாதிக்கப்பட்டவர்களுக்குதவி வரும் நிவாரணங்கள் மூலமாகவும், ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி மூலமாகவும்;

ஆக்கபூர்வ பொதுவாழ்வு சூழலுக்கான சமூக ஆற்றல்களானது 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ளது. அதை உணரும் வாய்ப்பானது, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் மூலம், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது.

1967இல் அண்ணா முதல்வரான போக்கின் தொடக்கமானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவு போக்கில் பயணித்து, 2017இல் முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்சியில், மக்களை மதித்து, உணர்ந்து, செயல்படத் தொடங்கிய போக்கானது, சென்னை வெள்ள நிவாரணம், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட வெற்றிகள்,  கிருஷ்ணா நதி நீர் மூலம் சென்னை குடிநீர் சிக்கலை தீர்த்தது, போன்றவை மூலம் வெளிப்பட்டு;

'குடிநீர் பிரச்சினை' உள்ளிட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இனி தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பயணிக்க தொடங்கிய கட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்புட்ன், சென்னை கடற்கரை எண்ணெய் கழிவுகள் அபாய மீட்பில் முதல்வர் ஈடுபட்டிருந்த சமயத்தில்;

அந்த 'கருக்கலைப்பு' நடந்துள்ளது: அநேகமாக 1967இல் தொடங்கிய 'திராவிட' அரசியலின் 'முடிவாக'.

1967இல் இருந்த பொதுவாழ்வு சூழலிருந்து, தலைகீழாக;

தமிழ்நாடானது கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாக, 'சசிகலா குடும்ப அரசியலானது' முன்புத்தியில்லாத, தற்கொலைப் பாதையில், பயணிக்கத் தொடங்கியுள்ளது.

பொதுவாழ்வு வியாபாரத்திலிருந்து தமிழ்நாடு மீளத் தொடங்கியுள்ள உச்சக்கட்டத்தில் (Climax);

சசிகலா குடும்ப அரசியலின்'' கவசங்களாக, 'காவிமய எதிர்ப்பு', (ஆய்வுகள் மூலம் 'செல்லாக்காசாகி'யுள்ள) 'ஆரிய Vs திராவிட',  'தனித் தமிழ்நாடு' போதைகள் பயன்பட வாய்ப்புகள் இருப்பதும், ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன.

“Natarajan has nurtured close ties with fringe Tamil extremist groups and far left cultural organisations that hide sinister separatist plans under a benign public agenda. Dravida Kazhagam leader Veermani is a good friend of Natarajan reflected by his frequent statements supporting Sasikala's ascension. A key member and advisor of Sasikala, Divakaran, made an incendiary speech threatening to play the Tamil race card.
It is alleged that some of the disturbance during the Jallikattu protests was engineered by fringe groups at the behest of Mannargudi Mafia to discredit OPS. Political observers in TN believe that resorting to such a game-plan of using street violence cannot be ruled out.” (https://swarajyamag.com/politics/can-ops-survive-the-machinations-of-the-mannargudi-mafia )

‘மாணவர்கள், இளைஞர்கள், சாதாரண மக்கள் எல்லாம், 'வெள்ள நிவாரணம்' மூலம் வெளிப்படுத்திய சமூக போக்கின் தொடர்ச்சியே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம். அதனை உணர்ந்து, 1967க்குப் பின் முதல்முறையாக,  முதல்வர் பன்னீர்செல்வத்தின் அரசானது, மக்களை மதித்து, உணர்ந்து, செயல்படத் தொடங்கிய போக்கானது, ராஜபட்சே பாணி சசிகலா குடும்ப சுயநல அரசியலில், 'கருச்சிதைவுக்கு' உள்ளாகியுள்ளது. பேரா.அ.மார்க்ஸ் போன்றவர்கள், 'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், அந்த 'கருச் சிதைவுக்கு' துணை போனார்களா? இனி, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தடையாகவே, தமது பயணத்தை தொடரப் போகிறர்களா, தமிழ்நாட்டை சீரழித்த சக்திகளின் 'நண்பராக'?, என்பதானது, வெகு விரைவில் தெளிவாகும். (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?; Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) தமிழ்நாட்டை சீரழித்த சக்திகளின் தேய்ந்து வரும் போக்கினையே, அரசியல் நீக்கத்தில் (Depoliticize) பயணித்து வந்த 'ஆதாய அரசியலை', மாணவர்களும், இளைஞர்களும் ஓரங்கட்டி, சாதித்த‌ ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியானது உணர்த்தியுள்ளது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/xenophobia-httpsen.html )

‘மேலே குறிப்பிட்டவாறு 'உணர்ச்சிபூர்வ பரிமாற்ற எதிர்ப்பில்' ('செனோபோபியா' நோயில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழும் அளவுக்கு; https://en.wikipedia.org/wiki/Xenophobia ) ஒன்று பட்டுள்ள 'பெரியார்' ஆதரவாளர்களும் சரி, 'இந்துத்வா' ஆதரவாளர்களும் சரி, தமிழ்நாட்டில் 'தமிழர்' என்ற அடையாளமானது, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் 'ஆக்கபூர்வ' திசையில், 'இணக்கமாகும் சமூக செயல்நுட்பம்' ( Harmonizing Social Mechanism) வளர்வதற்கு தடையாகவே, ஒருவருக்கொருவர் 'உதவி' பயணிக்கிறார்களா? அந்த திசையில் அறியாமையில் பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? அல்லது இந்தியாவில் தேச கட்டுமானமானது ( Nation Building) தற்சார்பு பெறுவதை சீர் குலைக்க முயலும், அந்நிய சூழ்ச்சியில் சிக்கி, பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? என்ற ஆய்வும் அவசியமாகி வருகிறது.

'தமிழர்' என்ற அடையாளத்தின் சமூக வலிமை தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட இரு சாராரின் தவறான அணுகுமுறைகள் காரணமாக;

'சமூக மூச்சுத் திணறலுக்கு' உள்ளாகி, அந்த மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க உதவிய 'ஜன்னலாக',  அந்த ' தமிழர் அடையாள' அடிப்படையில், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலமாக‌, வெளிப்பட்டபோது;

திராவிடக் கட்சிகளும், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், ஓரங்கட்டப்பட்டதற்கும்;

‘அந்த 'தமிழர்' அடையாள சமூக மூச்சுத் திணறலானது, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலம் வெளிப்பட்டதற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்குரியதாகும். அந்த 'ஜல்லிக்கட்டு போராட்ட ஆதரவு சக்திகள்' எல்லாம், ஆதாய அரசியலின் குவியமாகியுள்ள (Focus), சசிகலாவின் 'அரசியலை' எதிர்த்து, 'அலையாக' வளர்ந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு வளர்வது உண்மையானால், அந்த 'அலையானது', 'சுனாமியாக' வலுவாகி, உண்மையான பகுத்தறிவுக்கு விரோதமான, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு கேடயமான, 'ஆரிய - திராவிட' கருத்து கழிவினை, சுவடின்றி அழிக்கும் போக்கும் துவங்கி விட்டது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/depoliticize-10.html )

பிரமிக்க வைக்கும் தியாகத்துடனும், உண்மையுடனும், நேர்மையுடனும் பொதுவாழ்வில் பயணித்த ஈ.வெ.ரா அவர்கள், 1944இல் காலனிய சூழ்ச்சியில் 'திராவிடர்' அடையாளத்தை, மேற்கத்திய 'ரேஸ்' (Race) பொருளில் அரங்கேற்றி, திராவிடர் கழகத்தில், சமூக இழிவு ஒழிப்பு அடையாளமாக 'கறுப்பு சட்டையை' அறிமுகப்படுத்தினார். அப்போதே, தி.க பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரை, 'கறுப்பு சட்டையை' அலட்சியப்படுத்தி, ஈ.வெ.ராவின் கோபத்திற்குள்ளானார். ஈ.வெ.ரா மறைவிற்குப் பின், 'பெரியார் சமூக கிருமிகளின்' வளர்ச்சியில், நடராஜன் அரவணைப்பில், பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறமாக 'கறுப்பு', 'முதிர்ந்து' காட்சியளிப்பதில், வியப்பில்லை; கருவிலேயே குற்றம் இருந்ததால்.

பொதுவாழ்வு வியாபாரத்தின் குவியமாகியுள்ள சசிகலா குடும்ப அரசியலுக்கும், பொதுவாழ்வு வியாபாரத்திற்கு எதிரான தமிழ்நாட்டிற்கும் இடையே போர் துவங்கி விட்டது, என்பதற்கான அறிகுறிகளும் வெளிப்பட்டுள்ளன; சசிகலாவின் 'பினாமி'யாக பழனிச்சாமி முதல்வரான போக்கில். 'ஆதாய ஆவமரியாதை அரசியல்' குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கும்', 'சுயலாப நோக்கற்ற சுயமரியாதை மீட்சி அரசியலுக்கும்' இடையே நடக்கும் போர் அதுவாகும். ( ‘At the end of 12 days of political crisis, …… the team from Mannargudi defeated the rest of Tamil Nadu …Convict number 9234 has won the battle but will she win the war is the question. ‘; http://www.firstpost.com/politics/sasikala-vs-panneerselvam-in-chennais-political-match-mannargudi-defeats-tamil-nadu-3287650.html  & “தமிழர்களே, பாராட்டுக்கள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் சிறைக்கம்பிகளுக்கு பின்னே இருந்து இயக்கப்படுகிற ஒரு அரசாங்கத்தை 4 ஆண்டுகள் பார்க்கப்போகிற சிறப்பை அடைந்திருக்கிறீர்கள். பழனிசாமி, சிறையில் இருந்து கட்டளைகளை பெற்று நிறைவேற்றுவார்”- சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ; http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/17010042/1068777/Tamilnadu-Running-the-government-from-behind-prison.vpf   ) 

பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறமாக‌ 'கறுப்பு''ம், அந்த 'கறுப்பின்' வால்களாக தேர்தல் அரசியலில் பயணித்த வந்த சிகப்பும்;

'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், 'காவிமய' எதிர்ப்பில்' ஒன்றாகி,

கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாகியுள்ள‌, 'சசிகலா குடும்ப அரசியல்' பாதுகாப்பு முயற்சியில், சுவடின்றி அழியப் போகிறர்களா?

அல்லது சமூக ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கப் போகிறர்களா?

தமிழ்நாட்டிலும், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பங்களிலிருந்து 'விடுதலை'யாகி, குழப்பமற்ற 'தமிழர்' அடையாளத்திற்கும் (‘யார் தமிழர்?’; http://siragu.com/?p=3527 ), 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையில் பயணிக்க ஏதுவாக', 'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பின் அடிப்படையில், தமிழின், தமிழரின் அடையாள நிறம் 'காவியை' மீட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் அந்நியமாகி, பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறமாக‌, நடராஜ‌னிடம் 'அடைக்கலமாகி', 'கறுப்பு' ஒழிந்து வரும் வேளையில்.  

Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?; Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil 
politics;http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html

மனிதர்களைப் போலவே, மனித சமூகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தோன்றும் அடையாளக் கூறுகளும், பிறப்பு, வளர்ச்சி/வீழ்ச்சி, மரணம், மறு பிறப்பு என்ற சுழற்சியில் பயணிக்கும். அந்த வகையில், 1944இல் காலனிய சூழ்ச்சியில் சிக்கி தோன்றிய தி.க-வின் 'கறுப்பு' நிறமானது, இன்று பொதுவாழ்வு வியாபாரிகளின் 'கறுப்பு' நிறமாக மரணிக்கும் காலம் நெருங்கி விட்டது. தங்களுக்குப் பிடிக்காத புத்தகங்களையும் திரைப்படங்களையும் அரசு தடை செய்ய வேண்டும் என்று கோருதல், பெரியாரால் 'காலித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களை செயல்படுத்துதல், உணர்ச்சிபூர்வ இரைச்சலில், அறிவுபூர்வ சிகனல்களை சுவடின்றி மறையச் செய்தல் ஆகிய போக்குகளில், 'பெரியார்' கட்சிகளில் பயணிப்பவர்களின் 'கறுப்பு சட்டை'யானது எதை உணர்த்துகிறது? (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html) பொதுவாழ்வு வியாபாரத்தை எதிர்த்து, தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்பவர்களின் 'நிறமாக' காவி வளர வேண்டிய சமூக தேவையும், சூழலும் கனிந்து வருகிறது. 'கடந்த கால அடிமைகளாக' வாழ்பவர்கள் எல்லாம், சமூக ஓரத்தில் நின்று, வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறு வழியில்லை.

குறிப்பு: பேரா.அ.மார்கஸ் உள்ளிட்டு எவரும் மேற்குறிப்பிட்ட பதிவை அறிவுபூர்வமாக எதிர்த்து, ஏதேனும் வெளிப்படுத்தியிருந்தால், அதனை எனது பார்வைக்கு அனுப்பினால், நன்றியுடனும், திறந்த மனதுடனும் பரிசீலிப்பேன்.

Sunday, February 12, 2017

'ராஜ பட்சே' பாணி  'சசிகலா குடும்ப அரசியல்';

அடையாளம் காட்டிய சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி


'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும் சரி, 'இந்துத்வா' கட்சிகளாக இருந்தாலும் சரி;

‘குடையைக் கண்டு வெறித்த’ அந்த கால மாடு போல, ஒருவரை ஒருவர் 'எதிரி' போல அணுகுவது, என்பதானது, அந்த 'அணுகுமுறையில்' சிக்கியவர்களை எல்லாம், 'செனோபோபியா' ( Xenophobia - https://en.wikipedia.org/wiki/Xenophobia ) மனநோயாளியாக்கி விடும்.

நல்லவேளையாக, இன்றுள்ள மாணவர்களில் பெரும்பாலோர் அந்த நோயில் சிக்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, சுப்பிரமணிய சுவாமி 'பொறுக்கி' என்ற சொல்லை ( அதன் வரையறை- definition-  பற்றிய புரிதலுடன்) வெளிப்படுத்திய போது, அந்த வரையறையின்படி செயல்பட்டு, ( ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த) அவர் சொன்னதை நிரூபிக்கும் வகையில், நாம் போராடுவதை தவிர்க்க வேண்டும்; என்று மாணவர்களில் சிலர் எச்சரித்ததும், இணையத்தில் வெளி வந்திருந்தது.

'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும் சரி, 'இந்துத்வா' கட்சிகளாக இருந்தாலும் சரி, அந்த கட்சிகளுக்குள் உள்ள உள் முரண்பாடுகள் பற்றிய புரிதலும், அந்த புரிதலின் அடிப்படையில்;

சமூகத்தின் நிகழ்வுகளில், அவற்றின் வெளிப்பாடுகளை புரிந்து, செயலாற்றினால் தான்;

'அறியாமையில்',  சுயநல சக்திகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் தவறு செய்யாமல், வாழ முடியும்.

தி.க தலைவர் கி.வீரமணியும், பா.ஜ.க மூத்த‌ தலைவர் சுப்பிரமணிய சுவாமியும்  'சசிகலாவை' முதல்வராக்க‌,  ஆதரிப்பதில், ஏன் ஒன்றுபட்டுள்ளார்கள்?

என்பது ஆய்வுக்குரியது; கேலிக்குரியது அல்ல.

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு' திருக்குறள் 423

என்ற திருக்குறளின்படி, நாம் ஒருவர் வெளிப்படுத்தும் கருத்தை அணுகும் அருகதை நமக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை, கீழ்வரும் சோதனை மூலம், நம்மை நாமே பரிசோதித்து கொள்ளலாம்.

அக்கருத்து நமது நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால், அந்த கருத்தின் மீதும், அதை வெளிப்படுத்தியவர் மீதும் கோபப்பட்டால், நமக்கு அந்த அருகதை இல்லை.

‘எப்பொருள் எவர் வாய் என ஆய்ந்து அவர்பால்
வெறுப்பை உமிழ்வது அழிவு- 'புது'க்குறள் வழியில்;

பேரா.அ.மார்க்ஸ் உள்ளிட்டு நானறிந்த பலர், அந்த அருகதையை இழந்து பயணித்து வருகிறார்கள் என்பதையும், ஏற்கனவே எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html)

அவ்வாறு 'உணர்ச்சிபூர்வ' வலையில் சிக்காமல், தமது அறிவு, அனுபவ அடிப்படைகளில் 'பிறர் கண்ணோட்டம் அறிதல்' (Empathy) உள்ளிட்டவைகள் மூலம், திருக்குறள் 423இன் படி, ஒருவர் வெளியிட்ட கருத்தின் 'மெய்ப் பொருள்'  காண்பவர்களுக்கு மட்டுமே, 'அந்த'  அருகதை இருக்கும்.

1980களில் தஞ்சை மன்னர் சரபோசி அரசு கல்லூரியில், கல்லூரி ஆசிரியர்களின், உரிமைகளுக்கான,  போராட்டங்களில்,  நான் முன்னிலை வகித்த காலத்தில்;

பேரா.அ.மார்கஸ் தனது வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, மாணவர்கள்  'அராஜகம்'  மிகுந்திருந்த, அந்த சமயத்தில்;

தமது 'எடுபிடி மாணவர்கள்'  பின் தொடர,   ஒரு மாணவ தலைவர், வகுப்பு வாசலில் நின்று, ஒரு மாணவனை வெளியில் அனுப்புமாறு கேட்டிருக்கிறான். அதற்கு அ.மார்க்ஸ், வகுப்பு தேர்வு  நடப்பதால், வகுப்பு முடிந்த பின் அனுப்புவதாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே;

அந்த மாணவ  'தலைவனின்' முதுகுக்குப் பின்னால் மறைந்திருந்த, 'எடுபிடி மாணவன் 'ஒருவன், சிம்புவின் பீப் பாடல் 'புகழ்' சொல்லை வெளிப்படுத்தியது தொடர்பான, நிகழ்வுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.( ‘சங்க இலக்கியங்கள்-சமூகவியல் வெளிச்சத்தில்; சிம்புவின் 'பீப்'  பாடல்’; http://tamilsdirection.blogspot.in/2016/08/blog-post.html ) இன்று 'சசிகலா குடும்ப வலைப்பின்னல்' முதுகுக்குப் பின்னால் 'ஒளிந்து', 'அதிவேக பணக்காரராகி' விட்டாரா? என்று நான் சந்தேகிக்கும் அதே நபரும், பேரா.அ.மார்க்சும், சசிகலா முதல்வராகும் கோரிக்கையில் ஒன்றுபட்டுள்ளதும், கலைவாணர் என்.எஸ்.கே பாணி 'காலத்தின் நகைச்சுவையாகும்'. மாணவர்கள், இளைஞர்கள்,சாதாரண மக்கள் எல்லாம், 'வெள்ள நிவாரணம்' மூலம் வெளிப்படுத்திய சமூக போக்கின் தொடர்ச்சியே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம், அதனை உணர்ந்து, 1967க்குப் பின் முதல்முறையாக,  முதல்வர் பன்னீர்செல்வத்தின் அரசானது, மக்களை மதித்து, உணர்ந்து, செயல்படத் தொடங்கிய போக்கானது, ராஜபட்சே பாணி சசிகலா குடும்ப சுயநல அரசியலில், 'கருச்சிதைவுக்கு' உள்ளாகியுள்ளது. பேரா.அ.மார்க்ஸ் போன்றவர்கள், 'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், அந்த 'கருச் சிதைவுக்கு' துணை போனார்களா? இனி, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தடையாகவே, தமது பயணத்தை தொடரப் போகிறர்களா, தமிழ்நாட்டை சீரழித்த சக்திகளின் 'நண்பராக'?, என்பதானது, வெகு விரைவில் தெளிவாகும். (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?; Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics; http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html தமிழ்நாட்டை சீரழித்த சக்திகளின் தேய்ந்து வரும் போக்கினையே, அரசியல் நீக்கத்தில் (Depoliticize) பயணித்து வந்த 'ஆதாய அரசியலை', மாணவர்களும், இளைஞர்களும் ஓரங்கட்டி, சாதித்த‌ ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியானது உணர்த்தியுள்ளது.

‘'பெரியார்' ஈ.வெ.ராவிற்குப் பின், நானறிந்த வரையில், தமிழில் 'அநாகரீகம்' என்ற அடையாளத்தில் உள்ள சொற்களை பயன்படுத்திய, 'ஊழல்' குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர் சுப்பிரமணியசுவாமி ஆவார். இருவருமே தாம் பயன்படுத்திய அந்த சொற்களுக்கு, அறிவுபூர்வமான விளக்கமும் தந்துள்ளனர். உதாரணமாக, தான் பயன்படுத்திய ''பொர்க்கி' (porki) என்ற சொல்லானது, 'ஆபாசமாக, வன்முறை தொனியில், அச்சுறுத்தும் வகையில், பேசி விட்டு, எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிபவர்' (One of the ways to recognise a porki is if his or her language is vulgar hard porn, threatens violence but runs away on retaliation )  என்று சுப்பிரமணியசுவாமி தமது 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் ''பொர்க்கி' (porki) தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், ''பொர்க்கி' (porki) விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும்.  'பெரியார்' ஈ.வெ.ரா வையும், சுப்பிரமணிய சுவாமியையும், அவர்களின் எதிர்ப்பாளர்கள் எல்லாம் இணையத்தில்,  'உண‌ர்ச்சிபூர்வமாக'  இழிவுபடுத்தும் போக்கில் ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'பெரியார்' ஈ.வெ.ரா, சுப்பிரமணிய சுவாமி ஆகிய‌  அந்த‌  இரண்டு பேருமே சுயநலத்தில் பணம் சம்பாதிக்க பொதுவாழ்வில் இருந்தவர்கள் அல்ல. எனவே 'பொதுவாழ்வு வியாபாரிகளும்', அவர்களின் எடுபிடிகளும், அந்த இருவரையும் கண்டிக்க அருகதை அற்றவர்கள், என்பதும் என் கருத்தாகும்.’

தமிழ்நாட்டின் அரசியல் போக்குகளில் திருப்பு முனைகளுக்கு வழி வகுத்த, 'ஜெயலலிதா‍ சசிகலா சொத்து குவிப்பு வழக்கு' மற்றும் 'ஜல்லிக்கட்டு ஆதரவு' வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தானாகவே தொடுத்தவர் சுப்பிரமணியசுவாமி என்பதை மறந்து விட முடியுமா?

அதே போல, முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னும், போர் நடந்த போதும், பின்னும், இன்று வரையிலும், 'ஊசலாட்டமின்றி' ராஜபட்சேயை ஆதரித்து வருபவர் சுப்பிரமணிய சுவாமி. 

முள்ளிவாய்க்கால் போர் முடிந்து, கொலும்பில் ராஜபட்சே மற்றும் இலங்கை ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், 'தமிழர்களின் உரிமை தொடர்பான சிக்கலை தீர்க்கத் தவறினால், மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும்' என்று பேசிய, சுப்பிரமணிய சுவாமியின் துணிச்சலான பேச்சினை, அப்போதே பாராட்டி, நான் இணையத்தில் கருத்து வெளியிட்டேன்.

நாம் வாழும் சமுக அமைப்பில் உள்ள மனிதர்கள் எல்லாம் 'சமம்' என்பது படிக்க, கேட்க, இனிப்பாக இருந்தாலும்;

ஒரு சமூகம் செயல்படும் செயல்நுட்பத்தில் அடிமட்டத்தில் உள்ள மனிதர்கள் தொடங்கி, மேல் மட்டத்தில் உள்ள மனிதர்கள் வரை, இடையில் அந்தந்த சமூகத்தின் தன்மையைப் பொறுத்து, பல மட்டங்கள் இருக்கும் என்பதையும்;

எந்த மனிதரின் செயல்பாட்டையும், கருத்தையும் 'சரியாக' விளங்கிக் கொள்ள வேண்டுமானால், அந்த மட்டங்களை பற்றியும், 'அந்த நபர்' எந்த மட்டத்தில் இருக்கிறார் என்பது பற்றியும், அவரின் சுயநலன்/பொதுநலன் தொடர்பான 'யோக்கியதை' பற்றி அறிந்து அணுக வேண்டும் என்பது பற்றியும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

‘சமுகத்தில் வளர்ந்து வரும்(growing), தேய்ந்து வரும்(decaying) போக்குகள் உள்ளிட்ட, பொது நலன் தொடர்புள்ள அமைப்புகளிலும், பிரச்சினைகளிலும் செயலாற்றும் விசைகளின் (Forces) ஊற்றுக்கண்கள் மேலேக்குறிப்பிட்ட, தனி நபரிடமிருந்து வெளிப்படும் விசைகளே ஆகும். இயற்பியலில்(physics) எந்திரவியலில் (Mechanics) எவ்வாறு விசைகள் பிணைப்புகள்(Bonds)  உள்ளிட்ட பல வழிகளில் சேர்ந்து, அடுத்த அடுத்த உயர் மட்டங்களில்,  தொகு விசைகளாக (Resultant Forces)  செயல்படுகிறதோ, அதே போல, சமூக எந்திரவியலில் , மேற்குறிப்பிட்ட விசைகள், அந்த சமூகத்தில் செல்வாக்கில் உள்ள பண்பாடு உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில், வெவ்வேறு வகைகளிலான,  வெவ்வேறு, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையில், அரசியல், கலை, ஆன்மீகம் உள்ளிட்ட புலங்களில், வெவ்வேறு  தொகு விசைகளாக செயல்படுகின்றன.

ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ,சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில்,  வெவ்வேறு  சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும், சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.அதாவது பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள‌ ஓட்டுநர்களாக இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில் தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.’ (http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )

இயற்பியலில் ஐன்ஸ்டினின்  'சார்பு கொள்கை' (Relativity Theory) அறிந்தவர்களுக்கு, கீழ்வரும் உண்மை விளங்கும்.

ஒரு குறிப்பு ஆயத்தில் (Frame of Reference) நேர்த் திசையில் பயணிக்கும் ஒரு பொருளானது, இன்னொரு குறிப்பாயத்தில் உள்ள நோக்குநருக்கு, எதிர்த் திசையில் பயணிப்பதாகவும் தெரியும்.

பேருந்தில் பயணிப்பவர் தாம் ஓய்வுநிலையில் இருப்பதாகவும், தெரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் நபர், பேருந்து பயணிக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரியும்.

மேலே குறிப்பிட்ட புரிதல் இல்லாதவர்கள் எல்லாம், அவ்வாறு 'உணர்ச்சிபூர்வ' வலையில் ஒருவர் கருத்து வெளிப்பட்டவுடனேயே, அது தமது நிலைப்பாட்டிற்கு சாதகமாக இருந்தால், 'அறிவுக் கண்களை' (திருக்குறள் 423)  மூடி ஆதரிப்பது; பாதகமாக இருந்தால் எதிர்ப்பது: என்பதானது கருத்து கறுப்பு வெள்ளை நோயின் அறிகுறிகள், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )

அந்த சமூக நோயில் சிக்காமல், தமது அறிவு, அனுபவ அடிப்படைகளில் 'பிறர் கண்ணோட்டம் அறிதல்' உள்ளிட்டவைகள் மூலம், அவர் வெளியிட்ட கருத்தின் 'மெய்ப் பொருள்' காண்பது, என்ற அணுகுமுறையில்;

சுப்பிரமணிய சுவாமி அன்று ராஜபட்சேயை ஆதரித்ததும், இன்று நடராஜன் செல்வாக்கில் இயங்கும் சசிகலாவை ஆதரித்ததும், நடராஜன் 'ஆரிய Vs திராவிட' கவசத்தை வெளிப்படுத்தியபோது, சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கமானவர் நடராஜன் அருகே நின்றிருந்ததும் (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_18.html);

'ஜெயலலிதா சசிகலா சொத்து குவிப்பு வழக்கு' மற்றும் 'ஜல்லிக்கட்டு ஆதரவு' வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தானாகவே தொடுத்ததும்;

சுயலாப நோக்கின்றி, தனது அறிவு அனுபவ அடிப்படைகளில், 'தனது நாட்டிற்கு நல்லது' என்ற நோக்கில், முரண்பாடுகளின்றி, சுப்பிரமணியசுவாமி செயல்பட்டு வருகிறார் என்பதானது;

எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நான் பெறும் ஆய்வு முடிவாகும். அந்த முடிவுக்கு முரணாக எந்த ஆய்வு வெளிப்பட்டாலும், அதனையும் திறந்த மனதுடன் அணுகி, எனது ஆய்வுமுடிவினை நெறிப்படுத்திக் கொள்வேன். 

ஏனெனில் தனதளவில் நேர்மையான சுப்பிரமணியசுவாமி, தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும், மேலே விளக்கியுள்ள சமுக செயல்நுட்பம் (Social Mechanism) மூலம் வெளிப்படும் தொகுவிசைகளின் (Resultant Forces) மீது செல்வாக்கு செலுத்தி, 'தனது நாட்டிற்கு நல்லது' என்ற நோக்கில் செயல்படுபவர் ஆவார் என்பது எனது முடிவாகும்.

மாறாக சமூகத்தில் முளைவிட்டு வளரும் சமூக விசைகளை (Social Forces) ஆராய்ந்து, ஆக்கபூர்வமான விசைகளை வளர்த்தும், கேடான விசைகளை எதிர்த்தும், தனிப்பட்ட அளவில் எனக்கு சாதகமாக, தொகுவிசைகளோடு ஒன்றி, 'உயர'க் கூடிய வாய்ப்புகள் என்னை தேடி வந்தாலும், சமூகத்திற்கு கேடான திசையிலேயே நான் பயணிக்க நேரிடும் என்ற புரிதலில், அவற்றை தவிர்த்து, அதன் காரணமாகவே நம்ப முடியாத இழப்புகளுடன் வாழ்ந்து வருபவன் நான். அதன் காரணமாகவே, நம்ப முடியாத அளவுக்கும், தமிழ்நாட்டின் போக்குகள் மீது செல்வாக்கும் செலுத்தி வர முடிகிறது. 
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )

அமிர்தாஞ்சன், கங்கை அமரன் உள்ளிட்டு சசிகலா குடும்ப வலைப்பின்னலின் 'ஊழல் பேராசை' காரணமாக, நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்களும், முதல்வராக இருந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது, தமிழ்நாடெங்கும் ஆளுங்கட்சியினர் அவிழ்த்து விட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களும், அவற்றை எல்லாம் கேள்விப்பட்டவர்களும், தம்மை பற்றியும், தமது கட்சியைப் பற்றியும், தாம் முன்னிறுத்தும் கொள்கையைப் பற்றியும் என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி, காசி ஆனந்தன், நெடுமாறன் உள்ளிட்ட சில 'ஈழ' ஆதரவாளர்கள் பயணித்து வருவது போல‌;

முதல்வரையே அச்சுறுத்தி, ராஜினாமா மடல் பெற்று, அதை ஆளுநருக்கு அனுப்பிய பின்னும்;

சசிகலாவை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே,  முதல்வராக ஆளுநர் அழைக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி, ராஜ பட்சேயை ஆதரித்தது போல, சசிகலாவை ஆதரிப்பது புரிகிறது. அது போல தான், தமிழ்நாட்டிற்கு ஏற்படப் போகும் பாதிப்புகளைப் பற்றிய கவலையின்றி, சுப்பிரமணிய சுவாமியைப் போல, தி.க தலைவர் கி.வீரமணி, பேரா.அ.மார்க்ஸ் போன்ற இன்னும் பலர் ஆதரிக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. (‘சசிகலாவுக்கு சிறை: கங்கை அமரன் இன்று நிம்மதியாக உறங்குவார். பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் ஆன்மாக்கள் சாந்தியடையும்!’- பாமக ராமதாஸ் டுவிட்டரில் & ‘ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!’- சமஸ் http://tamil.thehindu.com/opinion/columns/

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போன்ற சில பிராமணர்கள் தவிர, 90% பிராமணர்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக அறிவித்துள்ள நடராஜன் (https://www.youtube.com/watch?v=oeoYzJELPjk&feature=youtu.be )  துணையுடன் உருவான 'முள்ளி வாய்க்கால்' முற்றத்தில், ஈ.வெ.ரா அவர்களின் படம் இடம் பெறவில்லை என்பது உண்மையானால்;

வரலாற்றில், தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்தவர்களின், 'ஆரிய Vs திராவிட கவசத்திற்கு’ காரணமான, 'குற்றவாளி' என்ற பழிக்கு காரணமான, 'பெரியார்' என்ற சிறையிலிருந்து, ஈ.வெ.ரா அவர்களை மீட்கும் எனது முயற்சியும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. 

‘நேர்மையான சுய சம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகளின்றி, மனித மதிப்பீடுகளை (Human Values) காவு கொடுத்து, சுயலாப கள்வர்களாக, பொருள் ஈட்டுவோரை, 'வரைவில் மகளிர்' என்று திருக்குறள் (பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்) அதிகாரம் 187 அடையாளம் காட்டியுள்ளது.  அதே அதிகாரத்தில், அத்தகையோருடன் உறவு கொண்டு, 'பலன் அனுபவிப்பவர்களை', 'இருட்டறையில் பிணம்' (திருக்குறள் 913) தழுவியவர்கள் என்றும், திருக்குறள் அடையாளம் காட்டியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் நமது சமூக வட்டத்தில், 'வரைவில் மகளிர்', மற்றும் 'இருட்டறையில் பிணம் தழுவியவர்' யார்? யார்? என்று, அவர்கள் பொருள் ஈட்டும் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, அடையாளம் கண்டு, அகற்றினால் தான், ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை', 'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து', மீட்கும் முயற்சிக்கு நாம் பங்களிப்பு வழங்க முடியும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )

விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் காலூன்ற துணை புரிந்தவர்களில் ஒருவரான, எனது அபாய எச்சரிக்கைகளை புறக்கணித்து, என்னை வெறுத்து, 'எதிரியாக' பாவித்து, 'முள்ளி வாய்க்கால் பேரழிவு' நோக்கி, பயணித்த போக்கினை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

என்னை புறக்கணித்து, அறியாமையின் காரணமாகவோ, அல்லது சுயலாப நோக்கிலோ, விடுதலைப் புலிகளின் அந்த தவறான பயணத்தை தமிழ்நாட்டில் ஊக்குவித்தவர்களில் பலர், இன்று சசிகலா முதல்வராகும் முயற்சியை ஆதரிக்கும் 'சமூக குற்றவாளிகளாக', தெரிந்தோ, தெரியாமலோ, பங்களித்து வருகிறார்கள்.

1967 இல் திராவிடக் கட்சிகளின் ஆட்சி அரங்கேறி, 'ஊழல்' முளை விட்டு வளரும் போக்கானது, தொடங்கியிருந்தாலும்;

1991 முதல் தான், அமிர்தாஞ்சன், கங்கை அமரன் என்று எண்ணிலா பலரின் சொத்துக்களை எல்லாம், (ராஜபட்சே குடும்ப ஆட்சி அதிகார துஷ்பிரயோகத்திலும் கூட இடம் பெறாத‌) அச்சுறுத்தி, தேவைப் பட்டால் கொலைகளும் செய்து, அபகரிக்கும் போக்கும்மலைகளையும், காடுகளையும், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனி வளங்களை எல்லாம் 'ஊழல் பேராசையில்' அபகரிக்கும் போக்கும் தொடங்கியது. 

அந்த போக்கிற்கு 'பிள்ளையார் சுழி' போட்டு, அரங்கேற்றியவர்கள் வழியில் தான், அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளும் பயணித்தன. அதன் தொடர் விளைவுகளாக, 'ஆங்கில‌ வழிக் கல்வியானது' வியாபாரமாகி, தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப் பயணமும், அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் தமிழர்களில் பலர் 'பதராகி'வரும் போக்கும், தமிழை, தமிழர்களை, தமிழ்நாட்டை சீரழித்து வருவதை, பல பதிவுகளில் விளக்கியுள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )

விடுதலைப் புலிகளின் 'முள்ளி வாய்க்கால் பேரழிவு' பயணத்திற்கு துணை போன, தமிழ்நாட்டு ஆதரவாளர்களில் பலர், அந்த பேரழிவிற்குப் பின், நடராஜன் துணையுடன் 'முள்ளி வாய்க்கால் முற்றம்' தமிழ்நாட்டில் அமைத்தார்கள். தமிழ்நாட்டிலும் முள்ளி வாய்க்கால் அழிவை நோக்கிய பயணத்திற்கு, அது துவக்கமாக அமையுமா?

'அமையும்' என்று அஞ்சி, சுப்பிரமணிய சுவாமி, அந்த அழிவானது ("முள்ளிவாய்க்கால் பேரழிவானது, 'ஈழப் பகுதிகளில்' மட்டுமே பாதித்தது போல‌) தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவின் மற்ற பகுதிகளை பாதிக்க விடக் கூடாது, என்ற நோக்கில், சசிகலாவை சிறைக்கு அனுப்பிய வழக்கையும் தொடுத்து, இன்று சசிகலாவை பெங்களுரு சிறையிலிருந்து, சென்னை போயஸ் கார்டன் 'வீட்டு சிறைக்கு'(?)  மாற்ற உதவும் நோக்கில், பயணிக்கிறாரா?

தமிழ்நாட்டிலும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற அக்கறையில், நான் உள்ளிட்டு, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி போன்ற இன்னும் பலர் பயணிக்கிறோமா?

எந்த பயணம் வெற்றி பெறும்? என்பது வெகு சீக்கிரம் தெரிந்து விடும். 

சசிகலா முதல்வராகும் பிரச்சினையில் எதிரெதிர் நிலைப்பாடுகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நான் உள்ளிட்ட பலருக்கும், சுயலாப நோக்கில், அந்த நிலைப்பாடுகளை நாங்கள் எடுக்கவில்லை, என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும்; எனவே தமது நிலைப்பாடுகள் தொடர்பான பாராட்டுகளுக்கு மயங்குவதற்கும், பழிச் சொல்லுக்கு பயப்படுவதற்கும், இடமில்லை. 

'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' அடிப்படைகளில், 'மக்களை மயக்கும் திறனுள்ள' தலைவர்களுடன் (charismatic) பயணித்து, 1967 முதல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பயணித்து வந்த தமிழ்நாடானது;

இன்று 'மக்களை மயக்கும்' தலைவர்கள் இன்றி, அந்த கட்டத்தின் முடிவுக்கு வந்துள்ளது. இனியும் 'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' தமிழ் நாட்டில் தொடருமா? தொடராதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. (‘It is clear, therefore, that a phase in Dravidian politics which began with the Congress's defeat in Tamil Nadu in 1967 is coming to an end. It remains to be seen to what extent the main ingredients of that politics -- atheism and an anti-Hindi, anti-Aryan, anti-North Indian outlook -- survives the entry of non-charismatic rulers.’; http://www.business-standard.com/article/news-ians/theatre-of-the-absurd-in-tamil-nadu-column-political-circus-117021100197_1.html )

1944க்கு முன் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான முறைகளில், 'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' தொடர்பாக, 'தீர்வு' நோக்கி வெளிப்பட்டு வளர்ந்து வந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 1944 முதல் உணர்ச்சிபூர்வமாக , பொதுவாழ்வு வியாபார அழிவுபூர்வ போக்கில் பயணித்து, 1949இல் 'வீரியம்' பெற்று, 1967இல் தேசியக்கட்சிகளை ஓரங்கட்டி, ஆட்சியைப் பிடித்ததானது, வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல; தமிழர்களிடையே நேர்மையான சம்பாத்திய கூறுகளை அழித்து, பலவகை 'தரகர்களை' வளர்த்து, 'ஊழல் பேராசையில்' தமிழ்நாட்டையும் சூறையாடி, தமிழ் மொழி மட்டுமின்றி, தமிழர்களிடமிருந்த நல்ல பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளை எல்லாம், சுயநல 'மேற்கத்திய முற்போக்கு' ஆதிக்கத்தில் அழித்து, அந்த போக்கிற்கு பயன்பட்டு வந்த, 'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' கருத்துக்கள் எல்லாம், நேர்மையான சுயசம்பாத்தியத்தில் வாழ்பவர்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் உள்ளாகியுள்ளன.

எனவே உணர்ச்சிபூர்வ போதையிலிருந்து விடுபடும் போக்கில் உள்ள தமிழ்நாட்டில், அறிவுபூர்வ விவாதங்களுக்கு உட்படாமல் தொடரும்;

'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' போன்றவை எல்லாம் வடிவேல் பாணி காமெடியாக திரைப்படங்களில் இடம் பெறத் தொடங்கினால் வியப்பில்லை. (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (7)- தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில்?’; 
http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )  

தமிழ்நாட்டிற்கு வந்து 'திராவிட நோய்களில்' சிக்கி, பயணித்த 'ஈழ விடுதலை' முயற்சிகள் எல்லாம் முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின்னும், அதே போக்கில் தொடர்வதன் மூலம், மீண்டும் ராஜபட்சே குடும்ப அரசியலானது, ஆட்சியில் அமர வழி வகுக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்களும், இளைஞர்களும் அந்த நோய்களுக்கு எதிரான திசையில், அறிவுபூர்வமாக, சாத்தியமுள்ள தீர்வுகள் நோக்கி, பயணிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதையே, சென்னை வெள்ள நிவாரணங்களும், வெளியில் தெரியாமல், பாதிக்கப்பட்டவர்களுக்குதவும் நிவாரணங்களும், ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியும் உணர்த்துகின்றன.எனவே சசிகலா குடும்ப அரசியல் உள்ளிட்டு பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆட்டங்கள் அடங்கி, தமிழும், தமிழரும், தமிழ்நாடும் மீளப் போவது நிச்சயமே ஆகும்.

Friday, February 10, 2017

தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (10)
'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்களுக்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் ;

உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையிலா? அழிவுபூர்வ‌ திசையிலா?


‘சுயலாப நோக்கின்றி, நேர்மையான சுய சம்பாத்தியத்துடன், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி பற்றிய அக்கறையுள்ளவர்கள் எல்லாம், மீட்சிக்கான 'சரியான' திறவுகோலை தேடி வரும் காலக்கட்டம் இதுவாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2016/09/depoliticize9.html )

'சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, தமது நிலைப்பாடுகளை மக்கள் நலன் நோக்கில் (உடல். மனம் பிறர் சாரா போக்கில்- physically & mentally independent- இருந்தது வரையில், 'பெரியார்' செய்தது போல) 'திருத்திக் கொள்ளாமல்', பழைய திசையிலேயே பயணிக்கும், 'பெரியார்' ஆதரவு கட்சிகளெல்லாம் உதிர்ந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் 'இழிவான இடம்' பிடிக்க போட்டி போடும் நிலை வந்தால் வியப்பில்லை. 'பெரியாரின்' முழு பொது வாழ்வையும், அவரின் தியாகங்களையும் கணக்கில் கொள்ளாமல், அவரைப் பற்றி 'இழிவாக', 'திராவிட உணர்ச்சிபூர்வ பாணியில்' பேசி/எழுதி வரும் 'இந்துத்வா' ஆதரவு பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், 'பெரியார்' கட்சிகள் 'நன்றி' சொல்லவேண்டும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தவறான திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கு, 'ஆக்ஸிஜன்' வழங்கி,  'உயிருடன்' நீடிக்க உதவி வருபவர்களும் அவர்களே ஆவர்.

இத்தகைய சிக்கலான சூழலில்,  தமிழக பா.ஜ.க, மேற்குறிப்பிட்ட திசையில், தமிழ்நாடு மீள உதவும் திசையில் பயணிக்கிறதா? என்ற கேள்வியும் ஆய்விற்குரியதாகும்.”; (  http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

1857 முதலாம் இந்திய விடுதலைப் போரானது வெற்றி பெற்றிருந்தால், இன்று இந்தியாவானது, சுமார் 50க்கும் அதிகமான அரசர்களின் ஆட்சிகளில் இருந்திருக்கும் என்பதை மறந்து;

1947 இந்திய விடுதலைக்குப் பின்,  ஆக்கபூர்வ தேச கட்டுமானத்தில் ( Nation Building),  இந்தியாவில்;

வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, மொழி அடிப்படைகளில் இருந்த வந்த உள் அடையாளங்கள் எல்லாம்  (Sub Identities)  எல்லாம், 'ஆக்கபூர்வ' திசையில், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன், 'இணக்கமாகும் சமூக செயல்நுட்பம்' வளர்வதற்கு தடையாக;

நேரு குடும்ப சுயநல வாரிசு அரசியல் போக்கில், 'அடையாளச் சிக்கலை', 'அரசியல் சிக்கலாக'  திரித்து, இந்தியா பயணித்தது;

அதே சூழ்ச்சி வலையில், மனரீதியில் அடிமைப்பட்டு;

அந்த உள் அடையாளங்களின் சமூக வலிமை பற்றிய அறியாமையில், தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வமாக' பயணிக்கும் இந்துத்வா ஆதரவாளர்கள் எல்லாம், தமது 'உணர்ச்சிபூர்வ' செயல்பாடுகள் மூலமாக, தமிழ்நாட்டில் 'பிரிவினை' போக்குகளுக்கு 'ஆக்ஸிஜன்' வழங்கி காப்பாற்றி வருகிறார்கள். 

மேலே குறிப்பிட்டவாறு 'உணர்ச்சிபூர்வ பரிமாற்ற எதிர்ப்பில்' ('செனோபோபியா' நோயில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழும் அளவுக்கு; https://en.wikipedia.org/wiki/Xenophobia ) ஒன்று பட்டுள்ள 'பெரியார்' ஆதரவாளர்களும் சரி, 'இந்துத்வா' ஆதரவாளர்களும் சரி, தமிழ்நாட்டில் 'தமிழர்' என்ற அடையாளமானது, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் 'ஆக்கபூர்வ' திசையில், 'இணக்கமாகும் சமூக செயல்நுட்பம்' ( Harmonising Social Mechanism) வளர்வதற்கு தடையாகவே, ஒருவருக்கொருவர் 'உதவி' பயணிக்கிறார்களா? அந்த திசையில் அறியாமையில் பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? அல்லது இந்தியாவில் தேச கட்டுமானமானது ( Nation Building) தற்சார்பு பெறுவதை சீர் குலைக்க முயலும், அந்நிய சூழ்ச்சியில் சிக்கி, பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? என்ற ஆய்வும் அவசியமாகி வருகிறது.

'தமிழர்' என்ற அடையாளத்தின் சமூக வலிமை தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட இரு சாராரின் தவறான அணுகுமுறைகள் காரணமாக;

'சமூக மூச்சுத் திணறலுக்கு' உள்ளாகி, அந்த மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க உதவிய 'ஜன்னலாக',  அந்த ' தமிழர் அடையாள' அடிப்படையில், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலமாக‌, வெளிப்பட்டபோது;

திராவிடக் கட்சிகளும், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், ஓரங்கட்டப்பட்டதற்கும்;

அந்த 'தமிழர்' அடையாள சமூக மூச்சுத் திணறலானது, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலம் வெளிப்பட்டதற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்குரியதாகும். அந்த 'ஜல்லிக்கட்டு போராட்ட ஆதரவு சக்திகள்' எல்லாம், ஆதாய அரசியலின் குவியமாகியுள்ள (Focus), சசிகலாவின் 'அரசியலை' எதிர்த்து, 'அலையாக' வளர்ந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு வளர்வது உண்மையானால், அந்த 'அலையானது', 'சுனாமியாக' வலுவாகி, உண்மையான பகுத்தறிவுக்கு விரோதமான, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு கேடயமான, 'ஆரிய - திராவிட' கருத்து கழிவினை, சுவடின்றி அழிக்கும் போக்கும் துவங்கி விட்டது.(http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.htmlஅந்த 'பெருமையானது'(?),  சசிகலா குடும்பத்திற்கும், 'பகுத்தறிவு' கண்களை மூடிக்கொண்டு அவர்களை ஆதரித்து வரும் தி.க. தலைவர் கி.வீரமணிக்கும் சொந்தமாகும்.

“தமிழ்நாட்டு அரசியலில் இப்போது நடைபெறுவது தேவாசுரப் போராட்டமே! அதாவது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே! நமது பார்வை முற்றிலும் இனநல பொதுநலப் பார்வையே - தந்தை பெரியார் பார்வையே!” - தி.க. தலைவர் கி.வீரமணி ( http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-condemns-union-government-10/slider-pf221468-273788.html )

வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, மொழி அடிப்படைகளில் இருந்த வந்த உள் அடையாளங்களின் சமூக வலிமை பற்றியும், அது வெளிப்படும் செயல் நுட்பம் பற்றியும், கவலைப்படாமல், மேற்கத்திய உலகின் 'ஆதிக்க சக்திகள்' எல்லாம், தத்தம் 'அரசியல்' சுயலாபங்களை பிரதானமாக கருதி, பயணித்து வந்த போக்கின் பாதக விளைவுகளில் ஒன்றே;

இன்று உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணங்கள் ஆகும்.

உலக அரசியலில், 'சுயநல நோக்கில்', பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல்;

இன்று உலகை அச்சுறுத்தி வரும் அனைத்து வகை ஆயுதபாணி தீவிரவாதங்களை தமது சுயநலன்களுக்காக வளர்த்தும், பின் அதே சுயநலன்களுக்காக எதிர்த்தும், வந்த மேற்கத்திய அரசுகள் எல்லாம்;

இன்று அதனால் விளைந்த, தத்தம் நாடுகளில் உள்ள மக்களின் கோபக் கனலை எதிர்கொள்ள முடியாமல், தவித்து வருகிறார்கள்.

அதன் தொடர்விளைவாக, உலகில் உள்ள அறிவுஜீவிகள் மத்தியில், 'அடையாளங்கள்' தொடர்பான ஆய்வுகளும், விவாதங்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

அந்த நோக்கில் குவாமி அந்தோணி அப்பையா என்ற அறிஞர், பிபிசி வானொலியில் (Radio 4 )  தொடர் உரை ஆற்ற உள்ளார். அது தொடர்பான தகவலானது, லண்டனில் வாழும் எனது நண்பர் தொல்காப்பியனின் உதவியால், எனது கவனத்தை ஈர்த்துள்ளது. ( This year’s BBC Reith Lecturer is Kwame Anthony Appiah, a British-born, Ghanaian-American philosopher, cultural theorist and novelist. Appiah specialises in moral and political philosophy, as well as issues of personal and political identity, cosmopolitanism and nationalism. His four lectures under the banner "Mistaken Identities" will focus on four themes: Colour, Country, Creed and Culture. They will be recorded in London, Glasgow, Accra, in Appiah’s adopted hometown of New York, and will be broadcast on Radio 4 in October and November.- After studying at Cambridge, Appiah taught at some of the world’s top universities including Yale, Cornell, Duke, and Harvard, and lectured at many other institutions across the world. In 2014 he became Professor of Philosophy and Law at New York University, where he teaches both in New York and in Abu Dhabi.
He has published widely in African and African-American literary and cultural studies. His award-winning “In My Father’s House” explores the role of African and African-American intellectuals in shaping contemporary African cultural life, which has been a life-long passion of Appiah’s. ; http://www.bbc.co.uk/programmes/articles/2sM4D6LTTVlFZhbMpmfYmx6/kwame-anthony-appiah )

மனிதர் தமக்குள்ள அடையாளங்களின் தூண்டுதல்களால் எவ்வாறு ஆக்கபூர்வமாகவும், அழிவுபூர்வமாகவும், செயல்படும் வாய்ப்புகள் உள்ளன' என்பதானது, அவரது உரையில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.
“We’ll learn how those identities play both positive and negative roles in their lives and in ours, and how we might escape some of the negatives if we understood some of the many mistakes we make about identity.” - Kwame Anthony Appiah,

தமிழ்நாட்டிலும், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்களுக்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையில் பயணிக்கிறதா? அல்லது அழிவுபூர்வ திசையில் பயணிக்கிறதா? என்ற விவாதத்தை;

திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், 'உணர்ச்சிபூர்வ' இரைச்சல்களை தவிர்த்து, முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். (http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html )