இடையிடு 4: Interlude 4:
விவாதப் பொருளின் வரை எல்லையைத் (limit) தாண்டி
"விவாதப் பொருளின் வரை எல்லையைத் (limitation) தாண்டி, விவாதத்தில் ஈடுபடுவோர் மீது திசை திரும்பி, விவாதத்தில் உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டுபவர்கள்' பற்றி முந்தையப் பதிவில் பார்த்தோம்.
அதற்கு உதாரணமாக,
" 'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு லாபம்?" என்ற தலைப்பிலான பதிவிற்கு,
நான் என்றும் மறக்காமல்,
பாதுகாக்க வேண்டிய 'நற்சான்றிதழாக' கீழ்வரும் மடல் எனக்கு வந்துள்ளது.
" அய்யா மோடி
ஏதோ ஆட்சி செய்கிறார்போலப் பேசுகிறீர்கள். இல்லை இந்துத்துவா என்ற மாயையைப் பயன்படுத்தி
அமீத்சா போண்ற தடாலடி கூட்டத்தின் கையாளாகவே மோடிஅலைகிறார்.மிக நீண்ட காலமாக திட்டமிட்டு
வந்த பழைமைப் பஞ்சாங்களைன் பிரதிநிதிகள் சனநாயகப் போர்வையில் கூத்தடிக்கிறார்கள். சாஸ்திரா
பார்ப்பனக்கூட்டம் மூலம் பெற்ற ந்ன்மைகளுக்காக ட்ர்ஹமிழகத்தைக் காட்டிக்கொடுக்கவேண்டாம்-
பழைய பெரியார் மையக் குழப்பவாதுயே."
மேற்கண்டது தொடர்பாக,
ஒரு சிறு விளக்கம் வருமாறு;
சாஸ்திரா பல்கலைக்கழகத்தில்
( அந்த வட்டாரத்திலேயே அதிக சம்பளத்துடன்) ஆசிரியர் பணி நியமனங்களிலும், மாணவர் சேர்க்கையிலும்
சாதி, மத, வேறுபாடுகளின்றி, உண்மையான தகுதி, திறமை அடிப்படைகள் கடைபிடிக்கப்படுவதாலும்,
ஆசிரியர்களையோ, மாணவர்களையோ, இந்துத்வா பத்திரிக்கைகளை வாங்குமாறும், இந்துத்வா நிகழ்ச்சிகளில்
பங்கேற்குமாறும் கட்டாயப்படுத்துவதில்லை என்பதாலும், மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு
தரமான நிறுவனங்களை மட்டுமே அனுமதித்து, பணி நியமனங்களை உறுதி செய்வதாலும், பிற பொறியியல்
நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையின்றி 'தவித்து' வருகையில், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் அளவுக்கு 'வளர்ந்து' வருகிறது. குவார்ட்டர், பிரியாணி, மோட்டர்சைக்கிளுக்கு இலவசமாக 'முழு டேங்க்' பெட்ரோல், கூடுதலாக பணமும் வாங்கிக்கொண்டு, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் மாணவர்களும் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் கிடையாது; நானறிந்தது வரையில்; அம்மாணவர்களின் பெற்றோர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், இணைய வழியில், மாணவர்களின் வருகைப் பதிவையும், எல்லா தேர்வுகளின் மதிப்பெண்களையும் கண்காணிக்க முடியும் என்பதாலும்.
பழந்தமிழ் இலக்கியங்கள், தமிழ் இசை உள்ளிட்ட எனது ஆய்வுகளுக்கு, தமிழ் உலகம் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய வரிசையில், 'சாஸ்திரா பார்ப்பனக்கூட்டம்' நிச்சயமாக முக்கிய இடம் பெறும். காலனிய மனநோயில் சிக்கி, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணி வேர்களை சிதைத்து, அதில் சிக்கிய தமிழர்களின் 'மூளை செயல்பாட்டையே ' (processing) 'சுயநலக்கள்வராக திரித்து' , தமிழர்களை தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களாக்கும் நோக்கில், செயல்படுகிறவர்களிடம், அந்த நன்றியை எதிர்பார்க்க முடியுமா? அந்த ஆணிவேர்களை சிதைத்ததன் காரணமாக, தமிழும் தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்களா? என்று நான் சுட்டிக்காட்டியுள்ளதை,
http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-02-19T20:30:00-08:00&max-results=7&start=28&by-date=false
'தமிழகத்தைக் காட்டிக்கொடுப்பதாக' பொருள் கொள்கிறார்களா? மேலும் படிக்கவும்: 'தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8); தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்': http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html

நான் தற்போது ஆராய்ச்சிகளில்
மட்டுமே கவனம் செலுத்துவதால், (http://musictholkappiam.blogspot.in/ ; http://musicdrvee.blogspot.in/) சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் பணியாற்றவில்லை; வருகைப்
பேராசிரியராக வகுப்புகள் எடுக்கவில்லை. திருச்சி அன்னை ஆசிரமம் நடத்தும் மேல்நிலைப்பள்ளியில்,
தமிழ்வழி +2 மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள்,
வார இறுதி நாட்களில் எடுத்து வருகிறேன்.
"தான் நடத்திய
போராட்டங்களுக்கு முன், தமிழ்நாடெங்கும் அது தொடர்பாக பிரச்சாரம் செய்த போது, அதை எதிர்த்து
கேள்விகள் கேட்பதை வரவேற்றவர் அவர்.அந்த காலக்கட்டத்தில் அக்கேள்விகளுக்கு 'அறிவுபூர்வமாக'
யாரும் பதில் சொன்னார்களா? என்று ஆராய்ந்தால், பெரியார் ஈ.வெ.ரா 'உணர்ச்சிபூர்வமாக'
அப்போராட்டங்களை நடத்தவில்லை, அறிவுபூர்வமாகவே நடத்தினார், என்பது தெளிவாகும். 'நமக்கேன்
வம்பு?' என்று புலமையாளர்கள் ஒதுங்கியதும், அதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்." என்பதையும்
முந்தையப்பதிவில் பார்த்தோம்.
'நமக்கேன் வம்பு?'
என்று புலமையாளர்கள் ஒதுங்கியது , தமிழ்நாட்டில் நடந்திருக்க, பெரியார் இயக்க உணர்ச்சிபூர்வ
தொண்டர்கள் காரணமாக இருந்திருப்பார்கள் என்று, எனக்கு கிடைத்த சான்றிதழ் மூலம் யூகிக்க
இடம் இருக்கிறது. ( 'நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை';
http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )
தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில், உணர்ச்சிபூர்வ இரைச்சலின் ஆதிக்கத்தில், அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமற்ற/புறக்கணிப்பு போக்கு இருப்பதை, எனது பதிவுகள் உணர்த்துகின்றன.

அந்த போக்கு தொடர்வது என்பது, தமிழின், தமிழரின் மீட்சிக்கு துணை புரியுமா?
அல்லது வீழ்ச்சியை உறுதி செய்யுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்கள் நாடாக' தமிழ்நாடு மாறினால், அந்த வரலாற்றுப் பழிக்கு பெரியார் ஈ.வெ.ராவை முக்கியப் பொறுப்புக்குள்ளாகும் வகையில், பெரியார் கட்சிகள் இன்று செயல்படுகிறர்களா, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையை மீட்சிக்கான ஆய்வுக்கு உட்படுத்தாமல் ? " இளைய சமூகத்தின் பார்வையிலிருந்து, பெரியார் 'சருகாகி உதிரும்' போக்கு உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். "http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-06-10T08:10:00-07:00&max-results=7&reverse-paginate=true
குறிப்பு:
"பிராமணராயிருந்தாலும், பிராமணரல்லாதாராய் இருந்தாலும், தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணத்தைத் தடுத்து நிறுத்துவதில் ஈடுபடாமல், தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் வளங்களாகிய ஏரி, குளங்களையும், கிரானைட், தாது மணல் உள்ளிட்ட கனி வளங்களை சூறையாடிய கொள்ளையர்களிடம் 'குற்ற உணர்வின்றி, கட்சி நிதி/உதவிகள் பெற்று', அக்கொள்ளையைத் தடுக்கும் 'சகாயம் ஐ.ஏ.எஸ்' போன்றோர் எடுத்து வரும் சட்டபூர்வ நடவடிக்கைகளை, அச்சுறுத்தி தடுக்க முனைவதைக் கண்டிக்காமல், 'பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு, தமிழ் ஈழம், இந்துத்வா, ஆன்மீகம், தலித், இஸ்லாம்’ ' என்று பேசுபவர்களை, 'போராடுபவர்களை' , மேலேக் குறிப்பிட்ட 'பொது வாழ்வு வியாபாரிகளாக', அல்லது உணர்ச்சிபூர்வ போதையாளர்களாக, அடையாளம் காண்பது தவறா?"
http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_10.html

No comments:
Post a Comment