இடையிடு 5: Interlude 5:
தமிழ்நாட்டில் 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகள்' இருப்பதற்கு யார் காரணம்?
"'பசு வதைத் தடை
சட்டம்' யாருக்கு லாபம்?" என்ற தலைப்பிலான பதிவிற்கு,
நான் என்றும் மறக்காமல்,
பாதுகாக்க வேண்டிய 'நற்சான்றிதழாக' கீழ்வரும் மடல் எனக்கு வந்துள்ளது.
" அய்யா மோடி
ஏதோ ஆட்சி செய்கிறார்போலப் பேசுகிறீர்கள். இல்லை இந்துத்துவா என்ற மாயையைப் பயன்படுத்தி
அமீத்சா போண்ற தடாலடி கூட்டத்தின் கையாளாகவே மோடிஅலைகிறார்.மிக நீண்ட காலமாக திட்டமிட்டு
வந்த பழைமைப் பஞ்சாங்களைன் பிரதிநிதிகள் சனநாயகப் போர்வையில் கூத்தடிக்கிறார்கள். சாஸ்திரா
பார்ப்பனக்கூட்டம் மூலம் பெற்ற ந்ன்மைகளுக்காக ட்ர்ஹமிழகத்தைக் காட்டிக்கொடுக்கவேண்டாம்-
பழைய பெரியார் மையக் குழப்பவாதுயே." "
என்பதை முந்தையப் பதிவில்
பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_11.html )
பெரியார் கொள்கை ஆதரவாளர்
எனக்கு அனுப்பிய மின்மடலுக்கான எனது பதிலை, மேற்குறிப்பிட்ட "'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு லாபம்?" என்ற தலைப்பிலான பதிவுடன், அம்மடலில் இருந்த அனைவருக்கும் (reply
to all) அனுப்பினேன். அவர்களில் ஒருவரே மேற்கண்ட
மின்மடலை எனக்கு அனுப்பினார். அந்த பதிவைப் படித்து, என்ன புரிந்து கொண்டு, அவ்வாறு எழுதினார்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
"அதாவது 'பசுவதைத் தடை சட்டம்,காளைகளை அடக்கும் விழா தடை போன்ற மக்களின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் அமுலாகும் சட்டங்களானது, அரசில் எந்த அளவுக்கு 'லஞ்சம்' தலை விரித்தாடுகிறதோ, அந்த அளவுக்கு மக்களிடையே உள்ள சமசீரற்ற பண்பினையும், சமூக நோய்களையும் வளர்க்கும். அந்த வளர்ச்சிப் போக்கானது, மோடி அரசின் கதையை சாண் ஏறி, முழம் சறுக்கினதாக மாற்றினாலும் வியப்பில்லை. அவ்வாறு நிகழ்ந்தால், இந்தியா 'மோசமான' பிரிவினைக்குள்ளாகி, 'லஞ்சமும், குடும்ப வாரிசு அரசியலும்' பின்னிப் பிணைந்த 'ராஜா'க்களுக்கு சாதகமாக, ஆப்பிரிக்க நாடுகளுடன் எண்ணிக்கையிலும் சீரழிவிலும் போட்டி போடும் நிலை வரும்; என்பது போன்ற; 'மேற்கத்திய' உலகில் வெளிவந்துள்ள புத்தகங்களின் 'ஆருடம்' உண்மையாகி விடும்.’'
http://tamilsdirection.blogspot.in/2015/03/12_6.html

அடுத்து கீழ் வரும்
தகவலை 'அந்த அனைவருக்கும்' அனுப்பினேன்.
When Max Muller trumpeted forth to the world in his attractive
studies the great rapproachment , pitaa, pateer, pater, vater, father , he was
preparing the bankruptcy of the new science; he was leading it away from the
truer clues , the wider vistas that lay behind.
The most extraordinary and imposingly unsubstantial structures
were reared on the narrow basis of that unfortunate formula.
First, there was the elaborate division of civilized humanity into
Aryan, Semitic, Dravidian and Turanean races, based upon the philological
classification of the ancient and modern languages. More sensible and careful
reflection has shown us that community of language is no proof of community of
blood or ethnological identity; the French are not a Latin race because they
speak a corrupt and nasalised Latin, nor the Bulgars Slavs in blood because the
Ugro-Finnish races have been wholly Slavonicised in civilization and language.
Scientific researches of another kind have confirmed this useful and timely
negation.
The Philologists have, for instance, split up, on the strength of
linguistic differences, the Indian nationality into the northern Aryan race and
the southern Dravidian, but sound observations shows a single physical types
with minor variations pervading the whole of India from Cape Comorin to
Afghanistan.
Language is therefore discredited as an ethnological factor. The
races of India may be all pure dravidians, if indeed such an entity as a
Dravidian races exists or ever existed, or they may pure Aryans, if indeed such
an entity as an Aryan race exists or ever existed, or they they may be a mixed
race with one predominant strain, but in any case the linguistic division of
the tongues of India into the Sanskritic and the Tamilic counts for nothing in
that problem.
Yet so great is the force of attractive generalisations and widely
popularized error that all the world goes on perpetuating the blunder talking
of the Indo-European races, claiming or disclaiming Aryan kinship and building
on that basis of falsehood the most far-reaching political, social or
pseudo-scientific conclusions
DR K Loganathan Krishnan
"அய்யா, தமிழில்
எழுதமுடியாத பேற்றிஞர் எனக்கு அனுப்பவேண்டாம் ,தமிழருக்கான துரோகக் கடிதஙகளை."
என்று அதே நபர் எனக்கு
மின்மடல் அனுப்பியுள்ளார்.
நானும் கவனமாக அவரது மின்மடல் முகவரியை, எனது முகவரிப் பட்டியலிலிருந்து
நீக்கி விட்டேன்.
நான் மிகவும் மதிக்கும்
நண்பர் ஒருவர், அந்த இரு மின்மடல்களையும் படித்து விட்டு, கீழ்வரும் கருத்தை தெரிவித்தார்.
' நம் மீது கோபத்துடன்
இது போல கருத்து தெரிவிப்பவர்கள் உண்மையில் மதிக்கப்பட வேண்டியவர்களே. சுயலாப நோக்கில்,
நம்மை பாராட்டுபவர்களை விட, இது போன்ற உண்மையானவர்கள் மதிக்கத் தக்கவர்களே. ஏனெனில்
அவர்களுக்குள்ள அறிவில், சுயலாப நோக்கின்றி, தமக்குள்ள கொள்கைப்பற்றில் உண்மையாக தெரிவிக்கும்
கருத்துக்கள் அவையாகும்.'
மேற்கண்ட கருத்து எனக்கும்
சரி என்றே படுகிறது. அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்', செல்வம், செல்வாக்கு ஈட்டி, தீயினமாக வலிமை பெற, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் பயன்படுத்தப்படும் பின்னணியில், சுயலாப நோக்கின்றி, தமக்குள்ள கொள்கைப்பற்றில், நம் மீது சரியாகவோ/தவறாகவோ கோபப்படுபவர்கள் எல்லாம் மதிக்கத்தக்கவர்களே ஆவர்.
http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html
http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html
சுயலாப நோக்கற்ற 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளில்' , கிராமப்பின்னணியில் படித்த முதல் தலைமுறையினரில் பலர், தமது படிப்பையும், வாழ்வையும், சிலர் உயிரையும், 'பலி ஆடுகளாக', கட்சித்தலைவர்களின் சுயநல அரசியல் லாபங்களுக்காக, தொலைத்தார்களா? அந்த போக்கு மாறி, இன்று, 'பலி ஆடுகளின்' எண்ணிக்கை வேகமாக குறைந்து, அவர்களில் பலர் , 'தரகு, வன்முறை' திறனுள்ள 'ஆதாயத்தொண்டர்களாக' , கட்சித்தலைவர்கள் வழியில், நன்கு 'செட்டில்' ஆகி வருகிறர்களா? இது தமிழ்நாட்டின் அரசியல் நீக்கத்தின் அறிகுறியா? தமிழ்நாட்டில் பொது அரங்கில், விவாதப் பொருளின் வரை எல்லையைத் (limitation) தாண்டி, விவாதத்தில் ஈடுபடுவோர் மீது திசை திரும்பி, விவாதத்தில் உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டும் போக்கும், அதன் வெளிப்பாடா? காங்கிரசிலிருந்து 'இடம்' பெயர்ந்து, (http://tamilsdirection.blogspot.com/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html) எண்ணிக்கையிலும் வலிமையிலும் 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளும்' , 'சுயலாபக் கள்வர்களும்' தமிழ்நாட்டில் வளர்ந்ததற்கு, 'பெரியாரின் ஆன்மீகப் பெருந்தவறு' எவ்வளவு பங்களித்தது?
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அதன் தொகுவிளைவாக, 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை எல்லாம், மாணவர்கள் மத்தியில், கேலிப்பொருளாகி வருகின்றனவா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவாகும்.
(http://tamilsdirection.blogspot.in/2015_06_01_archive.html )
தமிழ், தமிழர் வளர்ச்சியையே முதன்மை நோக்கமாகக் கொண்டு , மலேசியாவில் வாழ்ந்து, அண்மையில் மறைந்த, அறிஞர் முனைவர்.கே.லோகநாதனின் கருத்து ஆங்கிலத்தில் இருந்ததால், அந்த பெரியார் கொள்கைப் பற்றாளருக்கு விளங்கவில்லை. அதில் தவறுமில்லை.

ஆனால் அதை மின்மடலாக நான் அனுப்பியதால், அது 'தமிழருக்கான துரோகக்
கடிதமாக' அந்த நபரால் கருதப்பட்டதானது, ஆய்வுக்கு உரியதாகும்.
தமிழ்நாட்டில் கல்வியறிவற்ற 'தற்குறி'களில் பலர், தமது செயல்பாடுகளில் மிகுந்த அறிவாற்றலை வெளிப்படுத்தி வாழ்வதைக் கண்டு, நான் வியந்ததுண்டு. நன்கு படித்த புலமையாளர்களிடமிருந்தும், வெளிப்படும், மிகுந்த அறிவாற்றலை கண்டும், நான் வியந்ததுண்டு. ஆனால் அரைகுறை தமிழறிவுடன் , 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளாக' வளரும் போக்கானது, தமிழ்நாட்டில் எப்போது, தோன்றி, எப்படி வளர்ந்து, தமிழரின் 'அடையாளச் சிதைவிற்கும், அரசியல் நீக்கத்திற்கும்' எந்த அளவு பங்களிப்பு வழங்கி வந்துள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
அரைகுறை தமிழறிவுடன் இது போன்று, 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகள்' எவ்வளவு பேர் பெரியார் பற்றாளர்களாக தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? அவ்வாறு இருப்பதற்கு யார் காரணம்? 'பெரியார் முகமூடியில்', 'பொதுவாழ்வு வியாபாரிகள்' இன்றுவரை வெற்றிகரமாக வலம் வர துணை புரிவது, இது போன்ற 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளா'? இந்த போக்கு நீடிப்பது பெரியாருக்கு பெருமையா? அல்லது, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணி வேர்களை, 'உணர்ச்சிகர' கொள்கைப் பற்றில், 'தமிழர் துரோகம்' என்று சிதைத்து, 'தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்கள் நாடாக' தமிழ்நாடு மாறி வருவதற்கான அறிகுறியா? தமது புலமையின் வரைஎல்லை (limitation) பற்றிய புரிதலின்றி, புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, 'பகுத்தறிவு' என்ற போர்வையில், சாதாரண பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பி, அறிவுக் களஞ்சியமான பழந்தமிழ் இலக்கியங்களை, 'மூட நம்பிக்கை, குப்பை' என்று வெறுத்து, ஒதுக்கும் போக்கானது ('மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?';
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html );
ஒரு சமூக 'பகுத்தறிவு' இயக்கமாக, உலக வரலாற்றில், எந்த காலக்கட்டத்திலும், எந்த நாட்டிலும் நடந்திருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சமஸ்கிருத இலக்கியங்களை 'மூடநம்பிக்கை, குப்பை' என்று வடநாட்டில் எந்த பகுத்தறிவு/மார்க்சிய புலமையாளராவது கண்டித்திருக்கிறார்களா?
தமிழ்மொழி இலக்கியங்களை எல்லாம் 'மூடநம்பிக்கை, குப்பை' என்று கண்டித்ததைக் கண்டிக்காமல், தமிழ்மொழி ஆதரவாளர்களாக பயணிக்கும் அதிசயமானது, உலகில் வேறெங்கும் வேறு எந்த மொழிக்கும் நடந்திருக்கிறதா?
'தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'முதன்மை குற்றவாளி ஈ.வெ.ரா' என்று பதிவாவது; அல்லது 'பெரியார்' என்ற வழிபாட்டுச் சிறையிலிருந்தும், ஈ.வெ.ரா மீள்வது; ஆகிய இரண்டில் ஒன்று விரைவில் நடக்கப்போவதும் நிச்சயமே.'
‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’ என்று சொன்னது பகுத்தறிவா? அறியாமையா?';
http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html

குறிப்பு:
From: ‘எனது நிலைப்பாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ?’; http://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html
நான் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை, எனது இசை ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து, என்னால் முடிந்தவரை, 2005லிருந்து, என்னை (தஞ்சை இரத்தினகிரி, மனோகரன் உள்ளிட்டு) சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்களிடம் விளக்கி வருகிறேன்; பதிவுகள் வெளியிட்டு வருகிறேன். 2006 ‘தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்’ வெளிவந்த, கீழ்வரும் கட்டுரை, ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்கு; ‘கறுப்பு – வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’ ; http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html
No comments:
Post a Comment