Tuesday, October 27, 2015



   இடையிடு 7: Interlude 7:

 

 எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்


1.  தகவல்/நிலைப்பாடுகள் பரிமாற்றம்;
தகவல்களின்/சான்றுகளின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்திக் கொள்ளல்;

2. அறிவுரை பெறுதல்/வழங்குதல்; 
    ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளல்;

3. யார் அதிபுத்திசாலி என்ற போட்டி; 
தனது பிழைப்பிற்காக/பிம்பத்திற்காக‌(ego-image), ஒரு  சார்பாக தெரிந்தே ஈடுபடுவதும், இதில் அடக்கம்

முதல் இரண்டு நோக்கங்கள் உள்ளவர்கள், மூன்றாவதாக உள்ள விவாதத்தை தவிர்ப்பது இயல்பே.

தமிழ்நாட்டில் 'ஒப்பீடு' (comparison) நோயானது, 
(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) 'யார் அதிகம் செல்வம், செல்வாக்குடையவர்? யார் விவாதத்தில் அதிக தகவல்கள் தெரிந்தவர்? யார் அதிபுத்திசாலி?' என்பது போன்ற போக்குகளில் வெளிப்படுவதால், அந்த போக்கில், அடுத்த நபருக்கு அறிவுரை சொல்ல தகுதி இருக்கிறதா, இல்லையா? என்பது பற்றியும், அடுத்தவர் தம்மிடம் அறிவுரை எதிர்பார்க்கிறாரா? என்பது பற்றியும், கவலையின்றி, அறிவுரை வழங்கும் நோயும் அதிகரித்து வருகிறது. செல்வத்திலும், செல்வாக்கிலும், அறிவிலும் நம்மை விட கீழானவர்கள், 'ஒப்பீடு' நோயில் சிக்கியிருந்தால், அவர்களுடன் விவாதிப்பதும் சிக்கலானதாகும். விவாதத்தில், எந்த இடைவெளியில், அவர்கள், 'நம்மை விட உயர்ந்தவர்கள்' , என்று 'குத்திக்காட்டும்' வாய்ப்பிலேயே, அவர்களின் முழு கவனமும் இருப்பதால், அந்த விவாதமானது, நமக்கு ஆற்றல்/நேரம் விரயமே, என்பதும் எனது அனுபவங்களாகும். நமக்கும் மேலானவர்களுடன் விவாதிக்கையில், நாமும் அதே தவறை செய்யாமல், விவாதிப்பதும் முக்கியமாகும். அதிலும் 'அதிவேக' 'குறுக்கு வழி பணக்காரர்கள்' , 'ஆங்கிலத்தில்'(?), தமது 'செல்வம், செல்வாக்கின் வளர்ச்சி, அரசியல்' பற்றி ('அரைகுறை ஆங்கில அறிவில்') பேசுவது, நகைச்சுவை, சிறிது நேரத்திற்கு; தலைவலி, அதிக நேரத்தில்.

தமிழ்நாட்டு 'அதி புத்திசாலிகளில்', தமது புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமிருப்பவர்கள் யார்?யார்? அதற்கு மாறாக, தமது ஆற்றலையும் நேரத்தையும், தமது 'வளர்ச்சிக்கான' (தம்மையே வியாபாரப் பொருளாக்கி; திருக்குறள், பொருள்; அதிகாரம்:92), சமூக வியாபார வலைப்பின்னலை (social business network)  உருவாக்கி, 'வாழ்வியல் புத்திசாலிகளாக'(?) வாழ்வதில், குறியாக உள்ளவர்கள் யார்? யார்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html
 ( தமிழும், தமிழுணர்வும் அந்த சமூக வியாபார வலைப்பின்னலின் சிறைக் கைதிகளா? இல்லையென்றால், தமிழ்நாட்டின் பெரும்பாலான தமிழறிஞர்களுக்கு தெரிந்தும், கடந்த சுமார் 12 வருடங்களாக, யாப்பிலக்கணமானது, எனது ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்ட,  குறைபாடுகளுடன், கல்லூரி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவது சாத்தியமா? உயர்கல்வியில், புலமைக்குப்  பதிலாக,  ஊழலும் செல்வாக்கும் வளர்ந்ததால், வந்த விளைவா இது? தாய்மொழி வேரற்ற தமிங்கீலிசர்கள் நாடாக தமிழ்நாடு மாறி, பாலி, லத்தீன் வழியில், நூலக அருங்காட்சியக மொழியாக, தமிழ் மாறிவிடும்; இந்த ஆபத்திலிருந்து விடுபடவில்லையென்றால்.
  http://tamilsdirection.blogspot.in/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_7.html )


எனவே விவாதத்தில் நாம் அறிவுரை பெறுவதாக இருந்தாலும், வழங்குவதாக இருந்தாலும், மேற்கண்ட புரிதலுடன் கூடிய எச்சரிக்கை அவசியம்.

முதலாவது நோக்கத்தில், விவாதப் பொருளையும், விவாத எல்லைகளையும் பற்றி, விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு சரியான புரிதல் இருந்தால் மட்டுமே, அந்த நோக்கம் நிறைவேறும். அதற்கும் அந்த பொருள் பற்றியும், வரை எல்லைகள் பற்றியும், விவாதிப்பதில், தமது வரை எல்லைகளைப் (limitations) பற்றிய புரிதலும் முக்கியமாகும்.

உதாரணமாக, நான் நீண்ட வருடங்கள் அனுபவங்கள் உள்ள, முதுநிலை அளவுக்கு இயற்பியல்(Physics) பாடங்கள் நடத்திய அனுபவம் இருந்தாலும், குவாண்டம் எந்திரவியலில் (Quantum Mechanics)  புலமையாளர்களுடன் விவாதிக்கும் அளவுக்கு,  எனக்கு அதில் புலமை கிடையாது. எனவே, எனக்கு (எனது ஆராய்ச்சிகள் தொடர்பான) தேவையிருந்தால், அத்தகையோரிடம் விளக்கம் கேட்டு விளங்கிக் கொள்ளவே முயல்வேன்.

எனது பல்துறை ஆய்வில் தொல்காப்பியம் அளவுக்கு கண்டுபிடிப்புகள் இருந்தாலும், (http://musictholkappiam.blogspot.in/ ), நான் கல்லூரி முதல்வராயிருந்த போது, எனக்கு கீழ் பணியாற்றிய இளைஞரான தமிழ் விரிவுரையாளரிடம், தமிழ்  (இலக்கணத்தில் 'ஓற்றின்' பயன்பாடுகள் பற்றி) தொடர்பாக விவாதித்த போது, தமிழில் எனது வரைஎல்லைகள் பற்றிய புரிதலோடேயே விவாதித்தேன்; அவரிடமிருந்து புதிதாக தெரிந்து கொண்டதை, நன்றியுடன் ஏற்றுக் கொண்டேன்.

விவாதத்தில் விவாத வரம்பின் எல்லையை மீறி, விவாத்ததில் ஈடுபடும் தன்னைப் பற்றியும் விவாதத்தை நீட்டுவது என்பது, நமக்கு முதல் அபாய எச்சரிக்கையாகும். அதையும் மீறி, அடுத்தவருக்கு என்ன தெரியும்/தெரியாது என்று நாமே முடிவு செய்து, விவாதத்தில் ஈடுபடுபவர்களையும், விவாதப் பொருளாக‌, விவாதத்திற்குள் கொண்டு வந்து, விவாத எல்லையை , தன்னிச்சையாக, விரிவுபடுத்தி போவது, என்பது, நம்மையறியாமலேயே, 2 மற்றும் 3 விவாத நோய்களில் நம்மை சிக்க வைத்து விடும். 'உணர்ச்சிபூர்வ அறிவு தற்குறிகளாக' இருப்பவர்கள், அந்த தவறை, விவாதம் தொடங்கியவுடனேயே செய்து விடுவார்கள்'உணர்ச்சிபூர்வ அறிவு தற்குறிகளாக' இருப்பவர்களை, நாம் அடையாளம் கண்டு, நமது சமூக வட்டத்திலிருந்து அகற்றுவதன் மூலம், நமது ஆற்றல்/நேரம் விரயத்தை தவிர்க்க, அந்த 'தவறும்' உதவக் கூடும். (http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

விவாதத்தின் மையப்பொருளிலிருந்து விலகி, விவாத ஓரத்தில் உள்ள தகவல் தொடர்புள்ள வேறொரு விவாத மையப்பொருளை நோக்கி, இடம் பெயர்ந்து, விவாத நோய் மூன்றில் சிக்கி, விவாதமானது 'ஈகோ (Ego) யுத்தமாக' மாறும் அபாயமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் பொது அரங்கில், அந்த 'உணர்ச்சிகர அறிவு தற்குறி' நோயின் செல்வாக்கிற்கும், தமிழ் மற்றும் தமிழரின் வீழ்ச்சிக்கும், எந்த அளவு தொடர்பு உள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும். இன்னும் சிலரோ, மாற்று கருத்துக்களுக்கு இடமளிக்காமல், 'கடவுளால் படைக்கப்பட்ட நீதிபதிகளைப்' போல், 'தமிழ் விரோதி, தமிழின துரோகி' என்று பட்டங்கள் கொடுத்து, அல்லது விவாதிப்பவரின் 'யோக்கியதையை' எடை போட்டு, விவாதத்தில் நுழைத்து, அந்த விவாத புலத்தினை, புலமையாளர்கள் 'அசிங்கப்படாமல்' ஒதுங்க விரும்பும், விவாதப் புலமாக்கி விடுவார்கள். அத்தகைய, 'இடிப்பாரை இல்லாத‌ ஏமரா' (திருக்குறள் 448) மனிதர்களின் ஆதிக்கத்தில் தமிழும், தமிழரும் சிக்கி, வீழ்ச்சிக்குள்ளானார்களா? மீட்சிக்கு வழியுண்டா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதே போல, சுயலாப உள்நோக்கில், 'விவாதம்' என்ற பெயரில், தம்மை இழிவு படுத்துபவர்கள் மீது, கோபப்படாமல், புறக்கணிப்பதன் மூலம், நமது சமூக ஆற்றல் விரயத்தைத் தவிர்க்க முடியும் என்பதற்கு, 1944க்கு முன் இருந்த ஈ.வெ.ரா சிறந்த முன்னுதாரணம் ஆவார். 1944க்குப்பின், அதிலிருந்து அவர் நழுவி, 1949க்குப்பின், அண்ணா உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் மீது, 'கோபத்தில்' வசை மாறி பொழிந்தது, தி.மு.கவின் வளர்ச்சிக்கே உதவியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த வசை மாறி தொடங்கியதுமே, 'நாம் வெற்றி பெற்று விட்டோம்' என்று, அண்ணா கருத்து வெளியிட்டதாகவும் தகவல் உண்டு. தி.மு.கவில் அண்ணா மட்டுமே, பதிலுக்கு 'பெரியார்' மீது 'வசைமாறி' பொழியாதவர் ஆவார்.


தகவல்கள் சரியானவை  என்றாலும், முன்வைக்கப்படும் வாதத்தில் குறைபாடுகள்(fallacy ; https://en.wikipedia.org/wiki/List_of_fallacies ) உள்ளனவா? விவாதம் மூலம் எது சரி? என்று இருவரும் தெளிவு பெறலாம்; அல்லது கூடுதல் தேடலுக்காக விவாதம் ஒத்தி வைக்கப்படலாம். எப்படியிருந்தாலும் நமது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்கள் எல்லாம் மிகவும் மதிக்கத்தக்கவர்களே;  வாய்ப்பு கிடைத்தால், நட்பும் பாராட்டத்தக்கவர்களே ஆவர்.
http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html
 

தாம் ஈடுபடும் செயல்பாடுகளில், செயலின் தேவைக்கேற்ற பற்று இன்றி, செயல் நடைபெறாது.

அது தனது வரைஎல்லையைத்(limitation)  தாண்டி,  உடைமையுணர்வு (possessive)  என்ற அளவுக்கு போகாமல் பார்த்துக் கொள்வது, 'பற்றற்ற நிலை' என்பது, எனது புரிதலாகும். விவாதத்தில் அந்த எல்லையைத் தாண்டும்போது, 2 மற்றும் 3 தொடர்பான விவாத நோய்களில், நாம் சிக்க வாய்ப்புண்டு. நம்மிடம் உள்ள 'ஆணவம், அகந்தை', அதற்கு தூண்டுகோலாகி விடும்.

2 மற்றும் 3 நோக்க விவாத நோய்கள் இல்லாததன் காரணமாகவே, எனது ஆராய்ச்சியில் நம்ப முடியாத அளவுக்கு, இசையினுள் மறைந்துள்ள கட்டிடவியல் வடிவங்களை கணினி மூலம் எவ்வாறு பிரித்தெடுப்பது என்பது உள்ளிட்ட‌,  சாதனைகள் வெளிப்பட்டுள்ளன. அந்த ஆராய்ச்சி செயல்பாடுகளில் அனுபவிக்கும் விலை மதிப்பில்லாத இன்பங்கள், காரணமாக, 'பாராட்டு, புகழ்' என்பவை தேவைப்படவில்லை; தமிழ்நாட்டின் நிகழ்கால சூழலில், அது தொந்திரவும் கூட. இளையராஜாவிடம் (நெருங்கி பழகிய காலத்தில்) அதை -  'பாராட்டு, புகழ்' என்பவை சிறைக்கூடம் என்று - தெரிவித்தபோது, அவரும் அதை ஒத்துக் கொண்டார்.

இயற்கையுடன் நெருக்கமான தொடர்புகளுடன், (சங்க இலக்கிய வரிகள் வெளிப்படுத்தியுள்ளவாறு, மேலே 'ஒப்பீடு' - link - தொடர்பில் உள்ளபடி, "பறவைகளின் ஒலிகளைக் கூர்ந்து கவனிக்கும் போது, அந்த ஒலிகளில், இயற்கையாக வெளிப்படும் சந்தத்தைக் கண்டுபிடிப்பது ஒரு இன்பமாகும்; காற்றில் தாள இடைவெளியில் (Rhythmic)  அசைகின்ற கொடிகள், மரக்கிளைகள், இலைகள் கியவற்றை கூர்ந்து கவனிக்கும் போது,  வெளிப்படும் நடனவகை அசைவுகளை (choreography related)  உணரும்போதும்,  கிடைக்கும் இன்பம், சொற்களில் அடங்காது.");
எனது சமூக வட்டத்தில், சாதாரண மனிதர்கள், பெரும்பாலானவர்களாக இருக்கும் வரை (ஊற்றுக் கண்களோடு தொடர்பில் இருப்பதால்) , எனது ஆய்வுகள் இன்னும் வளரும். ('Composing music from the sounds of birds, bees, horses, toads, etc - all kinds of sounds from Nature'; 
http://musicdrvee.blogspot.in/search?updated-max=2013-10-11T03:06:00-07:00&max-results=7&start=3&by-date=false
அது பாதிக்கப்பட்டு , மேற்குறிப்பிட்ட சிறைக்கூடத்தில் நான் சிக்கும் போது, நிச்சயமாக, அது தேக்கத்திற்குள்ளாகி (stagnation) விடும்.

நானாயிருந்தாலும், யாராயிருந்தாலும், 'பாராட்டு, புகழுக்கு' ஏங்கும் மனநோயானது, அகச்சீரழிவின் வெளிப்பாடேயாகும். சமூக அளவில் நோயாக வளர்ந்துள்ள, அந்த அகச்சீரழிவே, தமிழின், தமிழரின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதால், 'தற்காப்பு முயற்சியாக', 'பாராட்டு, புகழை', இதுவரை வெற்றிகரமாக, தவிர்த்து வாழ்ந்துள்ளேன். எனது (இருப்பிடம்/பணி) சமூக வட்டத்திலும், தொடர்ந்து என்னை பாராட்டுபவர்களை விட்டு, விலகி வாழ்வதும், அந்த 'தற்காப்பு முயற்சியே'  ஆகும். கட்சித்தலைவர்களின் 'பாராட்டு' நிகழ்ச்சிகளை குறை கூறியவர்கள், தமக்கான பாராட்டு நிகழ்ச்சிகளில்,  'மனமகிழும்', மேடைகளில், 'தமக்கான' ('முன்வரிசை நாற்காலி' உள்ளிட்ட‌) முக்கியத்துவத்தை 'இறுகப் பற்றி'க் கொள்ளும், அளவுக்கு, தமிழ்நாட்டில் அந்நோய் 'வீரியமாக' வளர்ந்துள்ளதையும், நான் அறிவேன்.  செயற்கையான மனித உறவுகள் (குடும்பம், நட்பு, கட்சி, etc, உள்ளிட்டு, எதில் வெளிப்பட்டாலும்), எல்லாம் காலப்போக்கில், நம்மையும் 'ஒப்பீடு' நோயில் சிக்க வைத்து, நமது இயல்பை சிதைத்து, 'எந்திர மன நோயாளியாக்கி', மேற்குறிப்பிட்ட 2 மற்றும் 3 விவாத மன‌நோயாளியாக்கி விடும் என்பதும், எனது கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.  (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

மேற்சொன்னவை தொடர்பாக வெளிப்படும், பின்னூட்டங்களின் (feedback) அடிப்படையில், மேலும் அவற்றை நெறிப்படுத்திக் கொள்வேன்.

No comments:

Post a Comment