Monday, March 7, 2016

இந்தியாவில் செயல் மூலம் 'பேசி வரும்' 'சமூக நீதிகள்' பற்றி அறியாமல்;

'செவிடராக' மாணவர் தலைவர் கண்ணையா குமார் ?



தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன், பாரதியார் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை விட, அதிக நிதியை புதுடெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு (JNU)  மட்டும், ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு ஒதுக்கி வருகிறதா? என்ற கேள்வி எழும் அளவுக்கு;

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் 'செல்லப்பிள்ளை' பல்கலைக்கழகம்  JNU ஆகும்.

தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் எம்.பியான டானியல் ராஜா,மற்றும் வெளிநாட்டு நிதி பெறும் என்.ஜி.ஓ அமைப்பு தொடர்புகளுடன் 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு' முற்போக்குகளின் குடும்பப்பிள்ளைகள் போன்றவர்கள், அப்பல்கலைக்கழகத்தில் படித்தார்கள்/படிக்கிறார்கள்; எவ்வளவு அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டு கிராமத்திலிருந்து, குப்பன், சுப்பன் வீட்டுப்பிள்ளைகள் படித்ததாக தெரியவில்லை; நானறிந்த வரையில். எனது கருத்து தவறு என்று நிரூபிக்க, அவ்வாறு படித்ததாக/படிப்பதாக எவரும் தெரிவித்தால், நன்றியுடன் எனது கருத்தை நெறிப்படுத்திக் கொள்வேன்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில்,  JNU போன்ற பல்கலைக்கழகங்கள் மட்டும் 'செல்லப்பிள்ளையாக' இருப்பது சமூக நீதியா? என்ற குரல் எழுப்பாததில், அங்குள்ள 'முற்போக்கு, பிற்போக்கு' மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் அமைப்புகளும் 'ஒற்றுமையுடன்' உள்ளார்களா, மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைதுக்கு முன்னும், பின்னும், இன்று வரையில்?

இந்தியாவில் செயல் மூலம் 'பேசி வரும்' 'சமூக நீதிகள்' பற்றி அறியாமல், 'செவிடராக' மாணவர் தலைவர் கண்ணையா குமார், தனது 'ஜாமின்' விடுதலைக்குப்பின், JNU-வில், 'எழுச்சி உரை' ஆற்றினாரா? காலனிய பிடியிலிருந்து, 'விடுதலை பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில், 'தேச கட்டுமானம்' ('Nation Building')  தொடர்பான பிரச்சினைகள் உள்ள நிலையில், JNU-வில் நடைபெற்ற,  'நீதிமன்ற கொலைகள்' ('Judicial Killing') கருத்தரங்கானது,'தேச கட்டுமானம்' பணிக்கு துணையாக இருக்குமா? தடையாக இருக்குமா? ( http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1468-2451.2009.00690.x/abstract )

அதே போல்,
பேச்சில், எழுத்தில் 'சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு' என்று 'வெளிச்சம்' போட்டுக்கொண்டு, ஊழல், கொலை, கொள்ளை,கற்பழிப்பு குற்றவாளிகளின் பின்பலமான 'வலைப்பின்னலில்' இடம் பெற்று, 'செல்வவான்களாக' வளர்ந்து வருபவர்களில், அவர்களின் 'எடுபிடி' முற்போக்குகளில்,  யார்? யார்? அந்த 'எழுச்சி உரை'யினை பாராட்டி வருபவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


மேற்குறிப்பிட்ட ஆய்விற்குதவும் கட்டுரைகள் வருமாறு:


" It feels good to be ‘on the side of the poor’ without actually ever doing anything for the poor."

In India, A Letter For Mr. Kumar





"Will JNU student leader Kanhaiya Kumar & his supporters, demand the review of the mechanism of funding the universities in India,  to serve the azadi  from the lack of   transparency, accountability, & social justice? "


Is JNU student leader Kanhaiya Kumar aware of the 'discrimination'

in the 'human rights support ', with the probable 'hidden agenda' ? 

What about the azadi  from the lack of   transparency, accountability, & social justice in funding the universities?
http://tamilsdirection.blogspot.in/2016/03/normal-0-false-false-false-en-us-x-none.html

No comments:

Post a Comment