Wednesday, March 23, 2016



           தமிழ்வழிக்கல்வி மீட்பு:  சவால்களும், முயற்சிகளும்



"என்னுடைய பெண்கள் அரசுப் பள்ளிகளில் படித்தால், முக்கியமாக கிராமப்புறங்களில் இருந்து படித்தால், விரைவில் மழுங்கிப் போய் விடுவார்கள்";'எங்கள் குழந்தைகளுக்காகத்தான் இதை செய்தோம்: செம்மரக் கடத்தலில் பிடிபட்டவர்கள் உருக்கம்': http://tamil.thehindu.com/india/
செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பி.டெக்., மாணவர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.பி.டெக்., மாணவர்கள் ஆடம்பர செலவுக்கு ஆசைப்பட்டு, கடத்தலில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1488361

அரசு பள்ளிகளில் படிப்பதை 'படுகுழியாக' கருதி, ஆங்கிலவழியில் தமது குழந்தைகளை படிக்க வைக்க, பிறர் 'பொறாமைப்படும்' அளவுக்கு 'செல்வம்' ஈட்டி வாழ, நல்ல மனிதருக்கான மதிப்பீடுகளை (Human Values) காவு கொடுத்து, 'இழிவான' சமரசங்களுடன், 'பெரியார்' முகமூடியில் வாழும், 'வாழ்வியல் புத்திசாலிகளை', நான் அறிவேன். அது போன்ற புத்திசாலிகளின் 'தூண்டுதலால்', அவர்கள் 'சுயநலனுக்காக', அது போன்ற 'புத்திசாலித்தனம்' இல்லாமல், 'செம்மர திருட்டில்' ஈடுபட்டு, சிக்கியவரின் மேற்குறிப்பிட்ட வாக்குமூலமானது, ஆழ்ந்த ஆய்விற்குரியதாகும்.

மேற்குறிப்பிட்ட 'வீழ்ச்சியிலிருந்து', தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்கும் நோக்கில், தமிழ்வழிக்கல்வி மீட்பு மையம் செயல்பாடு நோக்கி, எனக்கு 'சாத்தியமான' சில தமிழ்வழிக்கல்வி பள்ளிகளை அடையாளம் கண்டு, அப்பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன்;

அப்பள்ளிகளை தமிழ்வழிக்கல்வி மீட்பிற்கான 'முன்மாதிரி'  பள்ளிகளாக உருவாக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து உருவாக்கி வருகிறேன்; வரும் கல்வி ஆண்டில் செயல்வடிவம் பெறும் இலக்குடன். 

குழந்தைகளின் புலனறிவு மூளை வளர்ச்சிக்கு (Cognitive Skills related Brain Growth) , சுமார் 10 வயது வரை, தாய்மொழிவழிக்கல்வியில் பயில்வதே சிறந்தது என்பது தொடர்பான, உலக அளவிலான ஆய்வுமுடிவுகளையும் சேகரித்து வருகிறேன்; தமிழ்நாட்டில் வாழும் பெற்றோர்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நோக்கில். (‘தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’ ; http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html )
அதனை என்னென்ன வழிகளில் கொண்டு செல்ல முடியும்? என்றும் ஆராய்ந்து வருகிறேன்.

அந்த நோக்கில்;

'விளையாட்டுப் பள்ளிகளில்' குழந்தைகளை சேர்த்துவரும் பெற்றோர்களிடம் 'உரையாடி', அது போன்ற பெற்றோர்கள், தமது குழந்தைகள் நன்மைக்காக, 'குறைந்தது ஆரம்பப்பள்ளி வரையிலாவது, தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்க, என்ன செய்ய வேண்டும்?' என்பதற்கான ஆலோசனைகளை பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

அந்த நோக்கில், 'உரையாடி' 'சரியான' வழிமுறைகளை கண்டுபிடிப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமல்ல, என்பது தொடர்பான எனது அனுபவம் வருமாறு;

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடையே 'இயல்பான' உரையாடல் சீரழிந்து, 'சுயலாப' நோக்கிலான உரையாடல்களே 'ஆதிக்கம்' பெற்றுள்ளனவா? அத்தகைய உரையாடல்களில், தனது 'செல்வம், செல்வாக்கு' அதிகரித்துள்ளதை 'வெளிச்சம்' போடுவதும், அல்லது 'அதிகரிக்க' வழிகள் தேடுவதுமே முன்னுரிமை பெற்று வருகின்றனவா? உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும்(Passions), புலமை தாகத்துடனும்,  வாழ்பவர்களுடன்,  நிகழ்த்தும் உரையாடலானது, தமது 'சுயலாப' நோக்கங்களுக்கு உதவாதெனில், அதை 'விரயம்'  (Waste) என்று ஒதுக்கி, வாழ்பவர்களில், 'பெரியார்' முகமூடிகளுடன் வாழ்பவர்கள் எல்லாம், 'மனித இழிவுக்கு இலக்கணமாக' வாழ்வதும்,  எனது சமூகவியல் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

எனவே பல்வேறு 'கொள்கை' முக மூடிகள் இன்றி, 'தரகு' உள்ளிட்ட குறுக்குவழி பணம் ஈட்டல் இன்றி, தமக்குள்ள உண்மையான தகுதி, திறமைகள் அடிப்படையில் உழைத்து சம்பாதிப்பவர்களுடன், 'சாத்தியமான' வழிகளில் தொடர்பு கொண்டு, உரையாடி, தமிழ்வழிக்கல்வி மீட்பு நோக்கிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

தமிழ்நாட்டில் 'பேச்சும், எழுத்தும்' தத்தம் தகவல் பரிமாற்ற வலிமையை (Communication Strength) இழந்து, 'செயல்' மட்டுமே பேசும் வலிமையை கொண்டுள்ள சமூக சூழலே, தமிழ்நாட்டில் நிலவுகிறது. எனவே பல்வேறு கொள்கை 'முகமூடிகளுடன்', 'சுயநலக் கள்வர்களாக' வாழ்பவர்கள் எல்லாம், சாதாரண மக்களிடமிருந்து அந்நியமாகி, 'ஆதாய அடிவருடிகள்' 'வெளிச்சத்தில்', வாழத் தொடங்கியுள்ளனர்.

எனவே 'குறுக்கு வழி' நோக்கமின்றி வாழ்பவர்கள் எல்லாம், நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்று 'கூர்ந்து' கவனித்து, நம் மீது 'நம்பிக்கை' வந்தால் மட்டுமே, 'இயல்பாக' உரையாடுவார்கள். அவ்வாறு நான் முயன்று வரும் உரையாடல்களில் ஒன்று பற்றி இங்கு பார்ப்போம். 

தமது குழந்தையை 'நர்சரி' பள்ளியில் அண்மையில் சேர்த்துள்ள ஒரு கணினி பழுது பார்ப்பவரிடம் மேற்குறிப்பிட்ட முறையில், உரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது; 

கடந்த சில வருடங்களாக, அவர் எனது கணினிகள் தொடர்பான பணிகளுக்கு பலமுறை என்னை சந்தித்து, 'எடை போட்டு' என் மீது அவருக்கு நம்பிக்கை வந்த நிலையில்.

'தாய்மொழி வழிக்கல்வி' பற்றிய உலக அளவிலான, ஆய்வு முடிவுகளை அவரிடம் விளக்கி, அவற்றை அவரைப் போன்ற பெற்றோர்கள் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம்? என்று ஆலோசனை கேட்டேன்.

அவர் சொன்ன பதில், எனக்கு அதிர்ச்சியானது.

"குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்க வேண்டும்? என்பதை 'மனைவிகளே' பெரும்பாலும் தீர்மானிக்கிறார்கள். ஊரில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் படிக்க வைப்பதே 'கெள‌ரவம்' என்றாகி விட்டது. தமிழ்நாட்டு பெண்கள் எல்லாம் 'கெளரவ' போட்டியில் சிக்கி விட்டார்கள்.('தமக்கென வாழா மன நோயாளிகள்';  http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html ) எனவே அவர்களுக்கு தமது பிள்ளைகள் உருப்பட,  10 வயது வரை, தாய்மொழிவழிக்கல்வியில் பயின்றாக வேண்டும், என்ற உலக ஆய்வு முடிவுகள் பற்றி அக்கறை இருக்காது."

ஆக தமிழ்நாட்டு குடும்பங்களை 'கெளரவ போட்டியிலிருந்து' மீட்பதும், தமிழ்வழிக்கல்வி மீட்சியுடன் தொடர்புடையதாகி விட்டது.

அதற்கு நான் தேர்ந்தெடுத்து செயல்வடிவம் கொடுக்க உள்ள தமிழ்வழிக்கல்வி பகுதிகளில், குறைந்த பட்சம், 'சில' 'முன்மாதிரி' பெற்றோர்களை எவ்வாறு, அடையாளம் கண்டு, அவர்களுக்கு 'சாத்தியமான' வழிகளில் 'செயல்' மூலம் எவ்வாறு 'உதவி', அவர்களை வளர்த்தெடுப்பது? என்பதும் எனக்கு முக்கியமாகி விட்டது.

தமிழ்வழிக்கல்வி மீட்பில்,  அந்த பள்ளிகளில் நான் 'வெற்றி' பெற்றால் தான், எனக்கு 'பிரமிக்கும்' வகையில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளவர்கள் மூலம்,  'சுயலாப' நோக்கற்ற தமிழ்வழிக்கல்வி ஆதரவாளர்கள் துணையுடன், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடியும்; கீழ்வரும் குறளின் வழியில்; 

தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி அரசு பள்ளிகள் ஆயிரக்கணக்கில், படிக்க மாணவரின்றி, மூடப்பட்டு வரும் சூழலில்;

ஆங்கிலவழிக்கல்வியில் தத்தம் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டு, 'ஊரான்' வீட்டுப்பிள்ளைகளை தமிழ்வழிக்கல்வியில் படிக்க, குற்ற உணர்வின்றி 'ஆலோசனை' கூறும், தமது 'சுயநல வாழ்விற்காக‌', தமிழை 'சிறை'படுத்தியுள்ள, தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) 'தமிழ்வேர்க்கொல்லி'  நபர்களையெல்லாம், 'மாற்றான்' என அடையாளம் கண்டு.

'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கி செயல்' - திருக்குறள் 471 

தேச கட்டுமான சீர்குலைவிலிருந்தும், அதன் விளைவான அரசியல் நீக்கத்திலிருந்தும் (depoliticize;  முந்தைய பதிவில் சுட்டிக்காட்டியபடி), தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும்  மீட்க, அதுவே முதல்படியாகும். அந்த நோக்கில்;

கன்னியாகுமரியில்  விவேகானந்தா பாறை நினைவகத்தை(Vivekananda Rock Memorial)  உருவாக்கிய சாதனையாளார் திரு.ஏக்நாத் ரனடே(Eknath Ranade), அந்த சாதனைக்காக, தன்னை முக்கியத்துவப்படுத்தி, பாராட்ட முனைந்த போது, அதனை, "கூட்டு முயற்சியில் விளைந்த சாதனைக்காக,  தன்னை மட்டும் தனித்து பாராட்டுவது என்பது சரியுமல்ல; நியாயமுமல்ல; ( ‘neither right nor fair) தவறானதும் மற்றும் அநாகரிகமானதும் (‘improper and in bad taste’) ஆகும்" என்று தெரிவித்து, அதனை தடுத்து விட்டார். தி.மு.க தலைவர் அண்ணாதுரை ஆதரித்த நிலையில்
(Pages 27-29; ‘The Story of the Vivekananda Rock Memorial), அன்றைய முதல்வர் பக்தவச்சலம், அந்த நினைவக கோரிக்கையை நிராகரித்தார். 'நிறைவேறாது' என்ற நிலையில் இருந்த கோரிக்கையை, நிறைவேற்றி காட்டிய, அந்த சாதனையில்,  திரு.ஏக்நாத் ரனடே சந்தித்த சவால்கள் , மற்றும் அவரின் அனுபவ அடிப்படையிலான ஆலோசனைகள் ( ‘Sadhana of Service’)  பற்றியும் படித்து வருகிறேன். சுயலாப நோக்கின்றி, ஆக்கபூர்வமான சாதனைகளில் ஈடுபடுபவர்கள் சந்திக்கும் தடைகளை, என்னென்ன வழிமுறைகளில், வெற்றி கொண்டு, சாதனை படைக்க முடியும் என்பதற்கு, நானறிந்த வரையில், ஈடுஇணையற்ற வழிகாட்டும் நூல்க‌ள், ‘Sadhana of Service’ & ‘The Story of the Vivekananda Rock Memorial'  ( Email: vkpt@vkendra.org) ஆகும்.

No comments:

Post a Comment