Sunday, March 13, 2016


தமிழ், தமிழ்நாட்டின் மீட்சிக்கான கருதுகோள்(2) (Hyphothesis);



தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானம்' (Nation Building)  சிதைவுக்குள்ளாகியுள்ளதா? அதற்கு 'அதிக' பங்களித்தது, ஈ.வெ.ராவா? ராஜாஜியா?


'அரசியல் பின்புலம் எதுவுமற்று, கொள்கை முழக்கங்களோ தத்துவ விளக்கங்களோ இல்லாமல், ஊழலை ஒழிப்பேன் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு அரசியல் செய்த விஜயகாந்த் பெற்ற வெற்றி, பிற கட்சிகளின் சித்தாந்த முழக்கங்களைக் கேலிப்பொருளாக்கியது எப்படி என்பது தனியே விவாதிக்க வேண்டியது.'
'மறுபடியும் முதலிலிருந்தா?'- அரவிந்தன்

''எங்களுக்கு கொள்கை இல்லை; அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு மாற்று வேண்டும் என்பதே எங்களின் கொள்கை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1499352

கொள்கை உள்ள கட்சிகளை எல்லாம் ஓரங்கட்டி, விஜயகாந்தைப் போல்,  'ஊழல் ஒழிப்பை' மட்டுமே கொள்கையாக அறிவித்து, டெல்லி ஆட்சியைக் கைப்பற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், அதன்பின் பீகார் சட்டசபை தேர்தலில் மேடையில், (ஊழலுக்காக சிறை சென்ற) லல்லு பிரசாத்தை கட்டிப்பிடிக்கவில்லையா?

"சேர், பாத்திரங்கள் வாடகைகைக்கு விடும் கடைகள் போல், ஆட்களை, அரசியல் கூட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் நிறுவனங்கள் சில செயல்படுகின்றன. .......இந்த நிறுவனத்திடம், ஆட்கள் எவ்வளவு வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும்; அவர்கள் ஏற்பாடு செய்து விடுவர்.  அதற்கான கட்டணத்தை, கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே செலுத்தி விட வேண்டும்." http://www.dinamalar.com/news_detail.asp?id=1499352 

கொள்கைகள் சருகாகி, ஆதாயத் தொண்டர்கள் பலத்தில், 'தேர்தல் ஆதாய' நோக்கில், கம்யூனிஸ்ட் உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் பயணிக்கிறார்களா? அந்த கட்சிகளின் 'வால்களாக' (வெளியில் தெரிந்தும், தெரியாமலும்) ' 'பெரியார் கட்சிகள்' பயணிக்கிறார்களா?

அதிலும் 'ஆரியர்', 'திராவிடர்' என்ற சொற்களை எல்லாம், 'ரேஸ்' (Race) என்ற பொருளிலான, இன அடிப்படையில் பயன்படுத்துவது தவறு, என்பதை, 'இந்துத்வா எதிர்ப்பு' புலமையாளர்களும், 'இந்துத்வா ஆதரவு' புலமையாளர்களும், உரிய சான்றுகளின் அடிப்படையில் ஏற்று, பயணித்து வரும் நிலையில், 'பெரியார்' கட்சிகள் அந்த மாற்றத்திற்குட்படாமல், கடந்த கால அடிமைகளாக பயணிக்கிறார்களா? (ரோமிலா தாபார் மடல் கீழே)

தமிழ்நாட்டில், கட்சிகளின் சித்தாந்த முழக்கங்களில், 'உண்மையான' தொண்டர்களின் பலத்தில், பயணித்த கட்சிகள் எல்லாம், இன்று 'ஆதாய'த் தொண்டர்கள் பலத்தில் பயணிக்கும் அவல நிலையில் உள்ளனவா?  

இந்திய விடுதலைக்குப்பின் நடந்த முதல் 1952 பொது தேர்தல் முடிவுகளில், இந்தியாவிலேயே வித்தியாசமாக, தமிழ்நாட்டின் முடிவுகள் வெளிப்பட்டன. ( https://en.wikipedia.org/wiki/Madras_Legislative_Assembly_election,_1952

திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை முன்னிறுத்தி, ஈ.வெ.ராவும், அண்ணாதுரையும் ஆதரித்த கட்சிகள் எல்லாம் பெரும் வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெற முடியாத அளவுக்கு தோல்வியைத் தழுவியது. 1952 தேர்தலில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், 'பிரிவினைக்கு' ஆதரவாக, இந்த அளவுக்கு முடிவுகள் வெளிப்பட்டனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும். காங்கிரசை எதிர்த்து, 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையாளர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு,  'அமைச்சர்' பதவி வழங்கி, சட்டசபையில் 'பெரும்பான்மை'(?) பலம் பெற்று, காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது; ராஜாஜியின் 'தனிப்பெரும் சாதனையாக'(?); சுயலாப அரசியலில், கொள்கைகள் 'சருகாகும்' போக்கிற்கு, 'பிள்ளையார் சுழி' போட்டு; பின் அதே ராஜாஜியின் 'சாதனை தொடர்ச்சியாக'(?), 1967இல், தேசியக்கட்சிகளை 'வால்களாக்கிய', 1967 ஆட்சி மாற்றத்திற்கு 'அஸ்திவாரமாக'.

அந்த பின்னணியில், தமிழ்நாட்டில், இன்று கட்சிகளின் சித்தாந்த முழக்கங்கள் எல்லாம் கேலிப்பொருளாகியுள்ளது பற்றியும், 1952 பொது தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியானது 131 தொகுதிகளில் போட்டியிட்டு, 62 தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக வெளிப்பட்டது பற்றியும், 64 வருட வளர்ச்சி/வீழ்ச்சிக்கு(?) பின், 2016 சட்டமன்ற தேர்தலை, விஜயகாந்த் தலைமையில் உள்ள அணியில் சந்தித்துள்ளது பற்றியும், ஆய்வு    மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. கீழ்வருவதையும் கணக்கில் கொண்டு.
“ 2015 சீரங்கம் சட்டசபை இடைதேர்தலில், தனித்து நின்ற பா.ஜ.க 5015 வாக்குகள் பெற ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1552 வாக்குகள் பெற்றது; 'நோடா'(NOTA) எக்கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் 1919 பதிவு செய்ய.” http://www.thehindu.com/news/national/tamil-nadu/live-srirangam-byelection-results/article6900670.ece

1944இல் நீதிக்கட்சியை 'திராவிடர் கழகமாக' ஈ.வெ.ரா அவர்கள், அண்ணாதுரையின் தூண்டுதல் காரணமாக மாற்றியதால், சென்னை மாகாணம் 'தனி நாடாக' பிரிய இருந்த வாய்ப்பானது கெட்டதா? என்பது ஆய்விற்குரியது. (  http://tamilsdirection.blogspot.in/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_27.html  ) அவ்வாறு கெட்டிருந்தாலும், அந்த 'பிரிவினை' தீயானது, அணையாமல், 1952 பொது தேர்தலில் மேற்குறிப்பிட்ட முடிவை வெளிப்படுத்தும் அளவுக்கும், அதே போல, 'பொதுவுடமை' தீயானது அணையாமல், 1952 பொது தேர்தலில் மேற்குறிப்பிட்ட முடிவை வெளிப்படுத்தும் அளவுக்கும், அந்தந்த‌ கொள்கைகளுக்கான சமூக ஆற்றல்கள் எவ்வாறு உருவாகி, என்ன நிலையில் 1952இல் இருந்ததன? இன்று 'அரசியல் நீக்கம்' (Depoliticizing ;  http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_24.html ) மூலம் அந்தந்த கொள்கைகளுக்கான சமூக ஆற்றல்கள் எல்லாம் 'வற்றி' வருகின்றனவா?

தனி மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தொடர்புள்ள வகையில், அம்மனிதர்களின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட இயற்கையான அடையாளங்களுடன் (Identity), சமூக முன்னேற்றத்துடன் பிணைந்த தேச கட்டுமானம் (Nation Building)  ஆனது, தனிமனிதர்களின் மனங்களில் அவை தொடர்பான தேவைகளையும், ஈடுபாடுகளையும் (interests)  உருவாக்குவதன் மூலமே, அம்மனிதர்கள் எல்லாம் அரசியல்மய (Politicize) போக்கில் பயணிப்பார்கள். தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட இயற்கையான அடையாளங்களை 'வளர்த்து', அந்த அடித்தளத்தில், 'தேச  கட்டுமானம்' பணி நடைபெறுவது தொடர்பான, 'சமூக செயல்நுட்பம்' பற்றிய புரிதல், ஈ.வெ.ராவுக்கு இருந்ததா? ஈ.வெ.ராவின் தியாகங்களை கணக்கில் கொள்ளாமல்,  'தமிழ்த் தேசிய', மற்றும் 'இந்துத்வா' கூடாரங்களில், ஈ.வெ.ராவை 'உணர்ச்சிபூர்வமாக' இழிவுபடுத்தி வருபவர்களுக்கும், அந்த புரிதல் இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். தமிழ்நாட்டில்  சாதாரண மக்களின் மனங்களில் இடம் பெற்று, அவர்களின் சமுக வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் சமூகவியல் வினையான( Sociological Process), 'தேச கட்டுமானம்' என்பது சீர்குலைந்து,  தமிழ்நாட்டில் சாதாரண மக்களிடமிருந்து கொள்கைகள் அந்நியமாகும் அளவுக்கு 'அரசியல் நீக்கம்' (Depoliticizing)  இருப்பது உண்மையா? உண்மையென்றால், அதற்கும், தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் எல்லாம் 'வால்களாக' பயணிப்பதற்கும், 'தேச கட்டுமானம்' (Nation Building) என்பது சீர்குலைந்திருப்பதற்கும்,  இடையிலான பல பரிமாண தொடர்புகளும், ஆய்விற்குரியவையாகும். தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானம்' சீர்குலைவிற்கு, 'அதிக' பங்களித்தது, ஈ.வெ.ராவா? அல்லது ராஜாஜியா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டு சமூக மக்களின் 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களுடன், 'இந்தியர்' என்ற அடையாளத்தை சிதைத்து, மேற்கொண்ட பயணத்திற்கும், தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானம்' சிதைவுக்கும், 'அரசியல் நீக்கத்திற்கும்', இடையிலான தொடர்புகளும் ஆய்விற்குரியதாகும்.

1857 இந்திய விடுதலைப் போரானது வெற்றி பெற்றிருந்தால், இன்று 'இந்தியர்' என்ற அடையாளமானது எந்த உள்ளடக்கத்தில் வளர்ந்திருக்கும்? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html  

காலனிய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் தொடங்கி வளர்ந்த 'இந்தியர்' என்ற அடையாளமானது,  இந்தியாவில் இருந்த பல மொழிகள், பாரம்பரிய பண்பாடுகள் அனைத்தையும், கிறித்துவ பாணி மேற்கத்திய இறக்குமதியான 'மையப்படுத்தப்பட்ட' (Centralized)  'ஒரு சீரான' (Homogenous) நேர்க்குத்து (Hierarchical) வரிசையில், 'சிக்க' வைத்து, 'இயல்பான', 'இந்தியர்' அடையாள வளர்ச்சியை சீர் குலைத்தனவா? அது பற்றிய ஆய்வில் 'இந்துத்வா' புலமையாளர்கள் ஈடுபட்டு, 'இந்தியர்' என்ற அடையாளத்தை மேற்கத்திய சூழ்ச்சி வலையிலிருந்து மீட்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றனவா? ( ” What is currently happening is the importing of various Western concepts into the Indian narrative which Malhotra says is taking away from our own identity... A grand narrative is essential partly because it enables Indians to understand how to co-exist, and this narrative would be an Indian substitute for secularism, which is someone else’s narrative." ; http://logos.nationalinterest.in/2014/10/the-indian-grand-narrative/ )

அதாவது தத்தம் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் நவீன கால ஓட்டத்திற்கு ஏற்ற அடையாளமானது சிதைக்கப்பட்டு, 'மேற்கத்திய வழிபாட்டில்' சிக்கி, 'இந்தியர்' என்ற அடையாளமானது, மேற்கத்திய கல்விமுறையில் பயின்ற 'அறிவுஜீவிகளால்' 'முற்போக்கு' போர்வையில், வளர்க்கப்பட்டு வருகிறதா? அதே சூழ்ச்சியில், ஆங்கிலவழிக்கல்வியில் தத்தம் பிள்ளைகளை படிக்க வைக்கும், தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) 'தமிழ்வேர்க்கொல்லி' தலைவர்களால் ,  'இந்தியர்' அடையாளத்திற்கு எதிராக, 'தமிழர்' அடையாளமானது, 'பிரிவினை' சூழ்ச்சியில் சிக்கி, முன்னெடுக்கப்படுகிறதா?என்பதும் ஆய்விற்குறியதாகும்.

'திராவிட நாடு பிரிவினை', 'இந்திய ஒற்றுமை', 'பொதுவுடமை'  கிய போக்குகளில் பயணித்த கட்சிகள் எல்லாம், இந்திய விடுதலைக்குப் பின், சர்வதேச அரசியல் பொருளாதார மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, 'தேச கட்டுமானம்' என்பதன் முக்கியத்துவம் பற்றி கவலைப்பட்டார்களா? அல்லது கடந்த கால அடிமைகளாக, 'கனவுகளில்' வாழ்ந்து கொண்டு, தெரிந்தும், தெரியாமலும் 'தேச கட்டுமானம்' சீர்குலைவிற்கு பங்களிப்பு வழங்கி வந்துள்ளார்களா? அவ்வாறு 'கனவுகளில்' வாழ்பவர்களில் யார்? யார்?, ஊழல் வழிகளில் கிரானைட், தாது மணல், ஆற்று மணல், சந்தன காடுகள் 'சூறையாட' படுவதையும், ஆங்கிலவழி கல்வி மூலம் தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தையும் பற்றிய கவலையின்றி, தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ்நாட்டில் ஆங்கிலவ‌ழியில் படிக்க வைத்துக் கொண்டு, தமிழர்களை வேரற்றவர்களாக்கும் 'தேச கட்டுமான சீர்குலைவு'க்கு பங்களித்து, 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு' என்று 'உணர்ச்சிபூர்வ'(?) போக்கில் பயணிக்கிறார்கள்? தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகளும், தேசியக்கட்சிகளும், 'உட்கட்சி குழுக்கள்' மற்றும் 'உணர்ச்சிபூர்வ அரசியல்' போக்குகளில் சிக்கி, சீரழிந்து வருவதற்கும், 'தேச கட்டுமான சீர்குலைவே' காரணமா? என்பதும்  ஆய்விற்குரியதாகும். 

தேச கட்டுமான சீர்குலைவும், அதன் விளைவான அரசியல் நீக்கமும் (Depoliticize), வளர்ந்த சமூக சூழலில், 'இயல்பில்' சிற்றினமான மனிதர்களில் 'வாழ்வியல் புத்திசாலிகள்' எல்லாம், 'பெரியார்' முகமூடியில், சமூகத்திற்கு கேடான 'தீ இனமாக' செல்வாக்கு பெற்றார்களா? (http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-05-15T01:42:00-07:00&max-results=7&start=6&by-date=false ) அந்த சமூக நோயின் வளர்ச்சிப் போக்கில், 'தேசிய', 'பொதுவுடமை', 'இந்துத்வா', 'முஸ்லீம்', தலித்' உள்ளிட்ட இன்னும் பல சாதி, மத அமைப்புகளிலும், 'தீ இனம்' வளர்ந்து வந்து, அரசியல் நீக்கத்தில், தமிழ்நாடு பொது அரங்கில், உச்சக்கட்ட சீரழிவை சந்தித்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அத்தகைய ஆய்வு பற்றிய கவலையின்றி, 'தேசம்' (Nation) என்ற சொல்லின் பொருளானது, சமூக வரலாற்றில் என்னென்ன மாற்றங்கள் பெற்று, இன்று 'உலகமயமாதல்' போக்கில் சிக்கி, என்ன நிலையில் உள்ளது? என்ற ஆய்வின்றி, சுமார் 20 வருடங்களுக்கு முன், திருச்சி பெரியார் மையம் வெளியீடுகள் உள்ளிட்ட புத்தகங்களில் வெளிவந்து, தாம் படித்தவற்றை, கிளிப்பிள்ளை போல, ஒப்பித்து, அறிவுக்கண்ணை மூடி, இருட்டில், தமிழ்நாட்டில் யார்? யார்? பயணிக்கிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

அறிவுக்கண்ணை மூடி பயணிக்கும், உணர்ச்சிபூர்வ சமூக செயல்நுட்பம் (Social Mechanism)  தோற்றுவித்த, அந்த 'இருட்டே'; 

'ஆரியர் - திராவிடர்' இருளில், தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீர்குலைத்துவரும் 'சமூக கிருமிகளை' வளர்த்து வருகிறதா? என்ற ஆய்வை இனியும் தாமதப்படுத்துவதானது, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் 'சமூக தற்கொலையாக' முடியும்.

அந்த 'இருட்டே', பேச்சில், எழுத்தில் 'சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு' என்று 'வெளிச்சம்' போட்டுக்கொண்டு, ஊழல், கொலை, கொள்ளை, குற்றவாளிகளின் பின்பலமான 'வலைப்பின்னலில்' இடம் பெற்று, 'செல்வவான்களாக' வளர்ந்து வருபவர்களும், அவர்களின் 'எடுபிடி' முற்போக்குகளும், வளரக் காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


இன்று தமிழ்நாட்டில் 'அச்சமின்றி', ஊழல், கொலை, (அற்ப காரணங்களுக்கு கூட) தற்கொலை, கொள்ளைகள், சாதி வெறி உள்ளிட்ட சமூக நோய்கள் எல்லாம்,  பள்ளி மாணவர்கள் வரை 'பற்றி'யுள்ளதற்கும், ‘சமூக ஒப்பீடு நோயில்’ (Social Comparison Disease) சிக்கிய தமிழர்களிடம் 'சுயநல கள்வர்' நோயானது 'வீரியமாக' 'பற்றி'யுள்ளதற்கும், அவர்களில் 'வாழ்வியல் புத்திசாலிகள்' எல்லாம், 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு' என்ற முகமூடிகளில் 'முன்மாதிரி'களாக 'வளர்ந்து, சமூகத்தை கெடுப்பதற்கும், தமிழ்நாட்டில் 'தேச கட்டுமான' சீர்குலைவுடன் தொடர்புடைய அரசியல் நீக்கத்திற்கும்,  உள்ள தொடர்புகளும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் தமது பணம், அறிவு உழைப்பு, உடல் உழைப்பு போன்றவற்றை கொள்கைக்காக செலவ‌ழித்தவர்கள், பொதுவாழ்வில் பெரும்பான்மையாக இருந்த நிலையானது, எந்த சமூக செயல் நுட்பத்தில் சிதைந்து, மேலேக் குறிப்பிட்ட 'கொள்கை' வேடமணிந்த, 'சுயநல கள்வர்கள்' மற்றும் அவர்களின் 'எடுபிடி' முற்போக்குகளின் ஆதிக்கத்தில், தமிழ்நாடு சிக்கியது? அந்த சமூக செயல்நுட்பத்திற்கும், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களுடன், 'இந்தியர்' என்ற அடையாளத்தை சிதைத்து, மேற்கொண்ட பயணத்திற்கும், தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானம்' சிதைவுக்கும், 'அரசியல் நீக்கத்திற்கும்', இடையிலான தொடர்புகளும் ஆய்விற்குரியதாகும்.

தமது பணம், அறிவு உழைப்பு, உடல் உழைப்பு போன்றவற்றை கொள்கைக்காக  பொதுவாழ்வில் செலவழித்து வருபவர்கள் எல்லாம், தாம் விரும்பும் 'கொள்கையை' முகமூடியாய் பயன்படுத்தி 'வளர்ந்து' வரும், சமூக கொள்ளையர்களிடம் 'நம்மாளு' என்று ஏமாறாமல், அவர்களை ஒதுக்கி,  அந்த ஏமாறுதலுக்கு துணை புரியும் 'உணர்ச்சிபூர்வ' போக்குகளை விட்டு விலகி, 'அறிவுபூர்வ' போக்குகளை உயர்த்தி பிடிப்பதில், கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலமே, மேற்குறிப்பிட்ட, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி நோக்கிய ஆய்வில் 'வெற்றிகரமாக' பயணிக்க முடியும். அத்தகைய ஆய்வில் ஈடுபட விரும்புபவர்கள் பார்வைக்குரிய கருதுகோளையும் (Hypothesis),  நான் முன்வைத்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/02/normal-0-false-false-false-en-us-x-none_24.html)


ரோமிலா தாபார் மடல்; (Bold Mine)
                                     Redefining secularism

Sir, — I am writing with reference to the article "Redefining secularism" (March 18) by Subramanian Swamy. I was rather amused to read his comments on my views of `the Aryans', in which he accuses me of having defined Aryan and Dravidian as racial categories and now having changed my mind in accordance with the views of the RSS, since the BJP came to power.

If he had read anything on the debate among historians concerning the Aryan theory, he would have known that for the last 30 years I, together with other historians, have been refuting the concept of an Aryan race or a Dravidian race. I have stated categorically in "A History of India," Vol. I, published in 1966, that Aryan is a linguistic term. I discussed this in greater detail in my presidential address to the Ancient Indian History Section of the Indian History Congress in Varanasi in 1968, where I argued that Aryan is a linguistic label and not a racial category. And just for the record, since I am frequently misquoted on this by some people, I argued further that although I did not accept the notion of an Aryan invasion, I did support the idea of a graduated migration of Aryan-speaking peoples from the Indo-Iranian borderlands into north-western India. This resulted in an interface of various cultures and this interface needs to be explored — and many of us have done so, as would be apparent from our other publications on the subject.

It would seem that the Subramanian Swamys of this world do not believe in reading the books of those whom they accuse of having incorrect ideas on history. They attribute theories of various kinds to whomsoever they chose. Surely this was not the training that Dr. Swamy was given at Harvard?

As for my toeing the RSS line on the Aryan theory, after the BJP having come to power, the shoe is actually on the other foot. The mentors of the RSS spoke of race and the race spirit with reference to the Aryans in the 1920s and 1930s. If the RSS has now decided, as Dr. Swamy asserts, that Aryan is a language label and not a racial category, they are stating what many of us have been saying for some decades now. As for those sympathetic to the RSS choosing to repeat what others and I had said 30 years ago — that's their choice!

Romila Thapar,
New Delhi

No comments:

Post a Comment