Sunday, September 15, 2019

'இந்தி தினம்'- உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒரு நீதி

அன்றைய உள்துறை அமைச்சர் .சிதம்பரத்திற்கு வேறு நீதியா?


     இந்தி எதிர்ப்பு - சில கசப்பான கேள்விகள்



உள்துறை அமைச்சர் அமித்ஷா 'இந்தி தினம்' தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை மையமாகக் கொண்டு, தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் உள்ள கே.டி.ராகவன் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுபவீ ஆகியோர் இடையே, நடந்த கீழ்வரும் காணொளி விவாதமானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

உள்துறை அமைச்சராக .சிதம்பரம் இருந்த காலத்தில், 'இந்தி தினம்' தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்தினை தி.மு. எதிர்த்து போராட்டம் நடத்தியதற்கு சான்றுகள் உண்டா? அப்போது மெளனமாக இருந்து விட்டு, இப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா 'இந்தி தினம்' தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை தி.மு. எதிர்த்து அறிக்கை விட்டதும், போராட்டம் நடத்துவதாக தொடர்பாக கட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதும் சரியா? என்ற கேள்விக்கு சுபவீ விளக்கம் தரவில்லை. இனியாவது அவரின் விளக்கம் ஊடகத்தில் வெளிவருமா?

தி.மு. குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை, இந்தியை எதிர்ப்பவர்கள் எதிர்க்கவேண்டாமா? என்று ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். அது தனியார் பிரச்சினை என்றும், விவாத வரம்பிற்குள் வராது என்றும் சுபவீ விளக்கமளித்துள்ளார். பின்னர் நவோதயா  பள்ளிகளை தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வர விடாமல் தடுத்தது சரியா? என்ற கேள்வியை ராகவன் எழுப்பியுள்ளார். நேர நெருக்கடி காரணமாக, சுபவீ அதற்கு விளக்கம் தராமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. இனியாவது அவரின் விளக்கம் ஊடகத்தில் வெளிவரலாம், என்ற எதிர்பார்ப்பில், அது தொடர்பான கீழ்வரும் தகவல்களை முன்வைக்கிறேன்.

தி.மு. குடும்பங்களைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட தனியார்கள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தி பயில்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் வசதியான குடும்பங்களின் பிள்ளைகள் ஆவார்கள்.

மத்திய அரசு 1985- 86 இல் நவோதயா பள்ளிகளை இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் தொடங்கியது. விடுதி வசதியுடன் கூடிய உயர்தரக் கல்வியை, கிராமப்புற ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அத்திட்டம் தொடங்கப்பட்டது.( https://www.toppr.com/bytes/navodaya-vidyalaya/)

அப்பள்ளிகளில் இந்தியும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவதைக் காரணம் காட்டி, தி.மு. உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. துவக்கத்தில் மாவட்டதிற்கு இரண்டு நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டு, பின்னர் ஒரு மாவட்டத்திற்கு கூடுதலாக 10 பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள்? ஒரு மாவட்டத்திற்கு 12 நவோதயா பள்ளிகள் என்றால், தமிழ்நாட்டில் கடந்த சுமார் 30 வருடங்கள் எத்தனை பள்ளிகள் செயல்பட்டு, எத்தனை லட்சம் கிராமப்புற ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்திருக்கும்

இந்தியை ஒரு பாடமாக பயில்வதை காரணம் காட்டி, இன்று வரை, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்காதது சமூக அநீதியாகாதா? அதே தமிழ்நாட்டில்,தி.மு. குடும்பங்களைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட தனியார்கள்  நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளில், பெரும்பாலும் வசதியான குடும்பப் பிள்ளைகள் மட்டும் இந்தி பயில்வது தான் சமூக நீதியா?

ஒன்று தமிழ்நாட்டில்தி.மு. குடும்பங்களைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட தனியார்கள்  நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளை மூட வேண்டும்; அல்லது தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க வேண்டும்; என்ற கோரிக்கையை சுபவீ போன்றவர்கள் முன்வைப்பார்களா? அல்லது 'இந்தி எதிர்ப்பு' என்ற பேரில், கிராமப்புற ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் மட்டும் தரமான கல்வியில் இருந்தும், இந்தி பயில்வதில் இருந்தும் ஒதுக்கப்படுவதானது, தொடர வேண்டுமா?

கீழ்வரும் சான்றின் அடிப்படையில், .வெ.ரா அவர்கள் நவோதயா பள்ளிகளை வரவேற்றிருப்பார்; என்ற கருத்தினையும் நான் முன் வைக்கிறேன்.

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்இதழில் வெளி வந்துள்ளது.

இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...”

எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சி மொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?”

ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?”

நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒரு வேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப் போறவன் நான் தானே?”

மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத் துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...

படிச்சிட்டுப் போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப் போறவங்க, ‘சர்வேபடிப்பு படிக்கிற தில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே நஷ்டம்? அவன் நேரத்துல அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப் போறே... இது லாபம் தானே?”

தமிழ்நாட்டில் சுமார் 30 வருடங்களில்,விடுதி வசதியுடன் கூடிய உயர்தரக் கல்வியை, கிராமப்புற ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பலன் பெறாமல், 'இந்தி எதிர்ப்பு' என்ற பெயரில் தடுத்ததை எல்லாம்;

இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்து அறிய நேருமானால்;

"அடப்பாவிகளா! வசதியான குடும்பப்பிள்ளைகள் பெற்ற தரமான கல்வியை, கிராமப்புற பெரும்பாலும் சூத்திர ஆதி திராவிடக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பெறுவதை கெடுத்து விட்டீர்களே" என்று .வெ.ரா அவர்கள் சபித்திருக்க மாட்டாரா?

இந்தி தொடர்பாகவும், பிரிவினைக் கோரிக்கை தொடர்பாகவும், .வெ.ரா அவர்கள் கடைசி வரையில் வெளியிட்ட, 'அரை இருட்டில்உள்ள தகவல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து, அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன். (‘'இந்தி எதிர்ப்பு, பிரிவினை, .வெ.ரா, அண்ணா';'அரை இருட்டில்' உள்ளதகவல்கள் வெளிச்சத்திற்கு வருமா?’; https://tamilsdirection.blogspot.com/2019/06/2.html)



குறிப்பு: 'இந்தி' தொடர்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக:

In December 1957, the second sarsanghchalak of the RSS MS Golwalkar in an interview to the Organiser spelt out his stand on the question of a national language.

“I consider all our languages as national languages. They are equally our national heritage. Hindi is one among them which, by virtue of its countrywide usage, has been adopted as the State Language. It will be wrong to describe Hindi alone as the national language and others as provincial languages. That would not be seeing things in the right perspective,” (https://m.hindustantimes.com/india-news/what-rss-said-about-hindi-as-a-national-language-50-years-ago/story-7fAeWI0QSuFa26GbR0Z5PN_amp.html)

Also visit: ‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html


Thursday, September 12, 2019


'தமிழ் தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும் பாரதிதாசனும் (3)


அறிவுபூர்வமாக விமர்சிப்பதில், பாரதிக்கு ஒரு நீதி? பாரதிதாசனுக்கு வேறு நீதியா?



அண்மையில் எனது பார்வைக்கு வந்த கீழ்வரும் பாரதியின் கருத்து எனது கவனத்தினை ஈர்த்தது.

பிராமணரல்லாதோர்என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து கொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது; எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன. ‘பிராமணரல்லாதார்என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு, இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்...

பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும் 

இது போன்ற ன்னும் பல சான்றுகளை முன் வைத்து;

"மேற்கண்ட ஆதாரங்களால் 1916 முதல் 1921 வரை (அதாவது அவர் சாகும்வரை) பாரதியார் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தும், பார்ப்பனியத்தை ஆதரித்தும் வந்துள்ளார் என்பதை அறியலாம்."

என்ற முடிவினை, ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்என்ற நூலில் வாலாசா வல்லவன் வெளிப்படுத்தியுள்ளார். (தமிழ்க் குடியரசு பதிப்பகம், 14/12, மியான் முதல் தெரு, சேப்பாக்கம், சென்னை - 600 005; பேசி: 9444321902)

பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கம் தொடர்பாக பாரதி முன்வைத்த சான்றுகளை மறுக்காமல், ‘சுப்புரத்தினம்' என்ற தனது பெயரை 'பாரதிதாசன்' என்று மாற்றிக்கொண்டு, பாரதி புகழ் பாடியது சரியா? அது தொடர்பாக, அறிவுக் கண்களை மூடிக்கொண்டு பாரதிதாசன் புகழ் பாடுவதும் சரியா?

‘'அண்ணதுரையா எனக்கு பொற்கிழி கொடுத்தார்?' என்ற தலைப்பில், 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட தொடர் கட்டுரைகளை இன்று வெளியிட‌, பாரதிதாசன் பிரியர்களில் எவருக்காவது  துணிச்சல் இருக்கிறதா? அதே போல ஜீவாவைக் கண்டித்து , 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட கட்டுரையை வெளியிட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களில் எவருக்கும் துணிச்சல் இருக்கிறதா? அண்ணாவும், ஜீவாவும் அந்த காலக்கட்டத்தில், பாரதிதாசனைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களையும், அதில் சேர்த்து வெளியிடுவார்களா?

பாரதிதாசன் தொடர்பாக இன்றுவரை நீடித்து வரும் மேலே குறிப்பிட்ட இருட்டடிப்பானது, பாரதியார் படைப்புகளுக்கு நிகழவில்லை;

அறிவுநேர்மையில் பாரதிதாசன் பிரியர்களை விட, பாரதியின் பிரியர்கள் மேம்பட்டவர்களா? என்ற ஆய்வுக்கு வழி வகுத்து.

பாரதிதாசன் பிரியர்கள் எல்லாம் பாரதியை விமர்சிப்பது போலவே, பாரதிதாசனையும் விமர்சிக்க முடியாத அளவுக்கு, 'அந்த' இருட்டடிப்பு நீடித்து வருகிறதா? .வெ.ராவைப் பிரபாகரன் ஆதரவாளர்கள் விமர்சிப்பது போலவே, பிரபாகரனையும் விமர்சிக்க முடியாத அளவுக்கு, 'பிரபாகரன் பிம்பத்திற்கு' எதிரான உண்மைகள் இருட்டடிப்பில் நீடிப்பதற்கும், 'அந்த' பாரதிதாசன் தொடர்பான இருட்டடிப்பிற்கும் வேறுபாடு உண்டா?(‘ 'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (2); 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' பாரதிதாசனின் பங்களிப்பு ?’; 

'திராவிடர்' என்ற சொல் தொடர்பான 'பொருள் திரிபு' சூழ்ச்சியில் .வெ.ரா அவர்கள் சிக்கிப் பயணித்ததையும்;

"தாம் பயன்படுத்தும் சொல்லிற்கான பொருளை தாம் விரும்பியவாறு 'பொருள் திரிதலுக்கு' (Semantic distortion) உட்படுத்தி .வெ.ரா அவர்கள் பேசினார், என்பதற்கு அவரின் ஒலிப்பதிவுகளும், எழுதினார் என்பதற்கு அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரைகளும் சான்றாக உள்ளன. உதாரணமாக;

'ஆரியம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிக்காதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது'

என்பது .வெ.ரா கொடுத்துள்ள விளக்கங்களில் ஒன்றாகும்." என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘'ஆரியம்' திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளும், 'திராவிடம்' திசையில் பயணிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும்’; 

எனவே "திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு", திராவிடர் இயக்கம் பயணிக்கிறது;

என்று பாரதியார் முன்வைத்த கருத்து சரியே ஆகும்.

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, தமிழைப் பற்றி உயர்வாக கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய பாரதிதாசன், 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று அறிவித்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்த .வெ.ராவிற்கு, அவரின் நிலைப்பாடு தவறு என்று அறிவுபூர்வமாக விளக்கி, .வெ.ராவை நல்வழிப்படுத்த பாரதிதாசன் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்

அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், .வெ.ராவின் அந்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக கண்டித்து, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' எதிராக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்

அவ்வாறு தமிழை இழிவுபடுத்தியவருடன் பாரதி நட்பாக இருந்திருப்பாரா? தமிழ்ப் பற்றில் பாரதிக்கு இருந்த நேர்மையானது, பாரதிதாசனிடம் இருந்ததா? பாரதி போற்றிய 'இந்திய தேசியத்தை' எதிர்க்காமல், 'திராவிட நாடு' பிரிவினையை ஆதரித்துக் கொண்டே, பாரதியை பாராட்டியது போலவே;

தமிழை இழிவு செய்த .வெ.ரா அவர்களை எதிர்க்காமல், பாரதிதாசன் .வெ.ரா புகழ் பாடினாரா? இது போன்ற போக்குகள் பாரதியிடம் வெளிப்பட்டதுண்டா? காந்தியின் நிலைப்பாடு தவறு என்று தெரிந்ததும், பாரதி காந்தியை கண்டித்து, துணிச்சலாக கருத்து வெளியிட்டவர் இல்லையா?

என்பது போன்ற அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

அறிவுபூர்வமாக விமர்சிப்பதில்,  பாரதிக்கு ஒரு நீதி? பாரதிதாசனுக்கு வேறு நீதியா? என்பது போன்ற கேள்விகள் எல்லாம், அத்தகைய விவாதங்களை இனியும் தாமதப்படுத்த அனுமதிக்காது


குறிப்பு: பாரதி தொடர்பாக 1916 முதல் 1921 வரை வாலாசா வல்லவன் முன்வைத்த சான்றுகளை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், கீழ்வரும் காணொளியில், 'பெரியார்' ஆதரவாளர் பேரா.கருணானந்தம் பாரதியை 'பார்ப்பனீய எதிர்ப்பாளராக' அடையாளம் காட்டியுள்ளார்.