Saturday, October 17, 2015



இடையிடு 5: Interlude 5:

 தமிழ்நாட்டில் 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகள்' இருப்பதற்கு யார் காரணம்?



"'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு லாபம்?" என்ற தலைப்பிலான பதிவிற்கு,

நான் என்றும் மறக்காமல், பாதுகாக்க வேண்டிய 'நற்சான்றிதழாக' கீழ்வரும் மடல் எனக்கு வந்துள்ளது.

" அய்யா மோடி ஏதோ ஆட்சி செய்கிறார்போலப் பேசுகிறீர்கள். இல்லை இந்துத்துவா என்ற மாயையைப் பயன்படுத்தி அமீத்சா போண்ற தடாலடி கூட்டத்தின் கையாளாகவே மோடிஅலைகிறார்.மிக நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த பழைமைப் பஞ்சாங்களைன் பிரதிநிதிகள் சனநாயகப் போர்வையில் கூத்தடிக்கிறார்கள். சாஸ்திரா பார்ப்பனக்கூட்டம் மூலம் பெற்ற ந்ன்மைகளுக்காக ட்ர்ஹமிழகத்தைக் காட்டிக்கொடுக்கவேண்டாம்- பழைய பெரியார் மையக் குழப்பவாதுயே." " 

என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

பெரியார் கொள்கை ஆதரவாளர் எனக்கு அனுப்பிய மின்மடலுக்கான எனது பதிலை, மேற்குறிப்பிட்ட "'பசு வதைத் தடை  சட்டம்' யாருக்கு லாபம்?" என்ற தலைப்பிலான பதிவுடன், அம்மடலில் இருந்த அனைவருக்கும் (reply to all) அனுப்பினேன். அவர்களில் ஒருவரே மேற்கண்ட மின்மடலை எனக்கு அனுப்பினார். அந்த‌ பதிவைப் படித்து, என்ன புரிந்து கொண்டு, அவ்வாறு எழுதினார்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

 "அதாவது 'பசுவதைத் தடை சட்டம்,காளைகளை அடக்கும் விழா தடை போன்ற மக்களின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் அமுலாகும் சட்டங்களானது, அரசில் எந்த அளவுக்கு 'லஞ்சம்' தலை விரித்தாடுகிறதோ, அந்த அளவுக்கு மக்களிடையே உள்ள சமசீரற்ற பண்பினையும், சமூக நோய்களையும் வளர்க்கும். அந்த வளர்ச்சிப் போக்கானது, மோடி அரசின் கதையை சாண் ஏறி, முழம் சறுக்கினதாக மாற்றினாலும் வியப்பில்லை. அவ்வாறு நிகழ்ந்தால், இந்தியா 'மோசமான' பிரிவினைக்குள்ளாகி, 'லஞ்சமும், குடும்ப வாரிசு அரசியலும்' பின்னிப் பிணைந்த 'ராஜா'க்களுக்கு சாதகமாக, ஆப்பிரிக்க நாடுகளுடன் எண்ணிக்கையிலும் சீரழிவிலும் போட்டி போடும் நிலை வரும்; என்பது போன்ற; 'மேற்கத்திய' உலகில் வெளிவந்துள்ள புத்தகங்களின் 'ஆருடம்' உண்மையாகி விடும்.’'
http://tamilsdirection.blogspot.in/2015/03/12_6.html

அடுத்து கீழ் வரும் தகவலை 'அந்த அனைவருக்கும்' அனுப்பினேன்.

When Max Muller trumpeted forth to the world in his attractive studies the great rapproachment , pitaa, pateer, pater, vater, father , he was preparing the bankruptcy of the new science; he was leading it away from the truer clues , the wider vistas that lay behind.

The most extraordinary and imposingly unsubstantial structures were reared on the narrow basis of that unfortunate formula.

First, there was the elaborate division of civilized humanity into Aryan, Semitic, Dravidian and Turanean races, based upon the philological classification of the ancient and modern languages. More sensible and careful reflection has shown us that community of language is no proof of community of blood or ethnological identity; the French are not a Latin race because they speak a corrupt and nasalised Latin, nor the Bulgars Slavs in blood because the Ugro-Finnish races have been wholly Slavonicised in civilization and language. Scientific researches of another kind have confirmed this useful and timely negation.

The Philologists have, for instance, split up, on the strength of linguistic differences, the Indian nationality into the northern Aryan race and the southern Dravidian, but sound observations shows a single physical types with minor variations pervading the whole of India from Cape Comorin to Afghanistan.

Language is therefore discredited as an ethnological factor. The races of India may be all pure dravidians, if indeed such an entity as a Dravidian races exists or ever existed, or they may pure Aryans, if indeed such an entity as an Aryan race exists or ever existed, or they they may be a mixed race with one predominant strain, but in any case the linguistic division of the tongues of India into the Sanskritic and the Tamilic counts for nothing in that problem.

Yet so great is the force of attractive generalisations and widely popularized error that all the world goes on perpetuating the blunder talking of the Indo-European races, claiming or disclaiming Aryan kinship and building on that basis of falsehood the most far-reaching political, social or pseudo-scientific conclusions


"அய்யா, தமிழில் எழுதமுடியாத பேற்றிஞர் எனக்கு அனுப்பவேண்டாம் ,தமிழருக்கான துரோகக் கடிதஙகளை."

என்று அதே நபர் எனக்கு மின்மடல் அனுப்பியுள்ளார். 

நானும் கவனமாக அவரது மின்மடல் முகவரியை, எனது முகவரிப் பட்டியலிலிருந்து நீக்கி விட்டேன்.

நான் மிகவும் மதிக்கும் நண்பர் ஒருவர், அந்த இரு மின்மடல்களையும் படித்து விட்டு, கீழ்வரும் கருத்தை தெரிவித்தார்.

' நம் மீது கோபத்துடன் இது போல கருத்து தெரிவிப்பவர்கள் உண்மையில் மதிக்கப்பட வேண்டியவர்களே. சுயலாப நோக்கில், நம்மை பாராட்டுபவர்களை விட, இது போன்ற உண்மையான‌வர்கள் மதிக்கத் தக்கவர்களே. ஏனெனில் அவர்களுக்குள்ள அறிவில், சுயலாப நோக்கின்றி, தமக்குள்ள கொள்கைப்பற்றில் உண்மையாக தெரிவிக்கும் கருத்துக்கள் அவையாகும்.'

மேற்கண்ட கருத்து எனக்கும் சரி என்றே படுகிறது. அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்',  செல்வம், செல்வாக்கு ஈட்டி, தீயினமாக வலிமை பெற, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் பயன்படுத்தப்படும் பின்னணியில், சுயலாப நோக்கின்றி, தமக்குள்ள கொள்கைப்பற்றில், நம் மீது சரியாகவோ/தவறாகவோ கோபப்படுபவர்கள் எல்லாம் மதிக்கத்தக்கவர்களே ஆவர்.
http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html

சுயலாப நோக்கற்ற 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளில்' , கிராமப்பின்னணியில் படித்த முதல் தலைமுறையினரில் பலர்,  தமது படிப்பையும், வாழ்வையும், சிலர் உயிரையும், 'பலி ஆடுகளாக', கட்சித்தலைவர்களின் சுயநல அரசியல் லாபங்களுக்காக, தொலைத்தார்களா? அந்த போக்கு மாறி, இன்று, 'பலி ஆடுகளின்' எண்ணிக்கை வேகமாக குறைந்து, அவர்களில் பலர் , 'தரகு, வன்முறை' திறனுள்ள 'ஆதாயத்தொண்டர்களாக' , கட்சித்தலைவர்கள் வழியில், நன்கு 'செட்டில்' ஆகி வருகிறர்களா? இது தமிழ்நாட்டின் அரசியல் நீக்கத்தின் அறிகுறியா? தமிழ்நாட்டில் பொது அரங்கில், விவாதப் பொருளின் வரை எல்லையைத் (limitation) தாண்டி, விவாதத்தில் ஈடுபடுவோர் மீது திசை திரும்பி, விவாதத்தில் உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டும் போக்கும், அதன் வெளிப்பாடா? காங்கிரசிலிருந்து 'இடம்' பெயர்ந்து,  (http://tamilsdirection.blogspot.com/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html) எண்ணிக்கையிலும் வலிமையிலும் 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளும்' , 'சுயலாபக் கள்வர்களும்' தமிழ்நாட்டில்  வளர்ந்ததற்கு, 'பெரியாரின் ஆன்மீகப் பெருந்தவறு' எவ்வளவு பங்களித்தது?
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html )    அதன் தொகுவிளைவாக, 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை எல்லாம்,  மாணவர்கள் மத்தியில், கேலிப்பொருளாகி வருகின்றனவா?  என்பவையெல்லாம் ஆய்விற்குரியவாகும்.
(http://tamilsdirection.blogspot.in/2015_06_01_archive.html  )
 

தமிழ், தமிழர் வளர்ச்சியையே முதன்மை நோக்கமாகக் கொண்டு , மலேசியாவில் வாழ்ந்து, அண்மையில் மறைந்த, அறிஞர் முனைவர்.கே.லோகநாதனின் கருத்து ஆங்கிலத்தில் இருந்ததால், அந்த பெரியார் கொள்கைப் பற்றாளருக்கு விளங்கவில்லை. அதில் தவறுமில்லை. 

ஆனால் அதை மின்மடலாக நான் அனுப்பியதால், அது 'தமிழருக்கான துரோகக் கடிதமாக' அந்த நபரால் கருதப்பட்டதானது, ஆய்வுக்கு உரியதாகும். 

தமிழ்நாட்டில் கல்வியறிவற்ற 'தற்குறி'களில் பலர், தமது செயல்பாடுகளில் மிகுந்த அறிவாற்றலை வெளிப்படுத்தி வாழ்வதைக் கண்டு, நான் வியந்ததுண்டு. நன்கு படித்த புலமையாளர்களிடமிருந்தும்,  வெளிப்படும், மிகுந்த அறிவாற்றலை கண்டும், நான் வியந்ததுண்டு. ஆனால் அரைகுறை தமிழறிவுடன் , 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளாக' வளரும் போக்கானது, தமிழ்நாட்டில் எப்போது, தோன்றி, எப்படி வளர்ந்து, தமிழரின் 'அடையாளச் சிதைவிற்கும், அரசியல் நீக்கத்திற்கும்' எந்த அளவு பங்களிப்பு வழங்கி வந்துள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அரைகுறை தமிழறிவுடன் இது போன்று, 'உணர்ச்சிகர அறிவு தற்குறிகள்' எவ்வளவு பேர்  பெரியார் பற்றாளர்களாக தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? அவ்வாறு இருப்பதற்கு யார் காரணம்? 'பெரியார் முகமூடியில்', 'பொதுவாழ்வு வியாபாரிகள்' இன்றுவரை வெற்றிகரமாக வலம் வர துணை புரிவது, இது போன்ற  'உணர்ச்சிகர அறிவு தற்குறிகளா'?  இந்த போக்கு நீடிப்பது பெரியாருக்கு பெருமையா? அல்லது, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணி வேர்களை, 'உணர்ச்சிகர' கொள்கைப் பற்றில், 'தமிழர் துரோகம்' என்று சிதைத்து,  'தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்கள் நாடாக' தமிழ்நாடு மாறி வருவதற்கான அறிகுறியா? தமது புலமையின் வரைஎல்லை (limitation)  பற்றிய புரிதலின்றி, புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, 'பகுத்தறிவு' என்ற போர்வையில், சாதாரண பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பி, அறிவுக் களஞ்சியமான பழந்தமிழ் இலக்கியங்களை, 'மூட நம்பிக்கை, குப்பை' என்று வெறுத்து, ஒதுக்கும் போக்கானது ('மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?'
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html );

ஒரு சமூக 'பகுத்தறிவு' இயக்கமாக, உலக வரலாற்றில், எந்த காலக்கட்டத்திலும், எந்த நாட்டிலும் நடந்திருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சமஸ்கிருத இலக்கியங்களை 'மூடநம்பிக்கை, குப்பை' என்று வடநாட்டில் எந்த பகுத்தறிவு/மார்க்சிய புலமையாளராவது கண்டித்திருக்கிறார்களா? 

தமிழ்மொழி இலக்கியங்களை எல்லாம் 'மூடநம்பிக்கை, குப்பை' என்று கண்டித்ததைக் கண்டிக்காமல், தமிழ்மொழி ஆதரவாளர்களாக பயணிக்கும் அதிசயமானது, உலகில்  வேறெங்கும் வேறு எந்த மொழிக்கும் நடந்திருக்கிறதா? 

'தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'முதன்மை குற்றவாளி ஈ.வெ.ரா' என்று பதிவாவது; அல்லது 'பெரியார்' என்ற வழிபாட்டுச் சிறையிலிருந்தும், ஈ.வெ.ரா மீள்வது; ஆகிய இரண்டில் ஒன்று விரைவில் நடக்கப்போவதும் நிச்சயமே.'

‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’   என்று சொன்னது பகுத்தறிவா? அறியாமையா?'; 
http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html


குறிப்பு:

From:  எனது நிலைப்பாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ?’; http://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html

நான் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை, எனது இசை ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து, என்னால் முடிந்தவரை, 2005லிருந்து, என்னை (தஞ்சை இரத்தினகிரி, மனோகரன் உள்ளிட்டு) சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்களிடம் விளக்கி வருகிறேன்; பதிவுகள் வெளியிட்டு வருகிறேன். 2006 ‘தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்  வெளிவந்த, கீழ்வரும் கட்டுரை, ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்கு; ‘கறுப்புவெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம் ; http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html

Monday, October 12, 2015



இடையிடு 4: Interlude 4:

விவாதப் பொருளின் வரை எல்லையைத் (limit) தாண்டி

 

"விவாதப் பொருளின் வரை எல்லையைத் (limitation) தாண்டி, விவாதத்தில் ஈடுபடுவோர் மீது திசை திரும்பி, விவாதத்தில் உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டுபவர்கள்' பற்றி முந்தையப் பதிவில் பார்த்தோம்.

 

அதற்கு உதாரணமாக, " 'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு லாபம்?" என்ற தலைப்பிலான பதிவிற்கு,

நான் என்றும் மறக்காமல், பாதுகாக்க வேண்டிய 'நற்சான்றிதழாக' கீழ்வரும் மடல் எனக்கு வந்துள்ளது.

" அய்யா மோடி ஏதோ ஆட்சி செய்கிறார்போலப் பேசுகிறீர்கள். இல்லை இந்துத்துவா என்ற மாயையைப் பயன்படுத்தி அமீத்சா போண்ற தடாலடி கூட்டத்தின் கையாளாகவே மோடிஅலைகிறார்.மிக நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த பழைமைப் பஞ்சாங்களைன் பிரதிநிதிகள் சனநாயகப் போர்வையில் கூத்தடிக்கிறார்கள். சாஸ்திரா பார்ப்பனக்கூட்டம் மூலம் பெற்ற ந்ன்மைகளுக்காக ட்ர்ஹமிழகத்தைக் காட்டிக்கொடுக்கவேண்டாம்- பழைய பெரியார் மையக் குழப்பவாதுயே."

மேற்கண்டது தொடர்பாக, ஒரு சிறு விளக்கம் வருமாறு;

சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் ( அந்த வட்டாரத்திலேயே அதிக சம்பளத்துடன்) ஆசிரியர் பணி நியமனங்களிலும், மாணவர் சேர்க்கையிலும் சாதி, மத, வேறுபாடுகளின்றி, உண்மையான தகுதி, திறமை அடிப்படைகள் கடைபிடிக்கப்படுவதாலும், ஆசிரியர்களையோ, மாணவர்களையோ, இந்துத்வா பத்திரிக்கைகளை வாங்குமாறும், இந்துத்வா நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறும் கட்டாயப்படுத்துவதில்லை என்பதாலும், மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு தரமான நிறுவனங்களை மட்டுமே அனுமதித்து, பணி நியமனங்களை உறுதி செய்வதாலும், பிற பொறியியல் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையின்றி 'தவித்து' வருகையில், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில்  அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் அளவுக்கு 'வளர்ந்து' வருகிறது. குவார்ட்டர், பிரியாணி, மோட்டர்சைக்கிளுக்கு இலவசமாக 'முழு டேங்க்' பெட்ரோல், கூடுதலாக பணமும் வாங்கிக்கொண்டு, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் மாணவர்களும் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் கிடையாது; நானறிந்தது வரையில்; அம்மாணவர்களின் பெற்றோர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், இணைய வழியில், மாணவர்களின் வருகைப் பதிவையும், எல்லா தேர்வுகளின் மதிப்பெண்களையும் கண்காணிக்க முடியும் என்பதாலும். 

பழந்தமிழ் இலக்கியங்கள்,  தமிழ் இசை உள்ளிட்ட எனது ஆய்வுகளுக்கு, தமிழ் உலகம் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய வரிசையில், 'சாஸ்திரா பார்ப்பனக்கூட்டம்' நிச்சயமாக முக்கிய இடம் பெறும். காலனிய மனநோயில் சிக்கி, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணி வேர்களை சிதைத்து, அதில் சிக்கிய தமிழர்களின் 'மூளை செயல்பாட்டையே ' (processing) 'சுயநலக்கள்வராக திரித்து' , தமிழர்களை தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களாக்கும் நோக்கில், செயல்படுகிறவர்களிடம், அந்த நன்றியை எதிர்பார்க்க முடியுமா? அந்த ஆணிவேர்களை சிதைத்ததன் காரணமாக, தமிழும் தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்களா? என்று நான் சுட்டிக்காட்டியுள்ளதை,
http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-02-19T20:30:00-08:00&max-results=7&start=28&by-date=false
 'தமிழகத்தைக் காட்டிக்கொடுப்பதாக' பொருள் கொள்கிறார்களா? மேலும் படிக்கவும்: 'தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8); தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்': http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html

நான் தற்போது ஆராய்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால், (http://musictholkappiam.blogspot.in/ ; http://musicdrvee.blogspot.in/) சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் பணியாற்றவில்லை; வருகைப் பேராசிரியராக வகுப்புகள் எடுக்கவில்லை. திருச்சி அன்னை ஆசிரமம் நடத்தும் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்வழி +2 மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள், வார இறுதி நாட்களில் எடுத்து வருகிறேன்.

"தான் நடத்திய போராட்டங்களுக்கு முன், தமிழ்நாடெங்கும் அது தொடர்பாக பிரச்சாரம் செய்த போது, அதை எதிர்த்து கேள்விகள் கேட்பதை வரவேற்றவர் அவர்.அந்த காலக்கட்டத்தில் அக்கேள்விகளுக்கு 'அறிவுபூர்வமாக' யாரும் பதில் சொன்னார்களா? என்று ஆராய்ந்தால், பெரியார் ஈ.வெ.ரா 'உணர்ச்சிபூர்வமாக' அப்போராட்டங்களை நடத்தவில்லை, அறிவுபூர்வமாகவே நடத்தினார், என்பது தெளிவாகும். 'நமக்கேன் வம்பு?' என்று புலமையாளர்கள் ஒதுங்கியதும், அதற்கு  காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்." என்பதையும் முந்தையப்பதிவில் பார்த்தோம். 

'நமக்கேன் வம்பு?' என்று புலமையாளர்கள் ஒதுங்கியது , தமிழ்நாட்டில் நடந்திருக்க, பெரியார் இயக்க உணர்ச்சிபூர்வ தொண்டர்கள் காரணமாக இருந்திருப்பார்கள் என்று, எனக்கு கிடைத்த சான்றிதழ் மூலம் யூகிக்க இடம் இருக்கிறது.   ( 'நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை';
http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html  )

தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில், உணர்ச்சிபூர்வ இரைச்சலின் ஆதிக்கத்தில், அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமற்ற/புறக்கணிப்பு  போக்கு இருப்பதை, எனது பதிவுகள் உணர்த்துகின்றன.

அந்த போக்கு தொடர்வது என்பது, தமிழின், தமிழரின் மீட்சிக்கு துணை  புரியுமா?  அல்லது வீழ்ச்சியை உறுதி செய்யுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்கள் நாடாக' தமிழ்நாடு மாறினால், அந்த வரலாற்றுப் பழிக்கு பெரியார் ஈ.வெ.ராவை முக்கியப் பொறுப்புக்குள்ளாகும் வகையில்,  பெரியார் கட்சிகள் இன்று செயல்படுகிறர்களா, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையை மீட்சிக்கான ஆய்வுக்கு உட்படுத்தாமல் ? " இளைய சமூகத்தின் பார்வையிலிருந்து, பெரியார் 'சருகாகி உதிரும்' போக்கு உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். "http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-06-10T08:10:00-07:00&max-results=7&reverse-paginate=true


குறிப்பு:
"பிராமணராயிருந்தாலும், பிராமணரல்லாதாராய் இருந்தாலும், தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணத்தைத் தடுத்து நிறுத்துவதில் ஈடுபடாமல், தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் வளங்களாகிய ஏரி, குளங்களையும், கிரானைட், தாது மணல் உள்ளிட்ட கனி வளங்களை சூறையாடிய கொள்ளையர்களிடம் 'குற்ற உணர்வின்றி, கட்சி நிதி/உதவிகள்  பெற்று', அக்கொள்ளையைத் தடுக்கும் 'சகாயம் ஐ.ஏ.எஸ்' போன்றோர் எடுத்து வரும் சட்டபூர்வ நடவடிக்கைகளை, அச்சுறுத்தி தடுக்க முனைவதைக் கண்டிக்காமல், 'பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு, தமிழ் ஈழம், இந்துத்வா, ஆன்மீகம், தலித், இஸ்லாம்’ ' என்று பேசுபவர்களை, 'போராடுபவர்களை' , மேலேக் குறிப்பிட்ட 'பொது வாழ்வு வியாபாரிகளாக', அல்லது உணர்ச்சிபூர்வ போதையாளர்களாக,  அடையாளம் காண்பது தவறா?"
http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_10.html
 

Tuesday, October 6, 2015


இடையிடு 3: Interlude 3:

                          தமிழ்நாட்டின் செருப்பு அரசியல்?


மனிதர்கள் இன்றி ஒரு சமூகம் என்பது கிடையாது. ஒரு சமூகத்தில் உள்ள மனிதர்களுக்கு இடையிலான உறவு என்ற சமூக இழைகள், அவற்றின் அடிப்படையிலான பிணைப்புகள், மற்றும் குடும்பம், கட்சி, நிறுவனம் உள்ளிட்ட பலவகை அமைப்புகள் மூலம் சமூகம் செயல்படுவது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

அந்த சமூக செயல்பாட்டுக்கான சமூக ஆற்றல் ரத்த ஓட்டம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும், அதில் பார்த்தோம்.

அந்த சமூக ஆற்றல் ரத்த ஓட்டம் ஆக்கபூர்வ திசையில் அல்லது அழிவுபூர்வ திசையில், அல்லது இரண்டும் கெட்டான் திசையில் நடைபெறுகிறதா? என்ற ஆய்வுக்கு, அந்த சமூக செயல்பாட்டின் விளைவாக வெளிப்படும் சிக்னல்களை (signals)  ஆராய்வது பலனளிக்கும். நமது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும் ஆராய்ந்தால் மட்டுமே, அந்த சமூகம் பற்றிய அரிய உண்மைகள் வெளிப்படும்.

அந்த வகையில் முகப்புத்தகத்தில் - பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான எச்.ராஜா தொடர்பான‌-  வெளிப்பட்ட, கீழ்வரும் சிக்னல் எனது கவனத்தை ஈர்த்தது.

பொதுவாக தகவல் பரிமாற்றத்தில் சிக்னலும் இரைச்சலும் கலந்தே இருக்கும். இரைச்சலை நீக்கி, சிக்னலை  பிரிக்கும் திறனே, தகவல் ஏற்பியின் (Receiver) திறமையாகும். அந்த வகையில் கீழ்வரும் சிகனலிலிருந்து, இரைச்சலை நீக்கி, சிக்னலை  பிரிக்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'ராமசாமியை செருப்பால் அடிக்க வேண்டும் என்று எதற்காக சொல்கிறேன் என்றால்? இதற்காகத் தான்... ' என்ற த‌லைப்பில், 24.09.2015இல் மெக்காவில் நெரிசலில் இற‌ந்தவர்கள் தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையும், அதன் கீழ் திருப்பதி கபில தீர்த்தத்தில் மூழ்கி 4 இளைஞர்கள் மரணம் அடைந்ததை 'மூடபக்தி' என்று, தி.க நாளிதழான, 'விடுதலை'யில் வந்த செய்தியும் பிரசுரமாகியுள்ளன.

அதற்கும் கீழே, " ராமசாமியை செருப்பால் அடிப்பேன் என்ற எனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும், வாபஸ் வாங்க வேண்டும் என்றவர்களும் இதற்கு பதிலளியுங்கள். உயிர் எங்கு மாண்டாலும் வருந்த வேண்டிய விசயமே. இதில் கூட மதக்கலப்பு செய்து,இந்து மதத்திற்கு மட்டுமே எதிராக செயல்படும் இந்த இழிபிறவிகளை என்ன செய்ய வேண்டும் என்று மக்கள்  மன்றத்திலேயே விடுகிறேன்' என்று திரு.எச்.ராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக, திராவிடர் கழகம் சார்பில் என்ன விளக்கம் வந்தது, வரவில்லை என்பது பற்றி, இதுவரை, எனது பார்வையில் படவில்லை.

'உயிர் எங்கு மாண்டாலும் வருந்த வேண்டிய விசயமே.' என்றும், அதில் மத அடிப்படையில் வேறுபாடு கடைபிடித்து, பாரபட்ச போக்கில் இரங்கல் தெரிவிப்பது என்பது 'இழிசெயல்' என்று திரு.எச்.ராஜா அறிவித்திருப்பதானது, மிகவும் வரவேற்க வேண்டிய சிக்னல் ஆகும். அது போல, அவர் திரு.கி.வீரமணியின் இரங்கல் அறிக்கையை முழுமையாக வெளியிட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அந்த இரங்கல் அறிக்கையில், " இறந்தவர்கள் எம்மதத்தவராயினும், அவர்கள் மனிதர்கள். பலியானவை மனித உயிர்கள் என்பதால்,கும்பகோணம் மகாமகம், வடக்கே கும்பமேளா திருவிழாவில் பலியானோர் அனைவருக்குமே பகுத்தறிவாளர்களாகிய நாம் இரங்கல் தெரிவித்ததும் மனிதநேயத்தின் பாற்பட்டதேயாகும்." என்று திரு.கி.வீரமணி தெளிவுபடுத்தியுள்ளார். இதுவும் மிகவும் வரவேற்க வேண்டிய சிக்னல் ஆகும்.

மேற்குறிப்பிட்ட திரு.கி.வீரமணியின் கருத்துக்கு முரணாக,'விடுதலை' நாளிதழில்,திருப்பதி ஏழுமலை கபில தீர்த்தத்தில்,முழுகி 4 இளைஞர்கள் மரணமடைந்த தகவலை, " குழவிக்கல் ஏழுமலையானுக்கு சக்தி இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.மாறாக மோட்சம் போனதாக கதை விடுவார்கள்" என்று வெளிவந்துள்ளது.

திரு.கி.வீரமணியின் நிலைப்பாட்டிற்கு முரணாக, 'விடுதலை' நாளிதழில் எவ்வாறு மேற்குறிப்பிட்ட செய்தி வெளிவந்தது? அல்லது கும்பகோணம் மகாமகம், வடக்கே கும்பமேளா திருவிழாவில் பலியானோர் அனைவருக்குமே திரு.கி.வீரமணி வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலும் அது போன்ற கேலி தொனி இருந்ததா?

என்று ஆராயாமல், திரு.எச்.ராஜா "ராமசாமியை செருப்பால் அடிப்பேன் என்ற எனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும், வாபஸ் வாங்க வேண்டும் என்றவர்களும் இதற்கு பதிலளியுங்கள்." என்று கருத்து தெரிவித்தது சரியா? 

கடவுள் சக்தி என்று வரும்போது, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் இந்து கடவுளுக்கும், முஸ்லீம் கடவுளுக்கும் வேறுபாடு கற்பித்ததற்கு ஆதாரம் உண்டா? மாறாக ' கடவுள் இல்லை' என்ற வாசகத்தை அவர் வெளியிட்ட போது,  இந்து, முஸ்லீம், கிறித்துவ மதப்பெரியவர்கள் திருச்சி பெரியார் மாளிகையில் அவரைச் சந்தித்து, தங்கள் மத உணர்வுகளை அந்த வாசகம் புண்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்கள். அதற்கு அவர், 'நீங்கள் ஒவ்வொருவரும், மற்ற மதத்தின் கடவுளை இல்லை என்று சொல்லும்போது புண்படாத மனம், எனது வாசகத்தால் மட்டும் புண்படுகிறது என்று சொல்வது சரியா?" என்று தெளிவுபடுத்தினார்.

மேற்குப்பிட்ட பின்னணியில், திரு.எச்.ராஜா "ராமசாமியை செருப்பால் அடிக்க வேண்டும்" என்று, இதில் ஏன் செருப்பை நுழைத்தார்? என்பதும் ஆய்விற்குரியது. ஒருவேளை இந்து கடவுள் 'இராமர்' படத்தை, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்திய 'வரலாறு' தெரிந்து, அது தொடர்பாக  கோபப்பட்டு, திரு.எச்.ராஜா செருப்பை நுழைத்தாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் புராணஙகள் பற்றியும், தமிழ் பற்றியும் தெரிவித்த கருத்துக்களை நான் ஏற்று பிரச்சாரம் செய்தவன் என்பதையும், அதன்பின் எனது இசை தொடர்பான ஆராய்ச்சிகளின் ஊடே, அவை தவறு என்று கண்டுபிடித்து, பெரியார் ஈ.வெ.ரா ஆதரவாளர்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்டி வருகிறேன் என்பதையும், எனது பதிவுகளைப் படித்தவர்கள் அறிவார்கள்.

இந்து கடவுள்களில் சிவன் படத்தை எரிக்காமல், இராமர் பட‌த்தை எரித்தல், கோவில் வழிபாட்டிற்கு இடைஞ்சல் இன்றி, சொந்த காசில் கடையில் விற்கும் விநாயகர் பொம்மைகளை வாங்கி, பொது இடங்களில் உடைத்தல், காந்தி பட‌த்தை எரித்தல் உள்ளிட்டு, தான் நடத்திய போராட்டங்களுக்கு முன், தமிழ்நாடெங்கும் அது தொடர்பாக பிரச்சாரம் செய்த போது, அதை எதிர்த்து கேள்விகள் கேட்பதை வரவேற்றவர் அவர்.அந்த காலக்கட்டத்தில் அக்கேள்விகளுக்கு 'அறிவுபூர்வமாக' யாரும் பதில் சொன்னார்களா? என்று ஆராய்ந்தால், பெரியார் ஈ.வெ.ரா 'உணர்ச்சிபூர்வமாக' அப்போராட்டங்களை நடத்தவில்லை, அறிவுபூர்வமாகவே நடத்தினார், என்பது தெளிவாகும். 'நமக்கேன் வம்பு?' என்று புலமையாளர்கள் ஒதுங்கியதும், அதற்கு  காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

எனவே தான், அவரால் பிராமணர்கள் அமைப்பில் உரையாற்ற முடிந்தது. 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிராமணர்களும் பங்கேற்றார்கள். 
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html 1947 இந்திய விடுதலைக்கு முன், தனது 'திராவிட நாடு' பிரிவினை கோரிக்கைக்கு ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவை 'பகிரங்கமாக' பெற்று, அறிவிக்க முடிந்தது.

" ஒருவரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் அறிவுபூர்வமாக எதிர்ப்பது என்பது வேறு;  உணர்ச்சிபூர்வமாக கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து எதிர்ப்பது என்பது வேறு; இரண்டும் கலந்து, இரண்டும் கெட்டானாக எதிர்ப்பது என்பது வேறு; பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் எதிர்ப்பதில்,  பா.ஜ.கவின் எச்.ராஜாவும், மற்றும் அவரைப் போன்று, பெரியார் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி பேசுபவர்களும், எழுதுபவர்களும், எந்த வகை? என்ற ஆராய்ச்சியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள இந்துத்வா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.

நானும் பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும், இந்துத்வா கட்சிகளிலும்,  எனது பார்வையில் எதிர்க்கப்பட வேண்டியவைகளை எதிர்த்து, இந்த பிளாக்கில்(Blog) பல பதிவுகள் எழுதியுள்ளேன். அது எந்த வகை என்பதை முடிவு செய்ய வேண்டியது படிப்பவர்கள் தான்.

பெரியார் ஈ.வெ.ரா, கோட்சே, வாஞ்சிநாதன், சத்தியமூர்த்தி உள்ளிட்டு  பொதுவாழ்வில் இடம் பெற்ற மனிதர்களைப் பற்றி எதிர்த்து எழுதும்போதும், அறிவுபூர்வமாகவும் எழுதலாம்; உணர்ச்சிபூர்வமாகவும் எழுதலாம். ஆனால் நாம் எதிர்க்கின்ற நபர் பொதுவாழ்வில் சுயநலமின்றி, பல தியாகங்கள் புரிந்து வாழ்ந்திருந்தால், அதை மதிக்கின்ற அறிவை இழந்து, உணர்ச்சிபூர்வமாக அவரை இழிவுபடுத்துவது தவறு."

இந்தி எதிர்ப்பு போராட்டம், திராவிட நாடு பிரிவினை போன்ற தமது நிலைப்பாடுகளுக்கு பிராமணர்களின் ஆதரவை பெறும் அளவுக்கு, பிராமணர் அமைப்பில் பெரியார் ஈ.வெ.ரா உரையாற்றும் அளவுக்கு, தமிழ்நாட்டின் அறிவுபூர்வ போக்குகளுக்கு உணர்ச்சிபூர்வ  இரைச்சல் அடங்கியிருந்தது. பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கும் தி.மு.க தலைவர்களுக்கும் இடையில் மட்டுமே 1967 வரை உணர்ச்சிபூர்வ இரைச்சல் ஆதிக்கம் செலுத்தியது என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 1967க்குப் பின்னர் அந்த உணர்ச்சிபூர்வ இரைச்சல் வளர்ந்து, இன்று இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு தலைவர்களிடமும் 'பற்றியிருந்தால்' அது சமூகத்திற்கு கேடாகவே முடியும். திரு.எச்.ராஜா போன்ற இந்துத்வா தலைவர்கள் பெரியார் அமைப்புகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகளில் உரையாற்றுவதும், இந்துத்வா அமைப்புகளில் திரு.கி.வீரமணி போன்ற பெரியார் இயக்க‌ தலைவர்களும், மற்றும் முஸ்லீம் தலைவர்களும், உரையாற்றுவதும் துவங்கினால் தான், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் அழிவுப்பாதையிலிருந்து மீளமுடியும். 

அதற்கு 'பிறர் பார்வை அறிதல்'  (Empathy) போக்கினை,

'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு' (திருக்குறள் 423)

என்ற வழியில் செயல்படுத்த, மனமிருந்தால் மார்க்கம் உண்டு. 'உணர்ச்சிபூர்வ' இரைச்சலுக்கு 'அஞ்சி', புலமையாளர்கள் ஒதுங்கும் போக்கானது, அதற்கு ஊறு விளைவிப்பதாகும். தமிழைத் தவிர, பிறமொழி அறியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'உணர்ச்சிபூர்வ மேதாவிகள்' புற்றீசல் போல் வளர்ந்ததற்கும், அதுவே காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அம்மேதாவிகளில் பலர் விவாதப் பொருளின் வரை எல்லையைத் (limit) தாண்டி, விவாதத்தில் ஈடுபடுவோர் மீது திசை திரும்பி, விவாதத்தில், உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டுபவர்களை, 'நம்மாளு' என்று நாம் ஊக்குவிப்பதைத் தவிர்ப்பதும், சமூக வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

குறிப்பு 1 :
" தாய் மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து. 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, 'தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை' என்று, தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்,   தமது அறிவு அனுபவ அடிப்படையில், பிரச்சாரம் செய்தார். தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகள் வெளிப்பட்டு, தமக்கும் அது சரியெனப்பட்டால், தமது நிலைப்பாடு தவறு என்று பகிரங்மாக அறிவித்து, தனது நிலைப்பாட்டை, அவர் மாற்றிக் கொண்டதற்கு பல சான்றுகள் உண்டு. உலகிலேயே வெட்கப்படாமல், அது போன்று தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து மாற்றிக் கொண்டவர் பெரியார் ஈ.வெ.ரா  மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில்.ஒரு மொழியானது அம்மொழி பேசும் மக்களின் அடையாளத்துடனும், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினுடனும், எவ்வளவு நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது, என்பது பற்றி உலக அளவில் வெளிப்பட்டுள்ள‌ சான்றுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி வெளிவந்துள்ள எனது ஆய்வுகளின் அடிப்படையிலும், பெரியார் ஈ.வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், தமிழைப் பற்றிய மேற்குறிப்பிட்ட  தனது நிலைப்பாடுகள் தவறு என்று அறிவித்து, தனது நிலைப்பாட்டைத் திருத்திக் கொண்டிருப்பார், என்பதை எவராலும் மறுக்க முடியுமா?"
http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html 

2. பொது அரங்கில் தமிழ்நாட்டில் 'தோழர்' என்ற சொல்லை, பிரபலப்படுத்தியவர் பெரியார் ஈ.வெ.ரா ஆவார்.

'தோழர்' ஈ.வெ.ராவை 'உணர்ச்சிகர' அணுகுமுறையில் குறை சொல்பவர்களும், 'தந்தை பெரியார்' என்ற பிம்பத்தில் 'சிறை'படுத்தி வாழ்பவர்களும், தமது 'யோக்கியதையை' சுயபரிசோதனைக்குட்படுத்துவார்களா?


தாம் வாழும் இடத்தில், பணியாற்றுகிற இடத்தில், 'பொது நீதிக்காக' என்ன மெனக்கெட்டார்கள்? அங்கு 'செல்வாக்கான' நபர்களின், 'தவறுகளை' தட்டிக்கேட்காமல், அவர்களுக்கு 'நெருக்கமாகி' பலன்கள் அனுபவிப்பதில் குறியாக இருந்தார்களா?


தமிழ்நாட்டில் கிரானைட், தாது மணல் கொள்ளை உள்ளிட்ட இன்னும் பல 'ஊழல் வழிகளில்' 'செல்வாக்கானவர்களை' , வெறுத்து ஒதுக்கினார்களா? அல்லது அவர்களுக்கு 'நெருக்கமாகி', பலன்கள் அனுபவிப்பதில் குறியாக இருந்தார்களா?


தமது குழந்தைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக் கொண்டு, வெளியில் 'தமிழ்வழிக்கல்வி' ஆதரவாளர்களாக வேடம் போட்டார்களா?

தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, சொந்த வாழ்வில், 'இழப்புகளை' சந்தித்த,   ஈ.வெ.ரா, கோட்சே, வாஞ்சிநாதன், போன்ற இன்னும் பல தியாகிகள்  போன்று, மேலேக்குறிப்பிட்ட இரு பிரிவினரில், எவராவது வாழ்கிறார்களா? சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவர்கள் சந்திக்கும் இழப்புகள் எல்லாம், சமூகம் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்; பொது அரங்கில் சமூகக் கள்வர்கள் அதை 'அபகரிக்க' வழியில்லையென்றால். வழியிருந்தால், அந்த 'இழப்புகளையே, கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, etc மூலமாக  மூலதனமாக்கி', ' சமூக நீதி, இந்துத்வா , etc'  'உணர்ச்சிகர வழிபாடு' போக்கை ஊக்குவித்து, அக்கள்வர்கள் 'குறுக்கு வழி, ஊழல்' மூலம் பெறும், 'செல்வம், செல்வாக்கு' வளர்ச்சிகள் என்பவை, சமூகத்தின் வீழ்ச்சியில் முடியும். 'அந்த வழிகளை'  அடையாளம் கண்டு அழிக்காமல், மீட்சி கிடையாது. உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒழிப்பதானது, மீட்சிக்கு முதல்படியாகும். 'அந்த வழிகளில்', தமிழ்நாட்டில், அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்',  செல்வம், செல்வாக்கு ஈட்டி, தீயினமாக வலிமை பெற, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?  என்ற‌ ஆய்வும், அதற்கு துணை புரியும்.
http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html