Saturday, March 10, 2018


தமிழ்நாட்டின் ‘செருப்பு அரசியல்’ (4)



'உணர்ச்சிபூர்வ வெறுப்புஅரசியலும், பூணூல் அறுப்பும்



தற்போது நடந்துள்ள பூணூல் அறுப்புக்கு காரணமாக சொல்லப்படுவது பெரியார் சிலை உடைப்பும், அதைத் தூண்டிய எச்.ராஜாவின் (பின்னர் அகற்றப்பட்ட) பெரியார் சிலை உடைப்பை ஆதரித்த இணைய குறுஞ்செய்தியும் ஆகும்.

அதற்கும் முன் நடந்த பூணூல் அறுப்பு சம்பவமானது கீழ்வரும் சூழலில் நடந்தது.

திராவிடர் கழகம் அறிவித்த 'தாலி அகற்றல்' போராட்டம் தொடர்பாக, அதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் எச்.ராஜா பெரியாரையும் அண்ணாவையும் மற்ற திராவிட கட்சிகளின் தலைவர்களையும் கண்டித்து கீழ்வருமாறு பேசினார்.

‘" முதலில் .வே.ரா ஒரு தேச துரோகி என்பதை நாம் மனதில் பதியவைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் 1944-ல் .வே.ரா தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடக்கட்சியின் துவக்க மாநாட்டில் C.N.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார். தீர்மானம் என்ன சொல்கிறது என்றால்வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்து கொண்டு சென்னை ராஜதானியையாவது ஆளவேண்டும்”. இப்படி ஒரு மானங்கெட்ட தீர்மானத்தை போட்ட தேச துரோகிகள் தானேடா .வே.ரா, அண்ணாதுரை, வீரமணி, கருணாநிதி & கம்பெனி. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்ததை கருப்பு தினம் என்று .வே.ரா அறிவித்து எல்லா வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்ற சொன்னாரா இல்லையா??. எனவே வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியெறிய போதே இந்த இரண்டு பேரையும் சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்." சென்னை 'வள்ளுவர்கோட்டத்தில் 18 ஏப்ரல் 2015 அன்று நடைபெற்ற கறுப்பு சட்டை எரிப்பு போராட்டத்தில் .வெ.ரா வையும், வீரமணியையும், கம்யூனிசத்தையும் சேர்த்து எரித்து தள்ளிய திரு H.ராஜா அவர்களின் காரசாரமான பேச்சு' என்று முகப்புத்தகத்தில் வெளிவந்துள்ளது.பெரியாரைப் பற்றியும், அண்ணாவைப் பற்றியும், இவ்வளவு இழிவான கருத்துள்ள எச்.ராஜா, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, மதுரையில் அழகிரியின் வீட்டிற்கு சென்று, தனக்கு ஆதரவு தருமாறு கெஞ்சியது சரியா? என்ற கேள்வியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள எச்.ராஜா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.’ ( ‘தமிழ்நாட்டின் ‘செருப்பு அரசியல்’ (2); 'தமது பக்கமே கோல் போட்ட’(same side goal) 'உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல்' ?’ ; http://tamilsdirection.blogspot.in/2018/01/2-same-side-goal.html )

மேலே குறிப்பிட்ட பதிவில் எச்.ராஜாவின் பேச்சானது எவ்வாறு அறிவுபூர்வ அணுகுமுறையிலிருந்து தடம் புரண்ட சமூக பொறுப்பற்ற பேச்சாகும்? என்பதை மேலே குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன். இது வரையில் எச்.ராஜா சார்பாக மறுப்பு ஏதும் வரவில்லை; இனி வந்தாலும் வரவேற்பேன். நானறிந்தவரையில் எச்.ராஜாவின் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் எல்லாம் வெளிப்பட்ட பின், நீண்ட இடைவெளிக்குப்பின், இந்த தலைமுறையில் பூணூல் அறுப்பு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

எச்.ராஜாவின் மேலே குறிப்பிட்ட நிலைப்பாட்டினை, இந்துத்வா முகாமில் ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள், என்பதை கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.

‘கடந்த காலங்களில் பல்வேறு பொதுக்கூட்ட மேடைகளில் பகிரங்கமாக ஈவெரா எதிர்ப்பை திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் வெளிப்படுத்திய போது வராத தீவிர எதிர்ப்பும் கண்டனமும் இப்போது ஒரு டிவிட்டர் பதிவுக்கு எதிராக திடீரென வருவதற்கு காரணம் என்ன?

தமிழகத்தில் திராவிடத்திற்கு மாற்றாக தேசியத்தை தீவிரமாக வளர்க்க ஆயத்தமாகும் பாஜக தேசிய தலைமையின் எண்ண ஓட்டத்தை திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டமிட்ட சதி என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த தருணத்தில் நாம் அனைவரும் திரு.ஹெச்.ராஜா ஜி அவர்களுக்கு ஆதரவாகவும் அரணாகவும் அவருடன் இணைந்து இந்து விரோத இந்து துரோக சக்திகளை எதிர்கொள்வதே இந்து சமுதாய பாதுகாப்பிற்கு நாம் செய்யும் சிறந்த கடமையாகும்.
WE SUPPORT SHRI.H.RAJA JI
Paramasamy Pandian is with Ramakrishna Gauthaman and 48 others. In facebook.’

விவசாய சங்க தலைவரை  (குறிப்பு கீழே) அறைந்த பெண்ணை 'வீர தமிழச்சி' என்று எச்.ராஜா பாராட்டியதைப் போல, சசிகலாவை 'வீரமங்கை வேலு நாச்சியாராக' வைகோ பாராட்டியதைப் போல, பூணூலை அறுத்தவர்களை எல்லாம் 'வீரத் தமிழர்களாக'  பாராட்டும் 'பெரியார்' ஆதரவாளர்கள் இருந்தாலும் வியப்பில்லை. 

அதே நேரத்தில், 'பெரியார்' ஆதரவாளர்களில் சிலர் பூணூல் அறுப்பைக் கண்டித்து இணையத்தில்கீழ்வரும் கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

“பெரியார் சிலை எனும் கல்லால் ஆன பொருளை உடைத்ததற்கு எதிர்வினையாக பூணூலை அறுத்ததின் மூலம் "பெரியார் சிந்தனைக்கு ஏற்பட்ட அவமானம்", பெரியார் சிலையை உடைத்ததை விட கூடுதல் அவமானம் பெரியாருக்கு.

பெரியார் சிலை உடைப்பு என்பது பெரியார் " சிந்தனையாக" உயிரோடு இருக்கிறார் என்பதின் அடையாளம். பூணூல் அறுப்பு என்பது பெரியார் "சிலையாக மட்டும்" இருக்கிறார் என்பதின் அடையாளம். எது பெரியாரிக்குப் பெருமை?

மேலும் கேட்க நாதியற்ற பார்ப்பனர்களைத் தாக்கினால் யார் கேட்பார்கள் இந்த நாட்டில் என்றும் சில திமிர்க்குரல்கள் மேலெம்புகின்றன.
அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் "கேட்க நாதியற்ற பார்ப்பனர்களை காக்க பெரியாரே" வருவார்.

தோழர்களே இது பெரியார் மண்.

பகுத்தறிவில்லாத உணர்ச்சிகள், "கடவுள் நம்பிக்கையாக இருந்தாலும், சாதி உணர்வாக இருந்தாலும்", அதை கண்டிக்கிற பெரியார் தான், " பெரியார் பக்தி என்ற பெயரில் தனிநபர்களை தாக்குவதையும்" கண்டிக்கிறார் உரத்த குரலில்.

கண்மூடித்தனமாக செய்யும் செயல்களை பெரியார் பெயரில் செய்தாலும், அவை எல்லாம் பெரியாருக்கு எதிரானவை.

நூலை அவர்களாகவே அறுப்பது தான் பெரியாருக்குப் பெருமை. நாமாக அறுப்பதல்ல...
 பூணூலை அறுப்பது நம் வேலையல்ல.
பூணூலை அணிந்திருப்பது அவமானகரமான நாகரிகமற்ற வேலை என அவாள்களை உணரச் செய்வதே நம் வேலை.
கருத்தியல் போரே மாற்றத்தைக் கொண்டு வரும்.
தனிமனிதர் மீதான தாக்குதல் அல்ல.” 

மேலே கண்ட பதிவுகள் மிக அரிதாக வந்துள்ளன. அதோடு பிராமணர் சங்கமே எச்.ராஜாவை கண்டித்த  செய்தியும் வெளிவந்துள்ளதானதும் வரவேற்கத்தக்கதாகும்.

'இந்திய விடுதலையை' நிராகரித்து, பிரிவினை கோரிக்கையுடன் பயணித்த .வெ.ரா அவர்களை உணர்ச்சிபூர்வமாக கண்டித்ததில், எச் ராஜாவுக்கு முன்னோடியாக பிரதமர் நேரு இருந்திருக்கிறார். அது போன்ற கண்டனங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானத்தை' (Nation Building) சீர் குலைத்து, பிரிவினை முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுத்து வந்துள்ளன.’ என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

பூணூல் அறுப்பாக இருந்தாலும் சரி, சாதி மத மோதல்களாக இருந்தாலும் சரி;

சமூக பொறுப்பின்றி உணர்ச்சிபூர்வ பேச்சுகள் மூலமாக எவ்வாறு சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம்? அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, எவ்வாறு சாதி, மதக்கலவரங்களையும் பூணூல் அறுப்புகளையும் உண்டாக்கலாம்? என்ற சமூக செயல்நுட்பத்தையும் ஏற்கனவே கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.

வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில்,தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும். அது போன்ற விபத்துகளும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. ( http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post_19.html  )

சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  வன்முறைஎன்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது.

தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி கலவரங்களை (திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில்) ஆய்வு செய்து, நான் கண்ட உண்மை அது. அந்த உணர்ச்சிபூர்வ பேச்சாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ, சாதி, மத கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை. மாறாக அதுவே பொதுவாழ்வு வியாபாரமாகி, அவர்களின் செல்வம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்க வழி செய்கிறது.  திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்கள்,  திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் வாலாகி, மனிதப்பண்புகளை இழந்த கள்வராகியதற்கு, மேற்கண்ட அனுபவ அறிவு காரணமா? இயல்பில் திரிந்தவர்கள் எல்லாம், சுயநல நோக்கில்,   'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற பொதுப்பிரச்சினைகளில் அக்கறை காட்டி, மதிக்க வேண்டிய தனிமனித உறவுகளை சிதைத்து, 'வாழ்வியல் புத்திசாலிகளாக' எப்படி வளர்ந்தார்கள்? ( http://tamilsdirection.blogspot.in/2015_01_01_archive.html  ) தமிழ்நாட்டில் இத்தகைய சுயநலக்கள்வர்கள் உருவான சமூக செயல்நுட்பமானது(social mechanism), திராவிட ஆட்சிகளின் சாதனையா? (எனது அனுபவங்கள் அடிப்படையில்) சுயலாப நோக்கில் மதம் மாறிய கிறித்துவர்களிடமிருந்து, இந்த சமூக செயல்நுட்பமானது, திராவிடக்கட்சிகளால் அகவயபடுத்தப்பட்டு, இன்று தமிழ்நாட்டில் தேசிய, இந்துத்வா உள்ளிட்டு அனைத்து கட்சிகளிலும் 'இயல்பில் திரிதல்' நோயை தொத்துநோயாக வளர்த்து வருகிறதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

எச்.ராஜாவும் இந்துத்வா முகாமில் அவரை ஆதரிப்பவர்களும், தமிழ்நாட்டில் 'பிராமண எதிர்ப்பை' குறைக்கும் நோக்கிலாவது, சென்னை ஐ.ஐ.டியில் விஞ்ஞானி வசந்தா கந்தசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால், நீண்ட கால போராட்டத்திற்குப் பின், உயர்நீதிமன்றம் மூலமே அவருக்கு நீதி கிடைக்க வேண்டிய அளவுக்கு (Madras HC slams IIT-M’s gross irregularities in selection of professors; https://www.deccanchronicle.com/nation/in-other-news/230816/madras-hc-slams-iit-ms-gross-irregularities-in-selection-of-professors.html  ) தாமதமாகியிருக்காது. இன்று பூணூலை அறுத்தவர்கள் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் 'பெரியார்' கட்சிகள் அவரின் போராட்டத்திற்கு ஆதரவளித்து 'நல்ல பேர்' வாங்கியிருக்க முடியாது. அநீதிக்கு எதிராக பாரபட்ச போக்கு இருக்கும் வரை, பிராமண எதிர்ப்பு சூழல் தொடரும். பிராமண எதிர்ப்பும் சரி, பூணூல் அறுப்பு சம்பவங்களும் சரி, 1944இல் திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பே இருந்திருக்கின்றன. திராவிடர் கழகம் தொடங்கிய பின் பூணூல் அறுப்பு சம்பவங்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டதாக, 'பெரியார்' ஈ.வெ.ராவின் 'பட்டுக்கோட்டை சொற்பொழிவு' ஒலிப்பதிவில் நான் கேட்டிருக்கிறேன்.

ஈ.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய ' காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' அவரின் கொள்கையை அறிவுபூர்வமாக உட்படுத்தி வளர்த்தெடுக்காமல், உணர்ச்சிபூர்வமாக பயணித்து 'சருகாகி' வரும் ' பெரியார்' கட்சிகளுக்கு எச்.ராஜா போன்றவர்கள் ‘ஆக்ஸிஜன்’ வழங்கி 'உயிருடன் நீடிக்க உதவி வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html  ) 

தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்களை உருவாக்கி 'சுருதி பேதமாக' திரிந்து வரும் சமூகநீதி; உலகமயமாதல் ஊக்குவித்து வரும் நுகர்வு பண்பாடு; திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் 'அரசியல் நீக்கத்தில்' (depoliticize) வளர்ந்து வரும், 'வாலாட்டி' பலன் பெறும் 'தன்மானக்கேடான சுயலாப கள்வர் நோய்';


ஆகியவற்றின் தொகுவிளைவாக 'பார்ப்பன எதிர்ப்பு சமூக எரிவாயுவை' நிரப்புவதற்கான சமூக அடித்தளமானது வற்றி, மாணவர்களையும் படித்த இளைஞர்களையும் 'சுயலாப' நோக்கின்றி ஈர்க்கும் வலிமை இழந்து வரும் 'பெரியார்' கட்சிகளுக்கு, இந்துத்வா முகாமில் உள்ள எச்.ராஜா போன்றவர்களின் உணர்ச்சிபூர்வ பேச்சுக்கள் எல்லாம் 'போனசாகி' வருகின்றன.


நமது கொள்கைக்கு எதிரான கொள்கையில் பொதுவாழ்வு வியாபாரியாக சுயநலத்துடன் வாழாமல், தியாகங்கள் புரிந்து வாழ்ந்த தலைவர்களை மதித்து, அக்கொள்கைகளை அறிவுபூர்வமாக விமர்சித்து, அக்கொள்கையில் பயணிப்பவர்களை தமது கொள்கைக்கு ஈர்ப்பது என்பதானது; ந‌மது கொள்கையின் கட்சியின் வளர்ச்சிக்கு துணை புரியும். மாறாக விமர்சனம் என்ற பெயரில், மக்களிடம் செல்வாக்குள்ள தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவுபடுத்துவதானது, நமது கட்சியை நாமே தேர்தலில் நோட்டாவுடன் போட்டி போட வைக்கும் விளைவிலேயே முடியும்.

இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது தாய்மொழிவழிக்கல்வியை தரிப்பதோடு, சாதி அடிப்படையில் வெளிப்படும் பாரபட்சங்களை எதிர்த்தும் தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளது. (http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none.html  )


கடந்த காலத்தில் தி.கவும் ஆர்.எஸ்.எஸும் ஒருவர் மீது ஒருவர் சுமத்திய குற்றங்களை எல்லாம் உணர்ச்சிபூர்வமாக நினைவு கூர்ந்து, கடந்த கால அடிமைகளாக வாழாமல், அறிந்ததினின்றும் விடுதலை’ பெற்றவர்களாக‌ ( ‘Freedom from the Known’ by J.Krishmamoorthy), இன்று 'தாய்மொழி வழிக்கல்வி மீட்பு' மற்றும் 'சாதி அடிப்படையில் உள்ள பாரபட்ச எதிர்ப்பு' கோரிக்கைகளில் ஒன்று சேர்ந்து, செயல்ரீதியில் ஒருவரையொருவர் விஞ்ச போட்டி போட்டால், அது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லதாகவே முடியும்.


சென்னை ..டி இல் தலித்துக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு பிராமணர்களும் புறக்கணிக்கப்பட்டு, பிற மாநில பிராமணர்களுக்கு சாதகமான பாரபட்ச போக்கானது, ஒரு முறையான விசாரணை மூலமாகவெளிப்பட்டால் வியப்பில்லை.

சென்னை ..டி உள்ளிட்டு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் மத்திய மாநில அரசு துறைகளில் எல்லாம் பாரபட்ச போக்கானது எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும், அதனை மேற்குறிப்பிட்ட ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாடுகளில் உண்மையாகவே நம்பிக்கையுள்ளவர்களுடன் சேர்ந்து, அறிவுபூர்வமாக காரியம் சாதிக்கும் நோக்கில் செயல்படும் சாத்தியத்தை கெடுக்கும் வகையில்;

இந்துத்வா முகாமில் எச்.ராஜா போன்றவர்களும், 'பெரியார்' கட்சிகளில் உள்ள எச்.ராஜா போன்றவர்களும் உணர்ச்சிபூர்வமாக‌, எதிர்முகாமில் உள்ளவர்களை இழிவுபடுத்தி பேசுவதை எல்லாம் வெறுத்து ஒதுக்கினால் தான்;

சாதி, மதக்கலவரங்களையும் பூணூல் அறுப்புகளையும் சாத்தியமாக்கும் வகையில் 'சமூக எரிவாயு' நிரப்பப்படுவதைத் தவிர்க்க முடியும்.
தமிழ்வழிக்கல்வி மீட்பு, சாதி மத அடிப்படைகளில் பாரபட்ச எதிர்ப்பு ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும் 'பெரியார்' ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து, வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.

குறிப்பு;

அய்யாக்கண்ணு உள்ளிட்டு இன்று முன்னணியில் உள்ள விவசாய சங்கத்தலைவர்கள் தமது மனசாட்சிகுட்பட்டு, கீழ்வரும் ஐயங்களுக்கான விளக்கத்தை தருவார்களா?

1969இல் முதல்வரான தி.மு. தலைவர் கருணாநிதி சட்டசபையில் 'காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிதாக அணைகள் கட்டுவதற்கு ஆட்சேபணையில்லை' என்று அறிவித்த போது, அதை எதிர்த்தார்களா?

பின் கருப்பையா மூப்பனார் பிரதமாராகும் வாய்ப்பை கெடுத்த, முதல்வர் கருணாநிதி உதவியால் பிரதமரான தேவகவுடா, கர்நாடகத்தின் நலனுக்கு எதிராக தமிழ்நாட்டுக்கு சாதகமாக செயல்பட்டார் என்ற அடிப்படையில் காவிரி நடுவர் மன்ற நீதிபதி சித்ததோஸ் முகர்ஜியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததற்கு, தேவ கவுடாவையும், முதல்வர் கருணாநிதியையும் கண்டித்தார்களா?

இன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் முதல்வர் தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி நீர் வழங்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரிய அமைக்க எதிர்ப்பதை கண்டித்து, டெல்லியில் சோனியா வீட்டு முன்பும், சென்னையில் சத்தியமூர்த்தி பவன் முன்பும் போராட்டம் நடத்தினார்களா?

அதை தவிர்த்து மோடி எதிர்ப்புக்காக விவசாயிகள் பேரில் போராட்டமும், பிரச்சாரமும் செய்வது நேர்மையாகுமா?

No comments:

Post a Comment