Sunday, November 15, 2020

 

தமிழ்: 2021 தேர்தல் பிரச்சாரம்;

ஏமாந்ததில் தமிழக முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும்  சங்கமம்?

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய கவலையின்றி, 'தமிழ்ப்பற்று', 'தனித்தமிழ்நாடு', 'தமிழ்நாடு கொடி' என்று பயணித்து வருபவர்கள் எல்லாம், ஒரு வகை போதையில் பயணிப்பவர்களா? அல்லது பொதுவாழ்வு வியாபாரிகளா? என்ற விவாதத்திற்கு இடம் இருப்பதை கீழ்வரும் பகுதியில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

குக்கிராமங்கள் வரை விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி இன்று கல்லூரி மாணவர்களில் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாதவர்கள் எண்ணிக்கையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழ் ஆர்வலர்களின் குடும்பப் பிள்ளைகளும் அதே போக்கில் தமிழ் வேரழிந்தவர்களாக இருக்கிறர்களா? இல்லையா? என்ற ஆராய்ச்சியை, அண்மையில் தமிழ்நாடு கொடி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்பங்களில் இருந்து தொடங்கலாம்.’ (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_11.html )

அவ்வாறு போதையில் அல்லது பொதுவாழ்வு வியாபாரிகளாகப் பயணிப்பவர்களை எல்லாம் ஆதரித்து ஊக்குவித்து வரும் தமிழ்ப்புலமையாளர்கள் யார் யார் இருக்கிறார்கள்?

தமிழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உரிய ஆதரவு இன்றி அவை ஆமை வேகத்தில் முன்னேறுகின்றன. ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளுக்கு 'நெருக்கமான' புலமையாளர்கள் எல்லாம், அந்த கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதில் அல்லது அவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துவதில் அக்கறை இன்றி வாழ்வதானது தமிழின் வளர்ச்சிக்கு உதவுமா? கேடாகுமா?

கருணாநிதியின், நடராஜனின், ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின், மேற்குறிப்பிட்ட போக்கில் பயணித்தவர்கள் எல்லாம், வித்தியாசமான நெருக்கடியில் சிக்கி வருகிறார்கள்.

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய கவலையின்றி, கருணாநிதியின், நடராஜனின், ஜெயலலிதாவின் 'புகழ்'(?) பாடி தத்தம் செல்வம் மற்றும் செல்வாக்கினை உயர்த்துவதில் குவியமாகப் பயணித்தவர்கள், அந்த மூவரின் மறைவிற்குப் பின் அதே போக்கில் பயணிப்பதால், தமக்கு லாபமில்லை, என்று உணரத் தொடங்கியுள்ளனர். அவர்களில் 'அதி புத்திசாலிகள்' பா..கவில் 'புரவலரைத்'(?) தேடிக் கொண்டிருந்தாலும் வியப்பில்லை. ஆனால், கருணாநிதியின், நடராஜனின், ஜெயலலிதாவின் அளவுக்கு உதவும் புரவலர்கள் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

அவ்வாறு சுயலாப நோக்கில் பயணித்த 'தமிழ்ப்புலமையாளர்களை' (?) அடையாளம் கண்டு, அவர்களை பொது அரங்கில் அம்பலப்படுத்துவதால், தமிழுக்கோ தமிழ்நாட்டிற்கோ எந்த பலனும் இல்லை, என்பது எனது கருத்தாகும்.

ஆனால் மேற்குறிப்பிட்ட தமிழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள்  எல்லாம் இனியும் ஆமை வேகத்தில் இருந்து விடுதலை பெற்று முன்னேற, அவர்கள் தடைகளாக நீடித்தால், அத்தகையோரை பொதுஅரங்கில் விமர்சித்து, அம்பலப்படுத்தி ஓரங்கட்டுவதன் மூலமே,

தமிழ் படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில் உள்ள தாமதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

தமிழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உரிய ஆதரவு இன்றி அவை ஆமை வேகத்தில் முன்னேறுகின்றன. உதாரணமாக, சோம்ஸ்கி உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற நிபுணர்கள் நவீன மொழியியல் வளர்ச்சிக்கு சமஸ்கிருதத்தின் பங்களிப்பை அங்கீகரித்துள்ளதால் உலக அளவில் சமஸ்கிருத கல்வியும் அதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

தொல்காப்பியம் அடிப்படையில் Musical Linguistics உருவாக்கவல்ல எனது கண்டுபிடிப்பை சோம்ஸ்கி அங்கீகரித்துள்ளார்.

2013இல் எனது ஆய்வு வெளிவந்தது. ஆனால் இன்றுவரை உரிய ஆதரவில்லாததால் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கட்டம் தாமதமாகிறது.

சுமார் 30 வருடங்களுக்கு முன், Bio-friendly leather tech நுட்பம் சங்க இலக்கியங்களில் இருப்பதை சென்னை CLRI scientist சோமநாதன் தமது 2ஆவது Ph.D யில் வெளிப்படுத்தியுள்ளார். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகத்தில் அதைப்படித்து வியந்தேன். உரிய ஆதரவு கிடைத்திருந்தால், உலகில் உள்ள leather research நிறுவனங்களில் தமிழ்ப்புலமையாளர்களையும் பணியில் அமர்த்தி, அந்த தொழில்நுட்பம் marketable product ஆக வெளிவந்திருக்கும்.

பாரபட்சமினறி தாமதத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்து களையாதவரை தமிழ் படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது தாமதமாகும். (‘தமிழ் வேலை வாய்ப்பு இல்லாதமொழியா?’; https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post.html )

கருணாநிதிக்கு யார் தமிழ்ப் புலமையாளர்கள்? என்று அடையாளம் காணும் அளவுக்கு தமிழில் புலமை இருந்தது. அவர்களில் தமக்கு வாலாட்டுபவர்களை ஆதரித்தும், வாலாட்ட மறுத்து தன்மானத்துடன் வாழ்ந்தவர்களை ஓரங்கட்டும் அளவுக்கு அறிவு இருந்தது.

எம்.ஜி.ஆருக்கு அவ்வாறு ஓரங்கட்டப்பட்டவர்கள் (கி..பெ.விஸ்வநாதன், டார்பிடோ ஜனாத்தனம், வி..சுப்பிரமணியம், வீ.பா. சுந்தரம் போன்றவர்களை) யார் என்று அடையாளம் கண்டு தேடி அவர்களுக்கு உரிய பதவி, முக்கியத்துவம் கொடுத்து தமிழை வளர்க்கும் அறிவு இருந்தது. அந்த போக்கில், எவ்வாறு அவரின் நோய் மற்றும் மரணம் காரணமாக, எம்.ஜி.ஆர் மூலமாக தமிழிசை பெற்றிருக்க வேண்டிய வளர்ச்சியானது முடங்கியது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

தமிழில் வேலை வாய்ப்பபுகளை உருவாக்கவல்ல  எனது கண்டுபிடிப்புகள் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்திருந்தால், அவை  உடனே வெளிச்சத்திற்கு வந்திருந்து தமிழும் தமிழ்நாடும் பலன்கள் பெற்றிருக்கும். (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_21.html)

எம்.ஜி.ஆரைப் போல, புலமையாளர்களை மதித்து ஊக்குவிக்காமல் அத்தகையோரின் வாடையின்றி, சரியான ஆலோசனை பெற வழியின்றி முதல்வர் ஜெயலலிதா பயணித்தார். அதன் விளைவாகவே, இந்தியாவில் புதிதாக ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு சிறப்பான முன்னுதாரணமாக, முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்கிறது; மிக மோசமான முன்னுதாரணமாக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்' இருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

மேற்குறிப்பிட்ட ஜெயலலிதா பாணியிலேயே ...தி.மு. ஆட்சியும் பயணிக்கிறது. அவ்வாறு சரியான புலமையாளர்களின் ஆலோசனையின்றி தமிழக அரசு பயணிப்பதால், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும், வெளிப்படாத, ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில் வெளிப்பட்டிருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_8.html  )

அத்தகைய ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில் வெளிப்பட்டதற்கு, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினும் பகுதி பொறுப்பாளி ஆவார்.

தமிழ் தொடர்பாக முதல்வர் எம்.ஜி.ஆர் மேற்கொண்ட முயற்சிகளில் குற்றம் கண்டு எம்.ஜி.ஆரை இழிவுபடுத்த, எந்த அளவுக்கு எதிர்க்கட்சி தலைவரான கருணாநிதி செயல்பட்டார்? என்பதற்கு 'ஐந்திறம் சர்ச்சை' வரலாற்று சாட்சியானது. (https://tamilsdirection.blogspot.com/2014/10/ )

ஹார்வார்ட் தமிழ் இருக்கை தொடங்க, .பி.எஸ் ஆட்சியின் வாலாக ஸ்டாலின் பயணித்த‌து போல கருணாநிதி பயணித்திருக்க மாட்டார். அதற்கு மாறாக, நான் சுட்டிக்காட்டிய குறைபாடுகளின் அடிப்படையில், .பி.எஸ் அரசினை கேலிக்கும் கிண்டலுக்கும் கருணாநிதி  உட்படுத்தியிருப்பார். (https://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html )

தமிழ்நாடு ஏமாளியாக இருப்பதற்கு, ஸ்டாலின் எந்த அளவுக்கு பகுதிக் குற்றவாளியாக நீடிக்கிறார்? என்ற கேள்விக்கான விளக்கம் வருமாறு:

ஹார்வார்ட் தமிழ் இருக்கை தொடங்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை 2018 மே மாதத்தில் வழங்கிய தகவல் அதற்கான குழுவின் இணையதளத்தில் உள்ளது. கீழ்வரும் கேள்வி பதிலையும் அதில் கண்டேன்.

What is the recruitment process and timeline?

The total commitment to Harvard for setting up the Tamil Chair is six million U.S dollars. Upon receipt of the amount, Harvard will begin the search for the most qualified Tamil scholar to assume the professorship. Harvard will choose a proven scholar who has taught, researched and published in academic journals.

ஆனால் யார் தேர்ந்தெடுக்கப்பட்டு என்ன பணிகள் துவங்கியுள்ளன? என்ற தகவல் அதில் இல்லை. (https://harvardtamilchair.org/) ‘who is the head of harvard tamil chair’ உள்ளிட்டு எனது இணையதேடலில் அக்கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. கிடைத்தவர்கள் தெரிவித்தால் நன்றி. இன்னொரு பெர்க்லி தமிழ் இருக்கை ஆராய்ச்சியாக, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடான ஆய்வு முடிவுகள் வெளிப்படும் வாய்ப்புகள் உள்ளனவா? என்று ஆராய இயலும்.

வெளிப்படைத்தன்மையும் (Transparency) பொறுப்பேற்பும் (Accountability) இன்றி தமிழ் இருக்கைகள் தொடங்கப்படுவதானது, தமிழ்நாடு ஏமாளியாக இருக்கும் வரையில் தான் நீடிக்கும்." (https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_8.html )

கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், மேற்குறிப்பிட்ட போக்கினைக் காரணமாகக் காட்டி, ...தி.மு. அரசினைக் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தியிருப்பார். முதல்வர் .பி.எஸ் அவர்களுக்கு மிகவும் நல்ல காலம் போலிருக்கிறது;  தமிழக அரசின் தமிழ் இருக்கை முயற்சிகளுக்கு வாலாகவே எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் பயணிக்கிறார். 

தமிழக அரசானது, 2018 இல் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக கொடுத்த நிதியினை ஏமாந்து கொடுத்திராமல், தமிழில் வேலை வாய்ப்பபுகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கப் பயன்படுத்தி இருந்தால்,

தமிழில் மேற்கொண்ட பல்துறை ஆய்வுகள் மூலமாக, தமிழ்ப் புலமையாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் தாமதமானது முடிவுக்கு வந்திருக்கும்.

தமிழ் மொழி தொடர்பான வேலைவாய்ப்புகள் அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வெளிப்பட்டிருக்கும். உலகின் கவ‌னத்தினை ஈர்க்கும் அளவுக்கு, வரும் 2021 தேர்தலில், தமிழ்நாட்டு பொதுமக்களை ஈர்க்கும் சாதனையாக அது வெளிப்பட்டிருக்கும்.

அவ்வாறு பயணிக்காமல், தமிழக அரசு ஏமாளித்தனமாகப் பயணித்ததைச் சுட்டிக்காட்டி 2021 தேர்தலில் லாபம் பெறும் வாய்ப்பையும் தி.மு. தலைவர் ஸ்டாலின், தாமாகவே அந்த ஏமாளித்தனப் போக்கிற்கு வாலாகப் பயணித்துக் கெடுத்துக் கொண்டார்.

பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் காலில் விழுவதை ஊக்குவித்த, தலைவர்களின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியிருந்தது வரையிலும், தமிழ் மொழியில் உள்ள 'புதிய கண்டுபிடிப்புகளின்' பலன்களை புரிந்து ஊக்குவித்து, சமூகத்திற்கு பயன்பட வைப்பதற்கான சூழல் நிலவவில்லை. இன்று தமிழ்நாடானது ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். (https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_8.html)

வரும் 2021 தேர்தல் முடிவுகள் எதிர்பாராத பல அதிர்ச்சிகளை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலானது  கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பழைய பாணியில் இருந்து மாறி வருகிறது. (குறிப்பு கீழே)

தொல்காப்பியம் மூலமாக  அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தமிழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள்  எல்லாம் ஆமை வேகத்தில் இருந்து விடுதலை பெறும் காலமும் நெருங்கி வருகிறது.

அதன் முன்னோட்ட சிக்னல்களாக, தொல்காப்பியம் தொடர்புடைய 'இசை மொழியியல்' கண்டுபிடிப்பானது உலக அளவில் விவாதத்தினைத் தூண்டி வருகிறது.

https://www.academia.edu/s/79ef3bc4a9#comment_651441

தமிழ்நாட்டுப் புலமையாளர்களும் அதில் பங்கேற்பதானது நல்ல பலனைத் தரும். தமிழ்நாட்டின் அரசியல் புலமானது மாறத் தொடங்கியுள்ளது போல, தமிழ்ப்புலமும் மாற வேண்டிய காலம் வந்து விட்டது. அந்த மாற்றம் வேகமெடுத்தால் தான், தமிழில் பல்துறை ஆய்வுகள் ஊக்கம் பெற்று,

தமிழ் வேலை வாய்ப்பு இல்லாதமொழியா? என்ற கேள்விக்கு சரியான விடையாக, புதிய வேலை வாய்ப்புகள் விரைவில் உருவாகும்.

 

குறிப்பு:

‌2020இல் இந்திய விடுதலைக்குப் பின் முதல்முறையாக தமிழ்நாட்டின் அடையாளச் சிக்கலைத் தீர்க்கும் திசையில், தமிழக பா.. தலைவர் எல்.முருகனும் துணைத்தலைவர் அண்ணாமலையும்,  பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள். அவர்களுக்கு முதல் வெற்றியை எதிர்பார்த்ததை விட விரைவாகவே ஸ்டாலின் வழங்கி விட்டார்.

நீட் தேர்வு தொடர்பாக பா.. துணைத்தலைவர் அண்ணாமலையிடம் விவாதிக்க தி.மு. சார்பாக எவரும் முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து, தொலைக்காட்சியில் பா..கவினருடன் விவாதிப்பதையும் தவிர்க்க தி.மு. முடிவு செய்துள்ளது.

தி.மு.கவினரிடம் விவாதிக்க மற்றவர்கள் அஞ்சி ஒதுக்கிய போக்கானது தி.மு. வளர்ச்சிக்கு உதவியது. கருணாநிதியின் மறைவிற்குப் பின், இன்று பா..கவிடம் விவாதிக்க தி.மு. அஞ்சும் போக்கானது, தி.மு. ஆதரவாளர்களை தலைக்குனிவுக்கு உள்ளாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்தப் போக்கானது, தி.மு.கவின் அரசியல் தற்கொலைக்கு வழி வகுக்கும். (https://tamilsdirection.blogspot.com/2020/11/social-capillary-action-social-energy.html )

தமிழக பா.. தலைவர் எல்.முருகனும் துணைத்தலைவர் அண்ணாமலையும் தமிழக அரசியலின் போக்கில் வரவேற்கத்தக்க திருப்பத்தினை ஏற்படுத்தி வருகிறார்கள். அண்மையில் வேல் யாத்திரையின் போது நடந்த பொதுக்கூட்டத்தில், அருகில் இருந்த மசூதியில் இருந்து தொழுகை ஒலிபரப்பான போது, தமது பேச்சினை நிறுத்தி, அமைதி காத்து, தொழுகை முடிந்ததும் பேச்சினைத் தொடர்ந்திருக்கிறார்கள். 

2 comments:

  1. தமிழை ஊக்குவிக்க அல்லது தமிழர்களின் மரபுகளையும் மாண்புகளை பண்புகளையும் தமிழர்களின் அடையாளங்களையும் கல்வி முறையை உலக அரங்கில் மேலோங்க செய்திடுவார்களோ பாரதிய ஜனதாவை சேர்ந்த எல். முருகனும். அண்ணா மலையும்தமிழகத்தில் வேல் யாத்திரை மூலம் இன்று ஒருவர் வெளிப்பட்டிருக்கிறார் ஒருவர் அதிகாரி ஆனால் இவர்கள் ஒன்றும் முடிவெடுப்பவர்கள் இல்லை முடிவை ஏற்பவர்கள் இவர்களை வைத்து பாரதிய ஜனதா கிடையாது என்பதையும் சிந்தித்து எழுதுவது நன்று

    ReplyDelete
    Replies
    1. மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரிப்பிரச்சினையில் கர்நாடக பா.ஜ.கவும், கர்நாடக காங்கிரசும் ஒரணியில் நிற்கும் வலுவுள்ள கட்சிகளாக தம்மை செயல்பூர்வமாக நிரூபித்து வருகிறார்கள். மகராட்டிர மாநிலத்தில் வேலை வாய்ப்பில் மகராட்டிரர்களுக்கே முன்னுரிமை கோரிக்கையை அம்மாநில பா.ஜ.க ஆதரிக்கிறது. கோவாவில் தாய்மொழிவழிக்கல்வியை ஆதரித்த பா.ஜ.க தமது ஆட்சியில் அதை சரியாக அமுல்படுத்தவில்லை என்ற காரணத்தால், பா.ஜ.க உடைந்து விட்டது. பா.ஜ.க காங்கிரஸ் போன்ற தேசியக்கட்சிகளில் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதானது அந்தந்த மாநிலக் கட்சியில் வலிமையைப் பொறுத்தது ஆகும். தமிழ்நாட்டில் பா.ஜ.க, காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளும் எவ்வாறு நோஞ்சான் கட்சிகளாகப் பயணிக்கின்றன? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘தமிழ்நாட்டில் நோஞ்சான் கட்சிகளுடன் நேசமாகும் மத்தியில் ஆளும் கட்சிகள்? தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, இந்தியாவிற்கும் நல்லதல்ல’; https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html )
      கருணாநிதிக்கும், (சசிகலா) நடராஜனுக்கும் மு.க.அழகிரிக்கும் நெருக்கமான தமிழக பா.ஜ.க தலைவர்கள் 2014 முதல் ஈ.வெ.ராவையும் அண்ணாவையும் இழிவுபடுத்தி வந்தார்கள்.அதற்கு எல்.முருகனும் அண்ணாமலையும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் நலன்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற துணிச்சலை அறிவித்து அதை செயல்பூர்வமாகவும் நிரூபிக்கத் தொடங்கியுள்ளார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட எல்லா கட்சிகளிலும் உள்ள முரண்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் சாதகமான கூறுகளை எல்லாம் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியும் சாத்தியமாகும்.

      Delete