Saturday, November 7, 2020

  

       தமிழ் வேலை வாய்ப்பு இல்லாத‌ மொழியா?

 

"வேலை வாய்ப்பு இல்லா மொழி வாழ்வது கடினம்.பூசைக்கு தமிழ் பயன்படும் வரை தமிழன் வாழமுடியாது."

என்று முகநூலில் வெளிவந்த கருத்து தொடர்பாக;

அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டு இன்று சுமார் 70 வயதுக்கும் அதிகமான தமிழர்களில் கணிசமானோர், இந்தியாவிலும் உலக அளவிலும் உயர்ந்த பதவிகளில் அமர்ந்து சாதனைகள் புரிந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் எல்லாம் உயர்நிலைப்பள்ளி வரையில் தமிழ்வழிக்கல்வியில் பயின்றவர்களே ஆவார்கள்.

காலனி ஆட்சி அரங்கேறும் வரை பெண்களில் அமைச்சர்களும் அதிகாரிகளும் புலவர்களும் இருக்கும் அளவுக்கு, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து வேலைவாய்ப்புகளும் உள்ள மொழியாகவே தமிழ் இருந்தது. பூசைக்கு தமிழ் பயன்பட்ட காலத்தில் தான் இவ்வாறு இருந்தது.

தமிழ்ப் புலமையாளர்கள் தமிழ் மட்டுமின்றி சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிப் புலமையாளர்களாகவும் இருந்தனர். எனவே தமிழ்ப்புலமையாளர்களால் சமஸ்கிருத மொழியிலும், சமஸ்கிருத புலமையாளர்களால் தமிழ் மொழியிலும் அரிய நூல்கள் வெளிவந்து இரு மொழிகளும் வளர்ந்தன. சமஸ்கிருதத்தில் வெளிவந்துள்ள 'சங்கீத ரத்னாகரம்' நூலில் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்கள் மூலங்களாகப் பயன்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ரெங்க ராமானுஜ ஐயங்கார் தமது மொழிபெயர்ப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் காலனி ஆட்சிக்கு முன்பிருந்ததைப் போல, இன்றும் தமிழில் பி.ஏ, எம்.ஏ, முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் பிற மொழிகளையும் கற்றிருந்தால் நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன, குறிப்பாக ஆங்கிலம், ஜப்பானிய மொழி, சீன மொழி, ஜெர்மன் மொழி போன்றவற்றில் ஏதாவது ஒரு மொழியிலும் புலமை பெற்றால், மொழிபெயர்ப்பு, திட்ட மூல பணி (Project Resource person) என்று பல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. (https://www.youtube.com/watch?v=xYR7UdZttog)

அறிவியல், தொழில்நுட்பம், கணினி ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் நல்ல சம்பளம் உள்ள வேலையில் சேர்வதற்கும், வேலையில் சேர்ந்த பின், இன்னும் மேல் நோக்கி முன்னேறுவதற்கும், தொடர்ந்து புதிய படிப்புகளும் பயிற்சிகளும் கற்கின்றனர்.

அது போலவே, தமிழில் பட்டம் பெற்றவர்கள் வருமான வாய்ப்புள்ள பிற மொழிகள், தொல்லியல், சுற்றுலா, தமிழ் தொடர்புள்ள பல்துறை ஆய்வுத்திட்டங்கள் (projects) தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து, அதற்கான புதிய படிப்புகளும் பயிற்சிகளும் பெறும் போது, நல்ல வருமானம் தரும் வேலை வாய்ப்புகளுடன் வாழ்வில் முன்னேற முடியும்.

தமிழில் மட்டுமே புலமையிருந்து, 'கற்றது தமிழ் மட்டுமே' என்பதை மறந்து, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் சிக்கிப் பயணித்துக் கொண்டு, தம்மையும் தமிழ் மொழியையும் தாழ்த்திக் கொண்டு பயணிப்பவர்கள் விழிக்காத வரையில், ஊழல் அரசியலில் தமிழ்நாடு நீடிக்கும். 

அவ்வாறு நீடிப்பதால், தமிழில் மேற்கொண்ட பல்துறை ஆய்வுகள் மூலமாக, தமிழ்ப் புலமையாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் எவ்வாறு தாமதமானது? என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது.

தமிழில் வேலை வாய்ப்பபுகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உரிய ஆதரவு இன்றி அவை ஆமை வேகத்தில் முன்னேறுகின்றன. உதாரணமாக, சோம்ஸ்கி உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற நிபுணர்கள் நவீன மொழியியல் வளர்ச்சிக்கு சமஸ்கிருதத்தின் பங்களிப்பை அங்கீகரித்துள்ளதால் உலக அளவில் சமஸ்கிருத கல்வியும் அதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. உலக மொழிகளில் speech to text, text to speech etc NLP products நவீன மொழியியல் மூலமாக உருவாகி வருகின்றன. தொல்காப்பியம் அடிப்படையில் Musical Linguistics உருவாக்கவல்ல எனது கண்டுபிடிப்பை சோம்ஸ்கி அங்கீகரித்துள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html)

2013இல் எனது ஆய்வு வெளிவந்தது. ஆனால் இன்றுவரை உரிய ஆதரவில்லாததால் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கட்டம் தாமதமாகிறது.

சுமார் 30 வருடங்களுக்கு முன், Bio-friendly leather tech நுட்பம் சங்க இலக்கியங்களில் இருப்பதை சென்னை CLRI scientist சோமநாதன் தமது 2ஆவது Ph.D யில் வெளிப்படுத்தியுள்ளார். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகத்தில் அதைப்படித்து வியந்தேன். உரிய ஆதரவு கிடைத்திருந்தால், உலகில் உள்ள leather research நிறுவனங்களில் தமிழ்ப்புலமையாளர்களையும் பணியில் அமர்த்தி, அந்த தொழில்நுட்பம் marketable product ஆக வெளிவந்திருக்கும்.

பாரபட்சமினறி தாமதத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்து களையாதவரை தமிழ் படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது தாமதமாகும்.

மேலும் 10 வயது வரை தாய்மொழிவழியில் படிக்காதவர்களுக்கு மூளையில் cognitive skills தொடர்பான வளர்ச்சி குறைவு என்பதை யுனெஸ்கோ உள்ளிட்ட ஆய்வுகள் உணர்த்தியுள்ளன். (https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html)

எனவே விஞ்ஞானிகள் உள்ளிட்ட சாதனையாளர்கள் தமிழர் குடும்பங்களில் உருவாகும் வாய்ப்புகளும் குறையும்.

தமிழ் 'வேலை வாய்ப்பு இல்லா மொழி' என்ற கருத்தானது, 1970களில் ஊழல் ஆங்கிலவழி கல்வி வியாபாரத்தில் சந்தைக்காக இன்றுவரை பரப்பப்பட்டு வரும் தவறான கருத்தாகும். 

சராசரி மக்கள் தங்கள் பிள்ளைகள் சரியான cognitive skills மூளை வளர்ச்சி பெற, 5ஆவது வரை தமிழ்வழியிலும் அதன்பின் ஆங்கிலவழியில் படிக்கவைக்கலாம். அவ்வாறு 6ஆவது முதல் ஆங்கில வழியில் படிப்பவர்கள், விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கில வழியில் படித்தவர்களை விட உயர்நிலைக்கல்வியில் சிறப்பாக படிப்பதையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அது மட்டுமல்ல, தமிழ்வழிப்பள்ளியில் பயின்று இளைஞரானவர்கள் பெற்றோர் உற்றார் மீது இயல்பான அன்பு செலுத்துவது போலின்றி, ஆங்கில வழியில் பயின்றவர்கள் அன்பு செலுத்துவதில்லை, மதிப்பதும் இல்லை. மாறாக பெற்றோர் உள்ளிட்டு எவரிடமும் லாப நோக்கில் அன்பு செலுத்துகிறார்கள், லாபமில்லை எனில் அவமதிக்கிறார்கள். இது சரியா, தவறா என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

துவக்கம் முதலே ஆங்கில வழிக் கல்வியில் பயின்ற "குழந்தைகள் எல்லாம், தமிழ் மொழி, பண்பாடு, வேர்கள் அற்று, வளர்ந்து, தற்கொலை, கொலை, போதை மாத்திரை, திருட்டு போன்ற சமூக நோய்களில், அதன் காரணமாவே சிக்கி;

அதிலும் தப்பித்து உயர்ந்த படிப்பில், உயர்ந்த வேலையில் சேர்ந்த பின்;

பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தை 'நியூசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ;

அதையும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் பெற்றோர்கள் எல்லாம் எண்ணிக்கையில் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வியில்,  'சொந்த காசில் சூன்யம்' வைத்துக் கொள்ளும் போக்கில்;

தமிழ்நாடும், தமிழும், தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த 'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு.’ (‘'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட பெற்றோர்' பட்டியலில் ஜெயலலிதா? 'திராவிட பொதுவாழ்வு வியாபார குடும்ப‌ அரசியல்'  சங்கமமாகி முடிவை நோக்கி ?’; https://tamilsdirection.blogspot.com/2017/11/cognitiveskills.html)

No comments:

Post a Comment