Friday, February 10, 2017

தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (10)
'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்களுக்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் ;

உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையிலா? அழிவுபூர்வ‌ திசையிலா?


‘சுயலாப நோக்கின்றி, நேர்மையான சுய சம்பாத்தியத்துடன், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி பற்றிய அக்கறையுள்ளவர்கள் எல்லாம், மீட்சிக்கான 'சரியான' திறவுகோலை தேடி வரும் காலக்கட்டம் இதுவாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2016/09/depoliticize9.html )

'சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, தமது நிலைப்பாடுகளை மக்கள் நலன் நோக்கில் (உடல். மனம் பிறர் சாரா போக்கில்- physically & mentally independent- இருந்தது வரையில், 'பெரியார்' செய்தது போல) 'திருத்திக் கொள்ளாமல்', பழைய திசையிலேயே பயணிக்கும், 'பெரியார்' ஆதரவு கட்சிகளெல்லாம் உதிர்ந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் 'இழிவான இடம்' பிடிக்க போட்டி போடும் நிலை வந்தால் வியப்பில்லை. 'பெரியாரின்' முழு பொது வாழ்வையும், அவரின் தியாகங்களையும் கணக்கில் கொள்ளாமல், அவரைப் பற்றி 'இழிவாக', 'திராவிட உணர்ச்சிபூர்வ பாணியில்' பேசி/எழுதி வரும் 'இந்துத்வா' ஆதரவு பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், 'பெரியார்' கட்சிகள் 'நன்றி' சொல்லவேண்டும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தவறான திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கு, 'ஆக்ஸிஜன்' வழங்கி,  'உயிருடன்' நீடிக்க உதவி வருபவர்களும் அவர்களே ஆவர்.

இத்தகைய சிக்கலான சூழலில்,  தமிழக பா.ஜ.க, மேற்குறிப்பிட்ட திசையில், தமிழ்நாடு மீள உதவும் திசையில் பயணிக்கிறதா? என்ற கேள்வியும் ஆய்விற்குரியதாகும்.”; (  http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

1857 முதலாம் இந்திய விடுதலைப் போரானது வெற்றி பெற்றிருந்தால், இன்று இந்தியாவானது, சுமார் 50க்கும் அதிகமான அரசர்களின் ஆட்சிகளில் இருந்திருக்கும் என்பதை மறந்து;

1947 இந்திய விடுதலைக்குப் பின்,  ஆக்கபூர்வ தேச கட்டுமானத்தில் ( Nation Building),  இந்தியாவில்;

வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, மொழி அடிப்படைகளில் இருந்த வந்த உள் அடையாளங்கள் எல்லாம்  (Sub Identities)  எல்லாம், 'ஆக்கபூர்வ' திசையில், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன், 'இணக்கமாகும் சமூக செயல்நுட்பம்' வளர்வதற்கு தடையாக;

நேரு குடும்ப சுயநல வாரிசு அரசியல் போக்கில், 'அடையாளச் சிக்கலை', 'அரசியல் சிக்கலாக'  திரித்து, இந்தியா பயணித்தது;

அதே சூழ்ச்சி வலையில், மனரீதியில் அடிமைப்பட்டு;

அந்த உள் அடையாளங்களின் சமூக வலிமை பற்றிய அறியாமையில், தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வமாக' பயணிக்கும் இந்துத்வா ஆதரவாளர்கள் எல்லாம், தமது 'உணர்ச்சிபூர்வ' செயல்பாடுகள் மூலமாக, தமிழ்நாட்டில் 'பிரிவினை' போக்குகளுக்கு 'ஆக்ஸிஜன்' வழங்கி காப்பாற்றி வருகிறார்கள். 

மேலே குறிப்பிட்டவாறு 'உணர்ச்சிபூர்வ பரிமாற்ற எதிர்ப்பில்' ('செனோபோபியா' நோயில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழும் அளவுக்கு; https://en.wikipedia.org/wiki/Xenophobia ) ஒன்று பட்டுள்ள 'பெரியார்' ஆதரவாளர்களும் சரி, 'இந்துத்வா' ஆதரவாளர்களும் சரி, தமிழ்நாட்டில் 'தமிழர்' என்ற அடையாளமானது, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் 'ஆக்கபூர்வ' திசையில், 'இணக்கமாகும் சமூக செயல்நுட்பம்' ( Harmonising Social Mechanism) வளர்வதற்கு தடையாகவே, ஒருவருக்கொருவர் 'உதவி' பயணிக்கிறார்களா? அந்த திசையில் அறியாமையில் பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? அல்லது இந்தியாவில் தேச கட்டுமானமானது ( Nation Building) தற்சார்பு பெறுவதை சீர் குலைக்க முயலும், அந்நிய சூழ்ச்சியில் சிக்கி, பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? என்ற ஆய்வும் அவசியமாகி வருகிறது.

'தமிழர்' என்ற அடையாளத்தின் சமூக வலிமை தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட இரு சாராரின் தவறான அணுகுமுறைகள் காரணமாக;

'சமூக மூச்சுத் திணறலுக்கு' உள்ளாகி, அந்த மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க உதவிய 'ஜன்னலாக',  அந்த ' தமிழர் அடையாள' அடிப்படையில், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலமாக‌, வெளிப்பட்டபோது;

திராவிடக் கட்சிகளும், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், ஓரங்கட்டப்பட்டதற்கும்;

அந்த 'தமிழர்' அடையாள சமூக மூச்சுத் திணறலானது, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலம் வெளிப்பட்டதற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்குரியதாகும். அந்த 'ஜல்லிக்கட்டு போராட்ட ஆதரவு சக்திகள்' எல்லாம், ஆதாய அரசியலின் குவியமாகியுள்ள (Focus), சசிகலாவின் 'அரசியலை' எதிர்த்து, 'அலையாக' வளர்ந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு வளர்வது உண்மையானால், அந்த 'அலையானது', 'சுனாமியாக' வலுவாகி, உண்மையான பகுத்தறிவுக்கு விரோதமான, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு கேடயமான, 'ஆரிய - திராவிட' கருத்து கழிவினை, சுவடின்றி அழிக்கும் போக்கும் துவங்கி விட்டது.(http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.htmlஅந்த 'பெருமையானது'(?),  சசிகலா குடும்பத்திற்கும், 'பகுத்தறிவு' கண்களை மூடிக்கொண்டு அவர்களை ஆதரித்து வரும் தி.க. தலைவர் கி.வீரமணிக்கும் சொந்தமாகும்.

“தமிழ்நாட்டு அரசியலில் இப்போது நடைபெறுவது தேவாசுரப் போராட்டமே! அதாவது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே! நமது பார்வை முற்றிலும் இனநல பொதுநலப் பார்வையே - தந்தை பெரியார் பார்வையே!” - தி.க. தலைவர் கி.வீரமணி ( http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-condemns-union-government-10/slider-pf221468-273788.html )

வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, மொழி அடிப்படைகளில் இருந்த வந்த உள் அடையாளங்களின் சமூக வலிமை பற்றியும், அது வெளிப்படும் செயல் நுட்பம் பற்றியும், கவலைப்படாமல், மேற்கத்திய உலகின் 'ஆதிக்க சக்திகள்' எல்லாம், தத்தம் 'அரசியல்' சுயலாபங்களை பிரதானமாக கருதி, பயணித்து வந்த போக்கின் பாதக விளைவுகளில் ஒன்றே;

இன்று உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணங்கள் ஆகும்.

உலக அரசியலில், 'சுயநல நோக்கில்', பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல்;

இன்று உலகை அச்சுறுத்தி வரும் அனைத்து வகை ஆயுதபாணி தீவிரவாதங்களை தமது சுயநலன்களுக்காக வளர்த்தும், பின் அதே சுயநலன்களுக்காக எதிர்த்தும், வந்த மேற்கத்திய அரசுகள் எல்லாம்;

இன்று அதனால் விளைந்த, தத்தம் நாடுகளில் உள்ள மக்களின் கோபக் கனலை எதிர்கொள்ள முடியாமல், தவித்து வருகிறார்கள்.

அதன் தொடர்விளைவாக, உலகில் உள்ள அறிவுஜீவிகள் மத்தியில், 'அடையாளங்கள்' தொடர்பான ஆய்வுகளும், விவாதங்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

அந்த நோக்கில் குவாமி அந்தோணி அப்பையா என்ற அறிஞர், பிபிசி வானொலியில் (Radio 4 )  தொடர் உரை ஆற்ற உள்ளார். அது தொடர்பான தகவலானது, லண்டனில் வாழும் எனது நண்பர் தொல்காப்பியனின் உதவியால், எனது கவனத்தை ஈர்த்துள்ளது. ( This year’s BBC Reith Lecturer is Kwame Anthony Appiah, a British-born, Ghanaian-American philosopher, cultural theorist and novelist. Appiah specialises in moral and political philosophy, as well as issues of personal and political identity, cosmopolitanism and nationalism. His four lectures under the banner "Mistaken Identities" will focus on four themes: Colour, Country, Creed and Culture. They will be recorded in London, Glasgow, Accra, in Appiah’s adopted hometown of New York, and will be broadcast on Radio 4 in October and November.- After studying at Cambridge, Appiah taught at some of the world’s top universities including Yale, Cornell, Duke, and Harvard, and lectured at many other institutions across the world. In 2014 he became Professor of Philosophy and Law at New York University, where he teaches both in New York and in Abu Dhabi.
He has published widely in African and African-American literary and cultural studies. His award-winning “In My Father’s House” explores the role of African and African-American intellectuals in shaping contemporary African cultural life, which has been a life-long passion of Appiah’s. ; http://www.bbc.co.uk/programmes/articles/2sM4D6LTTVlFZhbMpmfYmx6/kwame-anthony-appiah )

மனிதர் தமக்குள்ள அடையாளங்களின் தூண்டுதல்களால் எவ்வாறு ஆக்கபூர்வமாகவும், அழிவுபூர்வமாகவும், செயல்படும் வாய்ப்புகள் உள்ளன' என்பதானது, அவரது உரையில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.
“We’ll learn how those identities play both positive and negative roles in their lives and in ours, and how we might escape some of the negatives if we understood some of the many mistakes we make about identity.” - Kwame Anthony Appiah,

தமிழ்நாட்டிலும், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்களுக்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையில் பயணிக்கிறதா? அல்லது அழிவுபூர்வ திசையில் பயணிக்கிறதா? என்ற விவாதத்தை;

திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், 'உணர்ச்சிபூர்வ' இரைச்சல்களை தவிர்த்து, முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். (http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html )


Thursday, February 9, 2017

நிமிர்ந்தது ஓபிஎஸ் மட்டுமல்ல;
தமிழ்நாட்டின் சுயமரியாதையும் கூட


‘'ஜெயலலிதா' என்ற கேடயத்தின் வலிமை பற்றிய, அந்த 'வலிமையை' இழந்து, 'அந்த கேடயத்தின் இடத்தை ஆக்கிரமிப்பதில்' உள்ள 'புதை குழிகள்' பற்றிய, 'அறியாமையில்', டிஜிட்டல் யுகத்தில் (Digital Age), "அப்போல்லோ மருத்துவமனையையும் போயஸ் தோட்டமாகவே கருதிக் கொண்டு, யாரையும் உள்ளே விட மறுத்த சசிகலாவுக்கு "சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறோம்" என்று அப்போது உறைத்திருக்க நியாயமில்லை" ( 'புதிய ஜனநாயகம்';ஜனவரி 2017) என்பதன் விளக்க உரையே, இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும்.’;( ‘'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த; 'அரசனைப் பார்த்துகைக்கொட்டி அந்தச் சிறுவன் சிரிப்பது', வாஸந்திக்கு தெரியவில்லையா?; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html )

தமிழ்நாட்டில் முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா நீதிமன்ற தண்டனை மூலம் பெங்களுருவில் சிறை சென்றவுடன், தமிழ்நாட்டில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு, ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை, தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள எவரும் மறக்க முடியாது.  ( http://www.thehindu.com/news/national/tamil-nadu/violence-erupts-in-tamil-nadu-after-jayalalithaa-conviction/article6452826.ece)

சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வர உள்ள நிலையில், அதுவரை ஆளுநர், தமிழக முதல்வர் பிரச்சினையில் முடிவெடுக்க தாமதிப்பதில், சட்டப்படி தவறில்லை என்பதையும் முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி  சொராப்ஜியும் கருத்து தெரிவித்து உள்ளார்.  ( "Governor can defer the swearing-in till the verdict of the Supreme Court,'' Sorabjee told TOI .”; http://timesofindia.indiatimes.com/india/governor-likely-in-tamil-nadu-today-but-may-bide-time-over-sasikalas-ascension/articleshow/57049809.cms )

மேலே குறிப்பிட்ட பின்னணியில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியானது, தேர்தல் கமிசனால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், உடனே முதல்வராக ஆளுநரை கட்டாயப்படுத்தவதானது, தமிழ்நாட்டின் பொதுநலனுக்கு எதிரானது ஆகாதா? சசிகலாவை ஆதரித்து வந்துள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும், தி. தலைவர் கி.வீரமணிக்கும் அது தெரியாதா?

சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை, தேர்தல் கமிசன் நிராகரித்துள்ள நிலையில், அடுத்து வரும் இடைத் தேர்தலில், ...தி.மு.கவின் சார்பில் போட்டியிட, 'பொதுச் செயலாளர்' கையெழுத்தை எவரும் போடமுடியாத இக்கட்டான நிலையில், அக்கட்சி உள்ளது.

அந்த சிக்கலை சரி செய்யாமல், எம்.எல். ஆக இல்லாத சசிகலா, 'முதல்வராகமுயற்சிப்பதானது, சட்டப்படி சரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இயற்பியலில் (Physics), வளையும் தன்மையுள்ள (Elastic)  பொருட்களின் வளையும் தன்மைக்கும், 'மீட்சி எல்லை' (Elastic Limit)  என்று ஒன்று உண்டு. அதற்கு மேலும் வளைத்தால் அப்பொருள் உடைந்து விடும்; அல்லது அந்த எல்லையை நெருங்கும் போது, மீட்சி விசையும் பெருமமாகி, தம்மை பிடித்து வைத்திருக்கும் கரங்களில் இருந்து, 'திமிறி' வெளியேறி விடவும் வாய்ப்புண்டு.

தமிழ்நாட்டில் அரசியல் இயற்பியலில்( Political Physics), 'சுயலாப' நோக்கில் ஜெயலலிதாவை,  'வளைந்து' வணங்கி வந்தவர்களில், 'தமது வளைவிற்கு' எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால்,  'திமிறி'  வெளியேறி, தி.மு.கவில் சேர்ந்து, அக்கட்சித் தலைவருக்கு 'வளைந்து' பலன் பெற்றவர்களும் இன்னும் அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

அரசியலில் 'எஜமானருக்கு' துணையாக எவ்வளவு காலம் இருந்தாலும், எஜமானரின் மறைவிற்குப் பின், 'சூழ்ச்சிகரமாக' அந்த எஜமானர் இடத்தை அந்த துணையாள் பிடித்தாலும்;

தமது 'வரை எல்லைகள்'(limitations) தெரியாமல், அந்த எஜமானரின் கட்டமைப்பை(Structure) 'வளைத்தால்', அந்த கட்டமைப்பே அந்த துணையாளின் 'சமாதி' ஆகிவிடும், என்பதை நிரூபிக்கும் வகையில், சசிகலா பயணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இயற்பியல் மீட்சியியலில் (Elasticity in Physics)  இல்லாத, அரசியல் இயற்பியல் தொடர்பான மீட்சியியலில் ( Elasticity in Political Physics)  வெளிப்பட்டுள்ளது இதுவாகும்.

காலில் விழுவதையும், ஆடம்பர பேனர்கள் வைப்பதையும் கண்டித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும், இன்றைய முதல்வர் தேசிய கொடி ஏற்றிய குடியரசு தின நிகழ்ச்சியிலும் பங்கேற்று, தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை வெறுப்பவர்களில் பலரும் ஆதரிக்கத் தொடங்கும் அளவுக்கு, 'அரசியல் நாகரீகத்துடன்', தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பயணிக்கும் திசைக்கு எதிரான,  'அரசியல் தற்கொலை' திசையில், முதல்வர் ஓபிஎஸ்ஸை அவமதித்து, சசிகலா பயணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சசிகலாவின் "சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' முயற்சியில், அரசியல் விஞ்ஞானத்தில்( Political Science)  புதிய ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் 'ஓபிஎஸ் நிகழ்வு'  ( ‘OPS PHENOMENON’ ) என்பதானது வெளிப்பட்டுள்ளது

ஜெயலலிதாவின் சமாதியில் 'தியானம்' இருந்து, பின் உலகிற்கு அறிமுகமாகியுள்ள தமிழ்க முதல்வர் ஓபிஎஸ், தமிழ்நாட்டு அரசியல் போக்கில், 'தனித்துவமான' (Unique) மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதனை கீழ்வரும் கட்டுரை நன்கு விளக்கியுள்ளது.

தமிழகக் கட்சி வரலாற்றில் உட்கட்சி ஜனநாயகம் மேலோங்கி இருப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சியில் கூட, ஜனநாயகம் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்சியிலும் கூட, இத்தகைய நெருக்கடியில் ஒருவர் வெளியில் வந்து கூட கட்சித் தலைமையை எதிர்த்தோ அல்லது கட்சிக்குள் நிலவி வரும் ஆதிக்கவாத சக்திகளை எதிர்த்தோ இப்படி பேசுவது நடவாத காரியமாகும்.

இந்த வகையில் பன்னீர்செல்வத்தின் பேச்சு ஏதோ அதிமுக-வை கைப்பற்றும் சக்திகளுக்கு எதிரானதாக மட்டுமல்லாது, பொதுவாக எந்த ஒரு அமைப்பிலும் தனி மனிதன் தீமைக்கு எதிராக செயல்படுவதன் உத்வேகத்தையும் கடமையுணர்ச்சியையும் அரசியலுக்கப்பாற்பட்டு, அற ரீதியாக நிலைநாட்டுவதாக அமைந்துள்ளது என்ற கோணத்திலும் பார்க்க வாய்ப்புண்டு.

இந்த வெளிப்படையான நிதானத்திற்குப் பிறகான உண்மை வெளிப்பாட்டிற்கு புறக்காரணங்களைக் காரணம் காட்டி, 'இவரால் தூண்டப்பட்டார்', 'ஏன் இதனை அவர் முன்னமேயே கூறவில்லை' என்று பல்வேறு விதமாக சந்தேகங்களைக் கிளப்புவது என்றும் எடுபடப்போவதில்லை. ஏனெனில் பன்னீர்செல்வத்தின் உண்மை வெளிப்பாடு இந்த ஹேஷ்யங்களையும் அரசியலுக்கே உரித்தான யூக சொல்லாடல்களையும் உடைத்து நொறுக்கியுள்ளது.

இதற்கு முன்பு பலரும் 'காலில் விழும் கட்சி', 'அடிமைகள்' 'உட்கட்சி ஜனநாயகம்' இல்லாத கட்சி என்றும் வர்ணிக்கப்பட்ட ஒரு கட்சியிலிருந்து, கேலி பேசப்பட்ட கட்சியிலிருந்து இத்தகைய போர்க் குரல் வெளிவந்திருப்பது தமிழகத்தில் செயல்படும் 'உட்கட்சி ஜனநாயகம்' இருப்பதான மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ள கட்சிகளுக்குமே பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பேட்டி என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.’
(‘ஓபிஎஸ் 'கெத்து' பேட்டியும் ஓர் உளவியல் பார்வையும்!’- முத்துக்குமார்; http://tamil.thehindu.com/opinion/blogs/ & http://tamil.oneindia.com/news/tamilnadu/we-must-prevent-the-mafia-from-capture-the-power-the-state-273736.html )’

.வெ.ரா அவர்களின் கொள்கையில் 'மயங்கி', 'பார்ப்பன எதிர்ப்பிலான தனித் தமிழ்நாடு' போதையில், 'இயற்பியல் பேராசிரியராக' பணியாற்றிபயணித்து வந்தவன் நான். அந்த பயணத்தின் போது ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் காரணமாகவே, 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வு நோக்கி, திசை திரும்பி பயணித்தேன். அந்த பயணத்தின் போக்கில், உலகின் கவனத்தை ஈர்க்க வல்ல கண்டுபிடிப்புகளை, நான் வெளிப்படுத்தியிருந்தாலும்;(http://tamilsdirection.blogspot.in/2016/08/linguistics-musical-linguistics.html )

தமிழ்நாட்டின் இன்றைய சீரழிவிற்கான கீழ்வரும் 'மூலத்தை' (Source), நான் கண்டுபிடித்ததையே, எனது கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன்.

தமிழ் இலக்கியங்கள் தொடர்பான தமது புலமையின் வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி பயணித்து, 1944இல் ஈ.வெ.ரா அவர்கள் முயற்சியில், தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, உணர்ச்சிபூர்வ 'ஆரிய ‍திராவிட' வெறுப்பு அரசியலானது, முளை விட்டு வளர்ந்து, தமிழ்நாட்டில் 'இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு' உள்ளிட்டு, சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பொதுவாழ்வை மூலதனமில்லாத வியாபாரமாக்கி, பல்லாயிரம் கோடி சொத்துக்கள் உள்ள‌ அதிபர்கள் பலர் வலம் வர காரணமானது.

தொத்து நோய் கிருமிகளிலிருந்தே,  அந்த தொத்து நோய்க்கான மருந்துகள் உருவாகின்றன. (‘Vaccines contain the same germs that cause disease. (For example, measles vaccine contains measles virus, and Hib vaccine contains Hib bacteria.) But they have been either killed or weakened to the point that they don't make you sick. Some vaccines contain only a part of the disease germ.

A vaccine stimulates your immune system to produce antibodies, exactly like it would if you were exposed to the disease. After getting vaccinated, you develop immunity to that disease, without having to get the disease first.’; https://www.cdc.gov/vaccines/vpd/vpd-vac-basics.html )

1944இல் முளைவிட்ட  அந்த நோயின் உச்சக்கட்ட வெளிப்பாடான சசிகலா நிகழ்வானது (Sasikala Phenomenon), 'ஆரிய - திராவிட' துணையுடன் (http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html ) வெளிப்பட்டுள்ளதும்;

அந்த பொதுவாழ்வு நோயினை குணப்படுத்தும் மருந்தாக, 'ஓபிஎஸ் நிகழ்வானது' (OPS PHENOMENON), அந்த நோயின் உச்சக்கட்டத்தில் வெளிப்பட்டுள்ளதும்;

தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கையூட்டும் அதிசயமாகும்.

Friday, February 3, 2017

பொருளில் உள்ள புலமை பற்றிய தமது வரை எல்லைகள் தெரியாமல் எழுதும்;
பொ வேல்சாமி  போன்ற எழுத்தாளர்களால் விளையும் சமூக கேடுகள்


Note: Due to blogger tech problems, replace ‘.in’  in the web address by ‘.com’, if the link does not open in the new window.


"சுமார் 1500 ஆண்டுகளாக தமிழ்மொழியின் இலக்கிய இலக்கணங்களை எப்படி கற்பித்து வந்தனர் என்பது இன்றுவரை புரியவில்லை. ஏனென்றால் வடமொழிக் கல்லூரிகள் செயலாற்றி வந்ததுபோல தமிழுக்கான எத்தகைய நிறுவனங்களும் செயல்பட்டதாக பதிவுகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. அதாவது அரசாங்க ஆதரவு அதற்கு இருந்ததாகத் தெரியவில்லை. (அப்படி ஏதாவது கல்வெட்டுக்கள் பட்டையங்கள் இருப்பின் நண்பர்கள் அதனை ஆதாரத்துடன் எழுதலாம்) நிலைமை இவ்வாறு இருக்கும்போது தேவாரம் பாடுவது தமிழ் வளர்ச்சி இல்லையா? என்பது போன்ற குதர்க்க கேள்விகளை சிலர் எழுப்புகின்றனர். தேவாரம் திருவாசகம் திருவாய்மொழிகள் என்பன படிப்பதற்கான நூல்கள் அல்ல, பாடுவதற்கான இசைப்பாடல்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்."  எழுத்தாளர் பொ வேல்சாமி,1 பிப்ரவரி, 2017 இல் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கருத்து.

தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை படித்ததன் மூலமே, எனது ஆய்வுகள் மூலம்,  'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' என்ற புதிய தொழில் வியாபார வாய்ப்புகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டுள்ளன. (http://musicresearchlibrary.net/omeka/items/show/2447 &  http://tamilsdirection.blogspot.com/2016/08/linguistics-musical-linguistics.html  

)

தேவாரமும், பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணமும் உலகின் கவனத்தை ஈர்க்க வல்ல அரிய 'தமிழ் இசையியல்' (Tamil Musicology) தகவல்கள் கொண்ட சுரங்கம் என்பதை, அவை தொடர்பான எனது ஆய்வு கட்டுரைகளில் வெளியிட்டுள்ளேன். ('புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்''; https://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.htmlhttp://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_9.html

 )

ஆனால் 'நாலாயிர திவ்ய பிரபந்தம்', கம்ப ராமாயாணம் உள்ளிட்ட வைணவ இலக்கியங்களில், அந்த அளவுக்கு 'தமிழ் இசையியல்' தகவல்கள் இல்லை என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெ.என்.யூ(JNU), ஐ.ஐ.டி(IIT), என்.ஐ.டி (NIT) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், முனைவர் பட்ட ஆய்வினை எவரும் துவங்கினால், அந்த ஆய்வுக்கு என்னால் இயன்ற உதவிகளையும் வழங்க இயலும். அதே போல, தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வ' போக்கிலான‌ வெறுப்பு நோயின் வளர்ச்சியும், தாம் எழுதும் பொருளில் உள்ள புலமை பற்றி, தமக்குள்ள‌ வரை எல்லைகள் (intellectual limitations) தெரியாமல் எழுதும் எழுத்தாளர்களின் வளர்ச்சியும், எந்த அளவுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது? என்பதையும் முனைவர் பட்ட ஆய்வாக மேற்கொள்ளலாம்.

தமிழ், தமிழர் தொடர்பான சான்றுகளில் இருப்பதை இருந்ததாக எழுதுவது சரி. ஆனால் இருந்து அழிந்து போன சான்றுகள், 1967-இல் முளை விட்டு, 1991 முதல் 'வீரியமாக' வளர்ந்து வரும்ஊழல் பேராசையில் மலைகளில் உள்ள கல்வெட்டுகள் உள்ளிட்ட சான்றுகள் அழிந்து வரும் நிலையில், அந்த 'ஊழல்' அழிவிலிருந்து தப்பித்து, த‌மிழ்நாடெங்கும் இன்னும் 'படியெடுத்து' ஆய்வுக்குள்ளாகாத கல்வெட்டுகளும் உள்ள நிலையில், கிடைத்த ஓலைச்சுவடிகள் முழுவதும் ஆராயப்படாத நிலையில்;

'இல்லை' என்று, காலனிய சூழ்ச்சியில் முளைவிட்டு வளர்ந்து வரும்,  'வெறுப்பு அரசியலுக்கு', 'தூபம்' போடும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எல்லாம் 'வாதவியலுக்கு' (Logic) முரணானவை ஆகும். (‘எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்’; http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html

 )

உதாரணமாக தொல்காப்பியத்தில் ஒரு குறிப்பிட்ட உலோகம் குறிப்பிடப்படவில்லை என்பதை சான்றாக கொண்டு, தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் அந்த உலோகம் இல்லை என்று முடிவு செய்ய முடியுமா?

தமிழில் இது போன்ற எழுத்தாளர்கள் எல்லாம், தாம் எழுதும் பொருளில் உள்ள புலமை பற்றி, தமக்குள்ள‌ வரை எல்லைகள் (intellectual limitations) தெரியாமலும், அவை தொடர்பான புலமையாளர்களை சந்தித்து தெளிவு பெறாமலும், எழுதும் போக்கும், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வீழ்ச்சியோடு தொடர்புடையதாகும்.

'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று எழுத்தாளர் வாஸந்தி தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டு 'அறிவு ஜீவிகளை' பார்த்து, 'அந்த சிறுவன்' கை கொட்டி 'சிரிக்கும் ஒலி' பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். 'பாரதி வழி, காந்தி வழி, பெரியார் வழி' உள்ளிட்ட 'எல்லா வழிகளும்', 'ஒரே வழியாக' சங்கமித்த பின், தமிழ்நாடானது, அரசியல் நீக்கத்தில் (Depoliticize), ஆதாய அரசியலில் தானே பயணிக்க நேரிடும்.  "அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொள்ள' பயந்து, திருக்குறள் (428) வழியில் வாழ்வதை, பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும் நேர்மையின்றி,  வாழ்ந்த/வாழும் அறிவு ஜீவிகள் எல்லாம், அதற்கு காரணமான, சமூக குற்றவாளிகள் இல்லையா? இன்று அந்த 'சமூக குற்றவாளிகளை' அடையாளம் காட்டும் 'சமூக தொண்டராக', சசிகலா வலம் வருவதில், வியப்புண்டோ? (http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html

 & ‘Do the Prime Minister & the Supreme Court witness as the ineffective spectators w.r.t the hijacking of the TN Govt?; https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/topics/70472;_ylc=X3oDMTM2aGRzdmtmBF9TAzk3MzU5NzE0BGdycElkAzU3ODU5OTAEZ3Jwc3BJZAMxNzA1MDc1OTkxBG1zZ0lkAzcwNDcyBHNlYwNmdHIEc2xrA3Z0cGMEc3RpbWUDMTQ4NjM0Nzg2NAR0cGNJZAM3MDQ3Mg-- )

அந்த 'அறிவு ஜீவிகள்' எல்லாம் எந்த காலக் கட்டத்தில் உருவானார்கள்? தமது சொந்த வாழ்க்கையிலும், பணம் ஈட்டும் வழிகளிலும், 'இழிவான' மதிப்பீடுகளுடனும், சமரசங்களுடனும், வாழ்ந்து மேல்தட்டு சுக வாழ்வுக்கு அடிமையானவர்களின் எழுத்துக்கள்/ பேச்சுக்கள்/கவிதைகள் எல்லாம், எந்த அளவுக்கு, எந்த சமூக செயல்நுட்பத்தில், தமிழ்நாட்டில் நத்திப் பிழைத்துக் கொண்டே, எழுத்தில், பேச்சில் 'வீரமாக', 'முற்போக்காக' வலம் வருபவர்களை வளர்த்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும். சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் 'எழுத்தாளர்களின்' பங்களிப்பு எவ்வளவு? என்ற ஆய்வும் அதனுடன் தொடர்புடையதாகும். தமிழ்நாட்டில் யாராயிருந்தாலும், அவர்களின் பேச்சும், எழுத்தும், அவர்கள் வாழும் வாழ்வின் அடிப்படையிலேயே, தகவல் பரிமாற்ற வலிமை (Communication strength) பெறுகின்றன, அல்லது இழக்கின்றன; குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சாதாரண மக்களிடையே. 

தமிழ் இலக்கியங்கள் தொடர்பான தமது புலமையின் வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி பயணித்து, 1944இல் ஈ.வெ.ரா அவர்கள் முயற்சியில், தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலானது, முளை விட்டு வளர்ந்து, தமிழ்நாட்டில் 'இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு' உள்ளிட்ட பெரும்பாலான எழுத்தாளர்களை ( சாதி, மத, கொள்கை பேதமின்றி) பாதித்துள்ள சமூக நோய் இதுவாகும். (‘A brief on Jayamohan’s article on EVR’; http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none.html

 ) அதாவது வெறுப்பு அரசியலில் சிக்கியுள்ள எழுத்தாளர்கள் எல்லாம், தமது பார்வைக்கு வரும் சான்றுகளின் வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, 'உணர்ச்சிபூர்வமாக', தாம் ஏற்கனவே எடுத்துள்ள முடிவிற்கு சாதகமாக பயன்படுத்தி, பின்னர் அந்த அபத்தமானது வெளிப்பட்டவுடன், அதனை எந்த அளவுக்கு அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் சந்திக்கிறார்கள்? என்பதைப் பொறுத்தே;


பொ வேல்சாமியாக இருந்தாலும், ஜெயமோகனாயிருந்தாலும், நானாக இருந்தாலும்;

அவரவர் யோக்கியதையானது அவரவர் மனசாட்சிக்கும், அவரவர் சமூக வட்டத்திற்கும் தெரியும். ஊடக செல்வாக்குள்ள 'அறிவு கோழைகள்' எல்லாம், ஊடகத்தில் அம்பலாமாகாமல் எளிதில் தப்பிக்கவும் தமிழ்நாட்டில் வாய்ப்பிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட சமூக நோயின் வளர்ச்சிப் போக்கில், சமூகத்திற்கு கேடான சிற்றின மனிதர்கள் வலிமை பெற்று, 'கேடான சமூகத் தூண்டல்' செயல்நுட்பம் ( Socially destructive Induction Mechanism) மூலம், இயல்பில் பலகீனமான மனிதர்களை தமது 'வால்களாக்கி', தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்த போக்கில், சாதி, மத, கொள்கை பேதங்களின்றி, 'வெளியில் தெரியாத சுயநல சமரசத்தில் ஒன்றி', பயணித்த தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு எவ்வளவு? என்ற ஆய்வினையும் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டதையும், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் உணர்த்தியுள்ளது.

இது தொடர்பாக, மேலும் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு:

1.    உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய தமிழ்நாடு; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html


2.    தேவநேய பாவாணர் மட்டுமின்றி, பேரா.ந.சஞ்சீவி உள்ளிட்டு தமிழ். தமிழ் இசை ஆராய்ச்சிகளில், தாம் பயன்படுத்தும் சான்றுகளின் வரை எல்லைகள்(limitations) பற்றிய புரிதல் இன்றியும், உலக அரங்கில் அது தொடர்பாக வெளிப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் பற்றிய புரிதல் இன்றியும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. June 5, 2013;’ தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும் (1)’ in font TM TTVALLUVAR)

இது போன்று, தமிழ், தமிழ் இசை போன்றவற்றை 'உயர்த்தி'க் காண்பிக்கும் 'உணர்ச்சிபூர்வ' ஆராய்ச்சிகள் காரணமாக, தமிழும், தமிழ் இசையும் உலக அரங்கில், 'கேலிக்குள்ளாகும்' ஆபத்தும் இருக்கிறது.’ ( ‘தேவநேய பாவாணர், பெரியார் ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?’; http://tamilsdirection.blogspot.com/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html

 )


3.    The Pitfalls in the Study & Translation  of the Ancient Tamil Texts (1) http://tamilsdirection.blogspot.in/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html - சுமார் 150 பக்கங்களில் நிறைவடைந்துள்ள இந்நூலின் பிரதியானது(draft), ஆங்கில புலமையுள்ள நண்பரின் உதவியுடன், பழந்தமிழ் இலக்கிய வரிகளை ஆங்கில செய்யுள் வடிவில் மொழி பெயர்த்து, நெறிப்படுத்தி, அமெரிக்காவில் உள்ள Harvard University Press சார்பில் வெளியிடும் முயற்சியும் நடைபெறுகிறது. அதில் தவறினால், சிங்கப்பூரில், எனது மகன் முயற்சியில், இந்நூல் வெளிவரும். இந்நூல் வெளிவந்த பின், ஆங்கிலம், பிரஞ்சு உள்ளிட்டு பல‌ அந்நிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்களில் உள்ள பிழைகள் தொடர்பான 'திருத்த பின்னிணைப்பு' (Appendix) வெளியிட வேண்டிய நெருக்கடியானது உணரப்படும். ('DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'; https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264


குறிப்பு:

தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ போக்குகளை எதிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் 'வினை ஊக்கியாக' (catalyst) செயல்படும் (எனது பார்வையில்) வெகு சிலரில், 'பெரியார்' கொள்கை ஆதரவாளரான திரு.பொ.முருகானந்தமும்  ஒருவராவார். அவர் எனது பார்வைக்கு உரியவைகளாக அனுப்பி வரும் பலவற்றில், மேலே குறிப்பிட்ட முகநூல் பதிவும் ஒன்றாகும். அவரைப் போன்றே லண்டனில் வாழும் - திருக்குறள் 788-இன் பொருளை செயல்பூர்வமாக வெளிப்படுத்திய-‌ தொல்காப்பியன், சிட்னியில் வாழும் மாணிக்கம் அர்ச்சுனமணி போன்ற இன்னும் பலர், இது போன்று உதவி வருவதால் தான், இது போன்ற பதிவுகளை என்னால் எழுத முடிந்தது. அவர்கள் உள்ளிட்டு எனது சமூக வட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம், எனது எழுத்திலும், பேச்சிலும் குறைகள் தென்பட்டாலும், அல்லது எனது எழுத்துக்கும், பேச்சுக்கும் விரோதமாக நான் வாழ்வதாக கருதினாலும், தயக்கமின்றி என்னிடம் தெரிவிப்பவர்கள் ஆவர். அவற்றை திறந்த மனதுடன் பரிசீலித்து, நான் என்னை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்கிறேன்; பிறர் 'தம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என்ற, சமூக ஒப்பீட்டு (Social Comparison) நோயில் சிக்கி - மற்றவர்களின் மதிப்புக்காக ஏங்கி – ‘அடிமையாக' வாழாமல், எனக்கு நானே ‘எஜமானராக’ இருந்து, இன்பங்களையும், துன்பங்களையும் 'அனுபவித்து'; (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html

 )