Thursday, March 5, 2020


                             தமிழ்ப் பகைவர்கள் யார்? (1)



மத்திய அரசு, மொழி வளர்ச்சிக்காகத் தமிழைக் காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது குறித்து தமிழ்நாட்டில் விவாதம் எழுந்துள்ளது. அது தொடர்பாக தினமலரில் வெளிவந்த கீழ்வரும் செய்தி எனது கவனத்தை ஈர்த்தது.
 
அதில் வாசகர் கருத்தாக கீழ்வரும் எனது கருத்தும் வெளியாகியுள்ளது.

மத்தியில் தி.மு. ஆண்டபோதும் சமஸ்கிருதத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது கண்டிக்காமல், இப்போது மட்டும் கண்டிப்பது சரியா? சமஸ்கிருத எதிர்ப்பு/வெறுப்பு என்பது தொடர்பான எந்த குறிப்பும் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. அது போல சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்பது போன்ற கருத்தும் இல்லை. தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பியலும், சமஸ்கிருத எழுத்துக்களின் ஒலிப்பியலும் வெவ்வேறானவையாகும். தமிழ்ப்புலவர்கள் சமஸ்கிருத நூல்கள் எழுதியுள்ளனர். வேதத்திற்கு எதிரான நூல்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன. எனவே பிராமணர்கள் மற்றும் வேதங்களின் மொழியாக மட்டுமே கருதி எதிர்ப்பது அபத்தமாகும்.

தமிழ், தெலுங்கு சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகள் தொடர்பாக எத்தனை நிறுவனங்கள் செயல்படுகின்றன? அவற்றின் நிதித்தேவைகள் என்ன? அந்நிறுவனங்களில் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன? என்ற அடிப்படையிலேயே திமுக அங்கம் வகித்த மன்மோகன் சிங் அரசாக இருந்தாலும், மோடி அரசாக இருந்தாலும், அந்தந்த மொழிகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை முடிவு செய்வார்கள். அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியில் மோடி அரசில் ஊழலுக்கு இடம் இருக்காது

இதுவரை தமிழுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் எந்த அளவுக்கு சரியாக அல்லது தவறாக செலவிடப்பட்டன? தி.மு. ஆட்சியில் உரிய விதிகள் இன்றி செம்மொழி நிறுவனம் சென்னையில் துவங்கப்பட்டு என்னென்ன குறைபாடுகள் வெளிப்பட்டன? ஆய்வுத்திட்ட நேர்க்காணல்கள் உரிய புலமையாளர்கள் இன்றி எவ்வளவு அபத்தமாக நடந்தன? என்ற விசாரணை இனியாவது நடந்து, உரியத் திருத்தங்களுடன் செயல்பட்டால் தாம், அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் நிதி தமிழுக்கு உதவும். அது போல, தமிழ் தொடர்பாக உள்ள நிறுவனங்களின் நிதித் தேவைகளையும், புதிய ஆராய்ச்சித் திட்டங்களையும் சரியான முறையில் திட்டமிட்டு உருவாக்குவதை இப்போது துவக்கினால் தான், அடுத்த பட்ஜெட்டில் தமிழுக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க முடியும். வரும் செப்டம்பருக்குள் உரிய கோப்புகளுடன் நிதித்தேவைகளை மத்திய அரசிடம் கோர வேண்டும். தமிழக எம்.பிக்ககும் அழுத்தம் தர வேண்டும். அதன்பின் அடுத்த பட்ஜெட்டில் தமிழுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் வெளிப்பட்டால் எதிர்த்துக் குரல் கொடுப்பதில் நியாயம் இருக்கும். அழுகிற பிள்ளைக்கே பால் கிடைக்கும். பால் காய்ச்சும் போதே அழத் தொடங்கினால் நிச்சயம் கிடைக்கும்.’

மேற்குறிப்பிட்டது தொடர்பாக, திண்டுக்கல் பொ.முருகானந்தம் கீழ்வரும் கேள்வியை எழுப்பினார்?

சமஸ்கிருதத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுவது திட்ட அடிப்படையில் என்றால் அதை முன் வைப்பவர்கள் கல்வியாளர்களா, மொழியியலாளர்களா, வரலாற்று ஆசிரியர்களா?”

எனது விளக்கம்:

சமஸ்கிருதம் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்களும், அவர்களின் நிதி கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் சமஸ்கிருத ஆர்வலர்களாக உள்ள கல்வியாளர்கள், சமஸ்கிருத புலமையாளர்கள், சமஸ்கிருத ஆதரவு அமைப்புகள் ஆவார்கள்.

மற்ற மொழிகள் தமிழைப் போன்றே, அல்லது அதை விட கீழாக அந்த அளவுக்கு ஆதரவுகள் இன்றி இருக்கலாம்.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இதுபோன்ற எதிர்ப்புகள் வெளிவந்ததாக தெரியவில்லை.

வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் உலக பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் பெற்ற வளர்ச்சியானது, தமிழுக்கு கிட்டவில்லை.

தமிழாயிருந்தாலும், சமஸ்கிருதமாயிருந்தாலும் இன்று செயல்பட்டில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எதையும் மூட முடியாது. தமிழை விட சமஸ்கிருதத்திற்கு கூடுதலான எண்ணிக்கையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கும், அவை முன்வைக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு மன்மோகன்சிங் ஆட்சியைப் போலவே மோடி ஆட்சியிலும் மற்ற மொழிகளை விட கூடுதலாக நிதி ஒதுக்குவதை எதிர்ப்பதால் எந்த பலனும் விளையாது.

தமிழுக்காக உள்ள கல்வி மற்றும்  ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள குறைகளைச் சரி செய்து, வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை உரிய தகுதி மற்றும் நியாயங்களுடன் கூடுதல் நிதிக்கான கோரிக்கையை ஒவ்வொரு வருடமும் செப்டம்பருக்குள் துவக்கி,   Follow Up செய்து, கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்து அவ்வப்போது உரிய அழுத்தம் கொடுத்தால், அடுத்த பட்ஜெட்டில் தமிழுக்கான நிதி ஒதுக்கீடு உயரும்.

அது போல ஒவ்வொரு மொழியினரும் விழிப்புடன் செயல்பட்டால் அந்தந்த மொழிகள் வளரும். நிதிப்பற்றாகுறை என்று துண்டு விழுவதிலும் பாரபட்சம் வெளிப்பட்டாலும் உரிய கட்டத்தில் உரிய நேரத்தில் எதிர்ப்பைத் தெரிவித்து பலன் பெறலாம். வெறுப்பு அரசியலில் பட்ஜெட் வெளிவந்தபின் வெளிப்படும் எதிர்ப்பால் பெரிய பலன் கிட்டாது.’ 

பொதுவாழ்வு வியாபாரிகளால் முன்னெடுக்கப்பட்ட முட்டாள்த்தனமான வெறுப்பு அரசியலில் தமிழ் எவ்வாறு பாதிக்கப்பட்டது? என்று ஆர்வமுள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிப்படுத்தலாம். (‘நாகசாமி தமிழ் தொடர்பாக இப்போது வெளிப்படுத்தி வரும் நிலைப்பாடுகளை எல்லாம் கருணாநிதி ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களிடம் அதை மறைத்தே பயணித்தாரா? யார் யாரை எமாற்றினார்கள்? அல்லது நாகசாமியும் கருணாநிதியும் கூட்டணியாகதமிழ்நாட்டு மக்களை எமாற்றினார்களா?’;   

அடுத்து துக்ளக் (2 மார்ச் 2020) இதழில் 'சம்ஸ்க்ருதத்துக்கான ஒதுக்கீடு குறைவே!' என்ற தலைப்பில் வெளிப்பட்ட தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின.

1.    1985-லேயே, 20 ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாஸா விஞ்ஞானி ரிக் பிரிக்ஸ், கம்ப்யூட்டர் மூலமாக உருவாகும்செயற்கை நுண்ணறிவுக்கு சம்ஸ்க்ருதம்தான் பொருத்தமான மொழிஎன்று கூறினார். இதுவரை நாஸா இந்த ஆய்வு பற்றி வாயைத் திறக்கவில்லை என்றாலும், விரைவிலேயே அது சம்ஸ்க்ருதம் பற்றி அதிரடியாக அறிவிப்புச் செய்யும் என்று கூறுகிறது பிரபல Business strategy Hub.4.2.2020.[https://bstrategyhub.com/sanskrit&is&the&best&language&for& 
artificial&intelligence&says&nasa/]. நாசா அமைப்பு தனி சம்ஸ்க்ருத ஆய்வுத் துறை வைத்திருக்கிறது. அமெரிக்கா சம்ஸ்க்ருதத்துக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைத்திருக்கிறது. சம்ஸ்க்ருதம்தான் கம்ப்யூட்டருக்குப் பொருத்தமான மொழி என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை (ஜூலை 1987). அது ஒன்றுதான் இந்த பூவுலகில் குழப்பமில்லாமல் பேசப்படும் மொழி என்றும், அதுதான் கம்ப்யூட்டருக்கு ஏற்றது என்றும் கூறுகிறது நாஸா.

2.    அமெரிக்கா தற்போது உருவாக்கி வரும் 6-வது 7-வது தலைமுறை கம்ப்யூட்டர்களை சம்ஸ்க்ருத மொழியில் தயார் செய்கிறது. அதன் பிறகு உலகில் சம்ஸ்க்ருதம் படிக்க ஒரு பெரும் கல்விப் புரட்சியே நடக்கும். ரஷ்ய அரசு பல்கலைக் கழகம், நாஸா அமைப்பு வேதம், உபநிஷதம், சுருதி, ஸ்ம்ரிதி, புராணங்கள், மஹாபாரதம், ராமாயணம் அனைத்திலும் ஆய்வு செய்கின்றன. நாஸாவிடம் 60,000 சம்ஸ்க்ருத பனையோலைச் சுவடிகள் இருக்கின்றன. ஹிந்து சமய நூல்கள் மட்டுமல்ல, ஜைன, பௌத்த சமய நூல்களும் சம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கின்றன. எனவே, சம்ஸ்க்ருதத்தை ஹிந்து சமய மொழி என்று கூறுவது தவறு. அதில் குறைவான சொற்களில் கருத்துக்களைக் கூறமுடியும். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.8.2018)

3.    ஒரு மொழியில் எவ்வளவு அதிகம் சொல்லகராதி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த மொழியை வளமான மொழி என்று கூறுகிறார்கள். சம்ஸ்க்ருதத்தைப் பற்றி எந்த அளவுக்கு நமக்கு அறியாமை இருக்கிறது என்பதை இரண்டு ஆதாரங்களின் மூலம் விளக்கலாம். ஒன்று, 1948-ல் துவங்கி இன்றுவரை வெளிவந்துள்ள 40 தொகுதிகளைக் கொண்ட சம்ஸ்க்ருத சொற்களஞ்சியத் திட்டம்.


4.    சம்ஸ்க்ருத 10278.50 கோடி சொற்கள் - ஆமாம், ஆச்சரியப்படாதீர்கள். 10 ஆயிரம் கோடிக்கு மேலான சொற்கள் - பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று சில கணிப்புகள் கூறுகின்றன. ஏன், சம்ஸ்க்ருதத்தில் இவ்வளவு மொழிவளம்? உதாரணமாக, யானையைக் குறிப்பிட 100 சொற்கள் இருக்கின்றன. அன்பை குறிப்பிட 96 சொற்கள்; தண்ணீருக்கு 70 சொற்கள்; செல்க என்று கூற 122 சொற்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் துல்லியமாகப் பொருந்தும் சொற்கள் (இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.8.2918). மற்ற மொழியில் எத்தனை சொற்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். கொரிய மொழியில் 11 லட்சம் சொற்கள்; ஜப்பானிய மொழியில் 5 லட்சம்; ஆங்கிலத்தில் 5.05 லட்சம்; தமிழில் 1.24 லட்சம்; சீன மொழியில் 86000; https://en.wikipedia.org/wiki/List_of_dictionaries_by_ number_of _words. அளவிட முடியாத அறிவுக் களஞ்சியத்தை உள்ளடக்கிய சம்ஸ்க்ருத நூல்களிலிருந்து அதன் சொல்வளத்தைக் களைந்தெடுத்து வரிசைப்படுத்தி சொற்களஞ்சியமாக்க, 1948-ல் பூனாவில் டெக்கான் கல்லூரி ஒரு பேராசையான திட்டத்தைத் துவக்கியது. அந்தத் திட்டத்தின் கீழ் மார்ச் 2019 வரை 40 தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இன்னும் அகராதிவில் தொடங்கும் சொற்களையே முடிக்கவில்லை. இது பற்றி 2010-ல் பேராசிரியர் ஜே.டி. சாதே, ‘இந்தத் திட்டத்தின் கீழ் 1948-லிருந்து 25 ஆண்டுகள் 30 சம்ஸ்க்ருத பண்டிதர்கள் 1500 நூல்களை படித்து கோடிக்கணக்கான சம்ஸ்க்ருதச் சொற்களை, சொற்களஞ்சியத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். முக்கியமான சொற்களைக் கொண்ட ஒரு கோடிக் குறிப்புக்களை எடுத்தனர். அதில் 2010 வரை 7 லட்சம் குறிப்புக்களை மட்டுமே பயன்படுத்தி 26 தொகுதிகள் வெளி வந்தனஎன்று கூறினார் (இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.10.2010).

தமிழும், சம்ஸ்க்ருதமும் சகோதர மொழிகள். எதிரிகளல்ல.’
துக்ளக்

பழந்தமிழ் இலக்கியங்களில் 'சமஸ்கிருத எதிர்ப்பு' தொடர்பான சான்றுகள் என் கண்ணில் படவில்லை. 'இனம்', 'சாதி' போன்ற தமிழ்ச்சொற்கள் எல்லாம் காலனி சூழ்ச்சியில் பொருள் திரிபுக்குள்ளாகி தமிழர்களிடையே மோதல் போக்கினை உருவாக்கிய சமூக செயல்நுட்பத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html) அது போலவே, 'சமஸ்கிருதத்தினை உயர்த்தி தமிழைக் கீழாகக் கருதும் போக்கும், தமிழை உயர்த்தி ஸ்கிருதத்தினை பகையாகக் கருதும் போக்கும், காலனி ஆட்சியால் விளைந்து தொடரும் கேடுகளே ஆகும்.

சமஸ்கிருதம் தொடர்பான மேற்குறிப்பிட்ட வியப்பூட்டும் தகவல்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு, தமிழ் தொடர்பான வியப்பூட்டும் தகவல்களை அடுத்து பார்ப்போம்.

1.    சென்னை மத்திய தோலாய்வு நிறுவனத்தில் (Central Leather Research Institute) விஞ்ஞானியாகப் பணியாற்றிய முனைவர் என், சோமநாதன் தனது தமிழார்வத்தால் இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வினைச் சுமார் 20 வருடங்களுக்கு முன் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொண்டார். அதில் பழந்தமிழ் இலக்கியங்களில் தோல் பதனிடும் தொழில் நுட்பம், தோல் இசைக் கருவிகள் பற்றிய தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளார். (http://nsomanathan.tripod.com/ ) அந்த ஆய்வின் நகல் அங்குள்ள நூலகத்தில் உள்ளது. அரசியல் 'செல்வாக்குள்ள' தமிழ் அறிஞர்கள்' 'பிடியில்' தமிழ்நாடு சிக்கியதால், இத்தகைய ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எனவே அந்த ஆய்வின் அடிப்படையில் உயிர் இணக்க (Bio-friendly) தோல் தொழில்நுட்ப/தோல் இசைக் கருவிகள் பற்றியஆய்வுகள், அதன் தொடர்ச்சியாக  'இயல்பாக' மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்தும் பொருள் உருவாக்க‌ (marketable product development) முயற்சிகளும்,  இன்று வரை தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

    என். சோமநாதனைத் தொடர்ந்து, பழந்தமிழ் இலக்கியங்களை 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வுக்கு உட்படுத்தி நான் கண்டுபிடித்து வெளியிட்டவை.

2.   உலகில் எல்லா வகை இசைகளுக்கும் பொருத்தமான உலக தாள இலக்கணம் என்று ஒன்று கிடையாது. சிலப்பதிகாரத்தில் அத்தகைய இலக்கணம் வெளிப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தாளக்கல்விக்கான கணினி மென்பொருளை உருவாக்க முடியும். (‘Percussion Grammar in Ancient Indian Music’ - International Conference on Arts & Humanities, HawaII, USA, Jan, 2006)

3. உலகில் அனைத்து இசைகளிலும் 'மெலடி'யில் அடுத்தடுத்த சுரங்களை இணைக்கும் இசை ஒலிப்பியல் நுண்கூறு இசை இழை பற்றிய கண்டுபிடிப்பானது சங்க இலக்கியங்கள் மற்றும் சிலப்பதிகாரம் ள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் வெளிப்பட்டுள்ளது. புதிதாக வளர்ந்து வரும் 'நுண்ணொலி' (Microsound) என்ற ஆய்வுத்துறையில் முக்கியப் பங்கு ஆற்ற வல்ல கண்டுபிடிப்பு இதுவாகும். (‘Musical Threads – A New Discovery in Ancient Indian Music’ - International Conference on Arts & Humanities, HawaII, USA, Jan, 2007)

‘Musical Threads’ & ‘MUXEL’ – A New Concept in Digital Music for Enhanced Aesthetics’ –  Like PIXEL in visual graphics, MUXEL in musical aural graphics, was the result of the convergence of the above discoveries with the  ‘Sruthi’ concept, and ‘MICROSOUND’.

“It (Musical Threads) sounds potentially interesting. Best wishes on your interesting research” – Curtis Roads, Professor and Chair, Media Arts and Technology, University of California.

4.    இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பது தொடர்பான கண்டுபிடிப்பு ( The logic behind the above  ‘parallel’ -applicable to all world languages,  was discovered in Tholkappiam, and published with the title ‘Musical Phonetics in tholkAppiam’ in 2013, in The journal from the International Institute of Tamil Studies)

உலகில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் 'மொழியியல' (Linguistics) சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்டதாயி' (Aṣṭādhyāyī of Pāṇini) அடிப்படையில் உருவானது (‘By teaching phonetics and grammar to the West, Sanskrit gave rise to modern linguistics’;https://www.indiapost.com/spanish-scholar-on-wests-encounter-with-sanskrit/) சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்' (Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன். 

“Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘Musical Linguistics’ “ – Prof.Noam Chomsky (Emeritus at Massachusetts Institute of Technology)

5.    உலக அளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சுருதித் தீர்மானிப்புக்கு (International Pitch Standard) மிகவும் நெருக்கமான அதிர்வு எண் மதிப்பில் சிலப்பதிகாரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுருதித் தீர்மானிப்பு        (Raga Research Seminar 1996 - Tamil Isai Sangam, Chennai)

கல்பாக்கம் அணு மின்நிலையம் விஞ்ஞானி முனைவர் சு.சீனிவாசன் அவர்கள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில், மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வு;( http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html)

6.   ஆங்கிலத்தைப் போல் சம நீளக் குறியீடாக (Fixed length code) அமையாமல், தமிழ் எழுத்து வடிவம் மாறும் நீளம் கொண்ட குறியீடாக (variable length code) அமைந்திருக்கிறது. இதன் வரலாற்றுப் பின்னணியில் தரவு அமுக்கம்(data compression)  என்ற பண்பு மறைந்திருப்பதைத் தகவல் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தமிழில் மூலத்தை எழுதிய நூலாசிரியர் யார் என்று அடையாளம் காண எழுத்துறவு கணிப்பு முறையையும்(Letter correlation method), மார்க்கோவ் செயல்முறையையும் (Markov process,)  எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் இந்த ஆய்வு விளக்கியுள்ளது.

தமிழ் மொழியின் கட்டமைப்பு - பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்:ஒரு தகவல் கோட்பாட்டு அணுகு முறை’ ( The Study of Structure – Property Relationships of Tamil: An information Theory Approach) என்ற நூல் (Rs.250; Discovery Book Palaca (P)  Ltd: Ch-78; Ph::+91 8754507070)

சமஸ்கிருதம் தொடர்பாக துக்ளக் வெளியிட்ட தகவல்கள் எல்லாம் உலக அளவில் சமஸ்கிருதம் பெற்று வரும் பிரமிப்பூட்டும் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.

ஆனால் தமிழ் தொடர்பாக வெளிப்பட்டுள்ள பிரமிப்பூட்டும் மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் எல்லாம் உரிய ஆதரவு இன்றி, அக்கண்டுபிடிப்புகள் மூலமாக தமிழ் பெற வேண்டிய வளர்ச்சியும் நத்தை வேகத்திலேயே முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் 'சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு' என்ற நோக்கில் செயல்பட்ட ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் எல்லாம் தத்தம் மனசாட்சிக்குட்பட்டு, மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் தொடர்பாக தமிழ் பெற்றிருக்க வேண்டிய வளர்ச்சியானது கெட்டதற்கு யார் காரணம்? என்ற ஆய்வினை இனியாவது தொடங்குவார்களா? இல்லையென்றால், அவர்கள் எல்லாம் 'தமிழ்ப் பகைவர்கள்' வரிசையில் இடம் பெற மாட்டார்களா?

பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட் தமது ஆய்வின்(?) மூலமாக, "தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை. இந்தத் தீண்டாமைப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது ஆரியர்க்கு முந்தைய பழந்தமிழரின் மதநம்பிக்கைகள்." என்பது போன்ற அபத்தமான முடிவுகளை வெளியிட்டுள்ளார். அவரின் ஆய்வு முடிவுகளை மறுக்காமல், கோவை செம்மொழி மாநாட்டிலும், அண்மையில் அமெரிக்காவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிலும் அவர் முக்கியத்துவம் பெற்றதானது, தமிழ்ப்புலமைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?

'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்கள் வெளிவந்தன' என்று வெளிவந்தாலும், உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும், கணிதத்திலும் இடம் பெற்ற‌ 'பறையா'வாக இருந்தாலும், வெள்ளைக்காரர்கள் என்றால் கண்டுகொள்ளமாட்டோம். அவர்கள் பிராமணர்களாக இருந்தால் மட்டுமே எதிர்த்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்வோம்;
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_13.html) 

என்றதிசையில் தமிழ்நாடு பயணித்தால், அது சரியா? 

'தமிழ்ப் பகைவர்கள்' பற்றி இணையத்தில் தேடிய போது, கீழ்வரும் நேர்க்காணல் என் கண்ணில் பட்டது

தமிழியர்’ (?) அறி.இல.அருளப்பன் அவர்களுடன் பிரபு வெங்கடேஷ் நடத்திய ஒரு நேர்காணல்.
https://www.jeyamohan.in/1314#.XmA0LKgzbIU


அந்த நேர்க்காணல் எவ்வாறு? என்பதற்கு ஓர் உதாரணம்:

"பாரதியார் நம்ம தேசிய கவிஞர்

அவரு ஆரியனைப் புகழ்ந்து தமிழை இழிவுபடுத்தி எழுதினாரு செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலேங்கிறாரு தமிழைக் கேட்டா ராத்திரியிலே காதிலே எறும்பா கடிக்குதுன்னு எவ்ளவு வெஷத்தோட சொல்றான் பாத்தீங்களா?" -   அறி.இல.அருளப்பன்
 
உணர்ச்சிபூர்வ பேச்சையும் எழுத்தையும் கேட்டு ஏமாந்தவர்கள் வளர்ந்து வந்த எனது தலைமுறையே தமிழின் தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமானது. அதன் விளைவாக இன்று வெறும் பேச்சும் எழுத்தும் செல்வாக்கிழந்து, எந்த மனிதராக இருந்தாலும் அவர் செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் தகவல் பரிமாற்றமே (communication) எடுபடும்;

என்பதானது இந்த தலைமுறையில் பிரமிக்கும் வகையில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.

புறத்தில் 'உணர்ச்சிபூர்வமா' தமிழன் என்று வெளிப்படுத்தி வருபவர்கள் எவராவது எனது சமூக பார்வையில் இடம் பெற்றால்

அவர் தமது சொந்த வாழ்க்கையில், குறிப்பாக தமது குடும்பத் திருமணங்களில், எந்த அளவுக்கு தமது சாதி அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அல்லது அதை விடுத்து செயல்பூர்வமாக 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறார்? என்பதை ஆராய்வேன்

அவர் செயல்பூர்வமாக அவர் சாதியினராக வாழ்வது வெளிப்பட்டால், அவர் என்னை மிகவும் மதித்து அன்பு செலுத்தினாலும், அவரை விட்டு விலகி விடுவேன். ஏனெனில் அது போன்ற இரட்டைவேடப் பேர்வழிகள் மூலமாகவே தமிழ்நாடும், தமிழும் சீரழிந்தது;

என்பது எனது ஆய்வு முடிவாகும். சாதி எதிர்ப்பாளராக தம்மை முன்னிறுத்துபவர்கள் தமது சாதிக்குள்ளேயே தமது குடும்பங்களின் திருமணங்களை நடத்திய பின், அதே போக்கில் வெளிச்சம் போடுவது தவறில்லையா? சாதி உணர்வற்ற தமிழராக தம்மை முன்னிறுத்துபவர்களும், அவ்வறே பயணிப்பதும் வெட்கக்கேடில்லையா?

மேற்குறிப்பிட்ட அறி.இல.அருளப்பன் யார்? என்று எனக்கு தெரியாது? எனவே அவர் 'இரட்டை வேடப் போக்கில், 'தமிழின், தமிழ்நாட்டின் பகைவராக' பயணிப்பவரா? இல்லையா? என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் தனித்தமிழ் அமைப்புகளும், தனித்தமிழ்ப் பற்றாளர்களும் எந்த அளவுக்கு செயல்பூர்வமாக‌ 'தமிழ்ப்பகைவர்களாக' பயணிக்கிறார்கள்? என்பதற்கான முகாந்திரம் இருப்பதை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

தமது குடும்பப் பிள்ளைகளுக்கு 'ஆங்கில வழிக் கல்வி', ஊரான் வீட்டுப் பிள்ளைகளுக்கு 'தமிழ்வழிக் கல்வி'  என்று பயணித்து;

தமிழ் இலக்கணத்தை,  உலக அளவிலான ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்காமல், தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற' பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா, தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்? என்ற விவாதத்திற்கான தேவையும் எழுந்துள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html) 

தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும் மேற்குறிப்பிட்ட தமிழின் 'நத்தை வேக' வளர்ச்சி பற்றி இதுவரை கவலைப்பட்டார்களா? இனியாவது விழிப்பார்களா? சமஸ்கிருத ஆர்வலர்களைப் பின்பற்றி, வெளிநாடுகளில் செயல்படும் தமிழ் இருக்கைகளை இனியாவது கண்காணிப்பார்களா? (http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html) 

பல வருடங்களுக்கு முன் 'என்கவுண்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி மூலமாக 'விகேரியஸ்' கைச்சுவை இன்பம் தரவல்ல; (http://tamilsdirection.blogspot.com/2018/02/)

அறிவுஜீவிகள் வரிசையில் இடம் பெறாமல், என்னைப் போல பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்; தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான வெளிச்சமாக. 

உணர்ச்சிபூர்வ முட்டாள்களை வளர்த்து, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் .வெ.ராவின் கண்டனத்திற்குள்ளாகி, 1967இல் ஆட்சியைப் பிடித்தது; பின் அந்த முட்டாள்களில் பலர் 'வாழ்வியல் புத்திசாலியாக' தரகர்களாகவும், அரசுநிதித் திருடர்களாகவும் வளர்ந்தது; 'அந்த' வளர்ச்சி மூலமாக தமிழ்ப்புரவலர்களாகி தமிழை முதலில்லாத பொதுவாழ்வு வியாபார மூலதனமாக்கியது; போன்றவை எல்லாம் எவ்வாறு தமிழை சுயநல அரசியலுக்குள் சிறைப்பிடிக்க உதவியது? என்ற ஆய்வுக்கான நேரமும் நெருங்கி விட்டது. 

தமிழைச் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திய போக்கே, தமிழின் வீட்சிக்கு வித்திட்டு, அந்த போக்கில் தமிழ்நாடு சீரழியும் விளைவில் முடிந்தது. எனவே தமிழ்நாட்டின் மீட்சிக்கான முயற்சிகளில், சுயநல அரசியல் சிறையில் இருந்து தமிழை விடுதலை செய்தாக வேண்டும். தமிழால் பிழைக்க வேண்டிய தேவையின்றி, சுயலாப நோக்கின்றி தமிழின் வளர்ச்சி மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டால், 'அந்த' விடுதலை சீக்கிரம் நடைபெற வாய்ப்புள்ளது.  


குறிப்பு: தமிழ் இசையியல் தொடர்பான கற்றலில், தமிழும் சமஸ்கிருதமும் பரிமாற்ற பங்கு (Complimentary role) வகித்துள்ளதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html)

'தமிழ்ப் பகைவர்கள் யார்? (2)‍ - தமக்கும், தமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கேடாகவே வாழ்பவர்கள் யார்?' ; 
 

No comments:

Post a Comment