Thursday, January 2, 2020


வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாக' வாழும் இரகசியங்கள்(4)

 

அகத்தின் மையம் புறத்தின் மையத்திற்கு அடிமையாகலாமா?






(முன் குறிப்பு:


'இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்கப்பட்ட ராஜிவ் மல்கோத்ரா- பேரா.வைத்யநாதன் பேட்டியில் இருந்த குறைபாட்டினை 'Why it may accelerate the breaking of Tamilnadu from India?' என்ற பதிவாக வெளியிட்டேன். (https://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html )  ஏற்கனவே ' The keys in ‘akam’ and ‘puRam’; The innumerable mysterious treasures in the Nature and Society’ (https://veepandi.blogspot.com/2019/10/the-keys-in-akam-and-puram-innumerable.html) என்று நான் வெளியிட்டதன் தொடர்ச்சியாக, ‘The center of the ‘akam’ and the center of the ‘puRam’; Keys to Joyful life’ என்ற பதிவினை எழுதினேன். அதன் மையக்கருத்தினை தமிழில் வெளிப்படுத்த இதனை எழுதியுள்ளேன்.)

                                                             ------------------  

குழந்தையின் கண்களும், காதுகளும், உள்ளமும் துறு துறு வென்று தம்மைச் சுற்றியுள்ளவற்றை கூர்ந்து கவனித்து, பெரியவர்களைப் பற்றிய கவலையின்றி குழந்தை வாழும்.

அவ்வாறு நாம் வாழ வேண்டுமானால், எந்த அளவுக்கு நமது உடலும், உள்ளமும் அனுமதிக்கிறதோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கைக்கான தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழ முடியும்;

கிடைக்கும் தூரத்தில் இருக்கும் 'பாதுகாப்பு மண்டிலத்தில்' (Comfort Zone) அடைக்கலமாக வாய்ப்புகள் இருந்தாலும்; நமது சொகுசு தேவைகளுக்கும் (Needs), ஈடுபாடுகளுக்கும் (Interests) நாம் அடிமையாகி, நமது 'சுதந்திரத்தினை' பலகீனமாக்கும் நோயில் சிக்காமல்.

ஸ்பினோசா அது போன்றே வாழ்ந்து மறைந்தார் என்பதை 'Spinoza - A life ' (by Steven Nadler) என்ற நூலின் மூலமாக நான் விளங்கிக் கொண்டேன்.’; 
 
(‘வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாக' வாழும் இரகசியங்கள்(1)’; http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_10.html)
 
குழந்தைகளின் இயல்பான நல்ல வளர்ச்சிக்கு பாராட்டுகள் உதவும். ஆனால் அந்த வளர்ச்சியைக் கெடுக்கும் வகையில் பாராட்டிற்கு ஏங்கும் மனநோயாளியாக அந்த குழந்தையை வளர்க்கும் பாராட்டுகள் ஆபத்தானவையாகும். அவ்வாறு வளர்ந்து சாகும் வரை பாராட்டிற்காகவும், அதற்காகவே பணத்திற்காகவும் வாழ்ந்த/வாழும் மனநோயாளிகளும் தமிழ்நாட்டில் உள்ளார்கள்.

பாராட்டுக்கள் என்பவை எல்லாம், ஏமாந்தால் நம்மை அதற்காக ஏங்கும் மனநோயாளிகளாக மாற்றி விடும்; நமக்கான ரசிகர் வட்டம் வளர்ப்பதிலேயே, நமது ஆற்றலின் பெரும்பங்கு விரயமாகும் அபாயமும் உண்டு;

என்று நம்மை எச்சரிக்கும் வகையில், பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.’; ‘வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாக' வாழும் இரகசியங்கள்(2)- புறநானூற்று வரிகளை அக நோக்கில் குவியமாக்கும் செயல்நுட்பம்?’; http://tamilsdirection.blogspot.com/2019/02/2.html
 

அத்தகையோரின் பங்களிப்பால்;


தொடர்புள்ள துறைகளில் உள்ள  புலமையாளர்கள் மத்தியில், தமிழ், தமிழ்  இசை தொடர்பான, தமது ஆய்வுமுடிவுகளை நிரூபிக்காமல், உணர்ச்சிபூர்வ ஆதரவாளர்கள் மத்தியில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் போல பேசுவதும், எழுதுவதும் ஆகிய போக்குகளின் விளைவாக;



தமிழ் இசை என்றாலே, அபத்தமான அரைகுறைச் சான்றுகள் அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக மிகைப்படுத்துபவர்கள் என்ற கண்ணோட்டமே உலகில் புலமையாளர்கள் மத்தியில் வளர்ந்துள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

நாம் வாழும் வாழ்க்கையை ஒரே நேரத்தில் நமக்காகவும், சமூகத்திற்காகவும் சமன் செய்து (Balance) வாழும்போது, நம்மையறியாமலேயே நாம் ஒரு சமூக விஞ்ஞானியாகவும் (Social Scientist) வாழும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வாழும் போது, கிடைக்கும் உள்ளீடுகள் (inputs) எல்லாம் வேறு வழியில் கிடைக்க வாய்ப்பில்லாத உள்ளீடுகளாகவும் இருக்கக்கூடும்.’

சுமார் 15 வருடங்களுக்கு முன்,சிங்கப்பூரில் ஒரு பிராமண நண்பரைச் சந்தித்தேன். அவர் முன்பு என்னுடன் பணியாற்றிய சக பேராசிரியர். பின் Non-Destructive Testing துறையில் நிபுணராகி, பல நாடுகளில் பணியாற்றி சிங்கப்பூரில் நிரந்தரமாக தமது குடும்பத்துடன் 'செட்டில்' ஆனார். உலக நாடுகளில் அவர் பணி தொடர்பாக நடந்த கூட்டங்களில் பங்கேற்றவர்கள் எல்லாம் தத்தம் தாய்மொழியினருடன் தமது தாய்மொழியில் உரையாடுவதைக் கண்ட மேற்குறிப்பிட்ட நண்பர் போன்றவர்கள் எல்லாம் தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவதைத் தவிர்த்து தமிழில் உரையாட தூண்டப்பட்டனர். அதன் தொடர்விளைவாக, தமது குடும்பப் பிள்ளைகள் எல்லாம் தமிழில் சரளமாக பேசவும் எழுதவும் தனிப்பயிற்சி கொடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.’’; ‘வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாக' வாழும் இரகசியங்கள்(3)- 'சமூக காங்கிரின்' (Social Gangrene) நோய்க்கிருமிகளிடமிருந்து தமிழ்நாடு விடுதலை?; http://tamilsdirection.blogspot.com/2019/02/3-socialgangrene-uniform-neck-tie-shoes.html

குக்கிராமங்களிலும் ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளிகள் ஊடுருவி வரும் சூழலில், இன்று தமிழ்நாட்டில் கல்லூரிகளில் படிக்கும் தமிழ்க்குடும்பப் பிள்ளைகள் பெரும்பாலோருக்கு தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாது; ஆர்வமுள்ளவர்கள் தாம் சந்திக்கும் மாணவர்களைச் சோதித்து உண்மையை அறியலாம். இதே போக்கு தொடருமானால்,இன்னும் 2 தலைமுறைகளில், நமது வாரிசுகள் எல்லாம், தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த, உலக அகதிகளாக வாழ்வதை, தவிர்க்க முடியுமா?’ (‘தமிழ்வழி மரணப் பயணம் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும், நமக்குள்ளயோக்கியதை?’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

வெளிநாட்டிலும் தமிழ் நாட்டிலும் வாழும் தமிழ்/திராவிட கட்சிகளில் உள்ளவர்களின் குடும்பப் பிள்ளைகளில் பலர் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களாக வாழும் சூழலில், மேற்குறிப்பிட்ட வெளிநாட்டில் வாழும் பிராமணர்கள், தமிழ்நாட்டில் வாழும் உயர்க்கல்வி படித்து மேலான நிலையில் வாழும் பிராமணக் குடும்பப் பிள்ளைகளில் பலர் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். 

அவ்வாறு விளம்பரமின்றி செயல்பூர்வமாக தமிழ் அடையாளத்துடன் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், பிராமணர்களாயிருந்தாலும் பிராமணரல்லாதாராயிருந்தாலும் அகநேர்மையுடன் பாராட்டு, புகழுக்கு ஏங்காமல், பணத்திற்க்காக யாரிடமும் வாலாட்டாமல் உண்மையான தன்மானத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்; என்பது எனது அனுபவமாகும்.

அத்தகையோரெல்லாம் தமது அகத்தின் மையம் புறத்தின் மையத்திற்கு அடிமையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; என்பது எனது கண்டுபிடிப்பாகும்.

ஒரு மனிதரை செயலுக்கு தூண்டுபவையாக, அம்மனிதரின் மனத்தில் உள்ள தேவைகளும், ஈடுபாடுகளும் இருக்கின்றன. ஒரு மனிதர் பிறந்து வளரும் போக்கில் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு, சமூக சூழல் உள்ளிட்ட காரணிகளின் செல்வாக்கில், அவரின் அடையாளக் கூறுகள் உருவாகும்; அவரின் வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ற மாற்றங்களுடன். (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none.html)

ஒரு மனிதரின் தேவைகளும் ஈடுபாடுகளும் அவரின் அகத்துடன் தொடர்புடையவையாகும். அவரின் அகத்தின் மையமே (the center of the ‘akam’) அவற்றின் ஊற்றுக்கண்களாகும்.

ஒரு மனிதரின் தேவைகளும் ஈடுபாடுகளும் தூண்டி அவரின் புற செயல்பாடுகள் எல்லாம் அவரின் புற வாழ்வோடு தொடர்புடையதாகும். எனவே புறத்தின் செயல்பாடுகளின் ஊற்றுக்கண்ணான புறத்தின் மையமானது (the center of the ‘puRam’) அக மையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதானது அவரின் அகவலிமையுடன் கூடியஇயல்பான வாழ்க்கையின் ஆளுமையின்  (Personality) வெளிப்பாடாகும்.

சாகும் வரை பிறரின் பாராட்டிற்காகவும், அதற்காகவே பணத்திற்காகவும் வாழ்ந்த/வாழ்பவர்கள் எல்லாம் அகவலிமையை இழந்து, புற வலிமையின் செல்வாக்கில் சிக்கியவர்களே. அவர்களின் வாழ்வில் அகத்தின் மையமானது தனது கட்டுப்பாடினை இழந்து, புறத்தின் மையத்திற்கு அடிமைப்பட்டு விடும். எனவே அத்தகைய நபர்களின் தேவைகளையும் ஈடுபாடுகளையும் அவர்களின் புற மையமே தீர்மானிக்கிறது. அந்த தீர்மானமே அகத்தின் மையத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதன் மூலமாக அந்த மனிதரின் இயல்பான தேவைகளும் ஈடுபாடுகளும் திரிந்து, அந்த திரிதலுக்கான ஊற்றுக்கண்ணாக அவரின் அகமையமானது மாற்றம் பெறுகிறது.குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் லாப நட்ட நோக்கில் நேர்மையற்ற மனித உறவுகள் அத்தகையோரின் அடையாளமாகிறது.

ஒரு நபரின் அகமையமானது திரிதலுக்குள்ளானபின், தமக்கும் தமது குடும்பத்துக்கும் ஒரு அளவு கோல், பிறருக்கு வேறு அளவுகோல் என்பது அந்த நபரின் இயல்பாகிறது. தமது குடும்பத்தைப் பாதுகாப்பாக வழிநடத்திக்கொண்டு, ஊரான் வீட்டு 'அனிதா, செங்கொடி' போன்றவர்களின் தற்கொலைகளை ஊக்குவிக்கும் சமூகக்கிருமிகள் வரிசையில் அந்த நபர் இடம் பெற, அந்த திரிதல் காரணமாகிறது. 

மனிதஇயல்பில் திரிதல்என்பது எவ்வளவு கேடான நிகழ்வு என்பதை விளங்கிக் கொள்ள, பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள 'இயல்பு' என்ற சொல் கூடுதல் வெளிச்சத்தைத் தரும்.  (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html)
 
காலனி ஆட்சியில் சிக்கி 'விடுதலை'(?) பெற்ற நாடுகளில் வாழ்பவர்கள், குறிப்பாக அதிகம் படித்தவர்கள், மேற்கத்திய வழிபாட்டுப் போக்கில் சிக்கி, 'காலனிய திரிதலில்' தமது அகமையத்தினை மேற்கத்திய திரிதலுக்கு உள்ளாக்கி சீரழியும் அபாயம் பற்றிய ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. ('காலனிய' மனநோயாளிகளும்,  'திராவிட' மன நோயாளிகளும் - தி பிரிண்டிங் ஹவுஸ், திருச்சி; ph: +91-0431-2420121; Email: tphtrichy@gmail.com;   www.theprintinghousetrichy.com)

ஒரு மனிதரின் 'இயல்பில் திரிதல்' என்பதானது, அந்த நபரின் அடையாளத்தில் நடைபெறும் திரிதலோடு எந்த அளவுக்கு தொடர்புடையது? ஒரு நபரின் அடையாளமானது அந்த நபரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றுடன் எந்த அளவுக்கு தொடர்புடையது? அதன் தொடர்ச்சியாக அக வாழ்வோடு எந்த அளவுக்கு தொடர்புடையது? அத்தகைய நபரின் ஆளுமையானது சமூகத்திற்கு எந்த அளவு நன்மை அல்லது தீமை விளைவிக்கும்? என்பது போன்ற கேள்விகளின் மூலமாகவே;

அந்த நபரின் வாழ்க்கையானது அகவலிமையுடன் கூடியஇயல்பான வாழ்க்கையா? அல்லது, அந்த நபரின் இயல்பான தேவைகளும் ஈடுபாடுகளும் திரிந்து, அந்த திரிதலுக்கான ஊற்றுக்கண்ணாக அவரின் அகமையமானது மாற்றம் பெறுகிறதா? என்ற தெளிவைப் பெற்று, உரிய மாற்றங்களுடன் தமக்கும் சமூகத்திற்கும் இயற்கைக்கும் இயைந்த இயல்பான ஆளுமையுடன் கூடியவாழ்க்கையில் பயணிக்க முடியும்.

அவ்வாறு பயணிக்கும் போது, மிகுந்த கவனத்துடன் விழிப்புணர்வுடனும் பயணிக்க வேண்டும். இயல்பில் திரிந்து பயணிக்கும் சமூக நோய்க்கிருமிகளான மனிதர்களிடம் கீழ்வரும் பாதுகாப்பு அணுகுமுறையையும் கடைப்பிடிக்க வேண்டும். 

சமூக நோய்க்கிருமிகளான மனிதர்களிடம் வெளிப்படும் சமூக அறிகுறிகள்: 'காரியம்' சாதிக்க 'போலியாக' சிரிப்பது; பாராட்டுவது; கண்டிப்பது; மேல் நிலையில் உள்ளவர்களுக்கு வாலாட்டுவது; கீழ்நிலையில் உள்ளவர்களை தமது செல்வாக்கின்(?) மூலம் வாலாட்ட வைப்பது; விவாத நாகரீகமின்றி தன்னிச்சையாக விவாத வரம்பினை விரிவாக்கி, எதிர்நிலைப்பாட்டில் உள்ளவரையும் எடைபோடும், கண்டிக்கும், இழிவுபடுத்தும் நீதிபதியாவது; என்ற போக்கில் சாகும் வரை பயணித்து, இயல்பைத் தொலைத்த கோமாளிகளாக வாழ்வது. 

எபோலா வைரஸ் நோயாளிகளை குணமாக்க முயலும் மருத்துவர்களே மிகுந்த 'தற்காப்பு' எச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான், அந்த நோய் அவர்களுக்கும் தொற்றும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும். அது போல, 'சமூக எபோலா' அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள் நமக்குப் பிடித்த 'ஆன்மீகம், பகுத்தறிவு,இந்துத்வா, முஸ்லீம், தலித்' உள்ளிட்டு இன்னும் பல முகமூடிகளுடன் நம்முடன் உறவு கொண்டாலும்,   நாம் அவர்களிடம் மிகுந்த 'தற்காப்பு' எச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான், அந்த நோய் நமக்கும் தொற்றும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும். தமிழ்நாட்டை அந்நோயிலிருந்து மீட்பதற்கும் பங்காற்ற முடியும். (http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )  

அவ்வாறு மிகுந்த கவனத்துடன் விழிப்புணர்வுடனும் தமக்கு தாமே உண்மையான எஜமானனாக இயல்பான ஆளுமையுடன்;

சாகும் வரை தொடர்ந்து உரிய மாற்றங்களுடன் இயல்பான உயிரோட்டமுள்ளஆளுமையுடன் கூடியவாழ்க்கையில் பயணிக்க முடியும்

அதன் தொடர்ச்சியாகவே தமக்கும் சமூகத்திற்கும் இயற்கைக்கும் இயைந்த வாழ்க்கையில் பயணித்து குற்ற உணர்வின்றி மரணத்தையும் தழுவ முடியும். (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html

அது மட்டுமல்ல, அந்த வாழ்க்கைப்பயணத்தில் இன்பங்களை மட்டுமின்றி துன்பங்களையும் அனுபவித்து, விளம்பரமற்ற பிரமிக்கும் வாழ்க்கையையும் கீழ்வரும் போக்கில் வாழ்வதும் சாத்தியமாகும். 

உலகமயமாக்கலில் ஊக்கம் பெற்று வரும் நுகர்வு பண்பாட்டுச் சுழலில், ஒரு மனிதரின் அகத்தின் மையத்திற்கும் புறத்தின் மையத்திற்கும் இடையிலான போராட்டம் தவிர்க்க இயலாதது ஆகும். தமது அகத்தின் மையம் புறத்தின் மையத்திற்கு அடிமையாமல் வாழ்பவர் எல்லாம் சரணடையாத வாழ்க்கைப் போராளிகள் ஆவார்கள். 

'வாழ்க்கைப் போராளிகள் துன்பங்களைச் சந்திக்கும் வேளையில் பொறுமையின் மூலமே அண்டமே நமக்கு சாதகமாக உதவ திட்டமிடுவதை உணர முடியும்; அது எவ்வாறு? என்பது நமக்கு புரியா விட்டாலும்.' ‍ - பவுலோ கொயெல்கோ

அவ்வாறு  சமூகத்திற்கும் இயற்கைக்கும் இயைந்த வாழ்க்கையில் நாம் வாழும்போது, நாம் விரும்புவது அண்டத்தின் உதவியுடன் சாத்தியமாகும்.
‘We warriors of light must be prepared to have patience in difficult times and to know the Universe is conspiring in our favor, even though we may not understand how.’; ‘When you want something, all the universe conspires in helping you to achieve it.’ - Paulo Coelho (https://en.wikiquote.org/wiki/Paulo_Coelho)


குறிப்பு:  கூடுதலாக

'திராவிடர்/தமிழர் சமூகநீல வேல் மீன் விளையாட்டு' ( Dravidar/Tamizhar Social Blue Whale Game) ஊக்குவிப்பாளர்களாக செயல்பட்டு, 'பணம், செல்வாக்கு'டன் வலம் வருபவர்களின் அடிவருடிகளாக, நமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டத்தில் வலம் வருபவர்கள் எல்லாம், இன்னும் மோசமான 'சமூகநீல வேல் மீன் விளையாட்டு' சமூக கிருமிகள் என்பதும் எனது அனுபவமாகும்.

தவறான தகவல்கள் துணையுடன், உணர்ச்சிபூர்வ சாகச போக்கில் பயணிப்பதை எதிர்த்து, அறிவுபூர்வமான விவாதங்களின் மூலம், தாய்மொழி தமிழ் உள்ளிட்ட தமிழ் வேர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தி, தமது குடும்பப் பிள்ளைகளின் அடிப்படைக் கல்வியானது தாய்மொழி தமிழில் இருப்பதை உறுதி செய்பவர்கள் மட்டுமே, பொது அரங்கில் தமிழர்களாக வலம் வர முடியும்;

என்ற சமூக சூழலை உருவாக்குவதன் மூலமே, மேலே குறிப்பிட்ட  'நீல வேல் மீன் விளையாட்டு'களின் பாதிப்புகளிலிருந்தும், தமிழ்நாடு விடுதலை அடைய முடியும்.( http://tamilsdirection.blogspot.com/2017/09/dravidartamizhar-social-blue-whale-game.html)


Also visit: ‘Spreading Blue Whale in TN; Corruption & declined Tradition as Social Catalysts’; http://tamilsdirection.blogspot.com/2017/09/spreading-blue-whale-in-tn-corruption.html 

No comments:

Post a Comment