Thursday, November 26, 2020

தமிழக பா.. செயல்பாடுகள் 2021 தேர்தலில்பூமராங்ஆகுமா? (2)


தமிழ்நாட்டின் 2021 தேர்தலானது, 1952 தேர்தலை நோக்கி பயணிக்கிறதா?

 

தமிழ்நாட்டில் 'பெரியார்' .வெ.ரா, அண்ணா மீது மதிப்பு கொண்டவர்களில், பெரும்பாலோர் இந்துமத பக்திமான்கள் ஆவார்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் நீக்கம் (Depoliticize) தொடரும் வரை, கொள்கைகளை விட, தலைவர்களுக்கே செல்வாக்கு அதிகமாகும்.

அது தெரியாமல், .வெ.ரா அண்ணா போன்றதலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவு செய்து கண்டிக்கும் போக்கில் தமிழக பா.‌.. பயணிக்கும் வரையில்,  'நோட்டா'வுடனும், 'டெபாசீட்டுடனும்' போட்டி போடும் நிலை தான் தொடரும்.

சமூகவியலில் உட்குழு(ingroup)வில் இருப்பவர்கள் எல்லாம், ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றும்குழு மனநிலையில்பயணிப்பவர்கள் ஆவார்கள்.

வெளிக்குழுவில் உள்ளவர்கள் உட்குழுவில் இருப்பவர்களை அவமதிப்பதை எதிர்ப்பார்கள்.

பிரிவினை கோரிக்கைக்காக .வெ.ராவை இழிவுபடுத்திக் கண்டிக்கும் எச்.ராஜாவும் அவரின் ஆதரவாளர்களும், இந்திய விடுதலைக்கும் முன், தமது ஆருயிர் நண்பர் .வெ.ராவின் திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரித்த, மணியம்மை திருமணம் தொடர்பாக .வெ.ராவிற்கு ஆலோசனை வழங்கிய ராஜாஜியை, .வெ.ராவைக் கண்டித்த 'பாணியில்' ராஜாஜியை இதுவரைக் கண்டித்தார்களா? இனிமேலாவது கண்டிப்பார்களா? (‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; https://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

தமக்கும் தமது குடும்பத்துக்கும் ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதி என்று பயணிப்பவர்கள் எல்லாம், தனிமனித நேர்மை வழிகாட்டியில் (individual ethical compass) இருந்து தடம் புரண்டவர்கள் ஆவார்கள்.

பொது அரங்கில் பாராட்டுவதற்கும் கண்டிப்பதற்கும் தமக்கு பிடித்த தலைவர்களுக்கு ஒரு அளவு கோல், தமக்கு பிடிக்காத தலைவர்களுக்கு வேறு அளவு கோல், என்று பயணிப்பவர்கள் எல்லாம் சமூக‌ நேர்மை வழிகாட்டியில் (social ethical compass) இருந்து தடம் புரண்டவர்கள் ஆவார்கள்.

1967இல் நடந்த ஆட்சி மாற்றத்தில், சமூக‌ நேர்மை வழிகாட்டியை 'அறிவியல் ஊழல்' மூலமாக சீர் குலைத்து, தனிமனித நேர்மை வழிகாட்டியில் இருந்து தடம் புரண்டவர்களே ஆட்சியின் அரவணைப்பில் வளர முடியும், என்பதானது எழுதப்படாத விதியானது.

மேற்குறிப்பிட்ட சமூக நோயில் அனைத்து கட்சிகளும் சிக்கியதன் விளைவாக, வெளியில் எலியும் பூனையுமாக காட்சி தந்த எதிரெதிர் முகாம்களின் தலைவர்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தின் அறிவாலயத்திலும், சசிகலா நடராஜன் குடும்பத்தில் முள்ளி வாய்க்கால் முற்றத்திலும் சங்கமம் ஆக முடிந்தது.‌  அந்த சங்கமமானது பாதிரியார் ஜெகத் கஸ்பாரின் 'திருவாசகம் சிம்பொனி'யிலும் நீடித்தது. (குறிப்பு கீழே).‌  

தேவர் ஜெயந்திக்கு பா.. தலைவர்கள் சென்ற போது, முதலில் மரியாதையை எச்.ராஜா ஏற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னர் (திராவிடக் கட்சியில் இருந்து பா..கவிற்கு சென்ற) மாநிலப் பொறுப்பாளரின் முயற்சியால் மாநிலத்தலைவர் எல்.முருகனுக்கும் மரியாதை செய்ததாகவும், படித்த பிராமணரல்லாதோர் மத்தியில் ஒரு தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது.

தமிழக பா..கவில் முன்பு மாநிலத்தலைவராக இருந்த தலித், பின்னர் பா..கவில் இருந்து வெளியேறினார். அதன்பின் தமக்கு பா..கவில் நிகழ்ந்த அவமானங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அவை உண்மையா? பொய்யா? மிகைப்படுத்தலா? என்ற கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழக பா.. ஒரு 'பிராமண சார்புக் கட்சியே' என்று ஏற்கனவே இருந்த பிம்பம் இன்னும் வலுவாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது தமிழக பா.. தலைவராக இருக்கும் எல்.முருகன் எந்த அளவுக்கு தாம் வகிக்கும் பதவிக்கு உரிய அதிகாரத்துடனும் உரிய மரியாதையுடனும் செயல்பட மூத்த தலைவர்களால் அனுமதிக்கப்படுகிறார்? என்ற யோக்கியதையானது, அவரது பதவி காலம் முடியும் போது தான் தெரிய வரும். ‌

மு..அழகிரி, சசிகலா, ஸ்டாலின் உள்ளிட்ட  திராவிட செல்வாக்கு பீடங்களுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நல்லுறவில் இருந்து கொண்டு, திராவிட ஊழல்களையும் அராஜகத்தையும் தமிழக பா.ஜ.க‌ எதிர்ப்பதானது கேலிக்கூத்தாகாதா?

'கந்த சஷ்டி கவசம்' சர்ச்சை தொடர்பாக, முதல் முறையாக, இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில் ஆத்திகத் தமிழர்களிடம் வெளிப்பட்ட ஆதரவினை புத்திசாலித்தனமாகக் கையாண்டு, 'வெளிக்குழு' என்ற சிறையில் இருந்து விடுதலையாக, தமிழக பா.. வி'ற்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. அதைக் கெடுத்துக் கொண்டு, தமிழக பா.. எவ்வாறு அரசியல் தற்கொலைப் பாதையில் பயணிக்கிறது? (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_11.html)

மோடியின் ஊழல் ஒழிப்பு வடிவேல் பாணி காமெடியாகி, மோடி பிரதமரான பின்னர், தமிழ்நாட்டில் வாக்குக்கான பணமானது பல மடங்கு அதிகரித்ததாலும், ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான கோபத்தில் சசிகலா குவியத்தில் மோடி சிக்கியதாலும், தமிழக பா..கவை நோட்டாக்கட்சியாக்கிய சமூக விசைகள் (social forces) எந்த அளவுக்கு மாறியுள்ளன? படித்த, கட்சி சார்பற்ற பிராமணரல்லோதாரிடமும், கிராமப்புற பின்னணியுள்ள கல்லூரி மாணவர்களிடமும் 2019 தேர்தலில் வெளிப்பட்ட மோடி எதிர்ப்பு அலையானது, அதற்குப் பின் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மூலமாக மோடி எதிர்ப்பு அலையானது உள்மறையாக (latent) வளர்ந்துள்ளதா? அந்த போராட்டங்கள் மூலமாக மோடி எதிர்ப்பு கட்சிகள் அம்பலமாகி பலகீனமானார்களா? பா..கவிற்கு போனசாக ஸ்டாலின் உதயநிதி தலைமையில் தி.மு.கவின் வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது எந்த அளவுக்கு வேகமாக சீர்குலைந்து வருகிறது? சசிகலாவின் விடுதலையானது ...தி.மு.வை எந்த அளவுக்கு பலகீனமாக்கும்? என்பவற்றின் தொகுவிளைவினைப் (resultant) பொறுத்தே, ...தி.மு. ஆட்சியைப் பிடிக்க உள்ள வாய்ப்புகளுக்கு தமிழக பா.. வலிவு சேர்க்குமா? கெடுதலாகுமா? என்பது தெளிவாகும்.

உதயநிதி திருச்சியில் கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப பரிவட்டம் கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள், தன் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் வைக்கவும் அனுமதிக்கவில்லை. திருவாரூரில் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், அவரை கைது கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில மணி நேரத்துக்கு பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையில், உதயநிதி கைதை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில், தி.மு..,வினர் மறியலில் (கொரொனா காலத்தில்?)ஈடுபட்டனர்.  (https://www.dinamalar.com/news_detail.asp?id=2656057)

எனது கணிப்பின்படி, வரும் 2021 தேர்தலில் உதயநிதி தி.மு.கவின் கதையை முடித்து விடுவார். .மு..அழகரி, சசிகலா சார்பில் பயணிக்கும் பா.. கூட்டணிக்கு அதனால் பலன் கிடைக்காது

எம்.ஜி.ஆர் இருந்தது வரையில் முதல்வராக முடியாத கருணாநிதி, எம்.ஜி.ஆர் மறைந்த பின் 1996லும், 2006லும் முதல்வரானதற்கு சசிகலா குடும்ப அரசியல் மீது மக்களுக்கு இருந்த கோபமானது முக்கிய காரணமாகும். சசிகலா குடும்ப அரசியல் மீது மக்களுக்கு இருந்த கோபமானது, கருணாநிதி குடும்ப அரசியல் மீது இருந்த வெறுப்பை விட அதிகமானதே காரணமாகும். மு.க.அழகிரி என்றாலே, மதுரையில் பத்திரிக்கை அலுவலகம் எரிந்து பத்திரிக்கையாளர்கள் அநியாயமாக இறந்ததே மக்களுக்கு ஞாபகம் வரும்.தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்புகளுக்கு எதிரான திசையில் 2014 முதல் தமிழக பா.ஜ.க பயணிப்பதானது தமிழ்நாட்டின் துரதிஷ்டமே ஆகும்.

2014 முதல் மு.க.அழகிரிக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமாகப் பயணித்துக் கொண்டு, தேர்தலில் வாக்குக்கு பணம் பல மடங்கு அதிகரித்து, 2ஜி குற்றவாளிகள் விடுதலையான நிலையில், ஆர்.கே.நகரில் நோட்டாவிடம் ஏன் தோற்றோம்? 2019 தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாதிரியும், சட்டசபை இடைத்தேர்தலுக்கு வேறு மாதிரியும் ஏன் வாக்களித்தார்கள்? என்று பாடம் கற்று பயணிக்காத வரையில், தமிழக பா.ஜ.கவை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது.

1952 தேர்தலை நோக்கி, தமிழ்நாட்டின் 2021 தேர்தல் பயணிக்கிறது.

இந்திய விடுதலைக்குப்பின் நடந்த 1952 தேர்தலில் திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரிப்பதாக .வெ.ராவிடம் எழுதிக்கொடுத்து அவரின் ஆதரவைப் பெற்ற கட்சிகளின் வெற்றியில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அது 1944 தொடங்கிய பாதகமான சமூகமடைமாற்றத்தின் விளைவாகும்.

தமிழ்நாட்டின் தனித்துவமான  (unique) தமிழ் அடையாளச் சிக்கலானது தீர்ந்து இந்திய அடையாளத்துக்கு இணக்கமான மென்சக்தியானது (soft power) எம்,ஜி,ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிகளில் வெளிப்பட்டது. அதனை சீர்குலைத்து, தமது ஊழல் பாதுகாப்பு கவசமாக, கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் அரசியல் செயல்பாடானது, பிரிவினை சக்திகளை தமது கட்டுப்பாட்டில் வளர்க்கும் திசையில் பயணித்தது.

ஜெயலலிதாவின் மரணம் மூலமாக கிடைத்த அரிய வாய்ப்பினை, தமிழக பா..கவின் தவறான ஆலோசனையில் மோடி அரசானது கெடுத்துக் கொண்டு அரசியல் தற்கொலைப்போக்கில் பயணித்ததன் விளைவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாக்கட்சியாகி, 2019 தேர்தலில் தி.மு. அணி எதிர்பாராத வெற்றி பெற காரணமானது. (https://tamilsdirection.blogspot.com/2020/10/ruleof-law-httpstamilsdirection.html)

திராவிட அரசியல் முன்னெடுத்த கொள்கைகள் அறிவுபூர்வமாக தோற்றுள்ள நிலையிலும் ‘என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே, ஆதாய அரசியல் வலிமையில் தி.மு.கவை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து கட்சிகளும் பயணிக்கின்றன. (https://tamilsdirection.blogspot.com/2020/08/engine.html),

மோடியின் ஊழல் ஒழிப்பு பலகீனம் காரணமாக, ஆதாய பண அரசியலில் வலிமையுடன் நீடிப்பதால், 2021 தேர்தலானது 1952 திசை நோக்கி பயணிக்கிறது. ஆனால் அதிலும் ஒரு வேறுபாடு இருக்கிறது. 1952 தேர்தலுக்குப் பின், பிரிவினைக் கட்சிகள் நோஞ்சானாகி, ஆதாய அரசியல் வலிமையில் மட்டுமே பயணிக்க நேரிட்டது.

என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே, ஆதாய அரசியலில் பயணிக்கும் கருணாநிதி, சசிகலா போன்ற குடும்ப அரசியல் கட்சிகளின் வலிமைகள் எல்லாம், மோடி அரசின் ஊழல் ஒழிப்பானது வேகமெடுத்தால், ஊசியால் குத்தப்பட்ட பலூன்கள் போல சுருங்கி விடும். பா..கவிலும் ஆட்சியிலும் உள்ள கறுப்பு ஆடுகளின் முயற்சியால் அது தாமதமாகும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

தாமதமானாலும், 1952லிருந்து 1967 நோக்கி பயணித்த திசைக்கு எதிரான திசையிலேயே இனி  தமிழ்நாடு பயணிக்கும். ஆனால் உரிய காலத்தில், தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளச் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்றால், தமிழ்நாடானது சமூக காங்கிரின் நோயில் மீட்சிக்கு வழியின்றி சிக்குவதையும் தவிர்க்க முடியாது(‘மோடியின் ஆட்சியில் இந்தியாவின் சமூக காங்கிரீனாகமாறி வரும் தமிழ்நாடு’; https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html)

அதன்பின் மாநிலக் குடும்ப கட்சியின் அல்லது நேரடியாக மத்திய அரசின் சர்வாதிகாரத்தில் முணகக்கூட வழியின்றி சிக்கும் அபாயத்தைத் தவிர்க்க முடியாது. அதன் முன்னோட்ட பரிசோதனையாகவே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சையும் மரணமும் வெளிப்பட்டது

1991 முதல் கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தனியார்ச் சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட போக்கானது, தமிழ்நாட்டின் சிவில் சமூகத்தை கேலிப்பொருளாக்கி வருகிறது.

சிவில் சமூகம் (Civil society) என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், சாதிகள், மதங்கள், மனித உரிமை, பெண் உரிமை போன்ற சமூகப் பிரிவுகளின் அடிப்படைகளிலான‌‌ அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போன்ற இன்னும் பல அமைப்புகளை.க் கொண்டதாகும். (Civil society includes charities, development NGOs, community groups, women's organizations, faith-based organizations, professional associations, trade unions, social movements, coalitions and advocacy groups.; https://www.who.int/social_determinants/themes/civilsociety/en/ )

தமிழ்நாட்டில் செல்வாக்குள்ளசிவில் சமூகமானது கோழையாக இருந்ததாலேயே, மேற்குறிப்பிட்ட தமிழக முதல்வரின் மர்மமான  மருத்துவ சிகிச்சையானது பல மாதங்கள் நடந்து, மர்மமான மரணத்தில் முடிந்தது. சம்பிரதாயங்களுக்கும் பொது ஒழுக்கத்திற்கும் கேடான வகையில் இறுதிச்சடங்கும் நடந்தது.

அவ்வாறு கோழையாக தமிழ்நாட்டின்  சிவில் சமூகம்  இனியும் நீடித்தால், அதுவே சர்வாதிகார ஆட்சியை ஏதாவது ஒரு வழியில் வரவழைத்து விடும். அந்தசமூக இயற்கையின் போக்கில் இருந்து தமிழ்நாடு தப்பிப்பது கடினமே. (https://tamilsdirection.blogspot.com/2020/10/ruleof-law-httpstamilsdirection.html)

தமிழ்நாட்டில் செல்வாக்குள்ளசிவில் சமூகமானது கோழையாக இருந்ததாலேயே, மேற்குறிப்பிட்ட தமிழக முதல்வரின் மர்மமான  மருத்துவ சிகிச்சையானது பல மாதங்கள் நடந்து, மர்மமான மரணத்தில் முடிந்தது. சம்பிரதாயங்களுக்கும் பொது ஒழுக்கத்திற்கும் கேடான வகையில் இறுதிச்சடங்கும் நடந்தது.

அவ்வாறு கோழையாக தமிழ்நாட்டின்  சிவில் சமூகம்  இனியும் நீடித்தால், அதுவே சர்வாதிகார ஆட்சியை ஏதாவது ஒரு வழியில் வரவழைத்து விடும். அந்தசமூக இயற்கையின் போக்கில் இருந்து தமிழ்நாடு தப்பிப்பது கடினமே. (https://tamilsdirection.blogspot.com/2020/10/ruleof-law-httpstamilsdirection.html)

இந்தியாவில் தமிழ்நாட்டில் தனித்துவமான போக்கில், தேசக்கட்டுமான சீர்குலைவும், தமிழக அரசின்   நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவும் பின்னிப்பிணைந்து வளர்ந்த போக்கின்  உச்சக்கட்டமே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணமானது வெளிப்படுத்திய சிக்னலாகும். (‘தமிழக பா.. செயல்பாடுகள் 2021 தேர்தலில்பூமராங்ஆகுமா? (1)’; https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_19.html)


குறிப்பு:

'திருவாகம் சிம்பொனி ஆரடோரியா' தோல்விக்கு, திருவாசக தமிழ் வரிகளே காரணமாகும்' என்ற வகையில், பின்னர் கஸ்பார் பேட்டியில் தெரிவித்துள்ளார். ([Indo-Asian News Service, Chennai, March 20, 2006, 18 March 2006 News Update Service, The Hindu and Deccan Chronicle 19 March 2006]. நேர்மையற்ற ஒரு கிறித்துவ பாதிரியார் இந்து மத புனித நூலான திருவாசகத்தை 'சிம்பொனி ஆரடோரியோ' என்ற உலகில் இல்லாத இசை வடிவத்தில் வெளியிட்டதையும், பின் அதன் தோல்விக்கும் திருவாசகத்தின் தமிழைக் குறை சொல்லியதையும், எந்த 'இந்துத்வா' ஆதரவாளரும், தமிழ் ஆதரவாளரும் கண்டித்திருக்கவில்லை என்றால்;

தமிழ்நாட்டில் தமிழர்களின் 'அகம்' சீரழிந்துள்ளதற்கு, அது வலிமையான சான்று ஆகாதா?

மேற்குறிப்பிட்ட இணைப்புகளில் உள்ளபடி, விடுதலைப்புலி பிரபாகரனால் 'பணமும், செல்வாக்கும்' பெற்ற பாதிரியார் ஜெகத் கஸ்பார், இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களின் பிரபலங்களுக்கும் நெருக்கமானவர்; பிரபாகரனைப் போலவே. அவர்களில் மனசாட்சியுள்ளவர்கள் எவராவது மெளனம் கலைத்து, ஏமாந்தது அவர்களா? கஸ்பாரா? என்று தெளிவுபடுத்துவார்களா? (https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_21.html )

Tuesday, November 24, 2020

 

தமிழ்வழிக்கல்வியின் மரண அறிவிப்பு:

காப்பாற்றப்போவது பிராமணர்களா? தமிழக பா..கவா? இந்துத்வா எதிர்ப்புக் கட்சிகளா?

 

தமிழ்வழிக்கல்வியின் மரண அறிவிப்பு நெருங்கி விட்டது.

பல வருடங்களுக்கு முன், படிக்க மாணவரில்லாத அரசுப் பள்ளிகளை மூடப் போவதாக ஜெயலலிதா அரசு அறிவித்தது. உடனே பல தமிழ் அறிஞர்கள் அதைக் கண்டித்து கூட்டாக அறிக்கையை தினமணியில் வெளியிட்டார்கள். அந்த தமிழ் அறிஞர்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் ஆங்கில வழியில் படிக்கையில், அவர்களுக்கு அரசின் முடிவை எதிர்க்கும் யோக்கியதை உண்டா? என்று நான் எழுதிய வாசகர் மடலும் தினமணியில் வெளிவந்தது. பின் அரசுப் பள்ளிகள் மூடுவதைத் தவிர்க்க, அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வியை ஜெயலலிதா அரசு அமுல்படுத்தியது. தமது குடும்பப்பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்த தமிழ்/திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு அதை எதிர்க்கும் யோக்கியதை இல்லாமல் போய்விட்டது.

அரசுப்பள்ளிகளில் இந்த ஆட்சியில் பள்ளிகளின் கட்டமைப்பும் பணி மேற்பார்வையும் பிரமிக்கும் வகையில் அதிகரித்து, மாணவர் சேர்க்கையும் முதல் முறையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தனியார்ப்பள்ளி மாணவர்களும் அரசுப்பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.

இன்று வெளிவந்துள்ள அதிர்ச்சி செய்தியானது, தமிழ்வழிக்கல்வியின், எனவே தமிழின் மரண அறிவிப்பானது, நான் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே வெளிப்பட வாய்ப்பிருப்பதை உணர்த்தியது.

முதல் ஐந்து வகுப்புகளில் ஆங்கிலவழியில் 216 மாணவர்களும், வகுப்புகள் 6 முதல் 8 வரையில் தமிழ்வழியில் 11 மாணவர்களும், தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு பஞ்சாயத்துப் பள்ளியில் படிக்கின்றனர். (“Over 216 students study in classes 1 to 5 in English medium, and 11 students study in classes 6 to 8 in Tamil medium,” said Headmaster Suresh Newman. “We limit admissions for LKG and UKG up to 100 students, because we don’t have enough teachers,” he added. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/nov/22/school-proves-its-strength-a-giant-leap-in-just-5-years-2226464.html)

நடப்பாண்டில் அரசுப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் தமிழ்வழிக்கல்வியில் பயிலும் மாணவர்கள் எல்லாம், இன்னும் ஆங்கிலவழிக்கல்வி அறிமுகமாகாத பள்ளிகளில் மட்டுமே பயில்பவர்களாக இருந்தால் வியப்பில்லை. அந்த பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி அறிமுகமாகும் போது, தமிழ்வழிக்கல்வியின் மரண அறிவிப்பு நெருங்கி விடும். நமது குடும்பப்பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக் கொண்டு, அரசைக் குறை சொல்ல நமக்கு யோக்கியதை உண்டா? தமிழின் மரண அறிவிப்புக்கு நாம் அனைவரும் குற்றவாளிகள் ஆக மாட்டோமா?

தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணமானது, 1970களில் ஊழல் வழி ஆங்கிலவழிக் கல்வி வியாபாரம் அரங்கேறிய போது துவங்கியது. இன்று தமிழ்வழிக்கல்வியின் மரண அறிவிப்பு நெருங்கி விட்டது.

குக்கிராமங்கள் வரை விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி இன்று கல்லூரி மாணவர்களில் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாதவர்கள் எண்ணிக்கையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழ் ஆர்வலர்களின் குடும்பப் பிள்ளைகளும் அதே போக்கில் தமிழ் வேரழிந்தவர்களாக இருக்கிறர்களா? இல்லையா? என்ற ஆராய்ச்சியை, அண்மையில் தமிழ்நாடு கொடி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்பங்களில் இருந்து தொடங்கலாம். (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_11.html )

தமிழ்த்தேசிய, திராவிட கட்சிகளில் உள்ள தமிழர்களின் அகவலிமையானது நோஞ்சான் திசையில் எவ்வாறு பலகீனமாகி, தமிழ்வழிக்கல்வியின் மரண அறிவிப்புக்கு முக்கிய காரணமானது? என்ற விவாதத்தினை,

எவரையும் குற்றம் சொல்லி இழிவுபடுத்தும் நோக்கமின்றி, பாடம் கற்று திருந்தும் நோக்கில், பாரபட்சமற்ற அறிவுபூர்வ விவாதத்தினை உடனே துவக்கினால், தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தைத் தடுத்து நிறுத்தலாம்.

தமிழ்வழிக்கல்வியை வீழ்த்தி, ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தினை ஊக்குவித்து வரும் ஊழல் என்பதானது நிர்வாகப் பிரச்சினை அல்ல.

ஊழல் மூலமாக கண்ணுக்கு தெரியும் அறிகுறிகளையும் தாண்டி,

ஒரு அரசின் சட்டபூர்வ நியாயத்துடனும் (legitimacy of the state), அரசியல் சக்தியானது வெளிப்படும் வடிவ அமைப்புடனும் (the patterns of political power), சிவில் சமூகத்தின் பங்களிப்பின் யோக்கியதையுடனும் (the engagement of civil society) தொடர்புகள் கொண்டதாக அரசியல் விஞ்ஞானிகள் அணுகுகின்றனர்.

தமிழ் வலிமையாக வாழ வேண்டுமானால், தமிழர்கள் வலிமையாக வாழ வேண்டும். தமிழர்களின் வலிமையானது அவர்களின் அகத்தின் வலிமையைப் பொறுத்ததாகும்.

தமிழ்நாடு ஊழலற்ற சட்டத்தின் ஆட்சியில் இருந்தால் தான், தமிழர்கள் அகத்தின் வலிமையில் புறத்திலும் வலிமையாக வளர முடியும்.

கட்சிகளின் தலைவர்களை மெளன சாட்சிகளாக்கி சமூக நேர்மை வழிகாட்டியை சீர் குலைத்து, வெறுப்பு அரசியலை மூலதனமாக்கி வளர்ந்த ஊழல் பெரும்பசிக்கு தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், மலைகள், தாது மணல், காடுகள், அச்சுறுத்தல் மூலமாக தனியார்ச் சொத்துக்கள் எல்லாம் இரையாகின அந்தப் போக்கில் தான், 1970களில் ஆங்கிலவழிக் கல்வி ஊழல் வியாபாரமானது வளர்ந்து, தமிழ்வழிக்கல்வியின், எனவே தமிழின் மரணப்பயணத்தைத் தூண்டுவித்தது.

'பெரியார்', இந்துத்வா, முஸ்லீம், தலித், தமிழ்த் தேசியம், கிறித்துவ அமைப்புகளின் தலைவர்களில் அதற்கு மெளன சாட்சிகளாகப் பயணித்தவர்கள் யார்? ஊழல் பிதாக்களுடன் நெருக்கமாகிப் பயணித்தவர்கள் யார்? பாரபட்சமின்றி அதை எதிர்த்தவர்கள் யார்? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை உணரலாம். (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_11.html )

தமிழ்வழிக்கல்வியை மரண அபாயத்தில் இருந்து மீட்பது தொடர்பாக, கீழ்வரும் கருத்தினை ஒரு பெரியார்' ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.

"அரசின் கொள்கையும், மக்கள் மனநிலையும் ஒருங்கிணைந்தாலே சாத்தியம். "

மேற்குறிப்பிட்ட கருத்து தொடர்பான எனது விளக்கம் வருமாறு:

படித்த வசதியான தமிழர்கள் தமது குடும்பப் பிள்ளைகளின் புலன் அறிதிறன் வளர்ச்சிக்காக (cognitive skills development) 5- ஆவது வரையிலாவது தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும். (https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html  ) சமூகத்தில் செயல்பூர்வமான முன்னுதாரணங்கள் வெளிப்படாமல், மக்கள் மனநிலை மாறாது. மக்கள் மனநிலை மாறாமல், அரசின் கொள்கை மாறாது. படித்த வசதியான பிராமணர்கள் அவ்வாறு முன்னுதாரணமாக பயணிக்க வாய்ப்பிருக்கிறது. அதன் மூலமாக மக்கள் மன நிலை மாறத் தொடங்கிய பின், தமிழ்த் தேசியர்களும் பெரியாரிஸ்டுகளும் வாலாகும் வாய்ப்பும் இருக்கிறது.

தாய்த்தமிழ்ப்பள்ளிகள் முதன் முதலாக தொடங்கப்பட்ட போது, அதன் அழைப்பிதழைப் பேராசிரியர் சரஸ்வதி என்னிடம் காட்டினார்கள். விடுதலைப்புலிகளின் புரவலர் அருணாச்சலம், சரசுவதி உள்ளிட்டு பலரின் பெயர்கள் தாய்த்தமிழ்ப்பள்ளியின் புரவலர்களாக அச்சிடப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரின் குடும்பப் பிள்ளைகளும் ஆங்கிலவழிக்கல்வியில் படித்தவர்கள், படிப்பவர்கள் ஆவார்கள். தாய்த்தமிழ்ப்பள்ளிகள் அரசுப்பள்ளி மாணவர்களை ஈர்த்து, அரசுப்பள்ளிகள் மாணவரின்றி மூடும் அபாயத்தைக் கூட்டின. அதற்கு மாறாக, அந்தந்த பகுதிகளில் இருந்த படித்த வசதியான தமிழ்த்தேசிய, பெரியாரிஸ்டுகள் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் (விதி விலக்கான முன்னுதாரணமாக தமிழ்க்குரிசில் குடும்பப் பிள்ளைகள் போல) தாய்த்தமிழ்ப்பள்ளிகளில் படித்திருந்தால், அரசுப்பள்ளிகளும் அந்த போக்கில் வளர்ந்திருக்கும். செயல்பூர்வமான முன்னுதாரணங்களாக, படித்த வசதியான தமிழ்த்தேசிய, பெரியாரிஸ்டுகள் குடும்பங்கள் பயணிக்காததே, தமிழ்வழ்க்கல்வியின், தமிழின் மரண அபாயத்திற்குக் காரணமானது.

தமது குடும்பப் பிள்ளைகளை குறைந்த பட்சம் அடிப்படைக் கல்வி வரையிலாவது தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்காமல், ஆங்கில வழிக் கல்வியில், படிக்க வைத்தவர்களில், 'தமிழ்ப்பற்றாளர்களாக' பொது அரங்கில் வலம் வருவபவர்களை அடையாளம் கண்ட பின்னர், எனது சமூக வட்டத்திலிருந்து அவர்களை ஒதுக்கி வாழ்ந்து வருகிறேன்; அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் மதித்து பாராட்டினாலும். (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

குழந்தைகள் பிற்காலத்தில் பெரிய அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், படைப்பாளர்களாகவும் வர வேண்டுமானால், குழந்தைப் பருவத்தில் புலன் உணர்வுகள் தொடர்புள்ள மூளை வளர்ச்சி நன்றாக நடைபெற வேண்டும். அதற்கு 10 வயது வரை அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருப்பது நல்லது என்று உணர்த்தியுள்ள உலக ஆய்வுகள் பற்றிய சான்றுகள் மேலேக் குறிப்புட்டுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. 10 வயதிற்குப்பின் ஆங்கில வழியில் படிக்க வைத்தாலும் அந்த பலன்கள் உண்டு. மாறாக விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த பலன்கள் கிடையாது..டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பெரும்பாலோர் இந்தி தாய்மொழியிலேயே பள்ளிக்கல்வி கற்று,  இந்தியிலேயே நுழைவுத் தேர்வு எழுதியவர்களா என்பது பற்றியும்,  தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், 8- ஆவதிலேயே நுழைவுத் தேர்வு பயிற்சியைத் தொடங்கினாலும், ..டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மிகக்குறைவு என்பது பற்றியும் தமிழ்நாட்டு பெற்றோர்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்ட வேண்டும்.

இந்த ஆய்வுகளும், விவாதங்களும்  தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் பார்வைக்குச் செல்லுமானால், முதலில் அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளவை சரியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

உறுதிப்படுத்தியபின், தங்கள் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத் தாய்மொழி வழியில் படிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பெற்றோர்கள் மத்தியில் அப்படிப்பட்ட ஆர்வம் வெளிப்பட்டுள்ளதை அறிந்தவுடன், சென்னையில் புகழ் பெற்ற 'பத்மா சேஷாத்திரி' போன்ற கல்விக் குழுமங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழி, தெலுங்கு வழி, இந்தி வழி என்று 5ஆம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியும், 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வியும் இருக்குமாறு வகுப்புகள் துவங்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் குடும்பப் பிள்ளைகள் அடிப்படைக் கல்வியைத் தமிழ்வழியில் படிக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் வழியில் பிராமணரல்லாத படித்த பெற்றோர்கள் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள். அதன்பின் 'தமிழ், தமிழுணர்வு, பகுத்தறிவு, திராவிட'க் கட்சித் தலைவர்களும் முக்கிய நபர்களும் தங்கள் குடும்பப் பிள்ளைகளையும் தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள். அந்த போக்கு கிராமங்களிலும் பரவ, தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களில் படிக்க மாணவரின்றி மூடப்பட்ட/மூடப்பட்டு வரும் ஆயிரகணக்கான அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாக செயல்பட ஆரம்பிக்கும். தமிழின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்படும். (https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

மேற்குறிப்பிட்ட எனது பதிவானது பிராமணர்களில் 'கருத்துவாக்கத் தலைவர்களாக‌ - opinion leaders' ஆக பயணிப்பவர்களின் பார்வைக்கு போனால், பிராமணர்கள் தமிழ்வழிக்கல்வியை மரண அபாயத்தில் இருந்து காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. கூடுதலாக, எல்.முருகன் மற்றும் அண்ணாமலை பார்வைக்கு போகும் போது. கோவாவில் உள்ள பா.. போல, தாய்மொழிக்கல்வியை செயல்பூர்வமாக தமிழக பா.. ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக தமிழ்நாட்டில் பேச்சை விட செயலுக்கே தகவல் பரிமாற்ற வலிமை அதிகமாகும்.

எனவே தமிழ்வழிக்கல்வியை மரண அபாயத்தில் இருந்து மீட்கும் முயற்சியில் தமது குடும்பப்பிளைகளை குறைந்தபட்சமாக ஆரம்பக்கல்வி வரையிலாவது தமிழ்வழியில் படிக்க வைத்தவர்களே முன்னணியில் இருக்க வேண்டும். அவ்வாறு படிக்க வைக்காதவர்களில் மனம் வருந்தி பொது மன்னிப்பு கேட்பவர்களை மட்டுமே பின்னணியில் இடம் பெற அனுமதிக்கவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் கொடுத்த அழுத்தம் காரணமாக, மோடி அரசு முன்னெடுத்துள்ள புதிய கல்விக் கொள்கையில் உள்ள தாய்மொழிவழிக்கல்வி முயற்சியை ஆதரிக்காதவர்கள் எல்லாம், தமிழ்வழிக்கல்வியானது மரணப்படுக்கையில் இருப்பதால், தமிழ்ப் பகைவர்கள் ஆக மாட்டார்களா?

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அகில இந்திய அமைப்புகளில் மாநிலக் கிளைகள் எல்லாம் ஒரே மாதிரியில் இல்லை. அந்தந்த மாநிலத்தின் தனித்தன்மைகளுக்கு ஏற்ற வகையில் செயல்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் காங்கிரசும் பா..கவும் ஓரணியில் நின்று காவிரிக்கு குரல் கொடுப்பது போல, தமிழக பா..கவும் காங்கிரசும் செயல்படவில்லை. தாய்மொழிவழிக்கல்வி பிரச்சினையில் கோவா ஆர்.எஸ்.எஸ் பிளவுபட்டுள்ளது. தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸ் தாய்மொழிவழிக்கல்வி பிரச்சினையில் அந்த அளவுக்கு ர்வம் வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை.

வெறுப்பு அரசியலில் சிக்காமல்,, ஆக்கபூர்வ அரசியலில் தாய்மொழிவழிக்கல்வி உள்ளிட்ட தமிழ்நாட்டின் நலன்களில் அக்கறை காட்டுமாறு ஆர்.எஸ்.எஸ், 'பெரியார்' கட்சிகள், தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் குடும்ப அரசியல் தலைமையில் சிக்காத பா.ஜ.க போன்ற‌ கட்சிகளைத் தூண்டும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.

குறிப்பு:

மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரிப்பிரச்சினையில் கர்நாடக பா..கவும், கர்நாடக காங்கிரசும் ஒரணியில் நிற்கும் வலுவுள்ள கட்சிகளாக தம்மை செயல்பூர்வமாக நிரூபித்து வருகிறார்கள். மகராட்டிர மாநிலத்தில் வேலை வாய்ப்பில் மகராட்டிரர்களுக்கே முன்னுரிமை கோரிக்கையை அம்மாநில பா.. ஆதரிக்கிறது. கோவாவில் தாய்மொழிவழிக்கல்வியை ஆதரித்த பா.. தமது ஆட்சியில் அதை சரியாக அமுல்படுத்தவில்லை என்ற காரணத்தால், பா.. உடைந்து விட்டது. பா.. காங்கிரஸ் போன்ற தேசியக்கட்சிகளில் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதானது அந்தந்த மாநிலக் கட்சியில் வலிமையைப் பொறுத்தது ஆகும். தமிழ்நாட்டில் பா.., காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளும் எவ்வாறு நோஞ்சான் கட்சிகளாகப் பயணிக்கின்றன? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘தமிழ்நாட்டில் நோஞ்சான் கட்சிகளுடன் நேசமாகும் மத்தியில் ஆளும் கட்சிகள்? தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, இந்தியாவிற்கும் நல்லதல்ல; https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html  )

கருணாநிதிக்கும், (சசிகலா) நடராஜனுக்கும் மு..அழகிரிக்கும் நெருக்கமான தமிழக பா.. தலைவர்கள் 2014 முதல் .வெ.ராவையும் அண்ணாவையும் இழிவுபடுத்தி வந்தார்கள்அதற்கு எல்.முருகனும் அண்ணாமலையும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் நலன்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற துணிச்சலை அறிவித்து அதை செயல்பூர்வமாகவும் நிரூபிக்கத் தொடங்கியுள்ளார்கள். பா.., காங்கிரஸ், தி.மு. ...தி.மு. உள்ளிட்ட எல்லா கட்சிகளிலும் உள்ள முரண்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் சாதகமான கூறுகளை எல்லாம் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியும் சாத்தியமாகும்.