Thursday, September 12, 2019


'தமிழ் தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும் பாரதிதாசனும் (3)


அறிவுபூர்வமாக விமர்சிப்பதில், பாரதிக்கு ஒரு நீதி? பாரதிதாசனுக்கு வேறு நீதியா?



அண்மையில் எனது பார்வைக்கு வந்த கீழ்வரும் பாரதியின் கருத்து எனது கவனத்தினை ஈர்த்தது.

பிராமணரல்லாதோர்என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து கொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது; எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன. ‘பிராமணரல்லாதார்என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு, இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்...

பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும் 

இது போன்ற ன்னும் பல சான்றுகளை முன் வைத்து;

"மேற்கண்ட ஆதாரங்களால் 1916 முதல் 1921 வரை (அதாவது அவர் சாகும்வரை) பாரதியார் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தும், பார்ப்பனியத்தை ஆதரித்தும் வந்துள்ளார் என்பதை அறியலாம்."

என்ற முடிவினை, ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்என்ற நூலில் வாலாசா வல்லவன் வெளிப்படுத்தியுள்ளார். (தமிழ்க் குடியரசு பதிப்பகம், 14/12, மியான் முதல் தெரு, சேப்பாக்கம், சென்னை - 600 005; பேசி: 9444321902)

பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கம் தொடர்பாக பாரதி முன்வைத்த சான்றுகளை மறுக்காமல், ‘சுப்புரத்தினம்' என்ற தனது பெயரை 'பாரதிதாசன்' என்று மாற்றிக்கொண்டு, பாரதி புகழ் பாடியது சரியா? அது தொடர்பாக, அறிவுக் கண்களை மூடிக்கொண்டு பாரதிதாசன் புகழ் பாடுவதும் சரியா?

‘'அண்ணதுரையா எனக்கு பொற்கிழி கொடுத்தார்?' என்ற தலைப்பில், 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட தொடர் கட்டுரைகளை இன்று வெளியிட‌, பாரதிதாசன் பிரியர்களில் எவருக்காவது  துணிச்சல் இருக்கிறதா? அதே போல ஜீவாவைக் கண்டித்து , 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட கட்டுரையை வெளியிட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களில் எவருக்கும் துணிச்சல் இருக்கிறதா? அண்ணாவும், ஜீவாவும் அந்த காலக்கட்டத்தில், பாரதிதாசனைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களையும், அதில் சேர்த்து வெளியிடுவார்களா?

பாரதிதாசன் தொடர்பாக இன்றுவரை நீடித்து வரும் மேலே குறிப்பிட்ட இருட்டடிப்பானது, பாரதியார் படைப்புகளுக்கு நிகழவில்லை;

அறிவுநேர்மையில் பாரதிதாசன் பிரியர்களை விட, பாரதியின் பிரியர்கள் மேம்பட்டவர்களா? என்ற ஆய்வுக்கு வழி வகுத்து.

பாரதிதாசன் பிரியர்கள் எல்லாம் பாரதியை விமர்சிப்பது போலவே, பாரதிதாசனையும் விமர்சிக்க முடியாத அளவுக்கு, 'அந்த' இருட்டடிப்பு நீடித்து வருகிறதா? .வெ.ராவைப் பிரபாகரன் ஆதரவாளர்கள் விமர்சிப்பது போலவே, பிரபாகரனையும் விமர்சிக்க முடியாத அளவுக்கு, 'பிரபாகரன் பிம்பத்திற்கு' எதிரான உண்மைகள் இருட்டடிப்பில் நீடிப்பதற்கும், 'அந்த' பாரதிதாசன் தொடர்பான இருட்டடிப்பிற்கும் வேறுபாடு உண்டா?(‘ 'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (2); 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' பாரதிதாசனின் பங்களிப்பு ?’; 

'திராவிடர்' என்ற சொல் தொடர்பான 'பொருள் திரிபு' சூழ்ச்சியில் .வெ.ரா அவர்கள் சிக்கிப் பயணித்ததையும்;

"தாம் பயன்படுத்தும் சொல்லிற்கான பொருளை தாம் விரும்பியவாறு 'பொருள் திரிதலுக்கு' (Semantic distortion) உட்படுத்தி .வெ.ரா அவர்கள் பேசினார், என்பதற்கு அவரின் ஒலிப்பதிவுகளும், எழுதினார் என்பதற்கு அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரைகளும் சான்றாக உள்ளன. உதாரணமாக;

'ஆரியம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிக்காதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது'

என்பது .வெ.ரா கொடுத்துள்ள விளக்கங்களில் ஒன்றாகும்." என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘'ஆரியம்' திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளும், 'திராவிடம்' திசையில் பயணிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும்’; 

எனவே "திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு", திராவிடர் இயக்கம் பயணிக்கிறது;

என்று பாரதியார் முன்வைத்த கருத்து சரியே ஆகும்.

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, தமிழைப் பற்றி உயர்வாக கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய பாரதிதாசன், 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று அறிவித்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்த .வெ.ராவிற்கு, அவரின் நிலைப்பாடு தவறு என்று அறிவுபூர்வமாக விளக்கி, .வெ.ராவை நல்வழிப்படுத்த பாரதிதாசன் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்

அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், .வெ.ராவின் அந்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக கண்டித்து, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' எதிராக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்

அவ்வாறு தமிழை இழிவுபடுத்தியவருடன் பாரதி நட்பாக இருந்திருப்பாரா? தமிழ்ப் பற்றில் பாரதிக்கு இருந்த நேர்மையானது, பாரதிதாசனிடம் இருந்ததா? பாரதி போற்றிய 'இந்திய தேசியத்தை' எதிர்க்காமல், 'திராவிட நாடு' பிரிவினையை ஆதரித்துக் கொண்டே, பாரதியை பாராட்டியது போலவே;

தமிழை இழிவு செய்த .வெ.ரா அவர்களை எதிர்க்காமல், பாரதிதாசன் .வெ.ரா புகழ் பாடினாரா? இது போன்ற போக்குகள் பாரதியிடம் வெளிப்பட்டதுண்டா? காந்தியின் நிலைப்பாடு தவறு என்று தெரிந்ததும், பாரதி காந்தியை கண்டித்து, துணிச்சலாக கருத்து வெளியிட்டவர் இல்லையா?

என்பது போன்ற அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

அறிவுபூர்வமாக விமர்சிப்பதில்,  பாரதிக்கு ஒரு நீதி? பாரதிதாசனுக்கு வேறு நீதியா? என்பது போன்ற கேள்விகள் எல்லாம், அத்தகைய விவாதங்களை இனியும் தாமதப்படுத்த அனுமதிக்காது


குறிப்பு: பாரதி தொடர்பாக 1916 முதல் 1921 வரை வாலாசா வல்லவன் முன்வைத்த சான்றுகளை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், கீழ்வரும் காணொளியில், 'பெரியார்' ஆதரவாளர் பேரா.கருணானந்தம் பாரதியை 'பார்ப்பனீய எதிர்ப்பாளராக' அடையாளம் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment