Thursday, February 27, 2020


தமிழ் இசை ஆராய்ச்சியில் உள்ள படுகுழிகள் (pitfalls) பற்றிய எச்சரிக்கை



தமிழிசை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இளம் ஆராய்ச்சியாளர் Vijay SA, vijeeth@gmail.com என்னுடன் மேற்கொண்ட மடல் உரையாடலை அவரின் அனுமதியுடன் இங்கு வெளியிடுகிறேன்.

---------------------------------------------------



விஜய் எனக்கு எழுதிய மடல்

I have attached my small work on வட்டப்பாலை, that is i tried to
tabulate the நாற்பெரும்பண்கள், சாதிவேறுபாட்டால் 16 பண்களாக பெருகுதல் via அகநிலை  புறநிலை அருகியல் பெருகியல், 
 using Excel.

For full info, Pls get these 2 books ;

1) இசைத்தமிழின் உண்மை வரலாறு - PTR கமலத்தியாகராசன்


2) "கருணாமிர்த சாகரம் - சுருக்கத் திறனாய்வு” - அமுதா பாண்டியன்



To Start with, see the table in Page 59 of இசைத்தமிழின் உண்மை வரலாறு
 (PTR) he refers to a table from another book, தமிழிசை இலக்கண மரபு
 (Salem Jayalakshmi) those pages also attached above.

வட்டப்பாலையை கொண்டு, பண்டிதர் அருகியல் பெருகியல் அகநிலை புறநிலை என்ற நாலு வகை சாதிகளால், நாற்பெரும் பண்கள் 16 வகைகளாக பெருகுவதாக பண்டிதர் கூறியுள்ளார், (கருணாமிர்த சாகரம் பக்கம் - 730 ) மொத்தம் 16 வட்டப்பாலைகளை வரைந்து காட்டியுள்ளார். அதே படங்களை அமுதா பாண்டியனும் தனது புத்தகம் பக்கம் 100 இல் வரைந்து, அதற்குறிய தற்கால ராகங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

நான் அதைக்கொண்டு excel sheet தயார் செய்துள்ளேன். அதில், PTR
கமலத்தியாகராசன் கூறியுள்ளது போல், ஹரிகாம்போதி, அனுமத்தோடி, சங்கராபரணம் ஆகிய பண்கள் திரும்பத்திரும்ப வருகின்றன. இதைத்தான், PTR சொன்னதை செய்து பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன் என அன்று தொலைபேசியில்
குறிப்பிட்டேன்.

இதற்கும், சுரத்தீர்மானிப்பு (Pitch Standard) க்கும் அல்லது அதிர்வெண் (frequency)க்கும் தொடர்பு இல்லை, இது சுரநிலைகளை அதன் மாத்திரைகள் கொண்டு கணக்கிடுவது மட்டுமே. அந்த அம்சங்களில் PTR பிழை செய்திருக்கலாம் (அதை தாங்கள் சுட்டிக்காட்டினால் மிக்க நன்றி) ஆனால் வட்டப்பாலை கணக்கீடுகளில் அவர் சொன்னதுபோல் ஒரே பண்கள் திரும்பத்திரும்ப வருகின்றன என்பது உறுதியாகின்றது. இதே கருத்தை சேலம் ஜெயலட்சுமியுமே அவர் புத்தகத்தில் ஒத்துக்கொண்டுள்ளார் ஆனால் அவர், மாத்திரைகளை மாற்றினால் நிறைய பண்கள் கிடைக்கும் என சொல்லிவிட்டு கடந்துவிடுகிறார், அது எப்படி என விளக்கவில்லை 

(இவை போக, அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் ஆகிய நான்கும், மேற்கத்திய இசையில், Soprano Tenor Alto Bass (SATB) என்று பண்டிதர் சொல்கிறார்(கருணாமிர்த சாகரம்  பக்கம் 10 & 899) இவை நான்கும், குரல் நிலைகள்(Voice Range) என்பதாகவே Western Classical Textbooks சொல்கின்றன. ஆனால் இவை எப்படி ”அகநிலை புறநிலை அருகியல் பெருகியல்” ஆகிய பண்வகுக்கும் முறைமைகள் ஆகின்றன எனவும் புரியவில்லை)

That being said, என் நிலையில் எந்த மாற்றமும்மில்லை. இவற்றை நான்
சொல்லிவிட்டதால், என் தமிழிசை அறிவு எவ்விதத்திலும் உயர்ந்துவிடவில்லை,


நான் கற்கவேண்டியது கடலளவு மலையளவு என்பதில் மாற்றமில்லை. எனவே தொடர்ந்து கற்பேன். மேற்சொன்னதில் பிழையிருப்பினும் சுட்டவும்..

-----------------------------------------------  

எனது பதில் :


உங்களின் உழைப்பைப் பாராட்டுகிறேன்.


1.          7 சுரங்கள் 12 சுரநிலைகள்; ச - ப, ச - ம முறையில் 25 சுருதிகள் கிடைக்கும்.  அதில் 22 ஒரு குழுவாக தனித்து இருப்பதற்கு நியாயம்  இருக்கிறது. அந்த கணக்கீடு முறையை 'Ancient Music Treasures- Exploring for New Music Composing ' என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளேன். 
(https://www.amazon.com/ANCIENT-MUSIC-TREASURES-EXPLORING-COMPOSING/dp/9811411336)


2. ஒரு பண்ணிற்கு (உதாரணமாக, உங்கள் அட்டவணையில் உள்ள  படுமலைப்பாலை) உள்ள  சுரங்களை, எந்த சான்றுகளின்    அடிப்படையில் அடையாளம் கண்டார்கள்? என்பதை நீங்கள்   குறிப்பிட்டுள்ள நூலாசிரியர்கள் விளக்கவில்லை.    விளக்கியிருந்தால் தெரிவிக்கவும். நான்   தெரிந்து கொள்கிறேன்.     இன்னொரு நூலாசிரியரின் கருத்து சான்றாகாது. சிலப்பதிகாரம்       உள்ளிட்ட இசை தொடர்பான சான்றுகள் உள்ள நூல்களில் இருந்து  எவ்வாறு அந்த முடிவைப் பெற்றார்கள்?
என்று விளக்கியுள்ளார்களா?


3. தமது யூகம் என்றால், யூகத்திற்கான அடிப்படைகளை   தெளிவுபடுத்த வேண்டும். யூகம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால், ஏற்றுக்கொள்ள வேண்டும்.


மேற்குறிப்பிட்டதை தெளிவுபடுத்திக் கொள்ளாமல், அவர்களின்    ஆய்வு முடிவுகளை விவாதிப்பதில் பலன் இல்லை.


இசை ஆராய்ச்சியில் உரிய சான்றுகளின் அடிப்படையில் ஒன்றை முன்வைக்க வேண்டும். அந்த சான்றுகளின் அடிப்படையில்   அது சரியா? என்று முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர்    தான், அந்த ஆய்வு முன்னேற வேண்டும்.

---------------------------------------------

நான் விஜய்க்கு எழுதிய மடல் :


இந்த ஈமெயில் உரையாடலை ஒரு பதிவாக எனது blog-இல் வெளியிட விரும்புகிறேன்; தமிழ் இசை ஆராய்ச்சியில் உள்ள படுகுழிகள் (pitfalls)பற்றிய எச்சரிக்கையாக.

எனது பதிவில் தங்களின் பெயரையும் தங்களின் ஈமெயிலையும் குறிப்பிட்டால், தமிழ் இசை ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்.

அன்புடன்,

செ.அ.வீரபாண்டியன்

-----------------------------------------------------------

விஜய் எனக்கு அனுப்பிய பதில்:



எனது பதிவை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் சார்! உங்களை எனது இசை ஆசான்களில் ஒருவராகத்தான்
பார்க்கிறேன்! மாணவன் எழுதியதை ஆசிரியர் கேட்டால் மாணவனுக்கு நிறைய மகிழ்ச்சியே!

என் பெயரை Vijay SA, vijeeth@gmail.com என குறிப்பிடலாம்

நன்றி சார்,

விஜய்

-------------------------------------------------------

நான் விஜய்க்கு அனுப்பிய மடல்:


நன்றி. இளம் தமிழிசை ஆய்வாளர்களுக்கு நல்ல முன்மாதிரியாக (Role model) நீங்கள் வளர வேண்டும். அதற்கான உதவிகளை நான் புரிவேன்.

கீழ் வரும் தவறுகளுக்கு உள்ளாகாமல், அறிவுநேர்மையுடன் நான் பயணிப்பதே, எனது ஆய்வுகளின் வெற்றிகளின் இரகசியமாகும்.


1. நம் கண்ணில் படும் ஒரு ஆய்வு முடிவானது, ஆய்வாளரின் யூகமா? அல்லது சான்றுகளின் அடிப்படைகளிலா?

2. அவர் பயன்படுத்திய சான்று நம்பத்தகுந்தவையா? நம்பத்தகுந்தவை என்றாலும், அந்த சான்றின் வரை எல்லைகள் (limitations) யாவை? அந்த புரிதலின்றி மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவு பெறப்பட்டதா?

3. மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவிற்கு முரணாக ஏற்கனவே ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கிறதா? அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, உரிய சான்றுகளின் அடிப்படையில், வாதக்குறைபாடுகள் இன்றி மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவு பெறப்பட்டதா?

4. தமிழிசை உணர்ச்சிபூர்வ ஆர்வலர்களின் பாராட்டுதல்களையும் உதவிகளையும் பெற வேண்டும் என்ற சுயநல நோக்கில், மனசாட்சியை அடகு வைத்து, முந்தைய முயற்சிகளை இருட்டில் தள்ளி, தம்மைப் பற்றிய பெரிய பிம்பத்தை உருவாக்க மேற்குறிப்பிட்ட தவறுகளுடன் நாம் வலம் வருகிறோமா?

‘உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது; தமிழ் இசைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?’ ; http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_7.html

Pitch Problems in Indian Classical Music (1)’ ; https://musicdrvee.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html


குறிப்பு: 
ஆராய்ச்சியில் தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகளைப் புறக்கணித்து, ஆதரவாக அபத்தமான சான்றுகளை முன்நிறுத்தி, தமக்குள்ள செல்வாக்கின் மூலம் அதனைச் சரியென்று வலியுறுத்துபவர்கள் எல்லாம்,  தமது விடைக்கு ஏற்ற வகையில் கணக்கை சரி செய்யும் முட்டாள்கள் ஆவார்கள். அந்த தவறானது, தமிழ் மற்றும் தமிழிசை தொடர்பான துறைகளில் அரங்கேறுவதால்,  புலமையாளர்கள்   மத்தியில் தமிழ் மற்றும் தமிழிசை தொடர்பான ஆய்வுகள் எல்லாம் கேலிப்பொருளாகி வருகின்றன. அது தொடர்பான எனது அனுபவங்களையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். எனது ஆய்வுகளுக்கு 'அறிவுபூர்வ இடிப்பாராக' உள்ளவர்களையே மதித்து, என்னை வளர்த்துக் கொண்டு வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றிக்கான இரகசியங்களில் அடங்கும்

மேற்கத்திய Equal Temperament- சிலப்பதிகார வட்டப்பாலையாக ஆபிரகாம் பண்டிதர் அடையாளம் கண்டது எவ்வாறு தவறாகும்? என்று 1996 முதல் கட்டுரைகள் புத்தகம் மூலமாக வெளியிட்டு வந்துள்ளேன். கர்நாடக இசை ராகங்களை தமிழிசையாக, 'களவாடிய இசையே கர்நாடக இசை' என்ற திசையில் பயணிப்பதன் அபத்தங்களையும் வெளியிட்டுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2446) 

ஓரு ஸ்தாயியில்தானத்தில்- Octave- 7 சுரங்கள் விரிந்து 12 சுரநிலைகள் ஆகின்றன. உலகில் எந்த இசைக்குமான சுரங்களை மேற்குறிப்பிட்ட‌ 12 லிருந்து எவ்வாறு தேர்ந்தெடுப்பது? என்பதை, அந்தந்த இசைக்கான இலக்கணவிதிகள் வழிகாட்டும். தமிழிசையில் 12 சுரநிலைகள் வட்டப்பாலையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கர்நாடக இசையில் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய 7 சுரப்பெயர்களும், , ரி, , , , த, நி என்ற 7 சுரங்களுடன் நிலையாக (Static) அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் தமிழிசையில் அவ்வாறு நிலையாக இன்றி, இசை இயக்கத்தன்மையில் (Dynamic) தேர்ந்தெடுக்கப்பட்ட பண்ணில் அந்த வரிசையில் இடம் பெறும் சுரங்களுக்கான பெயர்களா,
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி தாரம் என்ற 7 சுரப்பெயர்களும்? சிலப்பதிகாரத்தில் ('குரல் குரலாக' என்று தொடங்கி) மூன்று வகையிலான 'ஏழ் பாலை'களின் பெயர்கள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன? என்பது போன்ற இன்னும் பல இது போன்ற கேள்விகளுக்கான ஆய்வுகள் எல்லாம், மேலே குறிப்பிட்ட குறைபாடுகளில் சிக்காத, ண்மையான உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் (Passion)  உழைக்கும் இளம் தமிழிசை ஆராய்ச்சியாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. 

Our strength to pursue our passions to the ultimate victory will depend on our personal social circle, the most precious asset deciding the nature of our relation to the society & nature. Can we escape from experiencing the curse in this life and in the next life through our genes, by damaging the society and the nature?

‘My passions and my discovery of nature as the sources of music and dance from the ancient Tamil texts, blessed me with a new life journey to identify the right persons for my new social circle, that included birds, trees, etc and inanimate objects.

When you are extremely happy due to unforeseen positive development like winning a gold medal or birth of a child in normal delivery, etc, your face and body language will radiate so much happiness that even strangers (even if they were in dull mood) around you (who may not know you or the reason) can sensitize your happiness and feels energized partly reflecting in their face and body language. 

During my walk both in the morning and evening, some times during winds, I used to witness the up and down rhythmic moving branches with leaves in matching rhythmic movements in the trees (paripAtal 17; 10-20). It just reminded me the radiating happiness mentioned above.’

No comments:

Post a Comment