Thursday, February 13, 2020

கோவை சாதி ஒழிப்பு மாநாடு



ரஜினியைக் கண்டித்து, மனுநூல் எரிப்பு, தீர்மானங்கள் அறிவுபூர்வமானவையா?



அண்மையில் கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நீலச்சட்டை பேரணியும் சாதி ஒழிப்பு மாநாடும் நடைபெற்றன. திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.. கட்சி தெகலான்பாகவி, தனியரசு எம்.எல்.., பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன், ஆனைமுத்து, திருமுருகன் காந்தி, தமிழ்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், ஆதிதமிழர் பேரவை அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காத நடிகர் ரஜினிகாந்த், தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை வன்மையாக கண்டிப்பதுடன், இனி இத்தகைய பேச்சுக்களை அவர் தொடரக் கூடாது என்பன உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அம்பேத்கர், பெரியார் வழியில் மனுநூல் எரிப்பு போராட்டங்கள் வருகிற மே மாதம் 21-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும். (https://www.maalaimalar.com/news/state/2020/02/10100739/1285181/Anti-Caste-Conference-resolution-against-Rajinikanth.vpf
)

தொல் திருமாவளவன் கட்சியில் முக்கிய பொறுப்பிலும், தி.மு. எம்.பியாகவும் இருக்கும் ரவிக்குமார், “பெரியார் தலித்துகளின் எதிரி என நான் சொல்ல வரவில்லை. தலித்துகள் தனது எதிரி என பெரியார்தான் சொல்லியிருக்கிறார்,"(‘பெரியார்இடைநிலைச்சாதியினரின் பிரதிநிதியா? ஜூன் 14, 2007 — Valarmathi https://vinaiyaanathogai.wordpress.com/2007/06/14/) என்ற வகையில் அபத்தமான வாதங்களைத் தொடர்ந்து முன் வைத்து வருகிறார்

.வெ.ராவை இழிவு செய்யும் சில இந்துத்வா ஆதரவாளர்களுக்கு கருவியாக. (‘பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், .வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’; http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html)

ரவிக்குமாரின் கருத்தை ஏற்று தொல் திருமாவளவன், .வெ.ரா அவர்களை 'தலித் விரோதி' என்று அறிவிப்பாரா? அல்லது ரவிக்குமாருக்கு புத்தி சொல்லி தெளிவு ஏற்படுத்துவாரா? அல்லது இரண்டும் கெட்டானாக தொல் திருமா பயணிக்கிறாரா? இவை பற்றியெல்லாம் கவலைப்படாமல், 'பெரியார்' கட்சிகள், தொல் திருமாவுடன் கூட்டு சேர்ந்து பயணிக்கிறார்களா? என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.


உலக அளவில் இழிவானதைக் குறிக்க 'நீக்ரோ' என்ற சொல்லானது பயன்பட்டு வந்தது. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, அந்த சொல்லினை இன்று யாரும் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக 'பறையா' என்ற சொல்லைப் பயன்படுத்தி, இன்று கணிதத்திலும் 'பறையா' இழிவான பொருளில் இடம் பெற்றுவிட்டது. அந்த அநீதியை நான் கண்டுபிடித்து 2016 முதல் எதிர்த்து வருகிறேன். (‘Can the ancient Tamil word ‘paRiah’ be rescued from the misuse in the western world?’’; https://tamilsdirection.blogspot.com/2016/09/can-ancient-tamil-word-pariah-be.html) அது தெரியாமல், டி.எம்.கிருஷ்ணா எழுதிய நூலைப் பாராட்டியவர்களின் வரிசையிலும் தொல் திருமா இடம் பெற்றுள்ளார். (http://tamilsdirection.blogspot.com/2020/02/normal-0-false-false-false-en-us-x-none.html) கோவை சாதி ஒழிப்பு மாநாட்டிலும் அதனைக் கண்டித்து எவரும் பேசியதாகவும், தீர்மானம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை. 

.வெ.ரா அவர்கள் எதையும், யாரையும் புகழ்வதும், கண்டிப்பதும் அவரது சமூக பயணத்தில் இடம் பெற்ற தனித்துவமான செயல்நுட்பம்(mechanism) ஆகும். காந்தியை அவரின் மரணத்திற்கு முன் கடுமையாக கண்டித்ததும், மரணமடைந்த காந்தியை வானளாவ புகழ்ந்ததும், அதன்பின் அவர் படத்தை எரித்தல், காந்தி பொம்மையை உடைத்தல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்ததும் முரண்பாடல்ல, என்பது அந்த செயல்நுட்பத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே விளங்கும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.html) 

'.வெ.ரா தலைமையில் நடந்த போராட்டங்கள் எல்லாம் தமக்கு தூண்டுகோலாக இருந்தன' என்று அம்பேத்கர் தெரிவித்தது உள்ளிட்ட, .வெ.ராவிற்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த நெருக்கமான தொடர்புகள் பற்றி, 1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களில் நான் படித்திருக்கிறேன். 'குடிஅரசு' இதழ்களையும், அம்பேத்கர் தொகுப்பு நூல்களையும் மூலமாகக் (Sources) கொண்டு, அந்த நெருக்கமான தொடர்புகள் மற்றும் .வெ.ரா பற்றி அம்பேத்கர் தெரிவித்த கருத்துக்களையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால், .வெ.ராவை 'தலித் விரோதியாக' சித்தரிக்கும் அபத்தங்கள் எல்லாம் முடிவுக்கு வரும்.

தமிழ்நாட்டில் இன்றும் எந்த பிரச்சினைக்கும் மாணவர்கள் போராட்டம் நடந்தால் பாதிக்கப்படுவது அரசு கல்லூரிகளே ஆகும். 'மாணவர்கள் படிக்கிற காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு, கல்வியையும், வாழ்க்கையையும் இழக்கக்கூடாது' என்று .வெ.ரா அவர்களுக்குப் பின் துணிச்சலாக அறிவித்தவர் நடிகர் ரஜினி காந்த் ஆவார்.’ (http://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_28.html)

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சி, தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போவதாக கமல்ஹாசன் அறிவித்தது போன்ற திசையில் பயணிக்காமல்,1996 தேர்தலில்  துணிச்சலுடன் எதிர்த்தது, காவிரிப்பிரச்சினை உள்ளிட்ட போராடங்களில் கலந்து கொண்டது;

போன்ற பின்னணியில் ரஜினியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியதும், .வெ.ராவை 'தலித் விரோதி' என்று தொடர்ந்து இழிவுபடுத்திவரும் எழுத்தாளர் ரவிக்குமாரைக் கண்டிக்காததும், எந்த வகையில் நியாயம்? என்பதும் அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். 

பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட், தமது ஆய்வின்(?) மூலமாக, "தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப்பட்டு கடைப் பிடிக்கப்பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை. இந்தத் தீண்டாமைப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது ஆரியர்க்கு முந்தைய பழந்தமிழரின் மதநம்பிக்கைகள்." என்பது போன்ற அபத்தமான முடிவுகளை வெளியிட்டுள்ளார்.  
(http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html)

மேற்குறிப்பிட்ட மாநாட்டில் ஜார்ஜ் ஹார்ட்டைக் கண்டித்து தீர்மானம் போடாமல், ரஜினியைக் கண்டித்து தீர்மானம் போட்டது சரியா? தி.மு. தலைவர் கருணாநிதிக்கும், உலக அளவில் தமிழ் அமைப்புகளுக்கும் ஜார்ஜ் ஹார்ட் நெருக்கமானவர் என்ற அச்சமா? அல்லது அவரது மேற்குறிப்பிட்ட ஆபத்தான ஆய்வு முடிவுகள் பற்றிய அறியாமையில், தமிழ்நாட்டில் 'சாதி ஒழிப்பு' கட்சிகள் பயணிக்கிறார்களா? எது சரியான காரணம்? என்பதை இனியாவது தெளிவுபடுத்துவார்களா? 

சமஸ்கிருதத்தில் வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

அவ்வாறு வெளிவந்துள்ள நூல்களில் ஒன்றே மனுஸ்மிரிதி ஆகும். இது போன்ற நூல்களில் உள்ளவையெல்லாம், அந்த நூலாசிரியரின் விருப்பங்களின் வெளிப்பாடுகள் தான் என்பதையும், அன்று நடைமுறையில் இருந்தவை அல்ல என்பதையும், குறிப்பாக ' சூத்திரர் வாயிலும், காதிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்ற வேண்டும் என்பது போன்ற தண்டனைகளும், ஒரு மனவெறியரின் ஆலோசனைகள் மட்டுமே; அவை நடைமுறையில் வராதவை; என்பதையும் .எல்.பாஸம் என்ற அறிஞர் ' the wonder that was india' என்ற நூலில் விளக்கியுள்ளார்.( " The reader must always bear in mind  that in the texts on statecraft and Sacred Law the authors describe things not as they were in fact, but as they believed they ought to be................ Similarly the vicious punishments laid down by Manu for religious crimes (for example a sudra who " arrogantly teaches brahmans their duty" shall have boiling oil poured in his mouth  and ears" Page 81) இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளதாக அறிகிறேன்.

தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் உள்ளிட்ட அரசர்கள் ஆண்டபோது, 'சூத்திரருக்கு' கல்வி மறுக்க பட்டது; மீறி படித்தவர்களுக்கு மனுநீதியில் உள்ள தண்டனைகள் அமுலானது'; குறித்து சான்றுகள் இருப்பதாக, எனது தேடலில் வெளிப்படவில்லை. (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

நீதிபதி மகராசன் குழு அறிக்கையில் கீழ்வரும் தகவல் வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு வருணங்கள் இருந்ததில்லை; தமிழ்நாட்டில் சூத்திரர் என்று ஒரு வகுப்பு முன்னும் இருந்ததில்லை.இன்றும் இல்லை; இச்சொல் (சூத்திரர்) தமிழ்நாட்டில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு தான் வழக்கில் வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. (‘அனைத்து சாதியும் அர்ச்சகராகும் கோரிக்கையை கெடுப்பது 'பார்ப்பன' ஆதிக்கமா? ஊழலின் ஆதிக்கமா? 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயா?’; http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_15.html) 

நானறிந்த ஒரு பிராமணரல்லாத பூசாரி, தமது நண்பரான பிராமண புரோகிதர் செய்யும் பெரிய அளவிலான பூஜைகளில் அவருக்கு உதவியாக பணி புரிவார்; (தமிழ் எழுத்துக்களின் மூலமாக மனப்பாடம் செய்த) சமஸ்கிருத மந்திரங்களை அவ்வப்போது உச்சரித்தவாறே.

காலனி ஆட்சிக்கு முன்னும் மனப்பாடமாக மந்திரம் பயின்ற காரணத்தால், எழுதப்படிக்கத் தெரிந்த கல்வியறிவில் பெரும்பாலோர் பிராமணரல்லாத 'கம்மாள' பிரிவினரே; (https://tamilsdirection.blogspot.com/2019/03/blog-post_6.html) 

1980களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் என் மூலமாக 'பெரியார்' கொள்கையில் ஈர்க்கப்பட்ட, சாதி வேறுபாடு மனப்பான்மையற்ற, 'கள்ளர்' மாணவர், தனது கிராம 'தலித்' மாணவர்களைத் தவிர்த்து, மற்ற கிராம தலித் மாணவர்களையே நண்பர்களாக கொண்டிருந்தார். தனது கிராமத்தில் உள்ள தலித் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று பழகினால், தனது பெற்றோரும், சுற்றத்தினரும் காட்டும் எதிர்ப்பில், தனது படிப்பு பாழகிவிடும் என்று கருதி, அவ்வாறு அவர் நடந்ததை, நான் குறையாக கருதவில்லை. 'பெரியார்' கொள்கையில் இரண்டாம், மூன்றாம் தலைமுறை குடும்பங்களில் கூட, சாதிக்குள் திருமணம் செய்து கொண்டு, 'கறுப்பு சட்டைகளாக' வலம் வருபவர்களை எல்லாம், 'பெரியார்' கட்சிகள் சகித்துக் கொள்ளவில்லையா? 'தனித்தமிழ்' கட்சிகளில் உள்ள பேராசிரியர்களில், வசதியானவர்களில், எத்தனை குடும்பங்களில்,  'தமிழ் இன ஒற்றுமையை' ஓரங்கட்டி, 'தம் சாதிக்குள்', திருமணங்கள் எல்லாம் நடைபெறுகின்றன? (‘'பெரியார்' .வெ.ரா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் அறிவுபூர்வ விவாதம் சாத்தியமே ‘; http://tamilsdirection.blogspot.com/2017/10/2_24.html)

மேற்குறிப்பிட்ட சாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த தலைவர்கள், தமக்கு செல்வாக்குள்ள கிராமங்களில் உள்ள தலித்துகளின் சம உரிமைக்கு என்னென்ன பங்களித்துள்ளார்கள்? தலித் சாதிகளைச் சேர்ந்த தலைவர்களில் பள்ளர் சாதியைச் சார்ந்தவர்கள், பறையர், சக்கிலியர், மலம் அள்ளும் சாதிகளுக்கும், பறையர் சாதியைச் சார்ந்தவர்கள், சக்கிலியர், மலம் அள்ளும் சாதிகளுக்கும் எந்த அளவுக்கு சம உரிமை பெற பங்களித்துள்ளார்கள்? என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.

விடுதலைக்குப் பின், பிரதமர் நேருவுக்குத் பாராளுமன்றத்தில் தலைவலியாக இருந்த பிரச்சினை,  நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் மறைவு(?) பற்றி முத்துராமலிங்கத் தேவர் பேசிய பேச்சுக்களே ஆகும். அவை பாராளுமன்ற நூலகத்தில் இன்றும் சாட்சி ஆவணமாக இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் அந்த காலத்தில் நேருவை எதிர்த்து துணிச்சலுடன் பொதுக்கூட்டங்களில் முத்துராமலிங்கத் தேவர் பேசியுள்ளார்.

தேவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் அவரை ஆன்மீகமும், தேசபக்தியும் மிகுந்த நேதாஜியின் சீடராகவே வெளிப்படுத்துகின்றன. காமராசர் ஆட்சியில் முதுகளத்தூர் கலவரத்தில் அவரை, 'இலாவகமாக'ச் சிக்க வைத்து, 'சாதித் தலைவராக' ஊதிப் பெருக்க வைத்து , பின் அவர் மரணமடைந்ததில், மேலேக் குறிப்பிட்ட 'தலைவலியிலிருந்து' நேரு விடுதலைப் பெற்றார். முதுகளத்தூர் உள்ளிட்டு தமிழ்நாட்டில் இன்று வரை நடந்து வரும் சாதிக் கலவரங்களில் 'வெளி சக்திகளின்' பங்கு பற்றிய ஆய்வு அவசியமாகும். திருச்சி பெரியார் மையத்தில் நான் பங்காற்றிய காலத்தில் தோட்டக்குறிச்சி, நெற்குப்பை,ராஜபாளையம், போடி, சாதிக் கலவரங்களை நேரில் சென்று, ஆய்வு செய்தோம். அந்த அறிக்கைகள் 'விடுதலை' இதழிலும், புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. அது போன்று 'திறந்த மனதுடன், அறிவு நேர்மையுடன்' ஆய்வுகள் முதுகளத்தூர் முதல் இன்றுவரை நடந்துவரும் சாதிக் கலவரங்கள் வரை மேற்கொள்ளப்பட்டால், அந்த 'வெளி சக்திகள்' பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிப்பட வாய்ப்புண்டு. (http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_4.html)

2015இல் மேற்குறிப்பிட்ட பதிவு வெளிவந்துள்ள நிலையில், முதுகளத்தூர் முதல் இன்றுவரை நடந்துவரும் சாதிக் கலவரங்கள் தொடர்பாக, மேற்குறிப்பிட்ட‌ 'வெளி சக்திகள்' பற்றிய விசாரணை கோரும் தீர்மானமானது, மேற்குறிப்பிட்ட சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்படாதது ஏமாற்றத்தைத் தருகிறது. அடுத்து வரும் இது போன்ற மாநாட்டில் அந்த ஏமாற்றத்திற்கு இடம் இருக்காது, என்று நம்புகிறேன். 

உலக ஆதிக்க சக்திகள் மனித உரிமை, பிரிவினை உள்ளிட்ட போராட்டங்களை எல்லாம் ஊடுருவி பொம்மலாட்டம் ஆக்கி வரும் போக்குகளை வெளிப்படுத்திய ஆங்கில நாவல் The Aquitaine Progression (https://en.wikipedia.org/wiki/The_Aquitaine_Progression) மேற்கத்திய அரசுகளின் சுயநலன்களுக்கு உதவும் வகையில் 'ஆம்னஸ்டிக் இன்டன்நேஷ்னல்' போன்ற அமைப்புகளே செயல்பட்டு வருவது தொடர்பான சான்றுகளும் வெளிவந்துள்ளன. (http://tamilsdirection.blogspot.com/2018/05/)

இன்று தமிழ்நாட்டில் தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் செயல்பூர்வமாக பேசி வருபவர்களுக்கே மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் போக்கானது தொடங்கி விட்டது. அவர் 'பெரியாரிஸ்டா? ஆர்.எஸ்.எஸா? கம்யூனிஸ்டா? என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. கல்வி நிலையங்களில், தொழில், வியாபார நிறுவனங்களில். சாதி, மத அடிப்படைகளில் வெளிப்படும் பாரபட்சத்தையும், ஊழல் ஒழுக்கக் கேடுகளையும், செயல்பூர்வமாக யார் எதிர்த்தாலும், அவர்களை பாராட்டி ஆதரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. (‘கருப்பு, சிவப்பு, காவி அணிகளிடையே, அறிவுபூர்வ விவாதத்திற்கு;‘துக்ளக்மூலமாக கனியும் சமூக சூழல்’; http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_18.html) 

சோமசுந்தர பாரதியார் (https://ta.wikipedia.org/wiki/ ) சுட்டிக்காட்டிய 'தன்மானம்' இன்றி, .வெ.ரா முன்னெடுத்த 'சுயமரியாதை' இயக்கமானது, '1925 முதல் சாண் ஏறி, 1944 முதல் முழம் சறுக்கின' கதையானதன் விளைவுகள் பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none.html) 

முதல் தலைமுறையாகப் படிக்கும் குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளிலும் 'பலி ஆடுகள்' வற்றி, 'பலனுக்கான ஆடுகளே' அதிகரித்து வருகின்றன. அவற்றில் 'வாழ்வியல் புத்திசாலி ஆடுகள்' எவ்வாறு 'அதிவேகப் பணக்காரர்கள் ஆனார்கள்?' என்ற இரகசியமும் வெளிப்பட்டுள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

எனவே 'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும், இந்துத்வா ஆதரவு கட்சிகளாக இருந்தாலும், சாமான்யர்கள் மத்தியிலும், 'ரவுடிகளாக' இல்லாமல் ஒழுங்காகப் படிக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியிலும் இனி வெறுப்பு அரசியலானது எடுபடாது. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை தலித் விரோதியாக சித்தரித்த போக்குகள் பலகீனமாகி வருகின்றன. (https://www.firstpost.com/india/is-rss-anti-dalit-to-paint-sangh-as-natural-enemy-of-scsts-a-prejudiced-reading-of-its-history-objective-4425229.html)

ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது கலப்புத் திருமணங்களை ஊக்குவித்து, சாதி அடிப்படையிலான புறக்கணிப்புகளை எதிர்த்துப் பயணிக்கிறது. (https://www.indiatoday.in/india/story/rss-does-not-believe-in-caste-discrimination-mohan-bhagwat-1343836-2018-09-19)

தாய்மொழிவழிக்கல்வியின் மீட்சிக்கு அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் பயணிக்கும் திசையில், தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸை தமிழ்மொழிவழிக்கல்வி மீட்சியில் பயணிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதே புத்திசாலித்தனமாகும். (http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பார்

என்று நான் கருதியதற்கான காரணங்களையும் வெளிப்படுத்தி உள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html)

எனவே தமிழ்வழிக்கல்வி மீட்சி, சாதி, மத அடிப்படைகளில் புறக்கணிப்பு (discrimination) போன்ற பிரச்சினைகளில், திருக்குறள் (471) வழியில், ஆதரவு சக்திகளை ஒன்றிணைத்து, ஏமாற்றுப் பேர்வழிகளை அந்த கூட்டுசெயல்பாட்டின் ஊடே அம்பலமாக்கி, ஓரங்கட்டி, வெற்றியை நோக்கி பயணிப்பதே புத்திசாலித்தனமாகும்

ஊரான் வீட்டுப் பிள்ளைகளைக் காவு கொடுத்து, தமது குடும்பத்தையும் பிள்ளைகள் ஒழுங்காகப் படித்தாலும், படிக்கா விட்டாலும் 'செட்டில்' செய்து வாழும் பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்து தமிழ்நாடு விடுதலை பெறுவதும் சாத்தியமாகும். 

எனது விமர்சனங்களை, அறிவுபூர்வ ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றில் உள்ள நிறைகுறைகளை வெளிப்படுத்துவதே, தமிழ்நாட்டில் புலமை வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 

அவ்வாறு செய்வதை வரவேற்காமல், எனது பதிவுகளில் உள்ள குறைகளை வெளிப்படுத்துபவர்கள் மீது, நான் கோபப்பட்டு வெறுத்தால், நான் எனது ஆய்வு முடிவுகளின் மீது உடமைப்பற்றுடன்(possessive) வாழ்வதன், அல்லது என்னை பிம்ப வழிபாட்டுக்கு உட்படுத்தி வாழ்வதன் 'சிக்னல்கள்' ஆகும். எனது ஆய்வுகளுக்கு 'அறிவுபூர்வ இடிப்பாராக' உள்ளவர்களையே மதித்து, என்னை வளர்த்துக் கொண்டு வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றிக்கான இரகசியங்களில் அடங்கும்.  
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html)


விவாதத்தில் முன்வைக்கப்படும் சான்றுகளை மறுக்காமல், விவாதத்தினை விரிவாக்கும் போக்கும், விவாத எல்லைக்குள் நிற்கும் அறிவு வலிமையின்றி, விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது, 'கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள்' போல, 'தீர்ப்பு' வழங்குவதும்;
அறிவு நேர்மையற்ற விவாத அத்து மீறல் ஆகும். (http://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html)
 


குறிப்பு:

திருப்பு முனையில் உள்ள தமிழ்நாட்டில், எதிரெதிர் முகாம்களில் உள்ளவர்கள் இடையில் அறிவுபூர்வ விவாதங்கள் நடைபெறும் சூழலும் கனிந்து வருகிறது. இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், நான் 'பெரியார்' இயக்கத்தில் பங்களித்துள்ளேன். 'பெரியார்' கட்சிகள்,, மார்க்சிய லெனினிய குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளுடன், எனது அளவுக்கு அறிவு, அனுபவம் உள்ளவர்கள் வேறு யாரும் தமிழ்நாட்டில் இல்லை; நானறிந்தது வரையில்.  எனவே மேற்குறிப்பிட்ட அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நூல் வெளிவருகிறது.


 'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்  

(தி பிரிண்டிங் ஹவுஸ், திருச்சி; ph: +91-0431-2420121;
Email: tphtrichy@gmail.com;   www.theprintinghousetrichy.com)

திருப்பு முனையில் தமிழ்நாடு; எதிரெதிர் முகாம்களில் அறிவுபூர்வ அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நூல்: செ.அ.வீரபாண்டியன் (வெற்றிமணி) 

No comments:

Post a Comment