Thursday, October 15, 2020

 

தொல்காப்பிய யாப்பிலக்கணம்


'புரோசடி' (prosody) இலக்கணமா? இசைச்செய்யுள் இலக்கணமா?

 

'யாப்பிலக்கணம் in English' என்று கூகுளில் தேடிய போது 'prosody' என்பது கிடைத்தது.

Tolkappiyam represents the older tradition in Tamil prosody while yapparungalam and yapparungalakkarigai represent the later tradition. The prosodic structure of literary works from the Sangam era has to be analysed according to the Tolkappiyam. (https://en.wikipedia.org/wiki/Tamil_prosody )

‘prosody meaning in tamil’ கூகுளில் தேடிய போதுயாப்பிலக்கணம்என்பது கிடைத்தது.

தமிழில் இன்று செவ்விசை (classical music) நாட்டுப்புற இசை (folk music) போன்ற பிரிவுகள் எல்லாம், காலனிய ஆட்சியில் மேற்கத்திய இறக்குமதியாக உள் நுழைந்தவை ஆகும்.

இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவைகளும், செவ்விசை, நாட்டுப்புற இசை  போன்ற பிரிவுகளும் வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இங்கு இருந்ததற்கான சான்றுகள் இது வரை எனது ஆய்வில் வெளிப்படவில்லை. அத்தகைய சான்றுகள் இருப்பின், அவற்றை எனது கவனத்திற்கு யாரேனும் கொண்டு வந்தால்,  ந‌ன்றியுடன் அவரைக் குறிப்பிட்டு - acknowledge செய்து-  அதனை திறந்த மனதுடன் ஆராய்வேன்.

மேற்கத்திய இசை வரலாற்றில் செவ்விசை (Classical Music) தோன்றி உருவான காலக்கட்டம் கி.பி 1550 முதல் 1900 வரை உள்ள காலக் கட்டமாகும். (http://en.wikipedia.org/wiki/Classical_music). பிரஞ்சுப் புரட்சி, தொழில் புரட்சி, அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் கலை, இலக்கியத் துறைகள் அரசர்கள் - ‍ பிரபுக்கள் பிடியிலிருந்து விடுதலை பெற்று, புதிய திசையில் புதிய சிந்தனையில் மேற்கத்திய உலகில் செவ்வியல் காலம் (Classical Period) தோன்றி வளர்ந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் உருவான செவ்விசை, நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகளை இந்திய சமூகத்திற்குள் புகுத்தி அணுகுவது எப்படி சரியாகும்? (https://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

அது போலவே 'புரோசடி' (prosody) என்பதும் மேற்கத்திய இறக்குமதியாகும்.

தொல்காப்பிய யாப்பிலக்கணத்தினை 'புரோசடி'யுடன் தொடர்பு படுத்த என்ன நியாயம் இருக்கிறது? என்று ஆராய, முதலில் 'புரோசடி' என்றால் என்ன? என்று அறிய வேண்டும்.

பேச்சுக்கான ஒலிப்பியலில் (Phonetics) உயிர் எழுத்துக்களும் (vowels)  மெய் எழுத்துக்களும் (consonants) இடம் பெறும்.

பேச்சு என்பதானது, 'புரோசடியாக' மாறும் பொழுது, கூடுதலாக, அசைகள் (syllables), பேச்சுச்சுருதியின் ஏற்ற இறக்கம் (intonation: rise and fall of the voice pitch),  குரலோசை (tone: பேச்சில் குரலோசை, இசையில் ஒரு முழுச் சுர இடைவெளி), அழுத்தம் (stress),  ரிதம் (rhythm; கால வட்ட ஏற்ற இறக்கம்)

In linguistics, prosody is concerned with those elements of speech that are not individual phonetic segments (vowels and consonants) but are properties of syllables and larger units of speech, including linguistic functions such as intonation, tone, stress, and rhythm. Such elements are known as suprasegmentals. https://en.wikipedia.org/wiki/Prosody_(linguistics)#

Suprasegmental, also called prosodic feature, in phonetics, a speech feature such as stress, tone, or word juncture that accompanies or is added over consonants and vowels; these features are not limited to single sounds but often extend over syllables, words, or phrases. https://www.britannica.com/topic/suprasegmental

பேச்சொலியில் அசைக்கு பிரயோசனமான பங்கு ஏதும் இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. (https://www.researchgate.net/post/What_do_you_think_about_the_linguistic_category_SYLLABLE_Is_it_useful_Are_there_regularities_which_cannot_be_explained_without_this_category )

அத்தகைய குழப்பத்திற்கு இடமின்றி, புரோசடியில் அசைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரோசடியின் மற்ற கூறுகளான பேச்சுச்சுருதியின் ஏற்ற இறக்கம், குரலோசை , அழுத்தம், ரிதம் போன்றவற்றின் செயல்பாடுகள் எல்லாம் புரோசடியில் இடம் பெறும் அசைகள் மூலமாகவே சாத்தியமாகும்.

அடுத்து புரோசடிக்கும் இசைப்பாடலாகிய செய்யுளுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? என்று பார்ப்போம்.

புரோசடியில் அசைகள் முக்கிய பங்கு வகிப்பது போலவே, இசைப்பாடலிலும் அசைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில், புரோசடியில் இடம் பெறும் அசைகளுக்கும், செய்யுளில் இடம் பெறும் அசைகளுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. அவை வருமாறு:

அதற்கு முதலில் சுருதி (pitch) என்றால் என்ன? என்ற புரிதல் வேண்டும்.

இசைப்பாடலின் பண் (தமிழிசை), ராகம் (கர்நாடக இசை),  ஸ்கேல் (மேற்கத்திய இசை- musical scale) என்பதை, ஒரு தானத்தில் (ஸ்தாயி, octave) உள்ள 12 சுரங்களில் எந்தெந்த சுரங்கள் இடம் பெற வேண்டும்? என்ற அடிப்படையில் தான் தீர்மானிக்க முடியும். ஆனால் அந்த தானத்தில், ராகத்தில் அல்லது ஸ்கேலில், எந்தெந்த சுரம் எந்தெந்த ‌சுருதியில் ஒலிக்க வேண்டும்? என்பதை 'சுருதி சேர்த்தல்' (tuning) மூலமே தீர்மானிக்க முடியும்.

எனவே நமது செவியில் நாம் உணரும் இசை தொடர்பான‌ அதிர்வு எண்ணே சுருதியாகும். (Pitch can be defined as a sensory characteristic arising out of the frequency assigned to a note in a musical scale. The frequency assigned to a music note is based on the tuning system and pitch standard)

நமது செவியில் பேச்சில் அல்லது புரோசடியில் உணரும் ஓசையில் அதிர்வு எண்ணே, பேச்சுக்கான புரோசடிக்கான சுருதி ஆகும். பேச்சில் அல்லது புரோசடியில் உள்ள சுருதியானது இசைச்சுருதி ஆகாது. ஏனெனில் பேச்சும் புரோசடியும் பண்ணின்,  ராகத்தின் அல்லது ஸ்கேலின் அடிப்படையில் செயல்படுவது கிடையாது.

எனவே புரோசடியில் இடம் பெறும் பேச்சுச்சுருதியின் ஏற்ற இறக்கம் (intonation) என்பதற்கும், இசையில் சுருதியின் ஏற்ற இறக்கம் (musical intonation) என்பதற்கும் வேறுபாடு உண்டு.

அது போலவே, புரோசடியில் இடம் பெறும் அழுத்தம் (stress) என்பதில் இருந்து மாறுபட்டு, இசைப்பாடலில் அழுத்தம் என்பதானது, அந்தந்த இசைக்கான இலக்கண விதிகளின்படி கட்டுப்படுத்தப்படும்.

அது போலவே, புரோசடியில் இடம் பெறும் ரிதம் (rhythm) என்பதானது, அந்தந்த இசைப்பாடலில்  இசைக்கான இலக்கண விதிகளின் படியிலான தாளத்திற்கு உட்பட்டே செயல்படும்.

இதுவரை புரோசடிக்கும் இசைப்பாடலுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் பார்த்தோம்.

எனவே யாப்பிலக்கண விதிகளின்படி உருவாகும் செய்யுளானது இசைப்பாடலாகும்.

தொல்காப்பிய யாப்பிலக்கணத்தில் புரோசடி இடம் பெறவில்லை.

நானறிந்தவரையில், தொல்காப்பிய யாப்பிலக்கணத்தை புரொசடிக்கான இலக்கணமாகக் கருதி வெளிப்பட்டு வரும் கருத்தானது, காலனிய ஆட்சியில் நடந்த தவறாகும்; செவ்விசை,நாட்டுப்புற இசை போன்ற இறக்குமதிகள் மூலமாக தமிழிசையில் (இந்திய இசையிலும்)  குழப்பத்தை விளைவித்த தவறைப் போலவே.

தொல்காப்பியத்தில் உள்ள யாப்பிலக்கணத்தில் வரும் அசையானது, யாப்பிலக்கண விதிகளுக்குட்பட்டு உருவான இசைப்பாடலுக்கான அசையாகும். அதனை எனது ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளேன்.

‘Musical Phonetics in tholkAppiam’ in December 2013, in the journal from the International Institute of Tamil Studies, (Taramani, Chennai; http://www.ulakaththamizh.in/journal )

இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பதும், அக்கண்டுபிடிப்பின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள யாப்பிலக்கணமானது, உலகில் எந்த மொழியிலும், அசைகளின் அடிப்படையில் இசைக்கப்படும் இசைப்பாடலுக்கான‌  'உலகப் பொது இசைப்பாடல் இலக்கணம்' (Universal Grammar for musically rendered poems) ஆகும்

அக்கண்டுபிடிப்பானது, சோம்ஸ்கியின் உலகப் பொது இலக்கணம்’ (Universal Grammar) தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தர வல்லவையாகும்.

நவீன மொழியியல் (Modern Linguistics) அறிஞர் நோவாம் சோம்ஸ்கியின் பார்வைக்கு அதனை அனுப்பினேன்.

சோம்ஸ்கியின் உலகப் பொது இலக்கணம்அணுகுமுறையில், எனது கட்டுரையை மாற்றி எழுதி;

‘Musical Linguistics; applicable to the musically rendered poems in world languages; Non-semantic and music related rules for poems, discovered in ancient Tamil grammar tholkAppiam’ என்ற தலைப்பிலான கட்டுரையினை அவருக்கு அனுப்பினேன்.

அதற்கு கீழ்வருமாறு நோவாம் சோம்ஸ்கி பதில் அளித்தார்.

‘Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘musical linguistics’

– Noam Chomsky 23 Sep, 2018

உலகில் உள்ள பல்கலைகழகங்களில் 'மொழியியல்' (Linguistics) என்ற துறை ஏற்கனவே உள்ளது.

புதிதாக 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற துறையானது தொல்காப்பியம் மூலமாக உருவாக, நோவாம் சோம்ஸ்கியின் அங்கீகாரமானது மேற்குறிப்பிட்ட அவரின் மடல் மூலமாக கிடைத்துள்ளது. (‘நோவாம் சோம்ஸ்கி மூலம் வெளிப்பட்ட பாடம்: தெரியாததை தெரியாது' என்று கூச்சமின்றி தெரிவிக்கும்  துணிச்சல் வேண்டும்.’; https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html )

'மொழியியல்' அடிப்படையில், 'Natural Language Processing -NLP’ மூலமாக 'speech -to- text; text-to- speech; spell check; grammar check; etc' போன்ற மென்பொருட்கள் உலகில் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அது போலவே, தொல்காப்பியத்தின் ' இசை மொழியியல்' அடிப்படையில், 'lyrical text to music – to song; music to lyrical text; musical grammar check; etc' போன்ற மென்பொருட்களை உருவாக்க முடியும்.

நவீன மொழியியலில் (Modern Linguistics) சமஸ்கிருத மொழியின் பங்களிப்பானது உரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்தின் துணையுடன், உலக மொழிகளுக்கான‌ 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையானது, தொல்காப்பியம் மூலமாக துவங்கும் வாய்ப்பினையும் கீழுள்ள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2019/01/why-anti-sanskrit-is-harmful-to-tamil.html 

உலக அளவில் தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது 'புரோசடி' (prosody) இலக்கணமாகும்'

என்ற தவறான கருத்தானது, உலகம் முழுவதும் கற்பிக்கப்படும் தமிழ்க்கல்வியில் இடம் பெற்றுள்ளது.

அந்த தவறான கருத்தில் இருந்து தமிழ்க்கல்வியானது விடுதலை ஆகும் வரையில், உலக மொழிகளுக்கான‌ 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையானது, தொல்காப்பியம் மூலமாக துவங்கும் வாய்ப்பானது தாமதமாகும், என்பதும் எனது அனுபவமாகும்.

தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்ற மாணவர்கள் எல்லாம் யாப்பிலக்கணத்தை விளங்கிக்கொள்ள 'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), ஆகியவற்றில் அடிப்படை அறிவு பெற்றால், தொல்காப்பியத்தில் உள்ள 'இசை மொழியியல்' தொடர்பான புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகையோருக்கு இசை மொழியியல் அடிப்படையிலான   Natural Language Processing (NLP) ஆய்வுத்திட்டங்களிலும், மென்பொருள் உருவாக்க (Software development)தொழில்களிலும், Resource Persons வேலை வாய்ப்புகள் விரைவில் உருவாக உள்ளன.

'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), அகியவற்றில் அடிப்படையில், யாப்பிலக்கணத்தினை விளங்கிக் கொள்ளும் ஒரு பாடத்திட்டத்தினை நான் உருவாக்கி செயல்படுத்தும் முயற்சியானது, சுமார் 20 வருடங்களாக தாமதமாகியுள்ளது. அது தொடர்பாக நான் மேற்கொண்ட முயற்சிகளையும், சந்தித்த ஏமாற்றங்களையும், நேரம் கிடைக்கும் போது பதிவு செய்வேன்.

அது போல பொறியியலில் ECE, Computer Science, உள்ளிட்ட இன்னும் அது போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் எல்லாம், ‘இசை மொழியியல்அடிப்படையில் NLP ஆய்வுகளும், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கம் (application software development) ஆகிய துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் காலமும் கனிந்து வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html )

நடக்காததை விட தாமதமாக நடப்பது நல்லது (better late than never) என்ற பழமொழியின்படி, இனியாவது 'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), ஆகியவற்றின் அடிப்படையில், யாப்பிலக்கணத்தினை விளங்கிக் கொள்ளும் ஒரு பாடத்திட்டத்தினை உருவாக்கும் வாய்ப்பு விரைவில் உருவாக வேண்டும்.


குறிப்பு:

Tholkappiam based Musical Linguistics emerging as new field of Research for Natural Language Processing (NLP) product development : https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html

 

'The Origins of Tamil Classical Music'; 
https://www.youtube.com/watch?v=7lGtWcwS7Ww&t=1221s 


Wednesday, October 14, 2020

 

Is Tholkappiam ‘yAppilakkaNam’, a grammar for Tamil prosody?


‘Tolkappiyam represents the older tradition in Tamil prosody.’ (https://en.wikipedia.org/wiki/Tamil_prosody)

Prosody, the study of all the elements of language that contribute toward acoustic and rhythmic effects, chiefly in poetry but also in prose. The term derived from an ancient Greek word that originally meant a song accompanied by music or the particular tone or accent given to an individual syllable. Greek and Latin literary critics generally regarded prosody as part of grammar; it concerned itself with the rules determining the length or shortness of a syllable, with syllabic quantity, and with how the various combinations of short and long syllables formed the metres (i.e., the rhythmic patterns) of Greek and Latin poetry. Prosody was the study of metre and its uses in lyric, epic, and dramatic verse. In sophisticated modern criticism, however, the scope of prosodic study has been expanded until it now concerns itself with what the 20th-century poet Ezra Pound called “the articulation of the total sound of a poem.” (https://www.britannica.com/art/prosody)

The syllables employed in prosody are different from the musical syllables in the musically rendered lyrics.

'oli ’(ஒலி), 'Ocai' (ஓசை), and 'icai ’(இசை) with significant differences in their meaning, were explained by the commentaries to mean 'oli' (ஒலி- Sound), thereby failing to bring out the musical phonetics, which played a very significant role in the grammar rules of tholkAppiam. 

References in tholkAppiam and other ancient Tamil texts clarified that the musical sounding of the letters would lead to the musical formation of the syllables, the basic building blocks of a poem. The third part of the formula cited in tholkAppiam - ezuththu 1:33 unambiguously clarified that ‘icai’ meant only music by linking it with the musical note in the word ‘nharampu’. ('Musical Phonetics in tholkAppiam' - The journal from the International Institute of Tamil Studies, Taramani, Chennai; 2013 December http://www.ulakaththamizh.in/journal)

My application of ‘Physics of Music’ to the ancient Tamil texts had proved that the meanings of the music related words in the commentaries and lexicons, needed objective review to discover the Tamil musicology from the ancient Tamil texts. (‘DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION’; https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)

I am looking for similar efforts in the study of the ancient Sanskrit texts and associate with those involved, to continue my research on the Kudumiyanmalai music inscription. 

The above inscription is one of the many evidences that led to my discovery of the ‘Musical Linguistics’ from the ancient Tamil Grammar tholkAppiam.

The above discovery attracted the attention of the world-renowned scholars with the following comments. 

“Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘musical linguistics’ " - Prof.Noam Chomsky 

” Very interesting. And happy to know that you are working on it.''

- Dr. Rajeev Sangal,  Professor (Area: Computer Sc & Engg), Language Technologies Research Center, IIIT Hyderabad 

The above discovery may lead to the world recognition of tholkAppiam as an important source for the emerging discipline of ‘musical linguistics’. 

pANini’s Ashtadhyayi had already gained world recognition for the well-established discipline of linguistics. 

‘By teaching phonetics and grammar to the West, Sanskrit gave rise to modern linguistics’;        

http://www.indiapost.com/flipbook/epaper31-08-2018/31_AUG_2018/index.html#book/25  

No doubt, world interest to study the ancient Texts in Sanskrit for the development of Science, Technology, Philosophy, etc are growing in modern times. (Spanish scholar Oscar Pujol Riembau;

https://www.youtube.com/watch?v=ZTd8qIHbVLI) 

But in the case of Tamil, unfounded claims like Tamil Music as the source for Hindustani Music, Angor Watt was built by a Tamil King, etc led to a low estimation of Tamil scholars. This led to scholars like Sheldon Pollock to discard the findings of the Tamil scholars with respect to the origin of the Tamil literature in his book 'The Language of the Gods in the World of Men - Sanskrit, Culture and Power in Premodern India'.

Musical Linguistics rules for poems discovered in the ancient Tamil grammar tholkAppiam, are non-semantic and music related rules for poems, and hence applicable to the musically rendered poems in world languages. The rules of the musical phonetics are objective, involving measurable acoustic parameters and hence would help to devise the related algorithm for developing applications in computational musical linguistics; like lyrical text to music & vice versa, musical grammar check, transformation of musical forms, etc. 

The unique phonetic dimensions of the Sanskrit letters and the rules of joining the letters in pANini’s Ashtadhyayi, led to the development of the modern linguistics. 

The unique phonetic dimensions of the Tamil letters and the rules of joining the letters for composing the poems in tholkAppiam, will lead to the development of the musical linguistics. The above rules of joining the letters for composing the poems are non-semantic and hence language-independent, but musical structure dependent. 

I can very well foresee the convergence of the logic in Ashtadhyayi employed in the modern linguistics, and the logic in tholkAppiam to be employed in the musical linguistics, in the future research; 

addressing the criticisms of Chomsky’s universal grammar(UG)

(http://thebrain.mcgill.ca/flash/capsules/outil_rouge06.html   & https://dlc.hypotheses.org/1269  ) and proving that “that structure-dependence follows from principles of universal grammar that are deeply rooted in the human language faculty”. (https://tamilsdirection.blogspot.com/2019/01/why-anti-sanskrit-is-harmful-to-tamil.html) 


Note: 'The Origins of Tamil Classical Music'
https://www.youtube.com/watch?v=7lGtWcwS7Ww&t=1221s 

 

இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளிலும் ஒரே பாணியில் இரண்டு வகை தவறுகள்?


இரண்டு வகை தவறுகளால் விளைந்த சமூக மூச்சுத்திணறல் முடிவுக்கு வருகிறது

 

ஒரு தனி மனிதரை நாம் புகழ்வதும் இகழ்வதும் என்பதனாது, தனிமனித அளவில் அவர் எந்த அளவு உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தார்? என்ற அடிப்படையிலாகும். நாம் போற்றும் கொள்கைகளை தமது பிம்ப கேடயமாக்கி, தனிமனித அளவில் இழிவுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்களை புகழும் சமூகமானது உருப்பட முடியாது.

தனிமனித அளவில் புகழத்தக்க வகையில் வாழ்ந்த தலைவர்களின் கொள்கைகள் எல்லாம், இன்றைக்கு எந்த அளவுக்கு சமூகத்திற்கு உதவும் அல்லது கேடாகும், என்று,

அக்கொள்கைகளை 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்த மறுப்பது சமூகக் குற்றமாகும்.

அது போலவே, இன்றைக்கு சமூகத்திற்குக் கேடாகும் கொள்கைகளை விமர்சிக்கும் போது, தனி மனித அளவில் போற்றும் வகையில் வாழ்ந்த தலைவர்களை இழிவு செய்து கண்டிக்கும் நபர்களை அனுமதிக்கும் கட்சியும் சமூகமும் உருப்பட முடியாது.

மேற்குறிப்பிட்ட இரண்டு வகை தவறுகளிலும் சிக்காதவர்களே தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்கு அளிக்க முடியும்.

படித்த காலத்தில், பணியாற்றிய/பணியாற்றும் காலத்தில், வாழ்ந்த/வாழும் இடத்தில், இழப்புகளுக்கு அஞ்சி, எந்த அநீதியை எதிர்த்தும் போராடாத 'யோக்கியர்கள்' எல்லாம், 'சமூக முதுகெலும்பு' முறிந்தவர்களாக வளர்ந்து, பின் வெளிப்படுத்தும் 'சமூக அக்கறையானதுl சமூகக் கிருமிகளின் வளர்ச்சிக்கே துணை புரிந்தது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

அத்தகையோர் இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளிலும் இருந்தாலும், மேற்குறிபிட்ட‌ ஒரே பாணியிலான‌ இரண்டு வகை தவறுகளையும் புரிவார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில், அதிக மதிப்புள்ள சொத்துக்களும், தொழில் வியாபார வாய்ப்புகளும் பிறமாநில/வெளிநாட்டினர் வசம் சிக்கி வரும் போக்கில், அந்த போக்கின் 'ஆணிவேராக', தமிழர்களில் 'எல்லா வகை' தரகர்களும், திருடர்களும். 'ஊழல் அரசியல்' போக்கில் வளர்ந்தார்கள். 

1970களின் பிற்பகுதிகள் முதல், 'மம்மி, டாடி' நோயில்  தாய்மொழி தமிழின் ஆணிவேரை இழந்து, தமிழில் எழுதவும், படிக்கவும், பெரியவர்களை மதிக்கவும் தெரியாத, மாணவர்களை உருவாக்கி, 1990 முதல் அம்மாணவர்களில், வளரும் எண்ணிக்கையில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற நோய்களில் சீரழியும் அளவுக்கும், அதை பயமின்றி செய்யும் அளவுக்கும், காவல்துறை நீதிமன்றங்களில் கறுப்பு ஆடுகளின் வளர்ச்சியும், சமூக மூச்சுத் திணறலை உச்சமாக்கும் அளவுக்கும் தமிழ்நாடு சீரழிந்தது.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் என்று தத்தம் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், ஒரு தனி நபரை மட்டுமே, அந்த சீரழிவிற்குக் காரணமாக முன் வைக்கும் முயற்சியானது,

இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளிலும் ஒரே பாணியில் இரண்டு வகை தவறுகள் புரிந்த நபர்களை எல்லாம்,

சமூக கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே துணை புரியும்; தமிழ்நாட்டின் மீட்சியையும் தாமதப்படுத்தி.

அதன் தொகுவிளைவாக,  சமூக மூச்சுத்திணறல் மிகுந்த சமூக வெளியில், வெளிப்படும் பேச்சுக்களும், எழுத்துக்களும், பெரும்பாலும் ஆதாயத்திற்கு வாலாட்டும்/கண்டிக்கும் நபர்களிடமிருந்து வெளிப்படும்.

பொது ஒழுக்க நெறியை 'நுகரும் திறன்' ஆனது, பொது அரங்கில் பலகீனமாகி, தமிழர்களின் தர அடையாளத்தை (benchmark) கீழிறக்கியதே,

இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளிலும் ஒரே பாணியில் இரண்டு வகை தவறுகள் புரிந்த நபர்களின்  சாதனையாகும்;

நல்ல ஆரோக்கியமான மனித வாழ்வுக்கு, திறந்த காற்றோட்டமான இடத்தில் (Free Ventilation)  வாழ்வது அவசியமாகும். அதே போல் நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு, தாம் வாழுமிடம், பணியாற்றுமிடம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமக்கான சமூக வெளியில் (social space), சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டமும்' அவசியமாகும்.

சமூக சுவாசத்திற்கான (social breathing)  'திறந்த காற்றோட்டம்' இருக்கும் பொழுது தான், நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியும். நம்மிடம் உள்ள தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்ட முன் வருவார்கள். நாமும் அதை பரிசிலித்து, சரியெனில் நம்மை திருத்திக் கொள்ள முடியும். ஒருவர் துயரப்படும் போது, லாப நட்ட நோக்கமின்றி அடுத்தவர் உதவ முடியும்.  ந‌மது இயல்போடு ஒட்டிய‌ உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நாம் வாழவும், உண்மையான அன்புடன் நம்மை சுற்றியுள்ளவர்களையும், இயற்கையையும் நேசித்து வாழவும் முடியும்.

தமிழ்நாட்டில் இனி ஆதாயத்திற்கு வாலாட்டும், காலை வாறும், முதுகில் குத்தும் தமிழர்களே 'திராவிட அரசியலின்' - அதே போக்கில் பயணிக்கும் தேசியக் கட்சிகளின் -  ஆதரவாளர்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது; தன்மானமுள்ள தமிழர்கள் எல்லாம் அப்போக்கிலிருந்து வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கும் தொடங்கி விட்டது.

அவ்வாறு வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கு என்பதே, அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் சமூக மூச்சுத்திணறலை (Social Suffocation) உணரத் தொடங்கியுள்ளதன் 'சிக்னல்' ஆகும்.     (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

Monday, October 12, 2020

 1996 & 2011 ஆண்ட கட்சிகளின் தோல்விகளுக்கு இடையில் என்ன‌ வேறுபாடு?


2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றியில் இருந்து, தி.மு.க ஆதரவு வாக்குகள் தொடர்ந்து சரியும் போக்கிலா?

 

1996 தேர்தலில், ஆண்ட கட்சியான அ.இ.அ.தி.மு.க தோற்றது போலவே, 2011 தேர்தலில் ஆண்ட கட்சியான தி.மு.கவானது எதிர்க்கட்சியாக ஆக முடியாத அளவுக்கு பெரும் தோல்வியைச் சந்தித்தது.

ஆனால் இரண்டு தோல்விகளுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு.

மேல் நடுத்தர மற்றும் வசதியான குடும்பங்களில் பெரும்பாலோர் தேர்தலில் வாக்களிப்பதில்லை. அவர்களின் கோபத்தை ஈட்டும் அளவுக்கு ஆளுங்கட்சி ஆட்சி செய்திருந்தால், அடுத்து வரும் தேர்தலில் ஆண்ட கட்சிக்கு எதிராக வாக்களிப்பர்கள். 1996 தேர்தலுக்கு முன், அந்த‌ கோபமானது வெளிப்படையாக ஊடகங்களில் வெளிவந்தது. நடிகர்களில் ரஜினி மட்டுமே துணிச்சலுடன் அந்த கோபத்தை வெளிப்படுத்தினார். ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்திற்கு எதிராக வெளிப்பட்ட கோப அலையில் 1996 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தோற்றது.

1996க்கு முன் முதல்வர் ஜெயலலிதாவின் மீதும் சசிகலா குடும்பத்தின் மீதும் மக்களுக்கு இருந்த கோபங்களை ஊடகங்கள் துணிச்சலுடன் வெளியிட்டன. ஜெயலலிதாவின் தோல்வியை குறித்த கணிப்புகளும் வெளிவந்தன.

ஆனால் 2011 தேர்தலுக்கு முன், முதல்வர் கருணாநிதி மீதும், கருணாநிதியின் குடும்பத்தின் மீதும் மக்களுக்கு இருந்த கோபங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அதற்கு மாறாக, திருமங்கலம் இடைத்தேர்தலில் வாக்குக்கான பணம் சில ஆயிரமாக உயர்ந்து வெற்றி பெற்றதை அடிப்படையாகக் கொண்டு, துக்ளக் தவிர்த்த அனைத்து பத்திரிக்கைகளும், லயோலா கல்லூரியும், 2011 தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று கணித்தார்கள். 

2011 தேர்தலில் வாக்களிப்பதற்காகவே புதுக்கோட்டையில் இருந்து சென்னை சென்று வந்தேன். பேரா. (ஞானாலயா) டோரதி கிருட்டிணமூர்த்தி "யாருக்கு சார் வாக்களித்தீர்கள்?" என்று கேட்டார்.

"அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன்' என்று பதில் சொன்னேன். உடனே அவர் தெரிவித்தது, எனக்கு மறக்க முடியாத சமூக சிக்னல் ஆனது.

"நான் இதுவரை கேட்டவர்களில் நீங்கள் ஒருவர் தான் அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன் என்று சொன்னீர்கள். மற்ற எல்லோரும் தி.மு.கவிற்கு வாக்களித்ததாகவே சொன்னார்கள். ஆனால் முடிவுகள் அவர்கள் சொன்னதற்கு எதிராக இருக்கிறது"

அரசால் கைப்பற்ற முடியாத ஊழல் பணத்தை நம்மால் முடிந்த அளவு கைப்பற்றி, தமது கோப அலையை எவருமே கணிக்க முடியாத அளவுக்கு வாக்களிக்கும் போக்கு தமிழக மக்களிடையே வளர்ந்து விட்டது. (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_25.html )

பொதுவாக பொது வெளியிலும் ஊடகங்களிலும் தி.மு.க ஆதரவாளர்கள் தமது கருத்தினை வெளிப்படுத்தும் அளவுக்கு, அ.இ.அ.தி.மு.க ஆதரவாளர்கள் வெளிப்படுத்துவதில்லை. அதற்கான காரணம் வருமாறு:

பொதுவாக, தமிழ்நாட்டில்  ஆங்கில மற்றும் தமிழ்ப்பத்திரிக்ககளை படிப்பவர்களும், வெளியில் தமது அரசியல் ஆதரவு போக்குகளை வெளிப்படுத்துபவர்கள் எல்லாம், தமிழ்நாட்டில் படித்தவர்களும், விவரமானவர்களும் ஆவார்கள். அவர்களில் பிராமணர்களில் பெரும்பாலோர் பா.ஜ.க ஆதரவு போக்கில் பயணிப்பவர்கள். பிராமணரல்லாதோரில் பெரும்பாலோர் தி.மு.க‌ ஆதரவு போக்கில் பயணிப்பவர்கள். அவ்வாறு தி.மு.க ஆதரவு போக்கில் பயணிப்பதற்கான காரணம், வருமாறு: 

கருணாநிதி குடும்ப அரசியலானது, மாவட்டங்களில் உள்ள தி.மு.க அதிகார பீடங்கள் என்ற தூண்களின் வலுவில், மையப்படுத்தப்பட்ட அதிகார பீடமாக செயல்பட்டது.

ஜெயலலிதா ஆட்சியில், அமைச்சர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் நிரந்தரமின்றி, அவ்வப்போது மாற்றங்களுக்கு உள்ளாக நேரிட்டது. எனவே, சசிகலா குடும்ப அரசியலானது, தி.மு.கவிற்கு இருக்கும் மாவட்ட அளவிலான அதிகார பீடங்கள் என்ற தூண்கள் இன்றி, ஜெயலலிதாவை முன்னிறுத்தி, பின்னிருந்து இயக்கிய ஆதாய அரசியல் வலைப்பின்னலில் செயல்பட்டது.

எனவே தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கும், விவரமானவர்களுக்கும் தங்களுக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள அ.இ.அ.தி.மு.க ஆட்சியை விட, தி.மு.க ஆட்சியே என்றும் விரும்பத்தக்கதானது. (https://tamilsdirection.blogspot.com/2020/10/2021-1952-2021.html )

அவ்வாறு தி.மு.க ஆதரவு போக்கில் உள்ள படித்தவர்களும், விவரமானவர்களும் பொதுவெளிகளில் அரசியல் அதிகம் பேசுபவர்களாக இருப்பார்கள்.

மேற்குறிப்பிட்ட பதிவில், கீழ்வரும் கணிப்பினையும் வெளியிட்டேன்.

'கருணாநிதி - மாறன் குடும்பம், சசிகலா குடும்பம், மற்றும் அவர்களை ஒட்டி ஊழல் புரிந்த அனைத்து கட்சிகளின் முக்கிய புள்ளிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், மோடி ஆட்சியில் நடந்த சோதனைகள் அடிப்படையிலான வழக்குகள், வைகோவால் பிரபலமான சாதிக்பாட்சா கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளில் உள்ள குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படும் வரையில், தமிழக பா.ஜ.கவானது நோட்டாக்கட்சியாகப் பயணிக்கப் போவது இயற்கையின் தண்டனையாகும்.'

சசிகலா - நடராஜன் குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள் பறிமுதலுக்கு உள்ளாகத் தொடங்கி இருப்பதானது, தமிழ்நாட்டின் மீட்சிக்கான நல்ல சமூக சிக்னல் ஆகும். அது தொடர்ந்து, பாரபட்சமின்றி கருணாநிதி குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள், அந்த இரண்டு குடும்பங்களையும் ஒட்டிப்பிழைத்தவர்களின் ஊழல் சொத்துக்கள் எல்லாம், அடுத்து அடுத்து பறிமுதலுக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு மீட்கும் ஊழல் சொத்துக்கள் மூலமாக, டாஸ்மாக்கை ஒழித்து, புதிய வரிகள் விதிக்காமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியும்.

2014 முதல் தமிழ்நாட்டில் மோடியின் செல்வாக்கு எவ்வாறு தொடர்ந்து சரிந்தது? என்பதை எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன்.

எல்.முருகன் தலைமையில் மீட்சி திசையில், தமிழக பா.ஜ.க-வின் 'தமிழ் அடையாள அரசியல்' ஒரு நல்ல திருப்பம் ஆகும்.

இந்திய விடுதலைக்குப் பின், முதல் முறையாக, தமிழ்நாட்டில் உள்ள அடையாளச் சிக்கலை தீர்க்கும் முயற்சியானது, மோடி ஆட்சியில் துவங்கி விட்டது.

சசிகலா - நடராஜன் குடும்பங்களின் ஊழல் சொத்துக்கள் பறிமுதலுக்கு உள்ளாகத் தொடங்கி இருப்பதானது எவ்வாறு தமிழ்நாட்டை டாஸ்மாக் நோயில் இருந்தும், ஊழல் நோயில் இருந்தும் மீட்கும்? என்பதை மேலே பார்த்தோம்.

கருணாநிதி குடும்ப ஆதாய அரசியல் வலைப்பின்னலுக்கும், சசிகலா குடும்ப  ஆதாய அரசியல் வலைப்பின்னலுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பார்த்தோம்.

உள்ளாட்சி தேர்தல் வெற்றி தொடர்பாக, அ.இ.அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் வெளிப்படுத்திய கருத்து வருமாறு:

"இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 2,800 இடங்களிலேயே போட்டியிட்டது. தி.மு.க. சுமார் 3,500 இடங்களில் போட்டியிட்டது. ஆகவே சதவீத அடிப்படையில் அ.தி.மு.கவுக்குத்தான் வெற்றி" (https://www.bbc.com/tamil/india-51034481 )

மேற்குறிப்பிட்ட கருத்து சரி என்றால்,

2019 பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தி.மு.கவின் வெற்றி,

அடுத்து வந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிக வாக்கு வேறுபாட்டில் அ.இ.அ.தி.மு.கவின் வெற்றி,

அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில், சரியான மேற்குறிப்பிட்ட கணக்கீட்டின் அடிப்படையில் தி.மு.க வாக்குகளில் சரிவு போன்றவைகள் எதை உணர்த்துகின்றன?

2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றியில் இருந்து, தி.மு.க ஆதரவு வாக்குகள் தொடர்ந்து சரியும் போக்கில் உள்ளன.

உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்,  ஸ்டாலின் மகன் உதயநிதி மூலமாகவும், உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் வலைப்பின்னலை சீர்குலைத்த பாணியில் பிரசாந்த் கிசோர் மூலமாகவும், தி.மு.கவின் வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது சீர் குலைந்து வருகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிகளும், உள்ளாட்சி தேர்தல் வெற்றிகளும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மூலமாக, அ.இ.அ.தி.மு.க வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது வலிமை பெறும் போக்கில் பயணிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

எல்.முருகன் அண்ணாமலை கூட்டணியானது தமிழ் அடையாள அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, அதன் மூலமாக, தமிழக பா.ஜ.க பிரமிக்கும் வகையில் தமிழ்நாடேங்கும் வ:ளரத் தொடங்கியுள்ளது.‌

தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்புகளுடன் ஒட்டி, இயன்ற வரையில் பயணித்து வரும் அடிப்படையில், தி.மு.கவானது 2011 தேர்தலைப் போலவே, 2021 தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவும், என்பது எனது கணிப்பாகும்.‌‌

தமிழ்நாடு இந்தியாவில் நோஞ்சான் மாநிலமாக இதுவரை பயணித்தது.

2021 தேர்தல் முடிவுகள் மூலமாக, தமிழ்நாடு நோஞ்சான் நோயில் இருந்து விடுதலை பெற்று, கர்நாடகம், மகராட்டிரம், பஞ்சாப், கோவா போன்ற வலிமையான மாநிலங்களின் வரிசையில் இடம் பெறத் துவங்கும். (‘தமிழ் உணர்வாளர்களும் இந்துத்வா எதிர்ப்பாளர்களும்/ஆதரவாளர்களும், தி.மு.கவை ஆதரிப்பது மருட்சியில்செய்யும் தவறா?’; https://tamilsdirection.blogspot.com/2020/10/blog-post.html )