திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:
சமூக செயல்நெறி மதகுகள் (1) (Social Functional Checks)
தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ஒரு மனிதர் தவறு செய்ய முற்படும்போது, அதைத் தடுப்பதும், மீறி புரிந்த தவறை உணர்ந்து, திருந்தி வாழ்வதும் அந்த மனிதர் வாழும் குடும்பத்தில், சமூக வட்டத்தில், சமூகத்தில் உள்ள சமூக செயல்நெறி மதகுகளின் (Social Functional Checks) வலிமையைப் பொறுத்ததாகும். சம்பந்தப்பட்ட மனிதரின், அவரின் குடும்பத்தின், அவரின் சமூக வட்டத்தின், அவர் வாழும் சமூகத்தின் 'தராதரம், பாரம்பரியம், பண்பாடு’ போன்றவை, அந்த சமூக செயல்நெறி மதகுகளின் பண்புடன் தொடர்புடையது. அவரின் புறவாழ்வு தவறாக இருப்பின், அந்த நபர் வாழும் சமூகத்தில் உள்ள, சம்பந்தப்பட்ட அரசு, கட்சிகள் போன்ற அமைப்புகளில் எந்த அளவுக்கு அவர் முக்கிய பொறுப்பில் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு, அவரின் தவறுகள் நிறைந்த புற வாழ்க்கையானது, சமூகத்தையும், அந்த அளவுக்குப் பாதிக்கும்.அவரை ஒதுக்காமல் வாழும் குடும்பத்தின், சமூக வட்டத்தின் சமூக செயல்நெறி மதகுகள் அந்த அளவுக்கு பலகீனமாகும்.
ஒரு சமூகத்தில் உள்ள சமூக செயல்நெறி மதகுகள் சிதைவுக்குள்ளானால்,
என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற ஆராய்ச்சிக்கு, இன்றையத் தமிழ்நாடு ஒரு ஆய்வுக்களமாக
உள்ளது. (‘தமிழ்நாடு: தனித்துவமான
சமுகவியல் ஆய்வு பரிசோதனைக் களம் ( Tamilnadu: Unique Sociological Research
Experimental Laboratory)’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
1944-இல் திராவிடர் கழகம் உருவான பின், பொது அரங்கில்
அறிவுபூர்வ விவாதங்கள் ஆனவை, உணர்ச்சிபூர்வமாக தடம் புரண்டதால்,அந்த நோய்க்கு இலக்கான
மனிதர்களின் மனங்களில் உள்ள ஈடுபாடுகளும், அவை தோற்றுவித்த தேவைகளுமே, தமிழ்நாட்டின்
புறவாழ்வில் 'இழிவான' கூறுகள் வெளிப்படக் காரணமாகினவா? என்ற ஆய்வைத் தொடங்க வேண்டிய
தருணம் வந்து விட்டது. அத்தகைய ஆய்வின் மூலம் வெளிப்பட்டதே "அந்த உணர்ச்சிபூர்வ போக்குகள் திராவிட இயக்கத்தில்
வளர்ந்த வேகத்தில், தமிழ்நாட்டில் முளை விட்டு வளர்ந்த பொதுவுடமை இயக்கத்திலும், காங்கிரஸ்
முன்னேடுத்த தேசிய இயக்கத்திலும் பரவியதோ? என்ற ஆராய்ச்சியும் அவசியமாகும்." என்பதையும்
ஏற்கனவே பார்த்தோம்.(‘உணர்ச்சிபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வ ‘சிக்னல்’கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html ).
"அகத்தில் உருவாகி, புறத்தில் வெளிப்படும் எந்த படைப்புகளையும், உணர்ச்சிபூர்வ போக்கில், பெரியாரால் ஊக்குவிக்கப்பட்ட, புறப்பார்வையின்
மூலம் மட்டுமே விளங்கிக் கொள்ள முயற்சித்ததே 'மேற்கத்திய பகுத்தறிவு'ப் பார்வையின்
குறைபாடாகும்." என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘'மேற்கத்தியப் பகுத்தறிவு' (Western Rationalist) அணுகுமுறையின் வரை எல்லைகள்
(Limitations)’ ; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )
ஒரு
மனிதரின் அக வாழ்வோடு தொடர்புடைய, 'தராதரம், பாரம்பரியம், பண்பாடு' போன்றவற்றை, மற்றவர்கள் 'எடை போட்டு, கண்டுபிடிப்பதற்கு',
அவரின் புறவாழ்வு செயல்பாடுகள் எல்லாம் 'சிக்னல்கள்'
ஆகும். தமிழ்நாட்டில் புறவாழ்வில் 'திராவிட மன நோயாளித்தனமாக' வெளிப்பட்ட, கீழ்வரும்
'சிக்னல்களை' ஏற்கனவே பார்த்தோம். ('காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html
)
"உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, பொதுவாக
ஒரே தாய்மொழி பேசும் இருவர் சந்தித்துக் கொண்டால், தங்கள் தாய்மொழியில் தான் உரையாடுகின்றனர்.அதில்
தமிழர்கள் மட்டுமே, அதிலும் அதிகம் படித்தவர்கள், பெரும்பாலும் தமிழில் பேசுவதைத் தவிர்த்து
ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர்.அவர்களை 'ஏக்கமுடன்' பார்த்து, மற்ற தமிழர்களும், அது போல நாமும் பேச வேண்டும்
என்ற 'இலட்சியத்துடன்'(?) வாழ்கின்றனர். அத்தகையோரில் குடிப் பழக்கம் உடையவர்கள், மது போதையில் தப்பும் தவறுமாக தங்களுக்குத் தெரிந்த
ஆங்கில வார்த்தைகளில் பேசி, அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
ஒருவரைப் பற்றி மிகவும் இழிவாக நாம் கருதி, அந்த
நபரின் இழிவான செயல்பாடுகள் பற்றி நமது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் 'விலாவாரியாக'
விவாதித்து விட்டு, அவர் 'செல்வமும்,செல்வாக்கும் மிக்க நபர்' என்ற ஒரே காரணத்தால்,
அவரிடம் நாய் போல் குழைந்தும், காலில் விழுந்தும் 'காரியங்கள்' சாதித்து தமது செல்வத்தை,
செல்வாக்கைப் பெருக்குவது சரியா? அப்படிப்பட்ட நபர்கள் அதிகரித்து வரும் நாடாக தமிழ்நாடு
உள்ளது. அப்படி வாழ்வதே 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்று அவர்கள் குடும்பம், நட்பு
உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில் அந்த நோயைத் தீவிரமாக பரப்பியும் வருகிறார்கள்.”
சமூக செயல்நெறி மதகுகளின் சிதைவின் காரணமாகவே,
"திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தமிழ்நாட்டில் ஊழலில் 'சாதனைகள்' நிகழ்ந்ததா?
என்பதும் ஆய்விற்குரியதாகும். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட இடங்களில் விடுகள் கட்டி,
தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்கள் 'சூறையாடப்பட்டதும்' அந்த 'மனநோயாளித்தன' ஊழல்
சாதனைகளா? என்பதும் ஆய்வுக்குறியதாகும். அந்த 'சாதனைகளின்' ஊடே, வெள்ளைக்காரர்கள் ஆட்சியில்
'சர்வே' செய்து வெளியிடப்பட்ட பல கல்வெட்டுகள் இருந்த மலைகளும் காணாமல் போனது கொடுமை
இல்லையா?" என்பதையும் மேலேக் குறிப்பிட்டப் பதிவில் பார்த்தோம். காவிரி, கச்சத் தீவு, முல்லைப் பெரியாறு போன்றவற்றில் தமிழ்நாட்டுக்கு
பாதிப்புகள், 1967க்குப் பின் தான் உருவானவை
என்பது உண்மையா? என்பதும் அக்கேள்விகளுடன் தொடர்புடையவே ஆகும்.
அதனால் தமிழரின் தரஅடையாளம் கெட்டு, தமிழ், பாரம்பரியம்,
பண்பாடு போன்றவற்றின் மரணப்பயணம் தொடங்கி விட்டதா? அதன் தொடர் விளைவாக, தமிழ்நாட்டில்
வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியர்களைப் போல, வேரற்ற 'தமிங்கிலிசர்கள்' வாழும்
நாடாக தமிழ்நாடு மாற வாய்ப்புள்ளதா? என்ற கேள்விகளையும் முந்தையப்
பதிவுகளில் பார்த்தோம்.
தமிழ்நாட்டில் 1967க்கு முன், எந்தக் கட்சியிலும்
இருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதோ, அமைச்சர்கள் மீதோ ஊழல் குற்றச்சாட்டுகள் கூட
எழுந்ததில்லை. அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதும்,
சட்டத்தின் மூலம் அவர்கள் தண்டிக்கப்பட்டதும் நடந்திருக்கின்றன. அந்த காலக் கட்டத்தில்,
குடும்பத்திலும், சமூக வட்டத்திலும், சமூகத்திலும் சமூக செயல்நெறி மதகுகள் வலிமையுடன்
இருந்ததே அதற்குக் காரணம் ஆகும்.
1944இல் திராவிடர் கழகம் உருவான பின், பொது அரங்கில்
உணர்ச்சிபூர்வ போக்குகள் தலை தூக்கி, சமூக ஒப்பீடு நோயில், லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்'
நஞ்சானது, சமூக ஆற்றல் ரத்த ஓட்டத்தில் கலந்து ஏற்படுத்திய பாதிப்புகளை முந்தையப் பதிவுகளில்
பார்த்தோம். அந்த பாதிப்புகள் தமிழ்நாட்டில் இருந்த சமூக செயல்நெறி
மதகுகளை எந்த அளவுக்கு சிதைத்தன? என்பது ஆய்விற்குரியதாகும்.
1967இல் நடந்த ஆட்சி மாற்றமானது, சமூக ஆற்றல் ரத்த
ஓட்டத்தில் அந்த நஞ்சின் வீரியத்தை அதிகப்படுத்தியதா? என்ற கேள்வியை எழுப்பும் விளைவுகளை
ஏற்படுத்தியது.
அதாவது சமூக ஆற்றல் ரத்த ஓட்டத்தில்,லாப நட்டம் பார்க்கும்
'கள்வர்' நஞ்சு அதிகரித்த வேகத்தில், தவறுகளைத் தடுக்கும், கட்டுப்படுத்தும், சமூக
செயல்நெறி மதகுகள் சிதைவுக்குள்ளானதையே, மேலேக் குறிப்பிட்ட கேள்விகள் உணர்த்துகின்றன.
தமிழ்நாட்டில் 'ஆதிக்க' அளவில், குடும்பத்திலும்,
சமூக வட்டத்திலும், சமூகத்திலும் நடக்கும் தவறுகளைத் தடுப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ,
வலிமையற்றதாக சமூக செயல்நெறி மதகுகள் உள்ளன.
ஊழல் மிகுந்த சமூகத்தில் சட்டத்திற்குப் பயந்து தவறு
செய்யாமல் இருப்பது அரிது. ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள மனிதர்களின் இயல்பைப்
பொறுத்தே, அந்த சமூகத்தின் இயல்பு இருக்கும்.
ஒரு சமூகத்தில் 'செல்வாக்கான நபர்களில்' பெரும்பான்மையோரிடம் உள்ள 'இயல்பே', அந்த சமூகத்தின் இயல்பாக வெளிப்படும். சமூகத்தில் இயல்பில் 'சிற்றின' மனிதர்கள் எல்லாம், எண்ணிக்கையிலும் வலிமையிலும், சிறுமமாக (Minimum) இருக்கும் வரையில், அச்சமூகத்தில் ஊழலும், குற்றங்களும் சிறுமமாக இருக்க, ஓரளவு நிலையான சமநிலையில் (Stable Equilibrium), அச்சமூகமானது பயணிக்கும். 'சிற்றின' மனிதர்கள் எல்லாம், எண்ணிக்கையிலும் வலிமையிலும் அதிகரிக்க, சமூகத்தில் உள்ள 'நல்லின' மற்றும் 'சிற்றின' மனிதர்களின் இயல்புகளுக்கிடையே உள்ள சமநிலை சீர்குலைவும் (disrupted equilibrium), கொந்தளிப்பும்(turbulence), அச்சமூக இயல்பிலும் வெளிப்படும்.
சமூகத்தில், சமூகக் குற்றங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் (Threshold) இருப்பின், அச்சமூகம் சமநிலையில் இருக்கும். வரை எல்லையை தாண்டிய பின், கொந்தளிப்பு (turbulence) உருவாகும், . வரை எல்லைக்கு மேல் (Threshold) தாண்டல் நெடுக்கம் ( range above the threshold) அதிகரிக்க, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே, தற்கொலை,கொலை, கொள்ளை,வன்முறை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் மூலமாக, கொந்தளிப்பு அதிகரிக்கும். கொந்தளிப்புக் கட்டத்திற்கான (Turbulent phase) வரை எல்லையை (Threshold) அடைந்ததும், அடுத்த கட்ட சமநிலைக்கான மாற்றம் (Transition) துவங்கும் திருப்பு முனையை அடையும். இதற்கு மேலும் மோசமாக வாய்ப்பில்லை என்ற நிலையில், அந்த திருப்புமுனைக் கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
தனிநபரின் இயல்பு என்பது,ஒரு தனி நபர் இயல்பாக எந்த
அளவுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், லாப நட்ட நோக்கற்ற இயல்பான அன்புடனும் வாழ்கிறார்?
அல்லது, எந்த அளவுக்கு உண்மையின்றியும், நேர்மையின்றியும், லாப நட்ட நோக்கிலான அன்புடனும்
வாழ்கிறார்? என்ற கேள்விகளைப் பொறுத்ததாகும்.
தனது தராதரம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய அடிப்படைகளிலான, இயல்பின் அடிப்படையில் மேலேக் குறிப்பிட்ட முதல்வகை மனிதர்கள், தமிழ்நாட்டில்
அருகிவிடவில்லை. எந்த வழியிலும், போட்டி போட்டு, செல்வம், செல்வாக்கு சம்பாதிக்கும்
நோயில் சிக்காமல் வாழுந்து வரும், அத்தகையோரின்
அரவணைப்பில் , 'தராதரம், தகுதி, திறமை, பாரம்பரியம், பண்பாடு' போன்றவையெல்லாம் உயிருடன்
இருக்கின்றன.
அத்தகையோர் மனது வைத்து, சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை
ஒதுக்கி வைத்து, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, தமிழும்,
தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
மேலேக் குறிப்பிட்ட , 'திராவிட மன நோய்க் கள்வராக’ வாழ்வது இழிவு' என்பது, எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வேகமாக வளர்கிறதோ, அந்த வேகத்தில் தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது .சமூக செயல்நெறி மதகுகள் அந்த அளவுக்கு மீண்டும் தமிழ்நாட்டில் வலிமை பெறும். உணர்ச்சிபூர்வ விவாதங்கள் ஏளனத்திற்குள்ளாகி, அறிவுபூர்வ விவாதங்கள் மட்டுமே மதிக்கப்படும். தமிழரின் தர அடையாளமும்(benchmark) உயரும்.
No comments:
Post a Comment