Wednesday, December 10, 2014

‘சிலப்பதிகாரமும், அதன் உரைகளும் -                 சில கலைச்சொற்கள்’-       பற்றிய‌ ஒரு ஆய்வுப் பார்வை



பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசையியல் (Tamil Musicology) தொடர்பான தகவல்களை சார்பற்ற முறையிலும், திறந்த மனதுடனும் சமஸ்கிருத நூல்களில் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டு, அவற்றிற்கிடையேயுள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிப்படுத்தும் ஆய்வுமுயற்சிகள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. அத்தகைய அரிய ஆய்வு முயற்சியை முனைவர் ந.ராமநாதன் அவர்கள் மேற்கொண்டு  ‘சிலப்பதிகாரமும், அதன் உரைகளும் -சில கலைச்சொற்கள்’ (தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்ட- சிறிய தனிப்பொருண்மை ஆய்வு நூல்) என்ற அரிய ஆய்வை மேற்கொண்டு,தமிழ் இசை ஆய்வுப் புலத்திற்கு, அரிய தொண்டு புரிந்துள்ளது பாராட்டத்தக்கது. 

அவருடைய ஆய்வில் சிலப்பதிகாரம் மூல வரிகள்(text)  மற்றும் உரையாசிரியர்கள் விளக்கம் ஆகியவற்றிற்கிடையே உள்ள 'குழப்பங்கள்' பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனுடனேயே சமஸ்கிருத நூல்களில் அவை தொடர்பான விளக்கங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே தமிழ் இசையியல் தொடர்பாக ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் முனைவர் பட்டம் மேற்கொள்ள விழைபவர்களுக்கு இந்த ஆய்வு ஒரு தங்கச் சுரங்க நுழைவாயில் என்று குறிப்பிடுவது மிகையில்லை.


தொல்காப்பியம் தொடங்கி சிலப்பதிகாரம் உள்ளிட்டு பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள இசையியல் தகவல்கள் பற்றிய ஆய்வுக்கு உரையாசிரியர்கள் தந்த விளக்கங்களின் வரை எல்லைகளையும்(limitations) ,அந்த வரை எல்லைகளை எவ்வாறு கையாண்டு, புதிய தமிழ் இசையியல் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும் நான் எனது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன். (http://musictholkappiam.blogspot.in/ ; http://www.musicresearch.in/categorydetails.php?imgid=84; )

அந்த வகையில் இந்த ஆய்வில்(‘சிலப்பதிகாரமும், அதன் உரைகளும் -சில கலைச்சொற்கள்’ ) 'பாணி' தொடர்பாக வெளிப்பட்டுள்ள கருத்துக்களுக்கு , எனது ஆய்வு முடிவுகள் அடிப்படையில் கூடுதல் வெளிச்சம் இதில் தர முயன்றுள்ளேன்.

Those interested can read the write up in 

http://www.musicresearch.in/categorydetails.php?imgid=157

No comments:

Post a Comment