Wednesday, December 31, 2014



           தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும்

                           ‘திராவிடச் சிக்கல்கள்’



இந்துத்வா கட்சிகளில் உயர்பதவிகளில் பிராமணரல்லாதோர் வரமுடியாது என்ற பிரச்சாரத்தை முறியடித்தவர், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மோடி.

மத்தியிலும் தனிமனித பலகீனங்கள் உள்ள அரசியல் வாதிகளின் செல்வாக்கில் வளர்ந்து, உச்சக்கட்டத்தை, லட்சக்கணக்கான கோடி ஊழல்களில் தொட்டு, அத்தகைய ஊழல் பெருச்சாளிகள் செல்வாக்கிலிருந்து பெருமளவில் விடுப்பட்டவர்களிடம் , மோடி தலைமையில், ‘புதிய' மத்திய ஆட்சி தொடங்கியுள்ளது.எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்களும் மோடி  ஆதரவாளர்களாக மாற (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU),  பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. வாஜ்பாய்  ஆட்சியானது, 'கூட்டணியில்' சிக்கி தவித்த ஆட்சியாகும். இந்திய விடுதலைக்குப் பின், முதன் முதலாக, தனிமனித பலகீனங்கள் செல்வாக்கு செலுத்த முடியாத, மத்திய ஆட்சியானது, இந்தியாவில் மோடியைப் பிரதமராகக் கொண்டு, வலுவான தனிப் பெரும்பான்மையுடன்  செயல்படத் தொடங்கியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO), மற்றும் உலக ஊழல் நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன. 

30 வருட பொது வாழ்வில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கூட உள்ளாகாதவர் பிரதமர்  மோடி என்று இந்துத்வா எதிர்ப்பாளராகிய 'OUTLOOK' ஆசிரியர் வினோத் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். (“He is dynamic, clean, keen to introduce change and in three decades he has been in public life, corruption or nepotism has not touched him. I could go on singing his praises and risk being expelled by the secular fraternity.”- Vinod Mehta on “Which Way Will He Turn?” http://www.outlookindia.com/)    (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html)

மோடி,  தமது தாய்மொழி குஜராத்தியின் நலன்களையும், தமது மாநில அடையாளமான குஜராத்தியர் நலன்களையும், குஜராத் மாநில நலன்களையும் பாதுகாத்து, வளர்த்து, இந்திய தேசியத்துடன் ஒத்திசைந்த(harmonious) உறவைப் பேண முடியும் என்று நிரூபித்துள்ளதானது,  தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமான முன்னுதாரணமாகும்.

இந்திய தேசியத்தைப் பகையாய் கருதிய திராவிடர் கழகத்திலிருந்து தோன்றிய, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்வழி மரணப் பயணத்திற்குள்ளானதோடு, தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகளையும், குளங்களையும், மலைகள், மணல், தாது மணல் உள்ளிட்ட கனிம வளங்களையும் சூறையாடி, தனி மனித உறவுகளில் லாபநட்டம் பார்க்கும் கள்வர் (திருக்குறள் 813) நோயில் தமிழக மக்களைச் சிக்க வைத்து, குடும்பம்,நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சிதைத்து வரும் பாதிப்புகளையும், தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியையும், அனுபவபூர்வமாக உணர்ந்து வருபவன் நான்.

குஜராத்தில் மோடி நிரூபித்துக் காட்டிய‌ வழியில் , தமிழ்வழிக் கல்வியை மரணப்பயணத்திலிருந்து மீட்டு, தமிழர் நலன்களையும், தமிழ்நாட்டின் நலன்களையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது. கீழ்வரும் தகவல் அதற்கு வலிவூட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சிந்தனையாளர் குழு(Think Tank), வரும் கல்வி அண்டு முதல் அமுல்படுத்த, ஒரு புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். அதில் இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள்  எட்டாம் வகுப்பு வரை, தமது தாய்மொழியிலேயே படிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஊடகத்தில் வெளிவந்துள்ள அத்தகவலின்படி, மோடி ஆட்சியில், தமிழ்நாட்டில் மத்திய அரசு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தாய்மொழித் தமிழ்வழிக்கல்வியில் தான், தமிழர் குடும்பப் பிள்ளைகள் படிப்பதற்கான சாத்தியம் உள்ளது. ஊழலற்ற, சாதி, மத அடிப்படைகளில் பாரபட்சமற்ற, குஜராத் மாதிரி ஆட்சியும்,  தாய்மொழிக் கல்வியும் உறுதியானால், தமிழ்நாட்டின் நலனுக்கு, பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதே நல்லது என்பது என் கருத்து.('தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8) தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்';
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html) 

மோடிக்கு வெளிப்பகையை விட உட்பகையே இன்னும் வலிவாகத் தொடர்கிறதோ, என்ற கேள்வியைக் கீழ்வரும் தகவல் எழுப்புகிறது.

இந்துத்வா/மோடி எதிர்ப்பு இதழ் ‘Times of India’  நடத்திய 'சர்வே'யில், இந்தியாவில் 75% சதவீத மக்கள் மோடியின் ஆட்சியை நன்றாக உள்ளது எனவும்,2/3 தகவு மக்கள் அரசு நாட்டின் வளர்ச்சி மீதும், பொருளாதாரத்தின் மீதும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள். (Times of India Dt. 1st Jan, 2015 ‘Faith in Narendra Modi govt high, but Sangh hotheads a concern: TOI survey’) 


இந்தியாவில் மதத்தின் பேரில் 'சட்டம் ஒழுங்கு' பிரச்சினையை ஏற்படுத்தும் இந்து மத வேறியர்களும், 'பயங்கரவாதிகளை' ஆதரிக்கும் முஸ்லீம் மத வெறியர்களும், வெளிநாட்டு நிதி உதவியுடன் போலி மனித உரிமை, சமூக சேவை, முகமூடிகளுடன் சமூக ஒற்றுமையைச் சிதைக்கும் கிறித்துவ  NGOS-என்.ஜி.ஓக்களும்-  மோடியின் ஆட்சிக்கு எதிரிகள் என்பதை விட, இந்திய நாட்டின் நலன்களுக்கு எதிரிகள் என்று அடையாளம் காண்பதே சரியாகும். 

தமக்குக் கிடைத்த வெற்றியையும், செல்வாக்கையும், மற்ற தலைவர்களைப் போல 'தனிமனித வழிபாடு' போக்கிற்கு பயன்படுத்துவதை விட, மக்கள் பங்கேற்புடன் கூடிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் மோடி செயல்படுவது கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். நாடகத்திற்கு செய்ததாக வைத்துக் கொண்டாலும், 'அப்பா அம்பானி' செய்திருப்பாரா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், 'மகன் அம்பானி' துடைப்பதைக் கையில் ஏந்தி கோவிலைச் சுத்தம் செய்திருக்கிறார். இந்திய விடுதலைக்குப் பின், முதல் முறையாக 'தூய்மை இந்தியா' திட்டம் மூலம், மக்களை ஜனநாயக முறைக்கு உட்படுத்தும் (inclusive process)  முயற்சியானது, பிரதமர் மோடியால் துவங்கப்பட்டுள்ளது. " civic participation is critical for democracies to function" - Robert D.Putnam  ' Making Democracy Work: Civic Traditions in Modern Italy'

'பெரியார்' காமராசரை ஆதரித்த திசையில், வட இந்தியாவில், இந்துத்வாவை எதிர்த்த நற்புகழுள்ள(highly reputed)  எழுத்தாளர்களும், முஸ்லீம் அறிஞர்களும் மோடியைப் பகிரங்கமாக ஆதரித்து வருகிறார்கள். நான் சந்திக்கும், 'சுயலாப நோக்கற்ற' 'பெரியார்' ஆதரவாளர்களும், அதே போல மோடியை ஆதரித்து என்னிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.


'சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, தமது நிலைப்பாடுகளை மக்கள் நலன் நோக்கில்(உடல்.மனம் பிறர் சாரா போக்கில்- physically & mentally independent-  இருந்தது வரையில், 'பெரியார்' செய்தது போல) 'திருத்திக் கொள்ளாமல்' பழைய திசையிலேயே பயணிக்கும் 'பெரியார்' ஆதரவு கட்சிகளெல்லாம் உதிர்ந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் 'இழிவான இடம்' பிடிக்க போட்டி போடும் நிலை வந்தால் வியப்பில்லை. 'பெரியாரின்' முழு பொதுவாழ்வையும், அவரின் தியாகங்களையும் கணக்கில் கொள்ளாமல், அவரைப் பற்றி 'இழிவாக', 'திராவிட உணர்ச்சிபூர்வ பாணியில்' பேசி/எழுதி வரும் 'இந்துத்வா' ஆதரவு பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், 'பெரியார்' கட்சிகள் 'நன்றி' சொல்லவேண்டும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தவறான திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கு, 'ஆக்ஸிஜன்' வழங்கி,  'உயிருடன்' நீடிக்க உதவி வருபவர்களும் அவர்களே ஆவர்.

இத்தகைய சிக்கலான சூழலில்,  தமிழக பா.ஜ.க, மேற்குறிப்பிட்ட திசையில், தமிழ்நாடு மீள உதவும் திசையில் பயணிக்கிறதா? என்ற கேள்வியும் ஆய்விற்குரியதாகும். 

அந்த நோக்கில்,தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் சிக்கல்கள் பற்றி அடுத்து பார்ப்போம்.  
        
"அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்ற சாதாரணத் தமிழர்களின் எண்ணிக்கை அபரீதமாக அதிகரித்து வருவது பற்றியும், கல்லூரி மாணவர்களிடையே 'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகி வளர்ந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை மிகவும் வருத்தப்படும் அளவுக்கு வீழ்ந்து வருவது பற்றியும், தமிழ்நாட்டில் கவலை இருப்பதாகத் தெரியவில்லை." என்பதை ஏற்கனவே பார்த்தோம்.( ‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு’ ;
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html  )

"தமிழ்நாட்டில் பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் நடத்திய பொதுக் கூட்டங்களில் அதிக அளவில் பங்கேற்காத படித்த இளைஞர்கள்,  திருச்சியில் நடந்த மோடி பேசிய கூட்டத்தில் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு பெற்று,  பங்கேற்றது ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகும்." என்பதையும் அதில் பார்த்தோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில், குடும்பக் கட்சிகளையும், தி.மு.கவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்திருந்த கட்சிகளையும் ஒதுக்கி, மற்ற சிறிய வட்டாரக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்து,பா.ஜ.க களமிறங்கியிருந்தால், திருச்சி உள்ளிட்டு (அந்த அளவுக்கு மறைந்த திருச்சி எம்.பி மோகன் குமாரமங்கலத்தின் பேரில் இன்றும்  மதிப்பு குறையாமல் உள்ளது) கூடுதல் தொகுதிகளில் வென்று, வாக்கு சதவீதத்தையும் கூட்டியிருக்க முடியும் என்பது என் கணிப்பு ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், 14 தொகுதிகளில் போட்டியிட்டு, விஜயகாந்த கட்சி பெற்ற வாக்குகளை விட, கூடுதல் வாக்குகளை, 7 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட பா.ஜ.க பெற்றுள்ளதும் கவனிக்கத் தக்கதாகும்.

தமிழ்நாட்டில் மக்களிடம் அதிக செல்வாக்குள்ள ஒரே தலைவர் ஜெயலலிதா என்றாலும், அவரைத் தவிர்த்து, மற்றவரெல்லாம் ஒன்றுமில்லை எனும் அளவுக்கு அவரது கட்சியும், ஆட்சியும் உள்ளது. அவர் சிறை சென்ற போது, பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்திய வன்முறைகளும், மீடியாக்களில் வரும்,  உள்ளூர் மக்கள் கேலி பேசும் அளவுக்கு பணம் கொடுத்து, கோவிலில் மொட்டை போடுதல் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு, (உண்மையாக செய்பவர்கள் இருந்தாலும்) எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டி வரும் நிகழ்ச்சிகளும், வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்று சரியாகக் கணிக்க முடியாது.

"முள்ளி வாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்னும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களிடையே, அவை அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை. அதே போல்,  ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னும், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடந்த ஊடகச் செய்திகள் அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை.அந்த அளவுக்கு தமது கல்வி, வேலைவாய்ப்பு, சினிமா. கிரிக்கெட், காதல், பலவகையான பொழுது போக்குகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, 'அந்நியமாக' வாழ்வதும், குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தின் அறிகுறிகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்." என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மோடி பிரதமராகி, மத்தியில், லஞ்சத்திற்கு இடமில்லாத வகையிலும், உயர் அதிகாரிகள் உள்ளிட்டு அனைவரும் குறித்த நேரத்தில் அலுவலத்திற்கு வந்து பணியாற்றுவதும், கோப்புகள் தாமத்திற்குள்ளாகதவாறு கண்காணித்து, முடிவுகள் எடுக்கப்படுவதும், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு கூடி வருவதும் மீடியாக்கள் மூலமாக மோடி அலையின் வலிமையைக் கூட்டி வருகிறது. அதன் விளைவாய், தமிழ்நாட்டில் உள்ளதைப் போல், மிகவும் மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சியாக இருந்த பா.ஜ.க, அரியானாவில் ஆட்சியைப் பிடித்தது. மகராஷ்ட்ர மாநிலத்திலும், செல்வாக்குடன் இருந்த சிவசேனாவைப் பின்னுக்குத் தள்ளி,  ஆட்சியைப் பிடித்தது. நம்பமுடியாத அளவுக்கு காஷ்மீரிலும் வலிமையான இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்ததன் மூலம், தமிழ்நாட்டு ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதும் ஆய்விற்குரியது.

அது மட்டுமல்ல, வாக்காளர்களை விலைக்கு வாங்கி, அதீத வித்தியாசத்தில் வெற்றி ஈட்டிய 'திருமங்கலம் ஃபார்முலா'வை நம்பி, செயல்பட்ட தி.மு.க ஆட்சியை இழந்தது. அதன்பின் வந்த ஆட்சியில், மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும், வேட்பாளர்களையும் விலை கொடுத்து வாங்கும் 'ஃபார்முலா'வாக  அது வளர்ந்துள்ளது என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க ஆட்சிகளில் 'பலன்' பெற்று அக்கட்சிகளின் 'செல்வாக்கு வளையத்தில்' 'சிக்காத' தலைவர்கள் பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த 'செல்வாக்கு வளையத்தில்' கிறித்துவ என்.ஜி.ஓக்கள் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதே போல் அடிமட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் வரை 'எந்தக் கட்சி' ஆட்சியில் இருந்தாலும், 'காண்டிராக்ட்' உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்' 'பங்கு' பெறாத கட்சியினர் யார் யார் என்று கண்டுபிடிப்பது, அந்ததந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக உள்ளது, என்பது உண்மையா? பொய்யா? பா.ஜ.க வில் மேலேக் குறிப்பிட்ட 'செல்வாக்கு வளையத்தில் சிக்கியவர்கள் இருந்தால், அது  மோடி அலை மூலம் வேரூன்றுவதற்கு சிக்கலாக மாறாதா?  

ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் அ.இ.அ.தி.மு.கவும், தி.மு.கவும் மாறி மாறி அங்கம் வகித்து, தமிழ்நாட்டில் பா.ஜ.க வை விரும்பி  'தீண்டத்தகும்' கட்சியாக தமிழகத்திற்கு அடையாளம் காட்டி விட்டனர். தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். இன்னொரு முன்னாள் அமைச்சர் மீது நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால், அவர் விரும்பி முயற்சித்தும், சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆக திராவிடக் கட்சிகளில் இருந்தவர்கள்,  பா.ஜ.கவில் சேரும் படலம் தொடங்கி விட்டது. 

அவர்களெல்லாம் ஊழலற்ற ஆட்சி தமிழகத்திற்கு வர வேண்டும் என்று சேர்கிறார்களா? அல்லது தமது ஊழல் வாய்ப்புகளுக்கு 'அக்கரைப் பச்சை' என்று தாவுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அநேகமாக‌ வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன், தமிழக பா.ஜ.க வானது, தமிழ்நாட்டில் 'திராவிட பா.ஜ.க'வாக தேர்தலைச் சந்தித்தாலும் வியப்பில்லை. திராவிடக் கட்சிகளானாலும், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளானாலும், 'உணர்ச்சிபூர்வ பேச்சாளர்கள்' இழிவான சுயநல சமரசப் போக்கில் 'ஒரே மாதிரியானவர்கள்' என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)  தமிழ்நாட்டில் அந்த சிக்கலை மோடி அலை எதிர்கொண்டாக வேண்டிய நிலை உருவாகிறது.

தமிழ்நாட்டில் தினமும் ஆங்கங்கே அடிப்படை வசதிகளுக்காகவும், மோசடி பேர்வழிகளுக்கு எதிராகவும் மக்கள் தாமே போராடி வருவதிலிருந்து, ஒதுங்கி நின்று, 'குறுக்கு வழிகளில்', மற்ற கட்சிகளின் ' ஆதாயத் தலைவர்கள்/தொண்டர்களை' தம் பக்கம் இழுத்து, பயணித்து ஆட்சியைப் பிடிப்பது இனி நடக்க வாய்ப்பில்லை; பா.ஜ.கவாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், என்பதும் என் கணிப்பாகும்.

ஊழல் மூலம் சொத்து சேர்க்க அவசியமில்லாதவர்களும், ஊழல் பசியில்லாதவர்களும் பொது நலனில் உண்மையாக அக்கறை உள்ளவர்களும் அதிக அளவில் பா.ஜ.கவில் சேரும் போது, திராவிடக் கட்சித் தலைவர்கள் பாணியில் உணர்ச்சி பூர்வ பேச்சுக்கள் வெளிப்படுவதையும், ஆளுயர மாலை, மலர்க் கிரீடம் என்று திராவிடக் கட்சிகள் அறிமுகப்படுத்திய பொது அசிங்கங்களையும், தவிர்த்து, குஜராத்தில் குஜராத் மொழி, மாநில நலன்களை மோடி பேணிய வழியில், தமிழ் மொழி, தமிழ்நாட்டின் நலன்களுக்காக செயல்படும்போது, அரியானா வழியில் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சி அமைவது சாத்தியமே; 2021 அல்லது அதற்கு முன்னரே நடக்க இருக்கும் தமிழக சட்ட மன்ற தேர்தலில்.

வ.உ.சி தவிர்த்து, வேறு எந்த தலைவரும் இணை சொல்ல முடியாத அளவுக்கு, தியாகங்கள் புரிந்து வாழ்ந்த ஈ.வெ.ராவிற்கு, தனது அறிவு வரைஎல்லைகள் (limitations) பற்றிய புரிதல் இல்லாததன் காரணமாகவும், 'பெரியார்' என்று 'சிறை'பட்டதன் காரணமாகவும், 'ஊழல் பெரும் பசியாளர்களின்' ஆதிக்கத்தில் 'தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும்' சீரழிந்தது எவ்வாறு? என்பதை, எனது பதிவுகளை படித்து வருபவர்கள் அறிவர். ‘அதே சீரழிவில்’ தமிழக பா.ஜ.கவும் சிக்கியுள்ளதா? என்ற கேள்வியை கீழ்வரும் குறிப்பு எழுப்புகிறது.

குறிப்பு: 1.

கேள்வி: காங்கிரசுக்கு இணையாக தமிழக பி.ஜே.பியிலும் கோஷ்டி பூசல் உள்ளதே?


பதில்: சேச்சே‍, காங்கிரசோடு எப்படி பி.ஜே.பியை ஒப்பிட முடியும்? மொழிவாரி பிரிவுகளும், சாதிவாரி சிக்கல்களும், தமிழக காங்கிரசில் இருக்கிறதா என்ன?

நன்றி: தமிழக அரசியல் 21.10. 2015 


2.  'இந்த அவமானம் தேவையா? கோஷ்டி அவலத்தில் தமிழக பா.ஜ.,'
       http://www.dinamalar.com/news_detail.asp?id=1474411

'நடக்காது' என்று கன்னியாகுமரியில், 'விவேகானந்தர் நினைவக' திட்டத்தை தொடங்கியவர்களே கருதியிருந்த நிலையில்; 'அந்த தடைகளை'  எவ்வாறு முறியடித்து, ஏக்நாத் ரானடே (Eknath Ranade) சாதித்தார்? என்பதை, 'வாய்மையை' காவு கொடுக்காமல், அவரே பதிவு செய்துள்ளார்; ' The Story of the Vivekananda Rock Memorial’ என்ற நூலில். அதே போல், எந்த கொள்கையை பின்பற்றினாலும், பொதுவாழ்வில் எப்படி வாழ்ந்தால் சாதிக்க முடியும்? என்பது தொடர்பான 'அனுபவபூர்வமான வழிகாட்டும்' நூலையும் அவரே அழுதியுள்ளார். அந்த நூல் ‘ Sadhana of SERVICE’. (vkpt@vkendra.org) 

மேற்கண்ட குறிப்பில் உள்ள தமிழக பா.ஜ.க தலைவர்கள் எல்லாம், குற்ற உணர்வின்றி, ஏக்நாத் ரானடே பற்றி பேச முடியுமா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். 

No comments:

Post a Comment