Thursday, December 25, 2014



          இந்திய செவ்விசையில் சுருதிச் சிக்கல்கள்

                                (Pitch Problems in Indian Classical Music)


உலகில் எந்த இசைக்கும் அடிப்படைகளாக சுருதியும்(pitch), சுருதி அமைப்பும்(tuning system)  உள்ளன.

இசைக்கச்சேரி தொடங்கும் முன், இசைக்கருவிகளில் ‘சுருதி சேர்த்தல்’ (tuning) எவ்வளவு சரியாக அமைக்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தே, அந்த இசை நிகழ்ச்சியில் 'சுருதி சுத்தமாக' (pitch accuracy) இசை நிகழ்ச்சி நடைபெறும்.
என்ன ராகத்தில் இசை நடைபெறப் போகிறதோ, அந்த ராகத்தில் இடம் பெறும் இசைச் சுரங்களுக்கான ' இசை இடைவெளிகள்' (music intervals) மற்றும் சுருதித் தீர்மானிப்பு (pitch standard) ஆகியவை,  'சுருதி சேர்த்தலில்' முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுருதி சேர்த்தபின், இசை நிகழ்த்தும்போது இசைவாணர்கள், அந்த குறிப்பிட்ட இசை இடைவெளிகளோடு நின்றுவிடாமல், நிகழ்த்தப்படும் இசைக்கு தேவைப்படும் நுட்பமான அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்த, அந்த சுருதிகளுக்கு மேலும் கீழும் உள்ள நுண்ணிய இடைவெளிகளுக்கும் சென்று, இசை எழுப்புவார்கள்.அவ்வாறு ஒரு மெலடிக்கான(melody) சுரங்களை இணைத்து இசை எழுப்பும் நுண்ணிய இசைப்பணிக்கு பயன்படும் இசை இழைகளைப்(Musical threads) பற்றிய அரிய தகவல்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ( Published in Sangeet Natak Vol XLII, Number 3,2008:’Musical Threads – A New Musicological Concept discovered from the Ancient Indian Music’)

சுருதி(pitch) என்பது, சுருதித் தீர்மானிப்பு(pitch standard) அடிப்படையிலும்,சுருதி அமைப்பின்(Tuning system)  அடிப்படையிலும்,  ஒரு இசைச் சுரத்திற்கான அதிர்வு எண் (frequency) காரணமாக, செவியில் ஏற்பட்டும் ஒரு பண்புரீதியிலான ஓசை உணர்வு (sensory characteristic)  ஆகும்.( Pitch can be defined as a sensory characteristic arising out of the frequency assigned to a note in a musical scale. The frequency assigned to a music note is based on the tuning system and pitch standard.)

தற்போது வழக்கத்தில் உள்ள சுருதிப்பெட்டியும், ஆர்மோனியமும் மேற்கத்திய இசையிலிருந்து, காலனிக் கட்டத்தில் கிறித்துவ பாதிரியார்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.அந்த அறிமுகத்திற்குப்பின் தான், கர்நாடக இசையில், ஆர்மோனிய அடிப்படையில், 'கட்டை' என்ற இசைக்கருத்தும், இந்துஸ்தானி இசையில் 'வெள்ளை -கறுப்பு' (white-Black) என்ற இசைக்கருத்தும் அரங்கேறின.

1939இல் லண்டனில் கூடிய சர்வதேச இசை மாநாடு உலகிற்கான சுருதித் தீர்மானிப்பை முடிவு செய்து அறிவித்தது. அதுவரை மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மதிப்பில் சுருதித் தீர்மானிப்பு இருந்தது. எனவே 1939க்கு முன், இந்தியாவிற்குள் நுழைந்த ஆர்மோனியமும், சுருதிப்பெட்டியும், அதை அறிமுகப்படுத்திய கிறித்துவப் பாதிரியார்கள் எந்தெந்த மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்தார்களோ,  அந்தந்த நாடுகளில் இருந்த சுருதித் தீர்மானிப்பு மதிப்புகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்தன. இவை பற்றிய சான்றுகளுக்கு: Chapter 1, ‘Ancient Music Treasures – Exploration for New Music’ by Dr.Vee

இந்திய செவ்விசையாக, கர்நாடக இசையும், இந்துஸ்தானி இசையும் உள்ளன.

கர்நாடக இசைக்கும், இந்துஸ்தானி இசைக்கும்  உள்ள சுருதி அமைப்பும்(tuning system), சுருதித் தீர்மானிப்பும்(pitch standard) யாவை?

சுருதிப்பெட்டியின் அறிமுகத்திற்கு முன், கர்நாடக இசையில் இருந்த இசைப்புலமை மிக்க ஆசிரியர்கள், தம்பூராவில் தமது 'பாணிக்கான' சுருதி அமைப்பையும், சுருதித் தீர்மானிப்பையும், அடிப்படைகளாகக் கொண்டு, சுருதி சேர்த்து, இசை கற்பித்தார்கள்;இசை நிகழ்த்தினார்கள்.

அது போலவே சுருதிப்பெட்டியின் அறிமுகத்திற்கு முன், இந்துஸ்தானி இசையில் இருந்த இசைப்புலமைமிக்க ஆசிரியர்கள், தம்பூராவில் தமது 'கரணாவிற்கான‌'(gharana)  சுருதி அமைப்பையும், சுருதித் தீர்மனிப்பையும், அடிப்படைகளாகக் கொண்டு, சுருதி சேர்த்து, இசை கற்பித்தார்கள்;இசை நிகழ்த்தினார்கள். இசைத் தகவல் தொழில் நுட்பம் (Music Information Technology) அடிப்படையில், அந்த இசை ஆசான்களின் ஒலிப்பதிவுகளிலிருந்து, அவர்கள் பின்பற்றிய சுருதித் தீர்மானிப்பையும்,சுருதி அமைப்பையும் கண்டுபிடித்து பாதுகாப்பது சாத்தியமே. அதற்கான முயற்சியில் எவரும் ஈடுபட்டால், எனது ஆய்வு ஆலோசனையை நான் வழங்க இயலும்.

ஆர்மோனியமும், அதன் அடிப்படையில் உருவான சுருதிப் பெட்டியும் மேற்கத்திய இசையில் உள்ள ' சமச் சுருதி இடைவெளி'(Equal Temperament)  என்ற சுருதி அமைப்பின் (Tuning System) அடிப்படையில் உருவானவையாகும்.

மேற்கத்திய இசையில் கிரகபேதம்- Modulation - (ஒரு ராகத்திலிருந்து, இன்னொரு ராகத்திற்கு ஒரே பாடலில்/composition மாறுவது)  சிக்கலை வெற்றிகரமாக தீர்த்த அந்த Equal Temperament ஆனது, அதற்கு விலையாய், இசையில் இருந்த இனிமை தரும் இடைவெளிகளைப் பாதித்தது. எனவே அதைப் பற்றி விஞ்ஞானி  நியூட்டன் கீழ்வரும் கருத்தை வெளியிட்டார்.

“ஒரு நல்ல வியமானது நீரில் சிக்கி,வண்ணங்கள் மங்கி இருப்பதைப் பார்க்கும் உணர்வு போன்றதே, ஒரு நல்ல இசையை   Equal Temperament-இல் கேட்கும் உணர்வு ஆகும்.”

“The alterations of the modernists rob music of its real power. To those who know better, equal temperament's compromised tuning is as ungrateful to the ear as "soiled and faint colors are to the eye." . . .
-pp24-25 - Stuart Isacoff, Temperament, Alfred A. Knopf, New York, 2001.

ஒரு ராகத்திலிருந்து/ஸ்கேலிலிருந்து(scale in western music), இன்னொரு ராகம்/ஸ்கேல் வருவிக்கும் முறை கிரக பேதம்/ modulation ஆகும். ஒரு பாடலை/ இசைக்கும் முன், அந்த பாடலின் ராகத்திற்கான/scale சுரங்களுக்கு, சுருதிசேர்த்தல்/tuning  செய்ய வேண்டும். இன்னொரு ராகத்தில் பாடலை/composition இசைக்கும் முன், அந்த பாடலின் ராகத்திற்கான/scale சுரங்களுக்கு சுருதிசேர்த்தல்/tuning  செய்ய வேண்டும். ஒரே பாடலில்/same composition,      ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்கள்/scales இடம் பெறும்போது, அப்பாடலில் முதல் ராகத்திலிருந்து/scale    அடுத்த ராகத்திற்கு/scale மாறும்போது, முதல் ராகத்துக்கான/scale சுருதி சேர்த்தல் நிலையிலிருந்து மாறி, பாடலை இசைத்துக் கொண்டிருக்கும் போதே, அடுத்த ராகத்திற்கான/scale சுரங்களுக்கு சுருதிசேர்த்தல்/  செய்ய வேண்டும். சுரத்தீர்மானிப்பு (pitch standard), சுருதி அமைப்பு(tuning system)  ஆகியவற்றில் துல்லியமாக இசைப்பவர்களுக்கு, அதிலுள்ள சிக்கல் தெரியும்.

திருவையாறு தியாகராஜர் உற்சவத்தில் இறுதி நிகழ்ச்சியாக 'பஞ்ச ரத்தின கீர்த்தனைகள்' இடம் பெறும். அதில் ஒரு ராகத்திலிருந்து அடுத்தடுத்து மேலும் நான்கு ராகங்களுக்கு மாறும், கிரகபேதம்-Modulation- சுருதி சேர்த்தல் மாற்றங்கள்,  நடைபெறுகின்றன‌. அது போல இந்திய செவ்விசையில் இந்துஸ்தானி இசையிலும், கர்நாடக இசையிலும் காலனியத்திற்கு முன், கிரகபேதப் Modulation  பாடல்கள் இசைக்கப்பட்டதற்கு சான்றுகள் இருக்கின்றனவா? இருந்தால், அவற்றில் இசை இடைவெளி சிக்கல்களை (problems in the musical intervals)  எவ்வாறு தீர்த்தார்கள்? இல்லையென்றால், கால‌னியக் கட்டத்தில், இந்திய அரச 'தர்பார்களில்'‍,  மேற்கத்திய இசையில் -கிரகபேத இசை  -compositions with modulation - ஒலித்ததை முன்மாதிரியாகக் கொண்டு, அது போல இந்திய செவ்விசையிலும் அறிமுகப்படுத்தியுள்ளார்களா? (குறிப்பு கீழே) வீணையில் உள்ள அசையா மெட்டுக்கள்(Fixed Frets) , கிதாரைப் போல Equal temperament    முறையில் அமைந்துள்ளனவா? இல்லையென்றால், எந்த சுருதி அமைப்பில் (tuning system)  அந்த அசையா மெட்டுக்கள் அமைந்துள்ளன? சித்தாரில் அசையும் மெட்டுக்கள்(movable frets)  இருப்பதால், கிரகபேத Modulation  இசையை அதில் இசைக்க முடியாது என்பதை மறுக்க முடியுமா?  போன்ற ஆய்வுகளே கால‌னியத்தின் பாதிப்புகளிலிருந்து இந்திய இசையை மீட்கும்.

கர்நாடக இசையில், ஆர்மோனிய அடிப்படையில், 'கட்டை' என்ற இசைக்கருத்தும், இந்துஸ்தானி இசையில் 'வெள்ளை -கறுப்பு' (white-Black) என்ற இசைக்கருத்தும்   இந்திய இசையில் Equal Temperament -இன் மறைமுக ஆதிக்கத்திற்கும், அதன் மூலம் சுருதிச் சிக்கல்களுக்கும்(pitch problems)  வழி வகுத்தன.  (Indirect invasion of Equal temperament into Indian music, leading to the pitch problems)

எலெக்ட்ரானிக் கருவிகளுக்கு முன், மேற்கத்திய இசையில் சுருதி சேர்க்க(tuning)  உதவும் சுருதித்தீர்மானிப்பு கருவியாக(pitch guidance device),  சுருதிக் குழல் (Pitch Pipe)  பயன்படுத்தப்பட்டது. வயலின்,வீணை போன்ற நரம்பிசைக் கருவிகளில், இசைக்கும் முன், சுருதி சேர்க்க வேண்டியது அவசியமாகும். ஆனால் குழல் போன்ற காற்றிசைக் கருவிகளில், அக்கருவிகளை உருவாக்கும் போதே, சரியான சுருதியுடனேயே வடிவமைக்கப்படுகின்றன. எனவே நரம்பிசைக் கருவிகளைப் போல, அவற்றிற்கு சுருதி சேர்க்க வேண்டிய தேவை கிடையாது. அவை சுருதித்தீர்மானிப்பு கருவியாகவும் (pitch guidance device) செயல்படலாம்.

தொன்மை இந்தியாவில்(Ancient India)  சுருதி அமைப்பும்(tuning system),சுருதித் தீர்மானிப்பும்(pitch standard) எவ்வாறு இருந்தன?

தொன்மை இந்தியாவில் காளிதாசர் காலத்தில் சுரத் தீர்மானிப்பு கருவியாக குழல் செயல்பட்டதற்கான சான்று ‘The Music of India: A Scientific Study’ (page 54- Munshiram Manoharlal Publishers Pvt Ltd  NewDelhi 1981) என்ற நூலில் உள்ளது. (“However, the flute seems to have been used as a drone (sthanaka) from at least the time of Kalidasa.” (vide V.Raghavan, Music in Sanskrit Literature, Qly,Jl, Nat. Centre for Perf. Arts, Bombay, VII, no.1, 1979)

அதே போல், சிலப்பதிகாரத்தில் சுரத் தீர்மானிப்பு கருவியாக, குழல் செயல்பட்டதற்கான சான்று உள்ளது. வங்கியம் எனப்படும் ஒரு குழல் வகை இசைக்கருவியில் நீளம், துளைகளின் அளவுகள் பற்றிய சூத்திரம் 'பஞ்ச மரபு ' என்ற நூலிலிருந்து, சிலப்பதிகார உரையில் மேற்கோளிட்டு விளக்கியுள்ளனர். அந்த அளவுகளை அடிப்படையாகக் கொண்டு, வாயுவில் அதிர்வுகள் (vibrations in air columns)  தொடர்பான விதிகளைப் பயன்படுத்தி, விபுலானந்த அடிகள் தனது 'யாழ் நூலில்' கணக்கிட்டு காண்பித்துள்ளார். அந்த கணக்கிட்டில் சமன் தான, மத்திய ஸ்தாயி- Middle Octave  ‘ச’ என்ற இசைச்சுரத்திற்கான சுருதி அதிர்வு எண் மதிப்பை கணக்கிட்டு காண்பித்துள்ளார்.

1939இல் லண்டன் சர்வதேச இசை மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட சுருதித் தீர்மானிப்பு மதிப்பு(International pitch standard)  தெரியாமல், இயற்பியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் இசைக்கவையின்(Tuning Fork)  அதிர்வு எண் 256Hz ஐ, அவர் தமது கணக்கிட்டில் பயன்படுத்தியுள்ளார்.( கர்நாடக இசை அறிஞர் சாம்ப மூர்த்தியும், 1939 சர்வதேச சுருதித் தீர்மானிப்பு மதிப்பு தெரியாமல், ‘ச’ சுரத்தின் சுருதி அதிர்வு எண் மதிப்பு 240 Hz என்று கற்பனை செய்து, தனது சுருதிக் கணக்கீடுகளில் பயன்படுத்தியுள்ளார்.)

அதே போல, அலைவு நீளம், முனைத் திருத்தம் போன்ற அளவுகளிலும் சிறு பிழைகள் விபுலானந்த அடிகளின் கணக்கீட்டில் உள்ளன. அவற்றை, சான்றுகளுடன் சுட்டிக்காட்டி,  எனது முனைவர் பட்ட ஆய்வேட்டில்(1996) சரியான முறையில் கணக்கிட்டு காண்பித்துள்ளேன். (‘தமிழ் இசையியல்- புதிய கண்டுபிடிப்புகள்’ (2009) சேகர் பதிப்பகம், சென்னை) அம்மதிப்பு இன்றுள்ள சர்வதேச சுருதித் தீர்மானிப்பு மதிப்புக்கு நெருக்கமாக இருப்பது வியப்பூட்டுவதாகும்.

மேற்குறிப்பிட்ட ஆய்வுமுடிவுகளை சென்னை தமிழ் இசைச் சங்க கருத்தரங்கில் சமர்ப்பித்தேன். அப்போது தலைமை தாங்கிய இசை அறிஞர் மீ.ப.சோமு தமது உரையில் 'நாதஸ்வரம்' செய்யும் போது, சுரத் தீர்மானிப்பு கருவியாக ஒரு வகைக் குழல் பயன்பட்டதை தான் பார்த்த தகவலை வெளிப்படுத்தினார். எனது உரையும் அவரின் கருத்தும், அந்த வருட கருத்தரங்க மலரில் வெளியாகியுள்ளது.

அதே போல், 'சுருதி சேர்த்தல்' என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் 'நல்லிசை நிறுத்தல்' என்று அழைக்கப்பட்டதையும், எவ்வாறு சுருதி சேர்க்கப்பட்டது என்பதையும், குழலை அடிப்படையாகக் கொண்டு நரம்பிசைக் கருவிகள் மட்டுமின்றி, தோலிசைக் கருவிகளும் சுருதி சேர்க்கப்பட்டன என்பதையும், அவ்வாறு சுருதி சேர்த்தல் என்பது, யானைகளின் புணர்தலோடு ஒப்பிடப்பட்டது என்பதையும், உரிய சான்றுகளுடன் ‘தமிழ் இசையியல்-  புதிய கண்டுபிடிப்புகள்’  என்ற நூலில் விளக்கியுள்ளேன்.

தொன்மை இந்தியாவில் இருந்த, அத்தகைய நுணுக்கமான சுருதித் தீர்மனிப்பையும்(pitch standard), சுருதி அமைப்பையும்(Tuning System), சுருதி சேர்த்தல் முறையையும் (Tuning),  எந்த காலக் கட்டத்தில், என்ன காரணங்கள் அடிப்படையில் இழந்தோம் என்பது ஆய்விற்குரியதாகும்.

குறிப்பு: இவை போன்ற ஆய்வுகளைப் பற்றிய கவலையின்றி உணர்ச்சிபூர்வ திசையில் தமிழிசை ஆர்வலர்கள் பயணிக்கிறர்களா? என்பது ஆய்விற்குரியதாகும். " உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள் '";
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) 'களவாடிய இசையே கர்நாடக இசை' என்று 'பிரச்சாரம்' செய்யும் 'உணர்ச்சிபூர்வ' தமிழிசை ஆர்வலர்கள், தமிழிசையிலும் 'பஞ்ச ரத்தின' கீர்த்தனைகளைப் போல கிரக பேத- Modulation-  பாடல்கள் இருப்பதாக, சான்றுகள் மற்றும் செய்முறை விளக்கம், தந்தார்களா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

13 comments:

  1. பஞ்சரத்தினம கீர்த்தனைகள் என்பது வெவ்வேறு ஐந்து இராகங்களில் அமைந்த கொத்து கீர்த்தனைகள் ஆகும்.இது தனி கீர்த்தனையாக தனி இராக இசை அமைப்பை கொண்டதாகும்.இதற்கும் கிரகபேதத்திற்கும் தொடர்பு இல்லை. ..

    ReplyDelete
    Replies
    1. இராகம் என்ற சொல்லிற்கு, மேற்கத்திய இசையில் உள்ள 'ஸ்கேல்' scale ( சுருதி சேர்த்தலுக்கு எந்தெந்த சுரங்கள் இடம் பெறும் என்பதான) மற்றும் தனித்துவமான இசை அழகியல் கூறுகள் என்ற பொருளில் உள்ள, ஒரு ஸ்கேலிலிருந்து இன்னொரு ஸ்கேல் மாறுவது 'மாடுலேசன்' modulation ஆகும். அது கிரக பேதம் என்று அழைக்கப்படுகிறது. இது தவறு என்றால், அதற்கான சான்றினைக் குறிப்பிடவும்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஒரு கச்சேரியில் வெவ்வேறு இராகத்தில் பாடுவதை கிரகபேதம் என
    எடுத்துக்கொள்ளலாமா.?
    No. If more than one raga was employed within ONE & the SAME
    composition, then the change from one Raga to the next Raga within the
    SAME composition , was called கிரகபேதம் in Carnatic music, &
    modulation in Western music. The significant problem was changing the
    tuning from the first Raga to the second Raga, for rendering in
    accurate pitch. That posed a great difficulty to the Western
    composition following the tuning in Just Intonation.

    Since that difficulty was overcome in equal temperament ( sacrificing
    the musical aesthetics), it just gained prominence first in western
    music, & later invaded all world music thru keyboard/harmonium, etc,
    corrupting the purity of the victim music of the unfortunate invasion.

    ReplyDelete
    Replies
    1. You are welcome to interact with me in my email; pannpadini@gmail.com

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஐரோப்பிய இசை முறைகளான சம அளவுள்ள சுர வரிசை [ Equal Temparament ], பண்ணு பெயர்த்தல், அல்லது குரல் திரிபு [Modal Shift of tonic ] என தமிழர் அழைத்த பழைய இசை முறையை இன்று கிரகபேதம் ,அல்லது கிரஹசுரபேதம் என இன்று அழைக்கின்றோம்.
    சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ் காப்பியம் பண்டையத் தமிழ் இசையின் கருவூலம். சிலப்பதிகாரம் கூறும் இசைத்தமிழ் இலக்கணம் வியக்கத்தக்கதாகும். ஏழிசை, ஈராறு இராசிகள், பன்னிரு பாலை, நாற்பெரும் பண்கள், 103 பண்கள், ஏழு பாலைகள், பாலை பண்ணும் முறைகள், குரல் திரிபு, வலமுறை திரிபு, இடமுறை திரிபு, அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல், இசை புணரா குறிநிலை, இணை, கிளை, பகை, நட்பு, வட்டபாலையில் நரம்புகள் நிற்கும் முறை, இணைக்கிரமம், செம்பாலையின் இலக்கணம், பண்ணுப் பெயர்த்தல், மாறு முதல் பண்ணல் அலகு, ஆளத்தி நெறி முறைகள்
    என பண்களை பற்றி சிலம்பு முழுமையாக விளக்குகிறது.
    திருவையாற்றில் தியாகராசரின் ஆராதனையின் பொழுது பாடப்பெறும் பஞ்சரத்தின பாடல்கள் நிர்ணயிக்கப்பட்ட சுருதியில் இசைக்கப்படுகிறது. இவற்றில் கிரகபேதத்திற்கு இடமில்லை நீங்கள் குறிப்பு என்ற பகுதியில் தமிழிசையில் 'பஞ்ச ரத்தின' கீர்த்தனைகளைப் போல கிரக பேத- Modulation- பாடல்கள் இருப்பதாக செய்முறை விளக்கம் தந்தார்களா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். என வினவி உள்ளீர்கள். பஞ்ச ரத்தின கிருதிகளை எவ்வாறு நீங்கள் கிரகபேத பாடல்கள் என கூறுகிறீர்கள் என விளங்க வில்லை .மேலும் கிரகபேத பாடல்,தில்லானா போன்றவை பிற்காலத்தில் தோன்றியவை தேவரங்கள், திருப்புகழ் போன்ற பாடல்களை குரல்திரிபு முறையில் கையாளுபவர்கள் இருந்திருக்கின்றனர் இருக்கிறார்கள்...பஞ்சரத்தின கீர்த்தனைகள் எவ்வாறு கிரகபேத பாடலாகும்...?

    ReplyDelete
    Replies
    1. பஞ்ச ரத்தின கீர்த்தனையில், one & the SAME composition 5 இராகங்கள் இடம் பெறுவதால், ஒரு இராகத்திலிருந்து அடுத்த ராகத்திற்கு மாறுவது while performing the composition கிரக பேதம், modulation . changing from the tuning of the first raga to the tuning of the next successive raga.

      Delete
    2. Also read;
      ‘தவறான திசையில் தமிழிசை ஆர்வம்’ http://www.musicresearch.in/categorywise.php?flag=R&authid=13

      Delete
  7. I think there is a communication problem. Modulation is a process to derive another scale , raga from the first scale, raga. If Modulation is involved in one & the SAME composition, then the problem from changing the tuning of the first scale, raga, to the next successive scale, raga arises ; difficult in Just Intonation, but easily solved in the Equal Temperament

    ReplyDelete
  8. அய்யா தமிழர் திசை எனும் பக்கத்தில் மிகவும் அழகாக *இந்திய செவ்விசையில் சுருதிச் சிக்கல்கள்* என தமிழில் தலைப்பை எடுத்துக்கொண்டு முழுவதும் தமிழில் கட்டுரை எழுதி உள்ளீர்கள் ஆங்கிலத்தில் விளக்கம் தருகிறீர்கள..? I think there is a communication problem.என கூறுவதும் தகுமோ....

    ReplyDelete
    Replies
    1. தவறு தான். 'தகவல் பரிமாற்ற சிக்கல்' என நான் குறிப்பிட்டால், விளங்குமா?
      கடந்த சுமார் வருடங்களில், 'எது தமிழ்?' என்று வளர்ந்து வரும் குழப்பம் காரணமாகவும்,
      விளையாட்டுப் பள்ளிமுதல் ஆஙிலவழிக்கல்வி அரங்கேறிவருவதன் காரணமாகவும், தமிழ் மொழியானது, இன்றைய தமிழர்களிடையே 'தகவல் பரிமாற்ற வலிமையை' இழந்து வருகிறது.
      படிக்கவும்: 'தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3)
      சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்';
      http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html


      Delete