Tuesday, December 15, 2020

 

தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (4) 


தேவநேயப் பாவாணரின் தொல்காப்பியம் ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடி?

 

விஞ்ஞானி நியூட்டனின் சில கண்டுபிடிப்புகள் அடுத்து வந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் மூலமாக தவறானவை, என்று நிரூபிக்கப்பட்டன. அது நியூட்டனுக்கு இழுக்காகாது என்பதும், அறிவியலின் வளர்ச்சி என்பதும் அறிவியல் உலகம் அறிந்ததாகும். அது போலவே, தொல்காப்பியத்தில் வரும் 'ஓசை' மற்றும் 'இசை' ஆகிய சொற்களின் வேறுபாடுகளைக் கணக்கில் கொண்டு, தொல்காப்பிய விதிகளைப் புரிந்து கொள்ளாமல், தேவநேயப் பாவாணர் மேற்கொண்ட ஆய்வுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய எனது ஆய்வுகளை தமிழ்ப்புலமையாளர்கள் அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தி, சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அது தேவநேயப் பாவாணருக்கு இழுக்காகாது. அத்தகைய அறிவுபூர்வ விவாதத்தின் மூலமாக, எனது ஆய்வுகளில் குறைகள் வெளிப்பட்டால், அதற்கு நன்றி தெரிவித்து, எனது ஆய்வுகளை அக்குறைகளை நீக்கி வளர்த்தெடுக்கவே முயல்வேன்.

"ஒரு மொழிக்கு நிரம்பின அரிவரி யிருப்பினும், பிறமொழிச் சொற்களை அதில் மொழிபெயர்க்கப் போதிய சொற்களுளவா  என்று பார்த்தல் வேண்டும். இலவெனின் பிறமொழிச் சொற்களையும் பிறமொழி யெழுத்துகளையும் அதிற் புதிதாய்ச் சேர்க்க இடமுண்டு. தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச் சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று."- தேவநேயப் பாவாணர், ‘இலக்கணக் கட்டுரைகள்’- ``செந்தமிழ்ச் செல்வி'' நளி 1934 (http://www.tamilvu.org/ta/library-lA465-html-lA465con-151680 )

‘'வடசொல்லைத் தமிழ்ச்செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச்ச.1) மொழிபெயர்ப்பை வழிநூல் வகைக ளுள் ஒன்றாகவும் (மரபு. 94) தொல்காப்பியர் கூறியது பொருந்தவில்லை. அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப்பிற்குத் தமிழில் இடமிருந்ததாகத் தெரிய வில்லை. ஆனாலும், தொல்காப்பியத்தில் அங்ஙனங் கூறியி ருப்பதால், அது தமிழினின்றும் மொழிபெயர்த்த வடநூல் களையே முதனூல்களாகக் காட்டும் ஆரிய ஏமாற்று, அவர்க்கு முன்னமே தொடங்கினதையே உணர்த்துவதாகும். இது வேண்டாத வட சொற்கள் தொல்காப்பியத்தில் வழங்கு வதனாலும் உணரப்படும். அக்காலத்தில் இரண்டொரு சொற்களே ஆரியர் தமிழிற் புகுத்தமுடியும் என்பதையும் உய்த்துணர்க.' ‍- தேவநேயப் பாவாணர்- பண்டைத் தமிழகம்

தமிழ் மொழியின் எழுத்தொலிகளின் அடிப்படையில் இசை அழகியலில் (Musical aesthetics) உயரிய 'வண்ணங்கள்' தொல்காப்பியத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பது எனது கவனத்தினை ஈர்த்தது. அந்த வண்ணங்களில் ஒன்று 'ஒரூஉ வண்ணம்' ஆகும்.

'ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்'

'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டால், மேலே குறிப்பிட்ட வண்ணம் பற்றி சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. 'ஒரூஉ வண்ணம்' தொடர்பான ஆய்வே, என்னை 'ஒரீஇ' தொடர்பான ஆய்விற்கு வழி நடத்தியது. (‘'கடகானா' மூலம் விழித்த ஜப்பானியர்களும், 'கிரந்த' மதிப்பு தெரியாமல் ஏமாந்த தமிழர்களும்’; https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை, நீர் போன்ற பாடல் கூறுகளின் இசையியல் (musicology) பரிமாணமானது தேவநேயப் பாவாணருக்கு தெரியாததால், தொல்காப்பியம் தொடர்பான அவரின் ஆய்வுகளை எல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடியும் எழுந்துள்ளது. மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்' ஆகும். (https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html )

தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளையும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html

தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளையும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html 

தமிழில் லெக்சிகனைப் போலவே, உரைகளுக்கும் அடிமையாகாமல், உண்மையைக் கண்டறியும் துணிச்சலுடனும், அறிவுபூர்வ சான்றுகளின் அடிப்படையில் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ளும் கூடுதல் துணிச்சலுடனும் பயணித்ததாலேயே, தொல்காப்பியத்தில் இசை மொழியியலைக் கண்டுபிடிக்க முடிந்தது.

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை 'நீர்' உள்ளிட்டவற்றின் இசையியல் பரிமாணங்களின் பின்னணியில், தொல்காப்பியத்தில் ஏழு உயிர் நெடில் எழுத்துக்களும், ஏழு இசைச்சுரங்களுடன் பொருந்தி ஒலிக்க, மெய்யெழுத்துக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வரையறையில் ஒலிக்கும் முறையின் (Musical Phonetics) அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கான ‘இசை மொழியியல் (Musical Linguistics) இலக்கணமாக, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது; 'Natural Language Processing (NLP)' துறையில் புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில்.

தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது உலகில் உள்ள மொழிகளின் இசைப்பாடலுக்கான உலக இலக்கணமாகும். (universal grammar for musically rendered poems)

Application of ‘Physics of Music’ to ancient Tamil grammar text ‘tholkAppiam’ and other ancient Tamil texts led to the discovery of ‘Musical Linguistics’ (‘Musical Phonetics in Tholkappiam’ in the journal of the international institute of Tamil studies; December 2013  http://www.ulakaththamizh.in/journal)

From the above discovery, the sound of letters had dual aspects; one serving the semantic goal in prose and speech, and the other serving the non-semantic musical goal in musically rendered song.

While linguistics is the scientific study of language, musical linguistics is the scientific study of the musical language employed in the musically rendered poems.

A poem can be rendered as a prosody or musical. In a musically rendered poem, musical structure-based encoding & decoding conveys the musical meaning. while simultaneous speech structure-based encoding & decoding conveys the language meaning.

In Musical Linguistics, the rules of joining the letters for composing the poems are non-semantic and hence language-independent, but musical structure dependent.

AI & NLP involving musical linguistics (https://musicdrvee.blogspot.com/2020/11/ai-nlp-involving-musicallinguistics.html )

'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) எனது பல்துறை (Physics & Music – interdisciplinary) முனைவர் பட்ட ஆய்வாக இருந்தாலும், நான் அடிப்படையில் இயற்பியல் (Physics) பேராசிரியர். தமிழ்நாட்டில் பல்கலைக்கங்களில் தமிழ், மொழியியல் துறைகளில் உள்ள பேராசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பதிவுகளில் உள்ள எனது ஆய்வு முடிவுகளை விமர்சித்து, அவற்றில் உள்ள நிறை குறைகளை வெளிப்படுத்துவதை நான் வரவேற்கிறேன்.

தொல்காப்பியம் மூலமாக வெளிப்பட்டுள்ள 'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையில் 'செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) மற்றும் 'Natural Language Processing' மூலமாக, உலக மொழிகளுக்கு 'பாடலில் இருந்து இசை' (lyrical text to music) உள்ளிட்ட பயன் பாட்டுப் பொருட்களை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

மேற்குறிப்பிட்ட விவாதங்களின் மூலமாக, எனது ஆய்வுக்குழுவிற்கு தேவைப்படும் 'தொல்காப்பிய யாப்பிலக்கணம்' மற்றும் 'மொழியியல்' புலமையாளர்களை அடையாளம் காண்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.


குறிப்பு: எனது ஆய்வுகளுக்கு 'அறிவுபூர்வ இடிப்பாராக' உள்ளவர்களையே மதித்து, என்னை வளர்த்துக் கொண்டு வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றிக்கான இரகசியங்களில் அடங்கும்.  முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டு, எனது ஆய்வுத்திட்டங்களில் (R & D Projects) உள்ள குழுவினர் எல்லாம், அந்த போக்கில் தயவு தாட்சண்யமின்றி பயணிப்பதும், அந்த திட்டங்களின் வெற்றிகளின் இரகசியமாகும். (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html  )

இசையில் கூட, அதற்கென தனிப்பயிற்சி இன்றி, என்னால் விளங்கிக் கொள்ள முடியாதவை நிறைய உண்டு. 1990களில், எனது முனைவர் பட்ட நெறியாளரிடம் (Guide) தாளம் பற்றிய புத்தகத்தைப் படித்து, ஐயங்கள் கேட்ட போது, 'சார், மிருதங்கம் போல, ஏதாவது ஒரு தாளக்கருவி நீங்கள் வாசிக்க கற்று கொண்டால் தான், உங்கள் ஐயங்களை நான் தெளிவுபடுத்த முடியும்' என்றார். ஏற்கனவே 'கிடார்', 'ஆர்மோனியம்' முறையாக ஆசிரியரிடம் கற்றிருந்த நான், பின் ஒரு வருடம் மிருதங்க ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதன்பின் தான், எனது ஐயங்கள் தெளிவாகி, மேற்கொண்டு அரிய கண்டுபிடிப்புகளுக்கு அதுவே வழியானது. (‘நோவாம் சோம்ஸ்கி மூலம் வெளிப்பட்ட பாடம்: ‘தெரியாததை தெரியாது' என்று கூச்சமின்றி தெரிவிக்கும்  துணிச்சல் வேண்டும்.’; https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html  )

Monday, December 14, 2020

 

தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (3)


'ஆய்வு வழிமுறை' (Research Methodology) பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலேயே தேவநேயப்பாவாணர் ஆய்வுகள் ?

 

மேனாட்டில் முதன்முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ (Plato, B.C. 427) என்றும், அவர் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லுமே கண்டுபிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிஸ்ற்றாட்டில் (Aristotle, B.C. 384) இடைச்சொல்லும் எச்சமுங் கண்டுபிடித்தாரென்றும், மேனாட்டிலக்கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத் தக்கதும், டையோனிசியஸ் திராக்ஸ் (Dionysius Thrax, B.C. 100) எழுதிய இலக்கணமேயென்றும் மாக்கசு முல்லர் கூறுகிறார்.

வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியி லிருந்தன. ஆயினும், அவை யாவும் வடமொழி முதற் பாவியமான வான்மீகி யிராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் முதன்முதல் ஆரிய மறைக்கே எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. அவை ஆரியர் தமிழிலக்கணத்தை யறிந்தபின்னரே இயற்றப்பட்டவையென்பது பின்னர் விளக்கப்படும்.

இங்ஙனம், உலகத்திலேயே முதன்முதல் திருந்தியதும் இலக்கணமெழுதப்பெற்றதுமான தமிழ்’ - தேவநேயப் பாவாணர் - பண்டைத் தமிழகம்; :: TVU :: (tamilvu.org)

அறிவியல் அணுகுமுறையில் முடிந்த முடிவாக எதையும் அறிவிக்க முடியாது. ஆய்வுகளின் மூலமாக புதிய சான்றுகள் வெளிப்பட்டு, மொழியியல் தொடர்பான ஆய்வுகளிலும் பழைய முடிவுகள் திருத்தப்பட்டு வருகின்றன. எனவே எதையும் முடிந்த முடிவாக அறிவிப்பதானது, 'ஆய்வு வழிமுறை'க்கு (Research Methodology) எதிரானதாகும்.

மொழியியலில் இலக்கணத்தின் தோற்றம் பற்றி உலக அளவில் வெளிவந்துள்ள ஆய்வுகளைத் தேடாமல், 'மாக்கசு முல்லர்' கருத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஆய்வில் முடிவு செய்வதானது அறிவுபூர்வ அணுகுமுறையாகாது.

கிரேக்க மொழி இலக்கணம் தொடர்பாக, தேவநேயப் பாவாணர் சுட்டிக்காட்டிய 'மாக்கசு முல்லர்' கருத்தினை மறு ஆய்வுக்கு உட்படுத்த வைக்கும் சான்று வருமாறு:

The emergence of grammatical learning in Greece is less clearly known than is sometimes implied, and the subject is more complex than is often supposed; (https://www.britannica.com/science/linguistics/Greek-and-Roman-antiquity)

'மாக்கசு முல்லர்' கருத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, உலகில் உள்ள மொழிகளைப் பற்றி என்னென்ன ஆய்வுகள் வெளிவந்துள்ளன? என்ற தேடல் இன்றி, 'உலகத்திலேயே முதன்முதல் திருந்தியதும் இலக்கணமெழுதப்பெற்றதுமான தமிழ்என்று தேவநேயப் பாவாணர் அறிவித்ததன் மூலமாக, 'ஆய்வு வழிமுறை' ((Research Methodology) பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலேயே, தேவநேயப்பாவாணர் ஆய்வுகள் மேற்கொண்டாரா? என்ற கேள்விக்கு அறிவுபூர்வமான மறுப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மறுப்பு வரவில்லை என்றால், 'தனித்தமிழ்ப்போதை' அறிவுக்கண்களை மறைக்கும் அளவுக்கு ஆபத்தானதா? என்ற கேள்வி எழ வழி வகுக்கும்.

Friday, December 11, 2020

தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (2)


தேவநேயப் பாவாணரின் ஆய்வுகளை வழிபடுவது  தொல்காப்பிய யாப்பிலக்கணத்திற்குக் கேடாகும் 

 

தொல்காப்பியத்தில் வரும் 'ஓசை' மற்றும் 'இசை' ஆகிய சொற்களின் வேறுபாடுகளைக் கணக்கில் கொண்டு, தொல்காப்பிய விதிகளைப் புரிந்து கொள்ளாமல், தேவநேயப் பாவாணர் மேற்கொண்ட ஆய்வுகளில் உள்ள குறைபாடுகளை எல்லாம் விவாதிப்பதை தாமதப்படுத்துவதானது,

தமிழுக்கு எவ்வாறு கேடாகவே முடியும்? என்ற ஆய்வில் துணிச்சலுடன் ஈடுபடுபவர்களின் பார்வைக்கு:

‘தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களும்’ ; https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html

குறிப்பாக, தமிழ் இசையியலுக்கு தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடுகள் பெரும் பாதிப்பினை எவ்வாறு விளைவித்தது? என்ற உண்மையை அறிவதில் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு கீழ்வருபவது உரியதாகும்.

“தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச் சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று."

என்ற தேவநேயப் பாவாணர் நிலைப்பாடானது தொல்காப்பியத்தில் எழுத்தொலிகளின் அடிப்படையில் உருவாகும் இசை வண்ணம் பற்றிய அறியாமையில் வெளிப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் எழுத்தொலிகளின் அடிப்படையில் இசை அழகியலில் (Musical aesthetics) உயரிய 'வண்ணங்கள்' தொல்காப்பியத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பது எனது கவனத்தினை ஈர்த்தது. அந்த வண்ணங்களில் ஒன்று 'ஒரூஉ வண்ணம்' ஆகும்.

'ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்'

'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டால், மேலே குறிப்பிட்ட வண்ணம் பற்றி சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. 'ஒரூஉ வண்ணம்' தொடர்பான ஆய்வே, என்னை 'ஒரீஇ' தொடர்பான ஆய்விற்கு வழி நடத்தியது. (https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_5.html)

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற பாடல் கூறுகளின் இசையியல்(musicology) பரிமாணமானது தேவநேயப் பாவாணருக்கு தெரியாததால், மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்' என்பதும் அவருக்கு விளங்கவில்லை. (https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html)

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை 'நீர்' உள்ளிட்டவற்றின் இசையியல் பரிமாணங்களின் பின்னணியில், தொல்காப்பியத்தில் ஏழு உயிர் நெடில் எழுத்துக்களும், ஏழு இசைச்சுரங்களுடன் பொருந்தி ஒலிக்க, மெய்யெழுத்துக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வரையறையில் ஒலிக்கும் முறையின் (Musical Phonetics) அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கான ‘இசை மொழியியல் (Musical Linguistics) இலக்கணமாக, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது; 'Natural Language Processing (NLP)' துறையில் புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில்.  

தமிழில் லெக்சிகனைப் போலவே, உரைகளுக்கும் அடிமையாகாமல், உண்மையைக் கண்டறியும் துணிச்சலுடனும், அறிவுபூர்வ சான்றுகளின் அடிப்படையில் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ளும் கூடுதல் துணிச்சலுடனும் பயணித்ததாலேயே, தொல்காப்பியத்தில் இசை மொழியியலைக் கண்டுபிடிக்க முடிந்தது. (https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html)

தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது உலகில் உள்ள மொழிகளின் இசைப்பாடலுக்கான உலக இலக்கணமாகும். ( universal grammar for musically rendered poems)

Application of ‘Physics of Music’ to ancient Tamil grammar text ‘tholkAppiam’ and other ancient Tamil texts led to the discovery of ‘Musical Linguistics’ (‘Musical Phonetics in Tholkappiam’ in the journal of the international institute of Tamil studies; December 2013  http://www.ulakaththamizh.in/journal)

From the above discovery, the sound of letters had dual aspects; one serving the semantic goal in prose and speech, and the other serving the non-semantic musical goal in musically rendered song.

While linguistics is the scientific study of language, musical linguistics is the scientific study of the musical language employed in the musically rendered poems.

A poem can be rendered as a prosody or musical. In a musically rendered poem, musical structure-based encoding & decoding conveys the musical meaning. while simultaneous speech structure-based encoding & decoding conveys the language meaning.

In Musical Linguistics, the rules of joining the letters for composing the poems are non-semantic and hence language-independent, but musical structure dependent.

AI & NLP involving musical linguistics (https://musicdrvee.blogspot.com/2020/11/ai-nlp-involving-musicallinguistics.html)

உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வரும் மேற்குறிப்பிட்ட தொல்காப்பியம் தொடர்பான கண்டுபிடிப்பினை தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ப்புலமையாளர்களும் மொழியியல் புலமையாளும் சரி என்று ஏற்றுக் கொண்டார்களா? அல்லது அதில் உள்ள குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டினார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அவரவரின் யோக்கியதையைக் கண்டுபிடிக்கலாம். அத்தகையோர் தமக்குள்ள சமுகக்கடமையை நிறைவேற்றுவது தாமதாகும் வரையில், மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்பால், தமிழும் தொல்காப்பியமும் உலக அளவில் பெற வேண்டிய முக்கியத்துவமும் தாமதமாகும்.

Thursday, December 10, 2020

 

தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (1)

"ஒரு மொழிக்கு நிரம்பின அரிவரி யிருப்பினும், பிறமொழிச் சொற்களை அதில் மொழிபெயர்க்கப் போதிய சொற்களுளவா  என்று பார்த்தல் வேண்டும். இலவெனின் பிறமொழிச் சொற்களையும் பிறமொழி யெழுத்துகளையும் அதிற் புதிதாய்ச் சேர்க்க இடமுண்டு. தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச் சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று."- தேவநேயப் பாவாணர், ‘இலக்கணக் கட்டுரைகள்’- ``செந்தமிழ்ச் செல்வி'' நளி 1934 (http://www.tamilvu.org/ta/library-lA465-html-lA465con-151680 )

மேற்குறிப்பிட்ட கருத்தானது, தமிழின் வளர்ச்சிக்கு எவ்வாறு கேடாகும்? என்பதைக் கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன். அதற்கான மறுப்பையும் ஆவலுடன் வரவேற்கிறேன்.

'கடகானா' மூலம் விழித்த ஜப்பானியர்களும், 'கிரந்த' மதிப்பு தெரியாமல் ஏமாந்த தமிழர்களும் ; https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_5.html   

Wednesday, December 9, 2020

 

காங்கிரஸ் - தி.மு. ஆட்சியில் சமூக முதுகெலும்பு முறிந்து பயணித்தவர்கள்,


மோடி ஆட்சியில் 'சூரர்களாக' வெற்றி பெறுவது சாத்தியமாகுமா?


தி.மு. தமது 2016 சட்டசபை தேர்தல் அறிக்கையில் பக்கம் 24ல் விவசாயிகள் இடைத்தரகர் இன்றி சந்தை விலைக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க சட்டம் கொண்டு வருவோம் என உறுதிமொழி கொடுத்து விட்டு, இன்று அதை அமுல்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பது இரட்டை வேடப் போக்காகும். அது மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருக்கும் போது, மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கோரிக்கையை ஆதரிப்பது, பின் ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கு எதிராக செயல்பட்டு தமது சொத்து சுகங்களை வளர்ப்பது என்பதானது, கருணாநிதி தமிழ்நாட்டில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய 'அறிவியல் ஊழல்' போக்கின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாகும்.

உதாரணமாக, 1996இல் ஜெஜெ - சசி ஆட்சி தமிழ்நாட்டில் தொடங்கியதும், கருணாநிதியின் அறிவியல் ஊழலில் தப்பித்திருந்த மலைகள், தாதுமணல், ஆறுகள், ஏரிகள், காடுகள் உள்ளிட்ட அனைத்து கனிவளங்களும் ஊழல் பெரும்பசிக்கு இரையாகத் தொடங்கின. அந்த வரிசையில், சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்தான டூபாண்ட் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. உடனே வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்கள் தூண்டி போராட்டம் வெடித்தது.

A memorandum of understanding authorising construction was signed on 8 June by representatives of Thapar DuPont and Tamil Nadu's Government Industries Department. (https://www.icis.com/explore/resources/news/1995/06/19/24175/thapar-dupont-ditches-goa-for-tamil-nadu-site/ )

Dupont decried (https://www.downtoearth.org.in/news/dupont-decried-29015 )

1996 தேர்தல் அறிக்கையில், தி.மு. ஆட்சிக்கு வந்தவுடன் டூபாண்ட் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் இருந்து விரட்டுவோம், என்ற உறுதி மொழி இடம் பெற்றது. ஆனால் 1996இல் முதல்வரான கருணாநிதி அந்த ஆலையை செயல்பட அனுமதித்தார். ஜெயலலிதா ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் ஏன் அடங்கிப் போனார்கள்? என்பது இன்று வரை நீடிக்கும் மர்மமாகும்.

1996இல் தி.மு. ஆட்சிக்கு வந்து டூபாண்ட் தொழிற்சாலையை அனுமத்தித்தது போல, 2006இல் தி.மு. ஆட்சிக்கு வந்து, துணை முதல்வர் ஸ்டாலின் மீத்தேன் எரிவாயு திட்டத்தினை அனுமதித்து கையெழுத்திட்டார். 2011இல் ஆட்சியை இழந்த பின், அதே மீத்தேன் எரிவாயு திட்டத்தினை எதிப்பவர்களுடன் கூச்சமின்றி கூட்டு சேர்ந்தார்.

கடந்த மன்மோகன் சிங் - தி.மு. கூட்டணி ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துக்கள் மட்டுமே இருந்த 'மைல் கல்' பல இடங்களில் இருந்தது. எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அந்த தவறு சரி செய்யப்பட்டது. இன்று அதே தவறு மோடி ஆட்சியில் வெளிப்பட்டால், தமிழ்நாடெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்திருக்கும்.

கீழடி முதல் கேந்திர வித்யாலயாவில் தமிழ் வரை மன்மோகன் சிங் - தி.மு. கூட்டணி ஆட்சி காலத்தில் மெளனமாக இருந்து விட்டு, அதை மறைத்து, முன்னெடுத்த 'மோடி எதிர்ப்பு' போராட்டங்களின் விளைவாக, மோடி அரசு சுதாரித்து, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன. காங்கிரஸ் தி.மு. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பலன்களோடு ஒப்பிடுவது 2021 தேர்தலில் குவியமாகி, பா.. அணி பெரிய வெற்றி பெற்றால், அதற்கு சமூக முதுகெலும்பு முறிந்து மோடி எதிர்ப்பில் பயணித்தவர்களின் பங்களிப்பானது முக்கிய இடம் பெறும். (‘தமிழ்நாட்டின் சமூக முதுகெலும்பினை முறித்த கருணாநிதியும் பிரபாகரனும் சசிகலாவும்; 'பெரியார்' மண்ணுமல்ல; 'இந்துத்வா' மண்ணுமல்ல; 'தமிழ் மண்'ணுமல்ல;’ https://tamilsdirection.blogspot.com/2020/11/individual-ethical-compass.html)

1965 இந்தி எதிர்ப்பு முதல், எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, சேலம் விமான நிலைய விரிவாக்கம், உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளில் இன்றுவரை போராட்டத்தித் தூண்டி வரும் தலைவர்களின் குடும்பப்பிள்ளைகளில் எவராவது அனிதா, செங்கொடி, முத்துக்குமார் போன்ற எண்ணற்றோர் போன்று தீக்குளித்திருக்கிறார்களா? அல்லது ஒழுங்காகப் படித்தாலும் படிக்க விட்டாலும் நல்ல வகையில் 'செட்டில்' ஆகியிருக்கிறார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து, அந்த 'சூரர்களின்' யோக்கியதையைக் கண்டுபிடிக்கலாம்.

பல வருடங்களுக்கு முன் என்னை சந்தித்த ஒரு 'பெரியார்' ஆதரவாளரிடம் கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தினேன்.

'1857‍இல் இந்திய மன்னர்கள் ஒன்று சேர்ந்து முதல் இந்திய விடுதலைப் போரை நடத்திய வியப்பூட்டும் தகவல்கள் வீர சவர்க்காரின் 'எரிமலை' (தமிழில் ‘1857 War of Independence’) நூலில் உள்ளன. வீரத்துடனும், தியாகத்துடனும் போரிட்ட இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றியும், துரோகம் செய்த இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றியும் பாரபட்சமற்ற முறையில் தகவல்கள் அந்நூலில் வெளிவந்துள்ளன.'

அடுத்த முறை என்னை சந்தித்த போது, அவர் கீழ்வரும் தகவலை தெரிவித்தார்.

அவருக்கு தெரிந்த 'பெரியார்' கொள்கையாளர் நடத்தி வந்த புத்தகக் கடையில் வீர சவர்க்காரின் 'எரிமலை' புத்தகத்தை வரவழைத்துக் கொடுத்தால், அதைத் தான் விலைக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்த போது, 'அது எனக்கு சிக்கலாகி விடும்' என்று கடை உரிமையாளர் மறுத்திருக்கிறார்.

பொதுவாக, 'பெரியார், பிரபாகரன், கருணாநிதி' போன்றோரை விமர்சிக்காத வலைப்பின்னலில் இடம் பெற்று ஆதாயம் அடைந்து வருபவர்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட கடை உரிமையாளரைப் போலவே, 'அந்த வலைப்பின்னலில் உள்ள செல்வாக்கான நபர்களின் சந்தேகத்திற்கு உள்ளாகக் கூடாது' என்று மிகவும் கவனத்துடன் வாழ்கிறார்கள். 'பெரியார், பிரபாகரன், கருணாநிதி' உள்ளிட்டு எவரையும் விமர்சிக்காத 'செல்வாக்கான' நபர்களை ஓரங்கட்டாமல், அவர்களின் வலைப்பின்னல்களில் சிக்கியுள்ள 'அடிமைகளுக்கு' விடுதலை கிடைக்காது. அந்த விடுதலை தாமதமாகும் வரையிலும், தமிழ், தமிழ் உணர்வு அமைப்புகள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தின் அறிவாலயத்திலும், சசிகலா நடராஜன் குடும்பத்தின் முள்ளி வாய்க்கால் முற்றத்திலும் சங்கமமான போக்குகள் தொடரும்.

மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் தமது ஊழல் சொத்துக்களைப் பாதுகாக்க  மத்திய அரசுடன் சமரசமாகி எளிதில் தமிழ்நாட்டின் நலன்களைக் காவு கொடுக்க முடியும். எனவே தான், கடந்த மன்மோகன் சிங் - தி.மு.க கூட்டணி ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துக்கள் மட்டுமே இருந்த 'மைல் கல்' பல இடங்களில் இருந்தது. எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. தேர்தல் அறிக்கை வாக்குறுதியை மீறி, 1996இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து டூபாண்ட் தொழிற்சாலையை அனுமத்தித்த போதும், எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த‌ போது ஸ்டெர்லைட் ஆலை பாதகமாக செயல்பட அனுமத்தித்த போதும், எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை.

தமிழ்நாட்டில் இருக்கிற வேலை வாய்ப்புகளைக் கெடுத்தும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்திய 'சூரர்கள்', பா.. தலைவர் எல்.முருகன் முன்னெடுத்த 'வேல் யாத்திரைக்கு' எதிராக, 'வேலையில்லாதாவர்கள் யாத்திரை' தொடங்கப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடவில்லை. நேர்மையான சுயசம்பத்தியம் இன்றி, 'போராட்டங்கள்' மூலமாக  வசதியிலும் சொத்திலும் வளர்ந்தவர்கள் யார், யார்? என்ற தேடலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே காங்கிரஸ் - தி.மு. ஆட்சியில் சமூக முதுகெலும்பு முறிந்து பயணித்தவர்களும், சசிகலா குடும்ப ஆதரவில் பயணித்தவர்களும், மோடி ஆட்சியில் 'சூரர்களாக' ஆடி வரும் ஆட்டங்கள் அடங்கும் காலமும் நெருங்கி விட்டது.

ஆளும் கட்சியாக இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலை பாதகமாக செயல்பட அனுமதித்து விட்டு, எதிர்க்கட்சியான பின், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்தை ஆதரித்து, தூத்துகுடி எம்.பியாக தேர்தலில் தி.மு. வெற்றி பெற்றுள்ளது; மேற்குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்களின் ஆதரவுடன்.

தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பினை தமது சுயநல குடும்ப அரசியலுக்கே பயன்படுத்தியவர் கருணாநிதி ஆவார்.


இப்படிப்பட்ட
கட்சிகளையும் தலைவர்களையும் ஓரங்கட்டாமல், தமிழ்நாடு தப்பிக்க முடியுமா? என்ற விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கினால்,

சில கட்சிகளும் தலைவர்களும் திருந்தி ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கத் தொடங்குவார்கள். திருந்த முடியாதவர்கள் சமூகக்குப்பையாக ஒதுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு நிச்சயம் தப்பிக்கும். (‘சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூவின் அபாய எச்சரிக்கை? தமிழ்நாட்டுக் கட்சிகளும் தலைவர்களும் திருந்துவார்களா?’; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_20.html )