Saturday, July 25, 2020


மோடியின் ஆட்சியில், இந்தியாவின் சமூக காங்கிரீனாகமாறி வரும் தமிழ்நாடு (2)


தமிழ்நாட்டில் 'ஊழல்' புலியைக் கொல்லப் புறப்பட்டு,

அதன் வாலைப் பிடித்த 'நாயரான‌'  பிரதமர் மோடி ?



புலி வால் பிடித்த நாயர் கதை;

வாலை விட்டால் புலி திரும்பி அடித்து விடும். விடாவிட்டால் புலியோடு காடெல்லாம் அலைய வேண்டும்’.

உண்ண முடியாமல், உறங்க முடியாமல், அவ்வாறு அலைந்தால் என்ன ஆகும்?

தமிழ்நாட்டில்  2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசிய பேச்சுக்கள் மூலமாக‌, மோடி பிரதமரானால், ‘தமிழ்நாடானது ஊழல் வலைப்பின்னலில் இருந்து விடுதலை பெற்று நல்லாட்சி மலரும் என்று நம்பியவர்கள் அதிகம். அதன் விளைவாக, தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் துணையின்றி, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற அதிசயம் நடந்தது.

அதன்பின் என்ன நடந்தது?  தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஊழல் பெருச்சாளிகள் மீது மன்மோகன் ஆட்சி காலத்தில் தொடுத்த வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. சீரங்கம் சட்டசபை இடைத் தேர்தலில் டெபாசீட்டிடம் பா.ஜ.க தோற்றது.

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சை மற்றும் மரணம் காரணமாக‌, ஜெயலலிதாவின் விசுவாசிகள் மற்றும் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) விரும்பிகள் மத்தியில் வளர்ந்து வரும் சமூகக் கோபமானதுதமிழ்நாட்டிற்கு அறிவியல் ஊழலை அறிமுகப்படுத்திய‌ கருணாநிதி மீது இருந்த கோபத்தை பின்னுக்கு தள்ளி விட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் சசிகலா குடும்பத்தின் கட்டளைக்கு உட்பட்டு அப்பொல்லோவில் (ஒளிபரப்பான) கீழ்தளத்தில் நின்று பேசிய பேச்சுக்களும், ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக‌ (ஊடக வெளிச்சத்துடன்) குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அவமதிக்கப்பட்டு) மட்டுமே சூழ, ராஜாஜி மண்டபத்தில் இருந்த ஜெயலலிதா உடலுக்கு (நேரடி ஒளிபரப்பில்) அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும் நடராஜனையும் வணங்கிய‌ மோடி தாமாகவே வலிய வந்து மேற்குறிப்பிட்ட கோபத்தின் குவியமாகி, ஸ்டாலினைக் காப்பாற்றி விட்டார். அதன்பின் 2ஜி குற்றவாளிகள் விடுதலையான பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க நோட்டாக்கட்சியானது.

மோடி பிரதரான பின், தேர்தல்களில் வாக்குக்கான பணம் பலமடங்கு அதிகரித்த அளவுக்கு, தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு வடிவேல் பாணி காமெடியாகி விட்டது.

குடும்ப ஊழல் கட்சிகளை ஒழிக்க வாய்ப்பு கிடைக்கும் வரையில், தமிழக வாக்காளர்கள் முடிந்த அளவுக்கு தேர்தல்களில் அறுவடை செய்வார்கள். வாய்ப்பு கிடைத்தால், மிகுந்த புத்திசாலித்தனத்துடன் ஊடகங்களையும் கருத்துக் கணிப்புகளையும் முட்டாள்களாக்கி கணக்கு தீர்ப்பார்கள்.

ஸ்டாலினாலும் சசிகலாவானாலும் அவர்களின் ஊழலைப் பற்றி பேசும் துணிச்சலின்றி கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் ஆனாலும், மோடியானாலும், வேறு யாரானாலும், தமிழ்நாட்டு வாக்காளர்களின் மேற்குறிப்பிட்ட கணக்கில் இருந்து தப்ப முடியாது. 
(https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_23.html)

குடும்ப ஊழல் கட்சிகளை ஒழிக்க வாய்ப்பு கிடைக்கும் வரையில், தமிழக வாக்காளர்கள் முடிந்த அளவுக்கு தேர்தல்களில் அறுவடை செய்வார்கள். எனவே தமிழ்நாட்டில் ஊழல் பெருச்சாளிகளை பாரபட்சமின்றி ஒழிக்கும் வரையில், தமிழக பா.ஜ.க நோட்டாக்கட்சியாகத் தான் பயணித்தாக வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பொதுவாழ்வில் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்க, மத்திய அரசுடன் நேசமான கட்சியாகவே இருக்கும். தேர்தலில் தமிழக பா.ஜ.க  எந்த கட்சியுடனும் கூட்டணி சேர்ந்து, அந்தக்கட்சியின் வெற்றி வாய்ப்பினைக் குறைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 'ஊழல்' என்ற புலியைக் கொல்லப் புறப்பட்டு, அதன் வாலைப் பிடித்த 'நாயர்' போல பிரதமர் மோடியின் நிலை நீடிக்கிறது.

குதிரை கீழே தள்ளியதுமல்லாமல், புதைப்பதற்குக் குழியும் தோண்டியதென்கிறபடியும்,’

தமிழக பா.ஜ.க பயணிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாரிதாஸ் மற்றும் எச்,ராஜா போன்ற பா.ஜ.க தலைவர்கள் எல்லாம் ஈ.வெ.ராவை, நேரு பாணியில், உணர்ச்சிபூர்வமாக கண்டிக்கும் வரையில், தமிழ்நாட்டில் பா.ஜ.கவானது நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டியிருக்கும்

1919 முதல் 1924 வரையிலான 5 வருடங்களில், காங்கிரஸ் கட்சியில் இருந்த‌ ஈ.வெ.ரா அவர்கள் பொது வாழ்வில் எந்த அளவுக்கு சமூக ஆற்றலை உருவாக்கினார்? என்ற சமூக செயல்நுட்பத்தினை விளங்கிக் கொண்டால் தான், அதிலிருந்து எந்த அளவுக்கு தடம் புரண்டு இன்று 'பெரியார்' கட்சிகள் பயணிக்கின்றனர்? என்பதும் தெளிவாகும்.

தமிழ்நாட்டில் சமூக வளர்ச்சிக்கான‌ ஆக்கபூர்வமான சமூக ஆற்றல்களை எவ்வாறு உருவாக்குவது? என்ற ஆய்வின் மூலமாக, எவ்வாறு அந்த சமூக செயல்நுட்பத்தினைக் கண்டுபிடிப்பது? என்பதற்கு,

1919 முதல் 1925இல் காங்கிர‌சில் இருந்து வெளியேறும் வரையிலான 6 வருடங்களில் இருந்த தமிழ்நாட்டையும், ஈ.வெ.ராவையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

1919 முதல் 1944 வரை 25 வருடங்களில் ஈ.வெ.ரா சேகரித்த சமூக ஆற்றல்களை ஈர்த்து, ஆக்கபூர்வ சமூக செயல்நுட்பத்தில் இருந்து ஈ.வெ.ராவை அந்நியமாக்கி, அவரைப் பலகீனமாக்கி, அடுத்த 5 வருடத்தில் 1949இல் தி.மு.க உருவானது.

தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கி' என்று அண்ணா அறிவித்ததை ஈ.வெ.ரா ஏன் கண்டித்தார்? அண்ணாவின் மறைவிற்குப்பின், கருணாநிதி தி.மு.க தலைவர் ஆகும் வரையில்தி.மு.க தலைவர் பதவி ஈ.வெ.ராவிற்காக ஏன் வெற்றிடமாக இருந்தது? 1967இல் அண்ணா முதல்வராகி ஈ.வெ.ராவுடன் சமரசான பின்னும், தி.மு.க தலைவராக ஈ.வெ.ரா ஏன் அந்த வெற்றிடத்தை நிரப்பவில்லை? அண்ணா சாகும் வரையில், அதே நிலை ஏன் நீடித்தது?

தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பாக ஈ.வெ.ராவின் நிலைப்பாட்டில் இருந்து, இரட்டைக்குழலில் ஒரு குழல் தடம் புரண்டு, அடுத்த குழலை எவ்வாறு மலடாக்கி, 1967இல் ஆட்சியைப் பிடித்த பின், எதிர்த்திசையில் பயணித்தது?

'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் ரஜினி சண்டை போடும் காட்சியைக் காட்டி விட்டு, பின் திரையில் கொத்து புரோட்டா உருவாகும் காட்சி திரையில் இடம் பெறும். அடுத்து சண்டை முடிந்து ரஜினி நடந்து வருவார். ரஜினியுடன் சேர்ந்து எதிரியை அடித்த ரஜினியின் கூட்டாளி ரஜினியிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்பார்.

'எதுக்கண்ணே அந்த ஆளை அடிச்சீங்க?'

அப்படி கூட எவரும் கேட்காத நிலையில், 1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின், தமிழ்நாடு இருந்தது.

'தீ பரவட்டும்' என்று கம்ப ராமாயணத்தைச் சாடிய அண்ணா, 1967இல் முதல்வராகி கம்பனுக்கு சிலை வைத்தார்.

'எதுக்கண்ணா, கம்பராமாயணத்தை தாக்கினோம்?' என்று எந்த உடன்பிறப்பும் அண்ணாவைக் கேட்டதாகத் தெரியவில்லை. 

அதே பாணியில், '2014 தேர்தலில் ஊழலை ஒழிப்பதாக எதற்கு நாம் வாக்குறுதி கொடுத்தோம்?' என்று எந்த தமிழ்நாட்டு பா.ஜ.க தொண்டரும் பிரதமர் மோடியைக் கேட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தனித்துவமான போக்கில், தேசக்கட்டுமான சீர்குலைவும், தமிழக அரசின்   நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவும் பின்னிப்பிணைந்து வளர்ந்த போக்கின்  உச்சக்கட்டமே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணமானது வெளிப்படுத்திய சிக்னலாகும்.

அந்த சிக்னலை உணராமல், தமிழக பா.ஜ.வையும் அந்த 'மர்ம' மரணத்தின் மெளன சாட்சிகள் வரிசையில் இடம் பெறச் செய்து, இந்திராகாந்திக்கு இருந்த துணிச்சலின்றி, அந்த 'சிக்னலின்' போக்கிலேயே பிரதமர் மோடி பயணித்தார். 'அந்த' பலகீனமே மோடியின் ஆட்சியில் 'கறுப்பு ஆடுகளை' வலிவுறச் செய்து, மெகா ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகி, மோடியின் ஊழல் ஒழிப்பானது, வடிவேலு பாணி காமெடியானது. 

பாரதத்தில் தமிழ்நாடு இருப்பது உண்மையானால், பாரத மாதா மோடியை மன்னிக்க மாட்டார்.

வியட்னாமில் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்து, கருணாநிதி குடும்ப ஆட்சியில்  தனித்தமிழ்நாடு உருவாகியிருந்தாலும், மத்தியில் வலிமையான இந்திராகாந்தி ஆட்சி இருந்ததன் காரணமாக, அந்த தனித்தமிழ்நாடு முயற்சி குறைப்பிரசவமாகி, மீண்டும் இந்தியாவுடன் இணைந்து, அமெரிக்காவானது உலக அரங்கில் பெரும் தலைக்குனிவைச் சந்தித்திருக்கும். 
(September 25, 2017; ‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html)

ஆனால் மோடி ஆட்சியில், தமிழ்நாடு மிகவும் ஆபத்தான திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.‌

மோடிக்குப் பின் மத்தியில் தேவகவுடா பிரதமராக இருந்ததைப் போல, ஒரு பலகீனமான அரசு ஆட்சியில் இருந்தால், தமிழ்நாட்டில் ஜெயலலிதா போல வலிமையான மக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்யும் முதல்வராக ஒரு நபர் இருந்தால், அந்த நபர் நெருக்கடி கால முதல்வர் கருணாநிதியின் பாணியில் முயன்றால், சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் பின்பலத்தில் தனித்தமிழ்நாடு அறிவிப்பது சாத்தியமாகி விடும்.

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்திலேயே, சரியான தேசக்கட்டுமான (Nation Building) திசையில், தமிழ்நாட்டில் ஊழல் வலைப்பின்னலைத் தகர்த்து, மைக்ரோஉலகத்தில் வாழும் சாமான்யர்களின் நம்பிக்கையை ஈட்டி, அவர்கள் எல்லாம் விரும்பி இந்தியாவுடன் 'ஒட்டி' பயணிக்கச் செய்தால் மட்டுமே, அந்த ஆபத்தில் இருந்து, தமிழ்நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும்.

மாணவப்பருவத்தில் இருந்து இன்று வரை, 'தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்புடன் 'ஒட்டிப் பயணித்து வருபவன்' என்ற அடிப்படையிலும், எனது காலத்திற்குப் பின் தமிழ்நாடானது ஆப்பிரிக்க நாடுகளைப் போல, ஊழல் சர்வாதிகாரத்தில் சிக்கி சீரழியும் வாய்ப்பினைத் தவிர்க்கும் நோக்கிலும், இந்த அபாய எச்சரிக்கையை வெளியிட நேர்ந்தது. 
(‘மோடியின் ஆட்சியில், இந்தியாவின் சமூக காங்கிரீனாகமாறி வரும் தமிழ்நாடு (1) ; 

மேற்குறிப்பிட்ட அபாய எச்சரிக்கையை நான் வெளியிட்ட பின், தமிழ்நாட்டில் ஓர் அதிசயம் அரங்கேறியுள்ளது.

சுயலாப நோக்கின்றி, சமரமற்ற ஊழல் எதிர்ப்பில் வலிமையான 'நேர்மை வழிகாட்டியுடன்' (Ethical Compass) பயணித்து வந்த வலிமையான தமிழர்களை எல்லாம் ஒன்றிணைக்க கந்த சஷ்டி கவசம்துணை செய்துள்ளது.

'நோஞ்சான் தமிழர்கள்'  அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர ஊக்குவிக்கும் சமூக சூழல் உருவாகி விட்டது. வெறுப்பு அரசியலில் மக்களிடையே பிரிவினைகளை வளர்த்துப் பிழைத்து வந்த 'ஒட்டுண்ணிகளை' சருகாக்கி சமூகக் குப்பைத்தொட்டியில் ஒதுக்குவதற்கும் கந்த சஷ்டி கவசம்துணை செய்துள்ளது.

திராவிட ஊழல் பெருச்சாளிகளின் பாதுகாப்புக் கவசங்களாக 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற பேரில் செயல்பட்டு, இந்துக் கடவுள்களை கேலி, கிண்டல்களுக்கு உள்ளாக்கிமதமாற்றங்கள் மூலமாக இந்துக்களின் எண்ணிகை குறைய, மறைமுகமாக உதவி வந்த 'கறுப்பர் கூட்டம்',  இனி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும், தமிழ்நாட்டு மக்களின் கண்டனத்தில் இருந்து தப்ப முடியாது.

எனவே கந்த சஷ்டி கவசம்மூலமாக, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சி நிச்சயமாகி விட்டது. தேசியக்கட்சிகளின் சுயநலன்களுக்கு தமிழ்நாடு பலிகடா ஆக இனி  வாய்ப்பில்லை. 

Friday, July 24, 2020


கந்த சஷ்டி கவசம்மூலமாக,

தேசியக்கட்சிகளின் சுயநலன்களுக்கு தமிழ்நாடு இனி  பலிகடா ஆகாது



கந்த சஷ்டி கவசம்மூலமாக 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு 'சமூகத் தளவிளைவு’ (Social Polarization) நெருக்கடி உருவாகியிருப்பதை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 

ஆனால் நான் எதிர்பார்க்காத வகையில், இந்துத்வா எதிர்ப்பாளர்களிடையே தமிழ் உணர்வின் அடிப்படையில் ஒர் அதிசய சமூகத் தளவிளைவு' (Social Polarization) உருவாகி வருகிறது. அதனால் இந்துத்வா ஆதரவு முகாம்களில் பொதுவாழ்வு வியாபாரிகளாகப் பயணித்தவர்களின் ஆட்டமும் அடங்கப் போகிறது. உரிய திருத்தங்கள் இன்றி இனியும் 'பெரியார்' கட்சிகள் பயணித்தால், ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்

'இந்து கடவுள்களை இழிவு செய்பவர்களின் சிந்தனையில் குறைபாடு இருக்கிறது.' என்று தமிழர் சமயத்தைக் காக்கும் ஆன்மீக செயற்பாட்டாளர் இறைநெறி இமயவன் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதோடு மட்டுமில்லாமல்   மதங்களுக்கிடையே நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த கருப்பர் கூட்டத்தின் செயல்களை கண்டித்து முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

இந்துத்வா எதிர்ப்பில் பயணிக்கும் கிறித்துவப் பாதிரியார் ஜெகத் கஸ்பாரும் கந்த  கந்த சஷ்டி கவசத்தைப் பாராட்டி, சஷ்டி கவசம்சர்ச்சையில்  தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 
(‘வீர முருகனின் வரலாறு இதான்..- Jegath Gaspar Interview on Karuppar Koottam Controversy; 

முருகரை பழித்துப் பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்பதானது தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்று அறிவித்துள்ளார்கள். இனி 'பெரியார்' கட்சிகளின் பாடு திண்டாட்டம் தான். ஏனெனில் இந்து மதக்கடவுள்களை எல்லாம் ஈ.வெ.ரா அவர்கள் பழித்து பேசிய புத்தகங்களையும், ஒலிப்பதிவுகளையும், 'பெரியார்' கட்சிகள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினால்,  தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் எதிர்ப்)பைச் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கி விட்டார்கள். 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/2-socialpolarization.html

ஆத்தீகத் தமிழர்களிடையே வெளிப்பட்டுள்ள எழுச்சி காரணமாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சாதி, மத, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் வெளிப்படுவது நல்ல சமூக சிக்னலாகும்.

வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் பயணித்தால் மட்டுமே, இனி 'பெரியார்' கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபட முடியும். தவிர்த்தால் ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்.. அதுவே 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடமாகும். 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/positive-thinking.html)

1920களில் பயணித்த வைக்கம் ஈ.வெ.ராவிற்கும், நீதிக்கட்சியில் இருந்த 'இடிப்பார்களிடம்' ( திருக்குறள் 448) இருந்து விலகி, 1944 முதல் பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் வளர்ந்த வேறுபாடுகளை எல்லாம் விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.

வைக்கம் ஈ.வெ.ராவை இந்துத்வா எதிர்ப்பு முகாம்களுக்கு தாரை வார்த்து, தமிழ்நாட்டு இந்துத்வா ஏமாந்து வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

காஞ்சி 'ஆச்சார்யா' சந்திரசேகர சங்கராச்சாரியார் தமிழ்நாட்டு மக்களை ஈர்க்க, ஈ.வெ.ரா அவர்களை முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு சுப்பிரமணியசுவாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

The following evidence suggest that Subramanian Swamy may be emulating E.V.R, as advised by Kanchi ‘Parmacharya’.

“Ironically, in one of his tutorials to me by Parmacharya, God on earth, he said Periyar EVR had kept his vow to his parents to maintain the ancestral temple in Erode, which temple received first prize for the best maintained temple for years. Parmacharya also told me to learn from Periyar EVR how one man can change the thinking of crores of people with nothing but ideas.” 

காந்தியின் ஒப்புதல் கிடைத்திருந்தால், 1925க்கு முன் நடந்த‌ வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா பங்கேற்றிருந்த காலத்தில், இந்து மகா சபையும் அவருடன் சேர்ந்து போராடியிருக்கும். (பக்கம் 119, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்). அந்த காலக்கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தோற்றுவிக்கப்படவில்லை. 

‘From the point of view of justice, dharma and humanism, fighting untouchability is a duty and we Hindus should completely eradicate it.’- Savarkar  

அன்றைய இந்து மகா சபை பாணியில் தான், ஈ.வெ.ரா அவர்கள் தேசிய திசையில் பயணித்தார் என்பதைக் ஈ.வெ.ரா அவர்கள் வைக்கம் போராட்டதின்போது வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்து உணர்த்துகிறது.

'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.'  (பக்கம் 94, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்)

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால், அதே திசையில் தான் ஈ.வெ.ரா அவர்கள் பயணித்திருப்பார். தி.க, தி.மு.க போன்ற கட்சிகள் உருவாகியிருக்காது.

வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓய்வு நேரங்களில் ராட்டையில் நூல் நூற்றார்கள்; இந்தி மொழி கற்றார்கள்; தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தொண்டர்கள் உள்ளிட்டு.  அவ்வாறு ஈ.வெ.ராவால் எதிர்க்கப்படாத விருப்ப‌ இந்தியை, 1937இல் முதல்வராக இருந்த ராஜாஜி கட்டாயமாக்கியதன் விளைவாக, தமிழ்நாடானது இந்தியை எதிர்த்ததோடு நிற்காமல், ஈ.வெ.ரா தலைமையில் 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 'தனித்தமிழ்நாடு' பிரிவினை கோரிக்கையும் முதன் முதலாக வெளிப்படும் விளைவில் முடிந்தது.

அதே ராஜாஜியும் அண்ணாவும் கூட்டு சேர்ந்து 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்; மாணவர்களைத் தூண்டி, பொதுச்சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் கேடாகும் வகையில். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஈ.வெ.ரா எதிர்த்து, போராட்டக்காரர்களால் அவமதிக்கப்பட்டார். 1925க்கு முன் நடந்த வைக்கம் போராட்டத்திலும், 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் வெளிப்பட்ட ஈ.வெ.ராவின் சமூக ஆற்றலானது, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏன் வற்றி, அவர் அவமதிக்கப்படும் விளைவில் முடிந்தது? 1920களில் கேரளாவில் வைக்கம் போராட்டத்தில் பிரமிக்க வைக்கும் வகையில் வெளிப்பட்ட ஈ.வெ.ராவின் செல்வாக்கானது, 1944இல் தி.கவும், 1949இல் தி.மு.கவும் தோன்றியதன் விளைவாக,‌ தமிழ்நாட்டில் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவமானகரமாகும் அளவுக்கு எவ்வாறு வற்றியது? என்ற விவாதமானது இனியும் இருட்டில் நீடிப்பது தமிழ்நாட்டிற்குக் கேடாகும்.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் போல பொதுவாழ்வின் மூலமாக சொத்து சேர்த்தவர்கள் என்று ஈ.வெ.ரா, ராஜாஜி, அண்ணா மூவர் மீதும் அவர்களின் கொள்கை எதிரிகள் கூட குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த மூவரும் பொதுவாழ்வில் மேற்கொண்ட தவறான முடிவுகள் காரணமாகவே, மேற்குறிப்பிட்ட நால்வர்கள் பிடியில் தமிழ்நாடு சிக்க நேரிட்டது. இடையில் வந்த எம்.ஜி.ஆர் மூலமாகவே தமிழ்நாட்டின் மீட்சிக்கான திசையை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்? என்பதையும் நான் விவாதித்துள்ளேன். 

'மூட நம்பிக்கை எதிர்ப்பானது' எவ்வாறு 'குருட்டுப் பகுத்தறிவுஆகும்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டு இந்துத்வாவின் ஏமாளித்தனத்தால் இருட்டில் நீடித்த வைக்கம் ஈ.வெ.ராவை மீட்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வாய்ப்பானது கந்த சஷ்டி கவசம்மூலமாக உருவாகியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்  பிராமண எதிர்ப்புக் கண்ணோட்டத்தில் எழுதிய பதிவுகளை உற்சாகமாக வரவேற்றவர்கள் பெரியாரிஸ்ட்கள்.

‘‌கந்த சஷ்டி கவசம்சர்ச்சை தொடர்பாகவும் சாவித்திரி கண்ணன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட ப‌திவில், கீழ்வரும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

எந்தக் கட்சியும் ஆதரிக்கத் தயாரில்லை என்பது மட்டுமல்ல, தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று நிறுவது தான் தற்போது பெரும்பாடாகிவிட்டது!

பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெயரில் பகை வளர்க்கும் பிரச்சாரம் தான் அரங்கேறியுள்ளது!

மூட நம்பிக்கைகள் மிகுந்து சமூகம் பேரழிவை சந்தித்த காலங்களிலெல்லாம் வரலாற்றுத் தேவையாக வந்து வழிகாட்டியதே நாத்திகம்!

பகுத்தறிவு பேசுபவர்கள் எல்லாம் தங்களை பெரியாராகக் கருதிக் கொள்ளமுடியாது!

பெரியார் வரலாற்றின் தேவையாக வந்தவர்! பச்சிளங் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது,விதவைகளை காலமெல்லாம் கொடுமைப்படுத்துவது, சடங்குகளின் பெயரால் எளிய மக்களின் பணம் விரையமாவது, பார்ப்பனிய ஆதிக்கம் சக மனிதர்களை தாழ்த்தி வைத்திருந்ததுஆகியவற்றை எதிர்த்து தரைமட்டமாக்க ஒரு பெரியார் வரலாற்றின் தேவையாக வந்தார்!
இன்றைக்கு மதத்தின் பெயரால் மக்களை வென்றெடுக்க காத்திருக்கும் மதவாத சக்திகளுக்கு ஒரு சிறந்த ஆயுதத்தை கூர் தீட்டித் தந்துள்ளது கருப்பர் கூட்டம்!

கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பார்ப்பது என்பது அறியாமையின் உச்சம்! ஒரு பக்தி பனுவலை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பக்குவமின்றி, அரைவேக்காட்டுத்தனமாக உளறியுள்ளனர்………….

பகுத்தறிவோ, நாத்திகமோஆன்மீகமோஎதுவானாலும்,
அது மக்களுக்கு நன்மை சேர்ப்பதாக,

மக்களை பிளவுபடுத்தாமல் ஒன்றிணைப்பதாக,

மேன்மேலும் நேசத்தை வளர்ப்பதாக அமையட்டும்!

தாய்மொழித் தமிழ்வழிக்கல்வியை மரணப்படுக்கையில் இருந்து மீட்பதற்காக, இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற பேரில், மக்களை பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்க கந்த சஷ்டி கவசம்துணை செய்துள்ளது.

சங்க காலம் முதல் பிற மொழி மன்னர்கள் ஆட்சி, காலனி ஆட்சி உள்ளிட்டு 1967 வரை பாதுகாப்பாக இருந்த ஏரிகளும், ஆறுகளும், காடுகளும், மலைகளும் உள்ளிட்ட அனைத்து வளங்களும் திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின்  ஊழல் பேராசைக்கு இலக்காகி சீரழிந்து வருகின்றன.

தமிழக மக்களின் பொதுக்கருத்துருவாக்க (public opinion) சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, காங்கிரசும், பா.ஜ.கவும் தமிழ்நாட்டில் பிரிவினை மற்றும் ஊழல் போக்குகளுக்கு 'சலாம்' போட்டு பயணித்து வந்துள்ளன.

தேசிய அரசியலில் தமிழ்நாட்டைக் காவு கொடுத்த பிரதமர் இந்திரா பாணியில், பிரதமர் மோடியும் பயணிக்கிறாரா? தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்பு கூடுகிறதா? என்ற விவாதத்திற்கும் தேவை எழுந்துள்ளது. 

அறிவிலோ உடலிலோ நோஞ்சான்களாக இருக்கும் மனிதர்கள், விரும்பினால் கடும் முயற்சிகள் மூலமாக, அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர முடியும். அதற்கு மாறாக, தாம் நோஞ்சானாக இருப்பதை மறுத்து, வாய்ப்பேச்சு வீரர்களாக பிறரை ஏமாற்றி, ஒட்டுண்ணிகள் போலவும் வாழ முடியும். அவ்வாறு ஒட்டுண்ணிகள் போல வாழ்பவர்கள் எல்லாம், தத்தம் 'நேர்மை வழிகாட்டியை' தன்மானக்கேடான திசையில் அவ்வப்போது திருத்தி பயணிப்பதையும் தவிர்க்க முடியாது. (இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்’;
https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html)

பிராமணர் - பிராமணரல்லாதோர், தமிழர் - தமிழர் அல்லாதோர் போன்ற பரிமாற்ற பகைமையை முன்னெடுத்த நபர்கள் எல்லாம், குடும்ப அரசியல் ஊழலை எதிர்த்தார்களா? கூச்சமில்லாமல் ஏதாவது ஒரு திராவிட குடும்ப அரசியல் ஊழல் பிதாக்களுடன் நெருக்கமாக இருந்தார்களா? என்ற கேள்விகளே, அந்த விளையாட்டில் பிழைத்த சமூக ஒட்டுண்ணிகளை அடையாளம் காட்டும்.  
‘'சமுக கீரி - பாம்பு சண்டையானது' எவ்வாறு முடிவை நெருங்கியது?’; 

தமிழ்நாட்டில் சமூக கீரி - பாம்பு சண்டை காட்டி ஏமாற்றி திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்கள் எந்த அளவுக்கு பணத்திலும் செல்வாக்கிலும் வலிமையானார்களோ,

அந்த அளவுக்கு அவர்களுடன் ஒட்டிப் பயணித்து 'நோஞ்சான் தமிழர்கள்' தமிழ்நாட்டில் வளர்ந்தார்கள்.

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற பேரில், மக்களை பிளவுபடுத்தி 'நோஞ்சான் தமிழர்கள்' வளர்ந்து வந்த சமூக செயல்நுட்பத்தினை கந்த சஷ்டி கவசம்வீழ்த்தியுள்ளது. 

சுயலாப நோக்கின்றி, சமரமற்ற ஊழல் எதிர்ப்பில் வலிமையான 'நேர்மை வழிகாட்டியுடன்' (Ethical Compass) பயணித்து வந்த வலிமையான தமிழர்களை எல்லாம் ஒன்றிணைக்க கந்த சஷ்டி கவசம்துணை செய்துள்ளது. 

எனவே 'நோஞ்சான் தமிழர்கள்'  அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர ஊக்குவிக்கும் சமூக சூழல் உருவாகி விட்டது. வெறுப்பு அரசியலில் மக்களிடையே பிரிவினைகளை வளர்த்துப் பிழைத்து வந்த 'ஒட்டுண்ணிகளை' சருகாக்கி சமூகக் குப்பைத்தொட்டியில் ஒதுக்குவதற்கும் கந்த சஷ்டி கவசம்துணை செய்துள்ளது.

எனவே கந்த சஷ்டி கவசம்மூலமாக, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சி நிச்சயமாகி விட்டது. தேசியக்கட்சிகளின் சுயநலன்களுக்கு தமிழ்நாடு பலிகடா ஆக இனி  வாய்ப்பில்லை.

Thursday, July 23, 2020

பா.ஜ.கவின் அனுகூல சத்ருவாக‌


தி.மு.கவிற்கு உதவும் மாரிதாஸ்



திமுகவினர் செய்யும் முறைகேடுகளை, தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் வெளியிட்டு  விமர்சிப்பவர் மாரிதாஸ்.  அதே போல்  மத்திய பாஜக அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மக்கள் நல திட்டங்களையும் ஆதரித்து தனது தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவு செய்து வருகிறார். பாஜகவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மாரிதாஸ், திமுகவினர் மீது நான் வைத்து குற்றசாட்டிற்கு இதுவரை பதில் இல்லை என்றார் மாறாக  தினமும் காலை முதல் இரவுவரை தொலைபேசியில் அழைத்து திமுகவினர் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர் என்றார்.இன்னும் ஒரு சிலரோ, திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் முதல் குறி உனக்குதான் என்றும் என்னை எச்சரிக்கின்றனர்  என்று அவர் கூறினார்.- ‘திமுக ஒரு ரவுடி கட்சிதான்...!! ஸ்டாலினை கழுவி ஊத்தி... உப்புகண்டம் போட்ட மாரிதாஸ்...!!... 

"தி.மு.க ஒரு ரவுடி கட்சிதான்...!!" என்பதை ஒத்துக்கொண்டால், 'அ.இ.அ.தி.மு.க அதை விட பெரிய ரவுடி கட்சி' என்பதை மாரிதாஸ் ஒத்துக்கொண்டாக வேண்டும்.

கருணாநிதியின் 'அறிவியல் ஊழலில்' தப்பித்திருந்த ஏரிகள், ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம் 1991க்குப் பின் தான், ஊழல் பேராசைக்கு இலக்காகியது, என்பது மாரிதாசுக்குத் தெரியாதா? கங்கை அமரன், அமிர்தாஞ்சன், பாலு ஜிவல்லரி, ஏ.ஆர்.ரகுமான், தொடங்கி சத்யம் தியேட்டர்ஸ்  வரை எண்ணற்றோரின் தனியார் சொத்துக்களை கொலை செய்தும், அச்சுறுத்தியும் அபகரிக்கும் போக்கும், தமிழ்நாட்டில் 1991 முதல் தான் அரங்கேறியது என்பதும் மாரிதாசுக்குத் தெரியாதா?

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, சசிகலா தலைமையிலான அ.இ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சியானது 'தாய்க்கழகம்'  தி.கவுக்கு நேசமான ஆட்சியாக இருக்கும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், சசிகலாவை ஆதரித்து தி.க தலைவர் கி.வீரமணி கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியது மாரிதாஸுக்கு தெரியாதா?

"சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர். இனி வாளும்-கேடயமாய் நின்று அதிமுகவுக்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டமாகும். போகப்போக இது மற்றவர்களுக்குப் புரியும். வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா? நமக்கு தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்."

சசிகலா தலைமையிலான அ.இ.அ.தி.மு.கவா? ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவா? என்ற கேள்வி எழுந்தால், நான் உள்ளிட்டு நானறிந்த மோடி ஆதரவாளர்கள் எல்லாம், தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பரவாயில்லை என்றே முடிவெடுப்போம்.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் 'இந்திரா காங்கிரஸ் - தி.மு.க' கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்ததை மனதில் கொண்டு, கருணாநிதியின் அழுத்தத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சியை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கலைத்தார். அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்கு அவமானகரமான தோல்வியைக் கொடுத்து, எம்.ஜி.ஆரை மீண்டும் முதல்வராக்கியது தமிழ்நாடு. எம்.ஜி.ஆர் மரணிக்கும் வரை ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவுக்கு கருணாநிதி குடும்ப அரசியல் மீது வெறுப்பு ஆழமாக தமிழ்நாட்டில் இருந்தது. 1991 முதல் அரங்கேறிய ஊழல் சுனாமி ஆட்சியில், ஜெயலலிதாவை முன்னிறுத்தி செயல்பட்ட‌ சசிகலா குடும்ப அரசியல் மீது இன்னும் ஆழமான வெறுப்பு அரங்கேறியதன் காரணமாகவே, 1996இல் கருணாநிதி முதல்வராக முடிந்தது. 

இவையெல்லாம் தெரியாமல், இன்று "தி.மு.க ஒரு ரவுடி கட்சிதான்...!!"  என்ற வாதத்தினை மாரிதாஸ் முன்வைத்ததும், அதனை பா.ஜ.கவினர் ஆதரித்ததும் ஆகிய போக்குகள் தொடருமானால், வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறுவது நிச்சயமாகி விடும்.

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் முதலில் ஒத்தி வைப்பு, சோதனை, கைது, பின் குற்றவாளி ஜாமினில் வெளிவந்து, அடுத்து நடந்த அதே இடைத்தேர்தலில் பா.ஜ.க-வை நோட்டா கட்சியாக்கி, சட்டசபை எதிர்க்கட்சியான தி.மு.கவை டெபாசீட் இழக்க வைத்து, ஆளுங்கட்சியையும் தோற்கடித்து, ஜெயலலிதா வாங்கிய வாக்குகளை விட சுயேட்சையாக போட்டியிட்டவர் அதிக வாக்குகள் பெற்றதானது, மத்திய அரசின் ஊழல் ஒழிப்பானது வடிவேல் பாணி காமெடியா?  என்ற கேள்வியை எழுப்பியது.
(https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html)

2014 முதல் மோடி பிரதமராக ஆட்சி செய்து வருகிறாரே. தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், நடந்த ஊழல் ஒழிப்பு சோதனைகளும் என்ன ஆயிற்று? என்பதைப் பற்றி மூச்சு விடாமல், தி.மு.க‌ ஊழல்களைப் பற்றி புள்ளி விபரங்களுடன் மாரிதாஸ் உள்ளிட்ட‌  மோடி ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் பரப்புரை செய்வது கோமாளித்தனம் ஆகாதா
(‘தேசிய அரசியலில் தமிழ்நாட்டைக் காவு கொடுத்த பிரதமர் இந்திரா பாணியில் பிரதமர் மோடியும் பயணிக்கிறாரா? தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்பு கூடுகிறதா?’; https://tamilsdirection.blogspot.com/2020/06/14.html)

தி.மு.கவின் குடும்ப அரசியலை தீவிரமாக எதிர்த்து வரும் மாரிதாஸ், சசிகலா குடும்ப அரசியலை ஆதரிக்கிறாரா? என்ற கேள்வியை, கீழ்வரும் காணொளி எழுப்பியுள்ளது.

"சசிகலா" அவர்கள் விடுதலை சாத்தியமா? Sasikala will be released on August 14? | Maridhas Answers ;

சிறையில் சசிகலாவின் நன்னடத்தையின் யோக்கியதையை கீழ்வரும் சான்று வெளிப்படுத்தியுள்ளது.

The 295-page report by retired IAS officer Vinay Kumar confirmed then DIG (Prisons) D Roopa's claims in July 2017 that Sasikala was given preferential treatment and a separate kitchen functioned for her at the Parappana Agrahara Central Jailhere, RTI activist Narasimha Murthy said. (https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sasikala-given-preferential-treatment-in-prison-inquiry-report/articleshow/67614876.cms?from=mdr)

ஆக கர்நாடகத்தில் உள்ள பா.ஜ.க அரசும், மத்தியில் உள்ள மோடி அரசும் பின்பற்றும் 'நன்னடைத்தையின் யோக்கியதை' மாரிதாஸ் தெரிவித்தபடி இருக்குமானால், அது நாட்டிற்கு கேடு விளைவிப்பதாகி விடும்.

மேற்குறிப்பிட்ட சான்று பற்றி மூச்சு விடாத மாரிதாசின் காணொளியானது,மாரிதாஸ், சசிகலா குடும்ப அரசியலை ஆதரிக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பாதா?

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சை மற்றும் மரணம் காரணமாக‌, ஜெயலலிதாவின் விசுவாசிகள் மற்றும் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) விரும்பிகள் மத்தியில் வளர்ந்து வரும் சமூகக் கோபமானதுஅறிவியல் ஊழலை அறிமுகப்படுத்திய கருணாநிதி மீது இருந்த கோபத்தை பின்னுக்கு தள்ளி விட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் சசிகலா குடும்பத்தின் கட்டளைக்கு உட்பட்டு அப்பொல்லோவில் (ஒளிபரப்பான) கீழ்தளத்தில் நின்று பேசிய பேச்சுக்களும், ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக‌ (ஊடக வெளிச்சத்துடன்) குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அவமதிக்கப்பட்டு) மட்டுமே சூழ, ராஜாஜி மண்டபத்தில் இருந்த ஜெயலலிதா உடலுக்கு (நேரடி ஒளிபரப்பில்) அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும் நடராஜனையும் வணங்கிய‌ மோடி தாமாகவே வலிய வந்து மேற்குறிப்பிட்ட கோபத்தின் குவியமாகி, ஸ்டாலினைக் காப்பாற்றி விட்டார். அதன்பின் 2ஜி குற்றவாளிகள் விடுதலையான பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க நோட்டாக்கட்சியானது.

தமிழக மக்களின் நாடித்துடிப்புடன் தொடர்புள்ள‌ அந்த சமூக செயல்நுட்பம் புரியாமல், இன்று வரை தமிழக பா.ஜ.க பயணித்து வருவது தமிழ்நாட்டின் தூரதிர்ஷ்டமே ஆகும்.

மாரிதாஸ் போன்றவர்களின் சசிகலா ஆதரவுப் போக்கானதுமேற்குறிப்பிட்ட கோபத்தின் குவிய வலிமையை நிச்சயமாகக் கூட்டும் அபாயமும் இருக்கிறது.


மோடி அரசின் ஊழல் ஒழிப்பில் உள்ள பலகீனங்களை கீழ்வரும் Tweets-இல் மோடி ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

‘Despite scam after scam involving #MafiaQueen of @INCIndia, she still continues to run amok.
Is it because she has dossiers on all important politicians cutting across party lines?
She is known for her blackmail skills!’  - Madhu Purnima Kishwar on twitter

Comment on the above tweet

‘Despite scam after scam involving Dravida Mafia families, they continue to run amok, probably with similar skills.’ 

குடும்ப ஊழல் கட்சிகளை ஒழிக்க வாய்ப்பு கிடைக்கும் வரையில், தமிழக வாக்காளர்கள் முடிந்த அளவுக்கு தேர்தல்களில் அறுவடை செய்வார்கள். எனவே தமிழ்நாட்டில் ஊழல் பெருச்சாளிகளை பாரபட்சமின்றி ஒழிக்கும் வரையில், தமிழக பா.ஜ.க நோட்டாக்கட்சியாகத் தான் பயணித்தாக வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பொதுவாழ்வில் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்க, மத்திய அரசுடன் நேசமான கட்சியாகவே இருக்கும். தேர்தலில் தமிழக பா.ஜ.க  எந்த கட்சியுடனும் கூட்டணி சேர்ந்து, அந்தக்கட்சியின் வெற்றி வாய்ப்பினைக் குறைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

சசிகலா குடும்ப அரசியலை ஆதரித்துக் கொண்டு, கருணாநிதியின் குடும்ப அரசியலை மட்டுமே எதிர்த்து மாரிதாஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகள் எல்லாம் அதே போக்கில் தொடருமானால், வரும் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு நம்பமுடியாத அதிர்ச்சித் தோல்விக்கு முக்கிய காரணமான 'அனுகூல சத்ருவாக' மாரிதாஸ் பங்களித்தது வெட்ட வெளிச்சமாகி விடும்.

ஈ.வெ.ராவிற்கு 'யுனெஸ்கோ விருது' என்பதில் உள்ள தவறையும், வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ராவின் பங்கை வழிபாட்டுப்போக்கில் மிகைப்படுத்தும் தவறையும், தி.க தொடர்பான விமர்சனத்தில் மாரிதாஸ் சுட்டிக்காட்டுவது சரியே. அந்தப் போக்கில், வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ராவின் பங்கினை சிறுமைப்படுத்துவது என்பதானது, பா.ஜ.கவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் பெரிய தவறாகும்;

என்பதை பழ.அதியமான் எழுதிய 'வைக்கம் போராட்டம்' நூலைப் படித்தவர்கள் அறிவார்கள்.

கடந்த கால தலைவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் எடை போடுவதற்கும், அவர்களின் கொள்கைகளை 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தி எடைபோடுவதற்கும், உள்ள வேறுபாட்டினை மறந்து;

இரண்டும் கெட்டானாக எடை போட்டு, அவர்களை பாராட்டுவதும், தூற்றுவதும் அறிவுபூர்வ அணுகுமுறையாகாது. 
(https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

மாரிதாஸ் பாணியில், எச்.ராஜா ஈ.வெ.ராவை விமர்சித்து வருவது தொடர்பாக, கீழ்வரும் எச்சரிக்கையை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

சீனப் போருக்குப் பின், தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த பிரதமர் நேரு, பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ராவின் பிரிவினை கோரிக்கையைக் குறிப்பிட்டு, கோபமாக 'இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லையென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' என்று பேசினார்.  அதற்குப் பின் நடந்த 1967 தேர்தலில் தமிழ்நாட்டின் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட‌ காங்கிரஸ் கட்சியானது, இன்றுவரை திராவிடக்கட்சிகளின் வாலாகவே பயணித்து வருகிறது.

எனவே எச்,ராஜா போன்ற பா.ஜ.க தலைவர்கள் எல்லாம் ஈ.வெ.ராவை, நேரு பாணியில், உணர்ச்சிபூர்வமாக கண்டிக்கும் வரையில், தமிழ்நாட்டில் பா.ஜ.கவானது நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டியிருக்கும். 
(https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html

மாரிதாஸ் ஒரு கல்லூரி ஆசிரியர் என்று அறிகிறேன். படித்த  காலத்திலும், பணியாற்றுகிற காலத்திலும் தம்மைச் சுற்றி நடந்த, நடக்கும் அநீதிகளை எல்லாம் தம்மால் இயன்ற அளவுக்கு எதிர்த்து வந்துள்ளாரா? அல்லது 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' ஒதுங்கி பாதுகாப்புடன் பயணித்து வந்துள்ளாரா? என்று எனக்கு தெரியாது.

நான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக 1965 முதல் 1968 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவன். 1971 இல் கல்லூரி ஆசிரியரானது முதல் பணி ஓய்வு பெறும் வரை நான் பணியாற்றிய கல்லூரிகளில் நீதிக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். முதல் முறையாக கல்லூரி ஆசிரியர்கள் சிறை சென்ற போராட்டத்தில், ஆசிரியர் கழக செயலாளர் ஒதுங்க, அவர் கோரிக்கையை ஏற்று நான் செயலாளராகி போராட்டத்தை முன்னெடுத்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுடன் சிறை சென்றேன். அதன்பின் நடந்த சிறை செல்லும் போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டவன். நானாயிருந்தாலும், எனக்கு மிகவும் வேண்டியவர்களாயிருந்தாலும் எந்த பாராட்சமின்றி செயல்பட்டு வருவதே எனது வலிமையாகும். தமக்கு ஒரு நீதி, தமக்கு பிடிக்காதவருக்கு வேறு நீதி, என்ற போக்கில் நான் செயல்பட்டதில்லை.

ஆனால், மாரிதாஸ் 'தமக்கு ஒரு நீதி, தமக்கு பிடிக்காதவருக்கு வேறு நீதி' என்ற போக்கில் செயல்படுகிறாரா? என்ற ஐயம் எழுந்துள்ளது.

தினமும் காலை முதல் இரவுவரை தொலைபேசியில் அழைத்து திமுகவினர் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர் என்றார்.இன்னும் ஒரு சிலரோ, திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் முதல் குறி உனக்குதான் என்றும் என்னை எச்சரிக்கின்றனர்  என்று மேலே குறிப்பிட்ட சான்றில் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்தியில் மோடி ஆட்சி. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி. தொலைபேசியில் அச்சுறுத்தியவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கவில்லை என்றால், அதை மாரிதாஸ் கண்டிக்க வேண்டாமா?

மாரிதாஸ் தூண்டி, 'தினமும் காலை முதல் இரவுவரை தொலைபேசியில் அழைத்து கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் விட்டுள்ளனர்' என்று பேரா.சுப.வீ காவல் துறையிட‌ம் உரிய சான்றுகளுடன் புகார் கொடுத்துள்ளார்.
(https://www.youtube.com/watch?v=FDsRSG1O1C4)

அவ்வாறு சுப.வீக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை எல்லாம் கடுமையாகக் கண்டித்து ஒரு காணொளி வெளியிட்டு, சுப.வீயை நேரில் சந்தித்து அவருக்கு தமது பேச்சால் விளைந்த துயரங்களுக்கு மன்னிப்பு கேட்டு அவரின் புகாருக்கு நீதி வேண்டி துணையாக மாரிதாஸ் நின்றிருக்க வேண்டும்;

என்னைப்போல பாரபட்சமின்றி செயல்படுபவராக இருந்தால். 

ஆனால் 'சுப.வீக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களைக் கண்டிக்காமல், 'அச்சுறுத்தல் விடுத்தவர்களை நான் தான் தூண்டினேன் என்று நிரூபித்தால்?' என்ற சாதாரண அரசியல்வாதியைப் போல மாரிதாஸ் பேசிய காணொளி என்னைக் கவலைக்குள்ளாகியது. இன்றைய மாணவர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக மாரிதாஸ் வெளிப்படுவார், அதே போக்கில் பயணித்தால். 

இளம் வயது. திருந்தி பயணிக்க அவகாசம் இருக்கிறது. எனவே தாமதமின்றி,

சுப.வீக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை எல்லாம் கடுமையாகக் கண்டித்து ஒரு காணொளி வெளியிட்டு, சுப.வீயை நேரில் சந்தித்து அவருக்கு தமது பேச்சால் விளைந்த துயரங்களுக்கு மன்னிப்பு கேட்டு அவரின் புகாருக்கு நீதி வேண்டி துணையாக மாரிதாஸ் நிற்க‌ வேண்டும்.

எந்த கட்சியின் சார்பாகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் தொலைபேசியில் வசைபாடி துன்புறுத்தும் சிற்றின நபர்களை டிஜிட்டல் யுகத்தில் தண்டிக்காத அரசுகள் எல்லாம் கையாலாகாத அரசுகளே ஆகும். சுப.வீயும் மாரிதாஸும் ஒன்று சேர்ந்து முயற்சித்தால், இருவரையும் துன்புறுத்திய நபர்கள் தண்டிக்கப்படுவதும் சாத்தியமாகும்.

தமிழ்நாட்டில் பொது அரங்கில் பிரபலமான சுப.வீ, மாரிதாஸ் போன்ற கல்லூரி ஆசிரியர் பணியில் இருந்தவர்களும், இருப்பவர்களும் சமூகப் பொறுப்புடன் கூடிய நாகரீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். அது தான் அவர்களுக்கும் நல்லது; தமிழ்நாட்டிற்கும் நல்லது. 
 


குறிப்பு:


சசிகலாவின் பினாமி ஆட்சியாக கூவத்தூரில் ஈ.பி.எஸ் முதல்வரானார். பின் ஓ.பி.எஸ் 'புரட்சி' நடந்தது. பின் அணிகள் இணைய ஓ.பி.எஸ் துணை முதல்வரானார். சசிகலா, மத்தியில் மோடி அரசு, தி.மு.க என்ற மும்முனையின் பின்னணியில் உள்ள அழுத்தங்களை இன்றுவரை வெற்றிகரமாக சமாளித்து வருகிறது ஈ.பி.எஸ் ஆட்சி.

எந்திரவியலில் இயக்கத்தன்மையில் (dynamic) உள்ள மூன்று திசைகளில் செயல்படும் விசைகளின் (Forces) தொகுவிளைவாக (Resultant) 'தற்காலிக சமநிலை' (Temporary Equilibrium) உருவாக வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு சமூக எந்திரவியலில், அத்தகைய சமநிலையில் ஈ.பி.எஸ் அரசானது நீடித்து வருகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின் தான், அந்த சமநிலையின் யோக்கியதையும் தெளிவாகும். அதன்பின் தான், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையிலான கட்சியானது, மேற்குறிப்பிட்ட விவாதத்தில் இடம் பெறும் யோக்கியதைக்கு உள்ளாகும்.



படிக்கவும்:

February 8, 2017 'நிமிர்ந்தது ஓபிஎஸ் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சுயமரியாதையும் கூட' ;  https://tamilsdirection.blogspot.com/2017/02/digital-age-2017.html



July 12, 2017 ‘'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌ சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன:


அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 'கருணாநிதி பட்டுக் கூட்டுறவு சங்கம்' எனக் கூறியதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி, 'எப்படி கருணாநிதி பெயரை உச்சரிக்கலாம்' என, எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ஓ.எஸ்.மணியன், 'அவர் எங்கள் ஊர்க்காரர்' என, ஊர் பாசம் காட்ட, தி.மு.க.,வினர் திகைத்தனர்.


அமைச்சர்கள் பதிலுரையின் போது, கருணாநிதியை விமர்சிப்பதையும், தி.மு.க., அரசு மீது, கடுமையான குற்றங்கள் சுமத்துவதையும் தவிர்த்தனர். சட்டசபையில் ஒரு நாள், துரைமுருகன் எழுந்து, அமைச்சர் உதயகுமாரை, 'லாபி'க்கு வரும்படி கூற, அமைச்சர் ஓடிச் சென்றதை காண முடிந்தது.’ (https://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_12.html)

March 17, 2020 ராஜாஜியும், ஈ.வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பம்?’