Saturday, August 8, 2020


நோவாம் சோம்ஸ்கி மூலம் வெளிப்பட்ட பாடம்:


தெரியாததை தெரியாது' என்று கூச்சமின்றி தெரிவிக்கும்  துணிச்சல் வேண்டும்.



தமக்கு தெரியாததை 'தெரியாது' என்று கூச்சமின்றி தெரிவிக்க ஒரு துணிச்சல் வேண்டும். அதிலும் உலக அளவில் புகழ்பெற்ற புலமையாளராக இருந்தால், அவ்வாறு தெரிவிக்க அதீத துணிச்சல் வேண்டும். அது போன்ற அனுபவமானது நோவாம் சோம்ஸ்கியிடம் (https://en.wikipedia.org/wiki/Noam_Chomsky) இருந்து எனக்குக் கிடைத்தது.

உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குமான ‘உலகப் பொது இலக்கணம்’ (Universal Grammar) என்பதானது சோம்ஸ்கியின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் உலக ஆராய்ச்சியாளர்களிடையே விவாதப்போரானது நடைபெற்று வருகிறது.

Multiple scholars have challenged universal grammar on the grounds of the evolutionary infeasibility of its genetic basis for language, the lack of universal characteristics between languages, and the unproven link between innate/universal structures and the structures of specific languages. ; 

இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பதையே, நான் கண்டுபிடித்துள்ளேன். அதனை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழிலும் வெளியிட்டுள்ளேன்.

The logic behind the above  ‘parallel’ -applicable to all world languages,  was discovered in Tholkappiam, and published with the title ‘Musical Phonetics in tholkAppiam’ in December 2013, in The journal from the International Institute of Tamil Studies, (Taramani, Chennai; 

தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள 'உலகப் பொது இசைப்பாடல் இலக்கணம்' (Universal Grammar for musically rendered poems) கண்டுபிடிப்பானது, சோம்ஸ்கியின் ‘உலகப் பொது இலக்கணம்’ தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தர வல்லவையாகும். எனவே மேற்குறிப்பிட்ட எனது ஆய்வுக்கட்டுரை தொடர்பாக கீழ்வரும் மடலை நோவாம் சோம்ஸ்கிக்கு அனுப்பினேன்.

அதற்கு கீழ்வருமாறு நோவாம் சோம்ஸ்கி பதில் அளித்தார்.

“Fascinating.  I’ll try to find some time to pursue it.”  -Noam Chomsky 7 Sep, 2018

சோம்ஸ்கியின் ‘உலகப் பொது இலக்கணம்’ அணுகுமுறையில், எனது கட்டுரையை மாற்றி எழுதி;

‘Musical Linguistics; applicable to the musically rendered poems in world languages; Non-semantic and music related rules for poems, discovered in ancient Tamil grammar tholkAppiam’ என்ற தலைப்பிலான கட்டுரையினை அவருக்கு அனுப்பினேன்.

அதற்கு கீழ்வருமாறு நோவாம் சோம்ஸ்கி பதில் அளித்தார்.

‘Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘musical linguistics’
– Noam Chomsky 23 Sep, 2018

உலகில் உள்ள பல்கலைகழகங்களில் 'மொழியியல்' (Linguistics) என்ற துறை ஏற்கனவே உள்ளது.

புதிதாக 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற துறையானது தொல்காப்பியம் மூலமாக உருவாக, நோவாம் சோம்ஸ்கியின் அங்கீகாரமானது மேற்குறிப்பிட்ட அவரின் மடல் மூலமாக கிடைத்துள்ளது.

'மொழியியல்' அடிப்படையில், 'Natural Language Processing -NLP’  மூலமாக 'speech -to- text; text-to- speech; spell check; grammar check; etc' போன்ற மென்பொருட்கள் உலகில் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அது போலவே, தொல்காப்பியத்தின் ' இசை மொழியியல்' அடிப்படையில், 'lyrical text to music – to song; music to lyrical text; musical grammat check; etc' போன்ற மென்பொருட்களை உருவாக்க முடியும்.

இந்தியாவில் NLP தொடர்பான ஆய்வுகளில் முன்னணியில் உள்ள பேராசிரியர், எனது ஆய்வுக்கட்டுரையினைப் படித்த பின், கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

” Very interesting. And happy to know that you are working on it.''
  - Dr. Rajeev Sangal, FNAE, Professor (Area: Computer Sc & Engg), Language Technologies Research Center, IIIT Hyderabad

தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள 'உலகப் பொது இசைப்பாடல் இலக்கணம்'  (Universal Grammar for musically rendered poems) கண்டுபிடிப்பானது, சோம்ஸ்கியின் உலகப் பொது இலக்கணம்தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தர முடியும்? என்ற எனது விளக்கத்தினை அவருக்கு அனுப்பினேன். அவரிடமிருந்து கீழ்வரும் பதில் வந்தது.

“Thanks for sending.  Beyond my competence to express an opinion.”
 – Noam Chomsky 2 Feb, 2019

எனது விளக்கம் புரிய வேண்டுமானால், 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) பற்றிய அறிவு வேண்டும். எனவே என்னால் இயன்றவரை அவருக்கு புரிய வைக்கும் நோக்கில், ஒரு 'PPT' உருவாக்கி அனுப்பினேன்.

அவரிடமிருந்து கீழ்வரும் பதில் வந்தது.

“Wish I knew enough to comment seriously.  Unfortunately, I don’t.”
– Noam Chomsky 15 December, 2019,

சோம்ஸ்கியின் உலகப் பொது இலக்கணம்தொடர்பாக முன் வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தொல்காப்பியம் மூலமாக தர முடியும்என்பது நிரூபிக்கப்பட்டால், தொல்காப்பியமானது எந்த அளவுக்கு உலக அளவில் 'Natural Language Processing -NLP' புலமையாளர்களின் கவனத்தை ஈர்க்கும், என்பதை நான் அறிவேன். எனது ஆய்வு முடிவுக்கு வலிவு சேர்க்கும் ஆய்வுக்கட்டுரை ஒன்று எனது தேடலில் கிடைத்தது. எனவே கீழ்வரும் மடலை அவருக்கு அனுப்பினேன்.

Dear Prof.Noam Chomsky,

I felt the following, complimenting my findings, may deserve your attention.

'in music has two distinct levels. The “surface” level relates to the apparent corporeal articulation such as the activated psychomotor program of a music performer, visible gestures in response to music, and rhythmic entrainment. The primary (though concealed) “deep” level of embodied cognition relates to the main coding aspects in music: the tonal relationships arranged in time.'; Two-Level Model of Embodied​ Cognition in Music, Korsakova-Kreyn, 2018.pdf

With regards,
S.A.Veerapandian March 13, 2020

அவரிடமிருந்து கீழ்வரும் பதில் வந்தது.

“Sounds plausible, but I don’t know enough to have a useful opinion.”
– Noam Chomsky March 14, 2020

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கீழ்வருவதாகும்.

1. 'தமக்கு விளங்காததை, விளங்கவில்லை' என்று நோவாம் சோம்ஸ்கி தெரிவித்துள்ளார்.

2. அவரின் உலகப் பொது இலக்கணம்தொடர்பாக முன் வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் வெளிப்பட்டாலும், அந்த விளக்கம் தமக்கு விளங்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

3. அதே நேரத்தில், ‘உலகப் பொது இலக்கணம்தொடர்பாக முன் வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தொல்காப்பியம் மூலமாக தர வாய்ப்பிருப்பதையும் 'நம்பத்தகுந்தது- Sounds plausible ' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

நோவாம் சோம்ஸ்கி உள்ளிட்ட உலக அளவில் புகழ் பெற்ற 'மொழியியல்' புலமையாளர்கள் எல்லாம், 'நவீன மொழியியல்' என்ற துறையில் சமஸ்கிருத மொழியின் பங்களிப்பினை அங்கீகரித்து பாராட்டி வருகிறார்கள்.

அது போல, தமிழ் மொழியையயும் நோவாம் சோம்ஸ்கி அங்கீகரித்துள்ளதாக பொய்களையும் சில தமிழ் ஆர்வலர்கள் பரப்பி வருகிறார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்ப்பேராசிரியர் அவ்வாறு தெரிவித்ததை நம்பி, அது தொடர்பாக, நோவாம் சோம்ஸ்கியை நான் தொடர்பு கொண்ட போது, அவரிடமிருந்து கீழ்வரும் பதில் வந்தது.

“Read your letter with interest, but I suspect you may be confusing me with someone else.  I have never written anything on Tamil, and know nothing about the language.  It would be best for you to contact people who do.”
– Noam Chomsky 10 Sep, 2009

தமிழைப் பற்றிய இது போன்ற தவறான தகவல்கள் மற்றும் அரைகுறை சான்றுகளின் அடிப்படையில் வெளிவரும் ஆய்வுகள் எல்லாம், உலக அரங்கில் தமிழின் 'பிராண்ட்' மதிப்பை எந்த அளவுக்கு கீழிறக்கியுள்ளது? என்பதையும் நான் விளக்கியுள்ளேன். 

தமிழில் நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகளைப் போல, சமஸ்கிருத மொழியில் மேற்கொண்டு வரும் ஆய்வுகளை எல்லாம், சமஸ்கிருத ஆர்வலர்கள் நன்கு ஊக்குவித்து வருகிறார்கள். (‘World interest to study the ancient Texts in Sanskrit for the development of Science, Technology, Philosophy, etc are growing in modern times. (Spanish scholar Oscar Pujol Riembau; 

நவீன மொழியியலில் (Modern Linguistics) சமஸ்கிருத மொழியின் பங்களிப்பானது உரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

The development of phonetics in the West was also strongly influenced at this period, as were many of the details of the more philological analysis of the Indo-European languages, by the discovery of the works of the Indian grammarians who, from the time of the Sanskrit grammarian Panini, if not before, had arrived at a much more comprehensive and scientific theory of phonetics, phonology, and morphology than anything achieved in the West until the modern period. 

மேற்குறிப்பிட்ட பின்னணியில் சமஸ்கிருதத்தின் துணையுடன், உலக மொழிகளுக்கான‌ 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையானது, தொல்காப்பியம் மூலமாக துவங்கும் வாய்ப்பினையும் கீழ்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளேன். 
(‘Why anti-Sanskrit is harmful to the Tamil development?’; 

உலக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் எல்லாம், சந்தைப்படுத்தக் கூடிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை நோக்கி, ஆய்வுப் படையெடுப்பு தொடங்குவதும், உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் இசைத் துறைகளின் கவனத்தை ஈர்ப்பதும், இன்னும் எத்தனை வருடங்கள் தாமதமாவது?

நிகழ்காலத்தில், உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும், இது போன்ற அவலம் நேர்ந்துள்ளதா

'தெரியாததை தெரியாது' என்று துணிச்சலுடன் அறிவித்து நோவாம் சோம்ஸ்கி போல பயணிக்கும் புலமையாளர்களே புலமையில் வளர முடியும்.

அதைத் தவிர்த்தால், வளர்ச்சி முடங்கி நோஞ்சான் புலமையாளராவதைத் தவிர்க்க முடியாது.

தமக்கு லாபமா? நட்டமா? என்ற சுயலாபக் கணக்கில் சிக்காமல், மலரும் ஆராய்ச்சிகளை எல்லாம் நோவாம் சோம்ஸ்கி போல ஊக்குவிப்பதன் மூலமே, புலமையின் வளர்ச்சிக்கான சூழல் அமைப்பினை (Ecosystem) ஊக்குவிக்க முடியும்.

அதைத் தவிர்த்தால், நோஞ்சான் சூழல் அமைப்பு உருவாவதையும் தவிர்க்க முடியாது.

ஒரு மொழியில் இருந்து வெளிப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி உலகம் பல‌ன் பெறும் வகையில், சமஸ்கிருதம் தொடர்பான சூழல் அமைப்பு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது? தமிழ் தொடர்பான சூழல் அமைப்பு எவ்வளவு மோசமாக செயல்படுகிறது? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை அறியலாம்.

நோஞ்சான் சூழல் அமைப்பில், நோஞ்சான் புலமையாளர்களிடம் தமிழானது சிறையுண்டிருக்கிறது. 
(‘கருணாநிதி - நாகசாமி கூட்டணியால் தமிழுக்கு நேர்ந்த பாதிப்புகள்? மீட்சிக்கான வாய்ப்புகள்?’;
https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post_8.html)

எனவே, நிகழ்காலத்தில் உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும் நேராத‌ இது போன்ற அவலமானது, தமிழுக்கு  நேர்ந்துள்ளது.
(‘'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமை?’; 
https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html)

கொரொனாவின் மூலமாக, பிணங்களாக வாழ்பவர்களின் சமூக வெளியில் இருந்து, பிண வாடையற்ற சமூகவெளி பிரியும் 'சமூக தளவிளவு' (Social Polarization) என்பதானது, அதிசயமான முறையில் அரங்கேறி வருகிறது. 

இது 'டிஜிட்டல் உலகம்'. எனது தலைமுறை போலின்றி, இன்றைய மாணவர்களும், படித்தவர்களும் உணர்ச்சிபூர்வ பேச்சுக்களில், எழுத்துக்களில் ஏமாற மாட்டார்கள். உள்மறை வேலைத்திட்டங்களுடன் (Hidden Agenda) 'தமிழ்/தமிழ் இசை' வளர்ச்சி என்று ஏமாற்றி, உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு தடைகளாக பயணிப்பதும் கடினமாகும்.

அவர்களின் வேலை வாய்ப்புகள், தொழில், வியாபார வாய்ப்புகள் தொடர்புள்ள‌ தமிழ் ஆய்வுகளுக்கு தடைகளாக பயணிப்பவர்கள் எல்லாம், அவர்களின் கண்காணிப்பில்(scrutiny) சிக்கும் காலமும் நெருங்கி வருகிறது. 


குறிப்பு:

இசையில் கூட, அதற்கென தனிப்பயிற்சி இன்றி, என்னால் விளங்கிக் கொள்ள முடியாதவை நிறைய உண்டு. 1990களில், எனது முனைவர் பட்ட நெறியாளரிடம் (Guide) தாளம் பற்றிய புத்தகத்தைப் படித்து, ஐயங்கள் கேட்ட போது, 'சார், மிருதங்கம் போல, ஏதாவது ஒரு தாளக்கருவி நீங்கள் வாசிக்க கற்று கொண்டால் தான், உங்கள் ஐயங்களை நான் தெளிவுபடுத்த முடியும்' என்றார். ஏற்கனவே 'கிடார்', 'ஆர்மோனியம்' முறையாக ஆசிரியரிடம் கற்றிருந்த நான், பின் ஒரு வருடம் மிருதங்க ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதன்பின் தான், எனது ஐயங்கள் தெளிவாகி, மேற்கொண்டு அரிய கண்டுபிடிப்புகளுக்கு அதுவே வழியானது. 

Friday, August 7, 2020


துக்ளக்கில் திராவிடப் பொய்கள்:


1971 தேர்தலில் ராமர் சிலையை இழிவுபடுத்தி விட்டு வெற்றி பெற்றதாக வீரமணி கூறுவது முழுப் பொய்யா?



கி.வீரமணி அறிக்கை கடந்த 22.7.2020 அன்று விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது.

1971- ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்ததோ, அதே நிலைதான் 2021 தேர்தலில் நடக்கும்.

எப்படியும் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து, 1971 பொதுத் தேர்தலில் தேர்தலுக்குச் சம்பந்தம் இல்லாமல், சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலத்தில் ராமர் பட விஷயத்தில், பழைய ஜன சங்கத்தினர் ஏற்படுத்திய நிகழ்வின் விளைவு எதிர் விளைவாக கடைசி நேர பிரசாரமாக ஊதிப் பெருக்கினார்கள். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதைப் போலவே வரும் தேர்தலும் அவர்களுக்குப் பாடம் புகட்டும். வெற்றியே நமது இலக்கு. அலட்சியப்படுத்த வேண்டியதை அலட்சியப்படுத்துவீர்" என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

1971 தேர்தலில் ராமர் சிலையை இழிவுபடுத்தி விட்டு வெற்றி பெற்றதாக வீரமணி கூறுவது முழுப் பொய். ஆனால் முதல் பொய் அல்ல. அதைப் போல மூவாயிரம் பொய்களை இவர்கள் பேசி இருக்கிறார்கள்,”- ‘திராவிடப் பொய்கள்  -  சுப்பு ; துக்ளக்(05-08-2020)

1967 தேர்தலில் தான் ராஜாஜியின் முயற்சியில் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் தி..மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு 179 (மொத்த தொகுதிகள்:234) தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 174 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 137 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்து அண்ணா முதல்வரானார். 

1969  இல் அண்ணா மறைய, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின் தள்ளி கருணாநிதி முதல்வரானார். 1971இல் காங்கிரசைப் பிளந்து, மன்னர் மான்ய ஒழிப்பு, வங்கிகள் தேசவுடைமை போன்றவற்றின் மூலமாக, மக்களிடம் செல்வாக்கு பெற்ற இந்திராகாந்தி, 1971இல் பாராளுமன்ற தேர்தலைச் சந்தித்தார். கருணாநிதி இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலைச் சந்தித்தார். கருணாநிதி முதல்வரான பின் நடந்த அந்த தேர்தலில், தி.மு.க 184 தொகுதிகளில் வென்று, சரித்திரம் படைத்தது.

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், துக்ளக் இதழில் "1971 தேர்தலில் ராமர் சிலையை இழிவுபடுத்தி விட்டு வெற்றி பெற்றதாக வீரமணி கூறுவது முழுப் பொய்." என்று சுப்பு எழுதியது தவறாகும்.

ஆனால், சுப்பு முன்பு துக்ளக்கில் தி.கவை எதிர்த்து எழுதிய ஆதார பூர்வமான கட்டுரைகளையும், அதே பாணியில் அவர் எழுதிய புத்தகத்தையும் நான் படித்திருக்கிறேன்.

தமிழ் தொடர்பாக, ஈ.வெ.ராவின் 'தாய்ப்பால் பைத்தியம்' நிலைப்பாட்டில் இருந்து தி.மு.க தடம் புரண்டு, திரிந்து, உணர்ச்சிபூர்வ போக்கினை வளர்த்து, தமிழ்நாட்டை எவ்வாறு சீரழித்தது
(‘தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்குக் கேடானதா? தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் இடையே வேறுபாடுகள்?’; 
https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

என்ற ஆய்வுக்கு துணை புரியும் சான்றுகளை எல்லாம்அண்ணா தொடர்பான 'தீ பரவட்டும்' விவாதத்தில் சுப்பு வெளிப்படுத்தியுள்ளார். 

இந்துத்வா ஆதரவு முகாமாக இருந்தாலும், எதிர்ப்பு முகாமாக இருந்தாலும், தமது பங்களிப்பைக் காரணம் காட்டி பணம், பதவி, புகழ் பெறும் திசையில் பயணிப்பவர்களே  அதிகம். அதில் விதி விலக்காக பயணிப்பவர்களையே நான் மதிப்பவன். அவ்வாறு நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் சுப்பு ஆவார்.

எந்த அடிப்படையில் மேற்குறிப்பிட்டவாறு 'முழுப் பொய்' என்று சுப்பு எழுதினார்? என்பது எனக்கு விளங்கவில்லை. அவர் எழுதியது தொடர் கட்டுரையின் தொடக்கமே. இனி வரும் கட்டுரைகளில் அதற்கான விளக்கம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறு விளக்கம் வருமானால், அதனையும் எனது ஆய்வுக்கு உட்படுத்துவேன்.

அதுவரை, "1971 தேர்தலில் ராமர் சிலையை இழிவுபடுத்தி விட்டு வெற்றி பெற்றதாக வீரமணி கூறுவது"  முழு உண்மை என்பதே எனது நிலைப்பாடு ஆகும்.

1971 பொதுத் தேர்தலில் தேர்தலுக்கு முன், சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டது தேர்தல் பிரச்சினையாக மக்கள் கருதவில்லை. முன்பு ராஜாஜி முதல்வராக இருந்த போது கும்பகோணத்தில் இந்து கடவுள்களை அடித்து  ஈவெரா ஊர்வலம் நடத்தினார். சட்டப்படி நடவடிக்கை எடுத்து பெரிதுபடுத்த விரும்பாததால், எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று ராஜாஜி முடிவு செய்ததாக, ஈவெரா பேசி நான் கேட்டிருக்கிறேன்.

ஆனால் கி.வீரமணி தமது அறிக்கையில் 1971 தேர்தல் வெற்றியைக் குறிப்பிட்டு, "அதைப் போலவே வரும் தேர்தலும் அவர்களுக்குப் பாடம் புகட்டும். வெற்றியே நமது இலக்கு. அலட்சியப்படுத்த வேண்டியதை அலட்சியப்படுத்துவீர்" என்று எழுதியிருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

அவ்வாறு அலட்சியப்படுத்தினால், கி.வீரமணியின் அடுத்த கட்டம் அவருக்கே எவ்வாறு ஆபத்தான விளைவில் முடியும் வாய்ப்பும் இருக்கிறது? என்பதையும் அடுத்து பார்ப்போம்.

ராஜாஜி ஆட்சியிலும், பின் 1971இல் சேலத்திலும் நடந்த சர்ச்சைகளில் இருந்து கந்த சஷ்டி கவசம்சர்ச்சையானது எவ்வாறு வேறுபட்டது? அது திகவின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கப் போகிறது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

தமிழ்நாட்டில் அரசியல் ஆர்வமுள்ளவர்களில், ஒப்பீட்டளவில், செயல்பூர்வமாக அதிக சமூக நேர்மையுடன் வாழ்பவர்கள் 'பெரியார்' ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எனது அறிவு மற்றும் அனுபவம் அடிப்படையிலான புரிதல் ஆகும்.

எனவே 'பெரியார்' முகாம்களில், உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அறிவுலகில் கோமாளியாகும் போக்கில் பயணிப்பவர்களிடமிருந்து;

உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளின் அடிப்படைகளில், தமது நிலைப்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி வரும் 'பெரியார்' ஆதரவாளர்கள் பிரியும், சமூக தள விளைவு (Social Polarization) பிரிதல் என்பதானது, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கும்;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும். கூடுதலாக, 'பெரியார்' சிறையில் இருந்து ஈ.வெ.ரா விடுதலை ஆகி, அதன் தொடர்விளைவாக, 'பெரியார்' முகமூடி பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆட்டங்களும் அடங்கும்.

அரைகுறை அறிவுடன் தம்மை அதிபுத்திசாலியாகக் கருதிகொண்டு, அபத்தமான வாதங்களை முன்வைத்தவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் இணையத்தில் தடயங்களாக வலம் வருகின்றன. தமிழ்நாட்டில் சமூகப்புழுதிகள் அடங்கி, புலமை மீட்சி அரங்கேறிய பின்னர், முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்கு அந்த தடயங்கள் உதவும். 

கந்த சஷ்டி கவசம்மூலமாக 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம் எவ்வாறு 'சமூகத் தளவிளைவுநெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் இரைச்சலைத் தேடுபவர்கள் எல்லாம் எதிர்மறை சிந்தனையில் (Negative thinking) சிக்கியவர்கள் ஆவார்கள்.

Negative thinking is a thought process where people tend to find the worst in everything, or reduce their expectations by considering the worst possible scenarios.

எதிர்மறை சிந்தனையால் விளையும் கேடுகளில் இருந்து விடுபட கீழ்வரும் வழிமுறையை உளவியல் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தாம் தவறு செய்துவிட்டதை மனமாற உணர்ந்து திருந்துவதே, எதிர்மறை சிந்தனையில் இருந்து விடுதலை பெற்று நேர்மறை சிந்தனையை நோக்கிப் பயணிப்பதன் தொடக்கமாகும்.

வைக்கம் போராட்ட வீரர் ஈ.வெ.ராவிற்கும், 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் காரணமாக, ரசனையில் வீழ்ச்சியுடன் பொதுவாழ்வு வியாபாரிகளும் முளைவிட்டு வளர்ந்தார்கள்.

தாய்மொழித் தமிழ், இலக்கியங்கள், புராணங்கள் போன்ற சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களில் இருந்து ஈ.வெ.ரா விலகத் தொடங்கியதே, அந்த வீழ்ச்சிகளுக்கு காரணமானது.

எனவே வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் பயணித்தால் மட்டுமே, இனி 'பெரியார்' கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபட முடியும். தவிர்த்தால் ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்.. அதுவே 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடமாகும். 


குறிப்பு:

எதிர்நிலைப்பாடுகளில் உள்ளவர்களையும் தனிப்பட்ட முறையில் இழிவு செய்து ஈ.வெ.ரா அவர்கள் விவாதித்த‌ போக்கானது, 1944க்கு முன் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களில் வெளிப்படவில்லை. இன்று கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும் அந்த பாணியில் விவாதிப்பதை கேலிக்கு உட்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. எனவே கி.வீரமணியும், விடுதலை இதழும் 1944க்கு முன் ஈ.வெ.ரா எழுதிய பாணியைப் பின்பற்றுவதே அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது. 

உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம், அறிவுபூர்வ விவாதத்தின் ஊடே, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்று சேர்ந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும், மீட்க முடியும் என்பதும், எனது கணிப்பாகும். 
(https://tamilsdirection.blogspot.com/2017/09/1944.html)

'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.'-  ஈ.வெ.ரா
(பக்கம் 94, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்)

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால், அதே திசையில் தான் ஈ.வெ.ரா அவர்கள் பயணித்திருப்பார். தி.க, தி.மு.க போன்ற கட்சிகள் உருவாகியிருக்காது.

Sunday, August 2, 2020



என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே,


ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள்?


கந்த சஷ்டி கவசம்வெளிப்படுத்திய‌ பாடங்கள்?



தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நவீன கார்களில் பயணம் செய்பவர்களுக்கு, காரின் என்ஜீன் (engine) ஓடும் சத்தம் கூட கேட்காது. ஓடும் காரின் என்ஜீன் நின்று போனாலும், ஏற்கனவே ஓடி வந்த வேகத்தில் கொஞ்ச தூரம் ஓடும். அது தெரியாமல், பயணம் செய்பவர்கள் தமக்குள் உற்சாகமாக கதை பேசி கொண்டிருந்தால் என்ன ஆகும்? கார் நின்ற பின்பு, அதற்கான காரணத்தை வாடகைக் கார் ஓட்டுநர் (பண்புள்ளவராக இருந்தால் எரிச்சலின்றி) தெரிவித்த பின்பு,  அது தெரிய வரும்.

ஈ.வெ.ரா இந்து கடவுள்களைப் பற்றி பேசியதைக் கூட, இனி 'பெரியார்' கட்சிகள் பிரச்சாரம் செய்ய முடியுமா? என்பதும் சந்தேகமே. 'கறுப்பர் கூட்டம்' வழக்குகள் தம் மீதும் பாயாத அளவுக்கு, நிகழ்காலத்தில் இந்து கடவுள்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த ஒளிப்பதிவுகளை இணையத்தில் இருந்து நீக்கினால் மட்டுமே தப்பிக்க முடியும்.

அது மட்டுமல்ல, இனி பொது இடங்களில் இந்து கடவுள்களை கேலி செய்யும் நிகழ்ச்சிகளை, 'பெரியார்' கட்சிகள் உள்ளிட்டு எவரும் நடத்த முடியாத சமூக சூழலும் உருவாகி வருகிறது.


மேற்குறிப்பிட்ட கருத்துக்கு, கீழ்வரும் பின்னூட்டம் வந்தது.

"கருத்து சுதந்திரம், விமர்சனம் தவறு என்றாகி விடாதா?"

அதற்கு எனது விளக்கம் வருமாறு:

எது விமர்சனம்? எது விமர்சனத்திற்கான வரம்பு மீறி கேலி கிண்டல் இழிவு? என்பது நீதிபதியின் பார்வையைப் பொறுத்தது. சட்டம் படித்தவன் என்ற அடிப்படையில் எனது கருத்து: 

ஈவெரா இந்து கடவுள்கள் பற்றி பேசியவற்றில் பெரும்பாலானவை சட்டப்படி தண்டிக்கத்தக்கதாகும்.  திராவிட கட்சிகளின் ஆட்சி என்பதால் தண்டிக்கவில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சட்டத்தின் ஆட்சி உள்ள எந்த நாட்டிலும் அதை அனுமதிக்க மாட்டார்கள். சிங்கப்பூரில் கூடுதலாக பிரம்படி தண்டனை கிடைத்தாலும் வியப்பில்லை.

மேற்குறிப்பிட்ட எனது விளக்கத்திற்கு, கீழ்வரும் பின்னூட்டம் வந்தது.

"இராஜாஜிகாமராசர்ஓமந்தூரார்பக்தவச்சலம் ஆட்சிக் காலத்திலும் இது போல பெரியார் பேசி வந்துள்ளாரே."

அதற்கு எனது விளக்கம் வருமாறு:

ஆமாம். ராஜாஜி முதல்வராக இருந்த போது கும்பகோணத்தில் இந்து கடவுள்களை அடித்து ஈவெரா ஊர்வலம் நடத்தினார். சட்டப்படி நடவடிக்கை எடுத்து பெரிதுபடுத்த விரும்பாததால், எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று ராஜாஜி முடிவு செய்ததாக, ஈவெரா பேசி நான் கேட்டிருக்கிறேன். வைக்கம் போராட்டம் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்  ஈவெராவிற்கு தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்தியது. எனவே ஆட்சியாளர்கள் அவரை சகித்துக்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட எனது விளக்கத்திற்கு, கீழ்வரும் பின்னூட்டம் வந்தது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களிலோ, உலகில் மற்ற நாடுகளிலோ நாத்திகப் பிரச்சாரம் அனுமதிக்கப்படுவதில்லையா?”

அதற்கு எனது விளக்கம் வருமாறு:

இங்கர்சால் பெட்ரண்ட் ரஸ்ஸல் வடநாட்டு நாத்திகர்கள் உள்ளிட்டு உலக அளவில் நான் படித்தவற்றில் இருந்தவைக்கும் ஈவெராவிடம் வெளிப்பட்டவைக்கும் வேறுபாடு உண்டு. அவர்களுக்கு எல்லாம் நாத்திகம் முதன்மை நோக்கமாக இருந்தது. பார்ப்பன எதிர்ப்பே ஈவெராவை நாத்திகம் திசையில் பயணிக்கச் செய்தது. அந்த கலவையாக அவர் மேற்கொண்ட நாத்திகப்பிரச்சாரம் உணர்ச்சி பூர்வமாக இழிவுபடுத்தி கண்டிப்பதாக  வெளிப்பட்டது. 
(https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

இராமரைக் கடவுளாக வணங்குவது போலவே, இராவணனையும் பிராமணர்கள் உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக வணங்குவது தெரியாமல், ஈ.வெ.ரா இராமரை எதிர்த்து, இராவணனை ஆதரித்ததானது, எவ்வளவு அபத்தமான நிலைப்பாடு? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

மேற்குறிப்பிட்ட ஈவெராவிற்கு இருந்த‌ செல்வாக்கின் காரணமாக, அவரின் நாத்திகப் பிரச்சாரத்தை சகித்துக்கொண்ட ஆத்தீகத்தமிழர்கள் இன்று பெரும்பாலும் 70 வயதிற்கும் அதிகமானவர்கள் ஆவார்கள்.

ஈ.வெ.ராவின் இந்தி  மற்றும் மதுவிலக்கு தொடர்பான நிலைப்பாடுகளில் இருந்து 'பெரியார்' கட்சிகள் தடம் புரண்டு தி.மு.கவின் வாலாகப் பயணித்து வருகின்றனர். ஈ.வெ.ராவைப் பின் தள்ளி, பிரபாகரனை பிம்பமான முன்னுதாரணமாக்கி அவர்கள் பயணித்து வருகின்றனர். 
(‘‘Periyar’ parties’ ipso facto rejection of EVR -  LTTE Prabakaran replacing ‘Periyar’ E.V.R in Tamilnadu?’; 

எனவே மதிக்கத்தக்க ஈ.வெ.ரா இருளில் சிக்க, தி.க மற்றும் தி.மு.க மீதுள்ள கோபங்களின் குவியமாக 'பெரியார்' சிக்கி நம்ப முடியாத அளவுக்கு இழிவுபடுத்தப்படுகிறார்.

அதன் தொகுவிளைவாக, ஈ.வெ.ரா மூலமாக கிடைத்த எரிபொருள் வற்றிய சூழலில், ஊழலை நிர்வாகப்பிரச்சினையாகக் கருதி, பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒட்டிப் பயணிக்காமல், ஊழல் தலைவர்களை எல்லாம் புரவலர்களாகக் கருதி 'பெரியார்' கட்சிகள் பயணித்துள்ளார்கள்.

'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க பா.ஜ.க, போன்ற இன்னும் பல அரசியல் கட்சிகளானாலும், அந்த கட்சிகள் செயல்படுவதற்கான சுயவலிமை என்பதானது, சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகளுடன் தொடர்பில் இருக்கும் வரை தான் நீடிக்கும். அந்த தொடர்பு துண்டிக்குமானால், வெளி உதவியில், 'செயற்கை சுவாசத்தில்' அந்த கட்சிகள் நீண்ட காலம் நீடிக்க முடியாது.

அந்தத் தொடர்பு துண்டிக்கப்படாமல், பழுதடையலாம். பழுதைக் கண்டுபிடித்து சரி செய்தால் தப்பிக்கலாம். அவ்வாறு சரி செய்வதில் தோல்வியுற்றால், என்ன ஆகும்? நாளாக, நாளாக, பழுது அதிகரித்து, சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகளுடன் இருந்த தொடர்பு குறையும் போக்கும் அதிகரிக்கும். அதன் தொடர்ச்சியாக, அந்த தொடர்பு துண்டிக்கப்படும்.

அவ்வாறு துண்டிக்கப்பட்டதும் தெரியாமல், அக்கட்சிகள் பயணிப்பதற்கும், மேற்குறிப்பிட்ட காரில் பயணித்தவர்களுக்கும் வேறுபாடு கிடையாது.

1919 முதல் 1944 வரை ஈ.வெ.ரா அவர்களும், அவர் வழியில் எண்ணற்றோரும், சேமித்து வளர்த்து வந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 1944இல் தமிழ்ச் சொல்லான 'இனம்' பொருளில் திரிந்து, 'திராவிடர் கழகம்' உருவான சமூக செயல்நுட்பமும் திரிதலுக்கு உள்ளாகி, பொதுவாழ்வு வியாபாரப் போக்கானது முளை விட்டது. அதன் விளைவாக, அந்த சமூக ஆற்றல்களை எல்லாம் உணர்ச்சிபூர்வ போக்கில் அபகரித்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்ட வடிகால் மூலமாக ஈ.வெ.ரா வசம் இருந்த சமூக நேர்மையுள்ள சமூக ஆற்றல்களை எல்லாம் அழித்து, 1967இல் ஆட்சியை தி.மு.க‌ பிடித்தது. அதன்பின் ஆதாய அரசியல் மூலமாக அரசியல் நீக்கத்தை ஊக்குவித்து, வளர்ந்த பொதுவாழ்வு வியாபார சமூக ஆற்றல்களின் உண்மையான பலமானது, எவ்வாறு செல்லாக்காசு ஆனது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(‘ஈ.வெ. ரா -வின் வெளிப்படையான சாராம்சத்தை விட்டு விலகி, 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணிக்கிறார்களா? 'பெரியார்' பிம்பம்' ஈ.வெ.ராவின் சமாதியாகுமா?’ ; 

மத்தியில் சமரசமற்ற பாரபட்சமற்ற ஊழல் ஒழிப்பு முயற்சிகள் தீவிரமானால், தி.மு.க உள்ளிட்ட ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், 'செல்லாக்காசு' ஆகிவிட்டதும் வெட்ட வெளிச்சமாகி விடும். மத்திய ஆட்சியிலும், பா.ஜ.கவிலும் உள்ள 'ஊழல் பாதுகாப்பு கவசங்கள்' செல்லாக்காசாகும் வரையிலும் தான், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நீடிக்க முடியும்.

'ஆதாய அரசியலில்' வளர்ந்த அரசியல் நீக்கத்தில், கொள்கைகள் எல்லாம் சருகாகி, 'தனிநபர் விசுவாசம்'அரங்கேறுவதானது தவிர்க்க இயலாததாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில், 'தனிநபர் விசுவாசம்' அடிப்படையில் மக்கள் செல்வாக்கோடு பயணித்த தலைவர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் கடைசி தலைவர் ஜெயலலிதா ஆவார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் அடிமட்ட மக்களின் துன்பங்களை ஆரம்ப காலத்தில் அனுபவித்து,பின் திராவிட அரசியல் வளர்ச்சிக் கட்டத்தில் பயணித்து, முதல்வர் ஆன பின்னால், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களால் அவமானப்படுத்தப்பட்ட புலமையாளர்கள் யார்? என்று அவர்களை (கி.ஆ.பெ.விஸ்வநாதன், டார்பிடோ ஜனார்த்தனம் போன்றவர்களை) தேடி கண்டுபிடித்து, தமக்கு பக்கபலமாக கொண்டு,முதல்வராகப் பயணித்தார்.


எம்.ஜி.ஆரை விட அதிக கல்வியறிவு கொண்ட ஜெயலலிதா அவர்கள், (எனது பார்வையில்) காமராஜரை விட  அதிக துணிச்சலை, 1991-இல் முதல்வரானதிலிருந்து சாகும் வரை வெளிப்படுத்தினார்; கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளிலும்; அம்மா உணவகம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களிலும்.

ஆனால் மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆருக்கு இருந்த பக்கபலமின்றி, சசிகலா குடும்ப வலைப்பின்னலில் சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி(Social Insulation), முதல்வராக ஜெயலலிதா பயணித்ததே, எவ்வாறு அவரின் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும் மரணத்திற்கும் வழி வகுத்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

முதல்வர் ஜெயலலிதா பெங்களுரில் சிறையில் இருந்த காலத்தில், குக்கிராமத்திலிருந்து வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி, தனது கிராமத்தில், 'சசிகலா செய்த தவறுக்காக தான், அம்மா (ஜெயலலிதா) சிறைக்கு போக நேரிட்டது' என்று, தமது கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் பேசிக் கொள்வதாக‌, தெரிவித்தார். 

தமக்கு எதிரான சதி என்று ஜெயலலிதா வெளிப்படுத்தி, சசிகலாவும் அதை தனது மன்னிப்பு கடிதத்தில் ஒப்புக் கொண்டு; அது தொடர்பாகவும்;

ஜெயலலிதா அப்பொல்லோவில் சேர்க்கப்பட்டது முதல் மரணமடைந்து இறுதி சடங்குகள் நிகழ்ந்தது வரை, எழுப்பப்படும் ஐயங்கள் தொடர்பாகவும்;

இதுவரை சசிகலா விளக்கம் தராத நிலையிலும், அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டவர்கள் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளா? அல்லது தமது சுயநலனுக்காக, ஜெயலலிதா, சசிகலா மட்டுமல்ல, எவரையும் காவு கொடுக்க தயங்காத சுயநல பேர்வழிகளா?

அவர்களின் ஆதரவானது சசிகலாவிற்கு பலமா? பலகீனமா?

ஜெயலலிதாவிற்கே துரோகம் இழைத்தவர்கள்,  சசிகலாவிற்கு துரோகம் இழைக்க மாட்டார்களா?

தமது காலில் விழுபவர்களில் யார்? யார்? வாய்ப்பு கிடைக்கும்போது, தமது காலை வாரி, தம்மை படுகுழியில் தள்ளப் போகிறார்கள்? என்ற கவலையானது, சசிகலாவிற்கு இருந்தால், வியப்பில்லை.

சசிகலா மட்டுமின்றி, ஆதாய அரசியலில் பயணிக்கும் அனைத்து தலைவர்களுக்கும், எச்சரிக்கை தரும், வரலாற்றுப் பாடமாகி விட்டார் ஜெயலலிதா


திருக்குறள் (471) நெறி மறந்து, ஜானகி எம்.ஜி.ஆர் வழியில், அவர் சந்தித்ததை விட, இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ள திசையில், சசிகலாவின் அரசியல் பயணமானது, துவங்கி விட்டது. 

இன்றும் அதிகம் படிக்காத சாமான்யர்கள் மத்தியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு நீடிக்கிறது.
 
ஆனால் அ.இ.அ.தி.மு.க கட்சிகளின் நிர்வாகிகள் எல்லாம், மற்ற கட்சிகளைப் போலவே, 'எந்தப்பக்கம் காற்றடிக்கிறது?' என்று நுகர்ந்து தத்தம் வசதி வாய்ப்புகளை உயர்த்திக் கொள்வதிலேயே குறியாக உள்ளார்கள். எனவே அந்த செல்வாக்கின் பலன் அ.இ.அ.தி.மு.கவிற்கு எந்த அளவுக்குப் பயன்படும்? என்பதும் கேள்விக்குறியே ஆகும்.

ஆக, ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகளுடன் தொடர்பறுந்து பயணிக்கும் கட்சிகளே ஆகும்.

1944இல் முளை விட்டு வளர்ந்த பொதுவாழ்வு வியாபாரப் போக்கினை எதிர்க்காமலும், தமது 'என்ஜீன்' நின்று போனது தெரியாமலும், பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதரவில் பயணித்த‌ 'பெரியார்' கட்சிகளின் எதிர்காலத்தை கந்த சஷ்டி கவசம்சர்ச்சையானது கேள்விக்குறியாக்கி விட்டது.

தனிமனிதராக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும், குறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தும் செயல்நுட்பத்திற்கு உள்ளாகவில்லை என்றால், தரத்தில் வீழ்ச்சி என்பது தவிர்க்க இயலாததாகும். 

சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகண்கள் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

சமூகத்தில் தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம் மனங்களில் அவை தொடர்புள்ள தேவைகளையும்(Needs) , ஈடுபாடுகளையும் (Interests)  தோற்றுவித்து வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு வழங்கி, எவ்வாறு ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு சமூக இழைகள்(social fibers)  போன்றும், சமூகப் பிணைப்புகள் (social bonds) போன்றும் செயல்படுகின்றன.என்பவை தொடர்பான எனது ஆய்வுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(https://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களுடன் தொடர்பு முறிந்து பயணிக்கும் போக்கில், 'நேர்மை வழிகாட்டியானது' (Ethical Compass) எவ்வாறு சீரழியும்? என்ற முனைவர் பட்ட‌ ஆய்வினை மேற்கொள்பவர்களுக்கு, என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்.


ஊழல் ஆட்சிகளில் மக்கள் படும் அவதிகளை கண்டுகொள்ளாமலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 'நமது குடும்பம் இல்லை' என்ற துணிச்சலிலும், மனசாட்சியை அடகு வைத்து, 'தனித்தமிழ்நாடு' போதையில் பயணித்ததும், 'இந்து கடவுள்களை கேலி கிண்டல் செய்து மகிழ்ந்ததும் தவறு என்பதை இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும்.
('‘கந்த சஷ்டி கவசம்மூலமாக 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு 'சமூகத் தளவிளைவுநெருக்கடி

வைக்கம் போராட்ட வீரர் ஈ.வெ.ராவிற்கும், 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் காரணமாக, ரசனையில் வீழ்ச்சியுடன் பொதுவாழ்வு வியாபாரிகளும் முளைவிட்டு வளர்ந்தார்கள்.

தாய்மொழித் தமிழ், இலக்கியங்கள், புராணங்கள் போன்ற சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களில் இருந்து ஈ.வெ.ரா விலகத் தொடங்கியதே, அந்த வீழ்ச்சிகளுக்கு காரணமானது.

ஈ.வெ.ரா தொடங்கி வைத்த ரசனை வீழ்ச்சியானது, எவ்வாறு ஈ.வெ.ராவிற்கே எமனாக மாறியது? என்பதையும் விளக்கியுள்ளேன்.

'பிரிவினை' பற்றி ஈ.வெ.ராவைப் போல துணிச்சலாக 'நியாயப்படுத்தி' இன்று பேச முடியுமா? இந்து கடவுள்களை கண்டித்து ஈ.வெ.ரா பேசியபோது, 'சகித்துக் கொண்ட' ஆத்தீக தமிழர்கள், இன்று அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்களா?

எனவே வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் பயணித்தால் மட்டுமே, இனி 'பெரியார்' கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபட முடியும். தவிர்த்தால் ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்.. அதுவே 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடமாகும். 

சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகண்களுடன் தொடர்பு கொண்டு, மீண்டும் தமது சமூக என்ஜீனை உயிர்ப்பித்து வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் 'பெரியார்' கட்சிகள் பயணிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் இந்தி பயில்வதை ஈ.வெ.ரா எதிர்க்கவில்லை. மத்திய அரசின் செலவில், மத்திய அரசில் பணியாற்றும் தமிழர்கள் இந்தி பயில்வதை அவர் ஆதரித்தார். இந்தி பிரச்சினையில் 'பெரியார் தந்த புத்தியில்' இருந்து தி.க தடம் புரண்டு, தி.மு.க திசையில் பயணிப்பது தவறாகும். 
(https://tamilsdirection.blogspot.com/2019/09/3.html

தி.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் புதிய கல்விக்கொள்கையை எந்த அளவுக்கு எதிர்க்கிறார்களோ, அந்த அளவுக்கு கீழ்வரும் கோரிக்கையும் வலிமையாகும்.

தமிழ்நாட்டில் செயல்படும் சி.பி.எஸ்.இ (C.B.S.E) பள்ளிகளிலும், சர்வதேசப் பள்ளிகளிலும் (International Schools) இரு மொழி கொள்கையை அமுல்படுத்த வேண்டும். அது முடியாதெனில், தமிழக அரசு பள்ளிகளிலும் அப்பள்ளிகளைப் போல இந்தி படிக்க அனுமதிக்க வேண்டும்.

கட்சித்தலைவர்களின் குடும்பப் பிள்ளைகளுக்கு ஒரு நீதி? சாமான்யர்களின் பிள்ளைகளுக்கு வேறு நீதியா?

ஆக. 'புதிய கல்விக்கொள்கையும்' இன்னொரு கந்த சஷ்டி கவசம்சர்ச்சையாகும் அபாயத்தையும் திராவிடக் கட்சிகள் சந்திக்கப் போகின்றன. இதில் சந்தேகம் உள்ளவர்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுடன் உரையாடி உண்மையை உணரலாம்.

1944இல் முளை விட்டதானது, ஆதாய அரசியலில் தமிழையும் தமிழ்நாட்டையும் சீரழித்தது. 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடத்தை விளங்கிக் கொண்டு, உரிய திருத்தங்களுடன் 'பெரியார்' கட்சிகள் 'வைக்கம்' ஈ.வெ.ராவைப் போல‌ பயணித்தால், அதன் தொடர்விளைவாக, தமிழ்நாடானது ஆதாய அரசியலில் இருந்து விடுபட்டு, ஆக்கபூர்வ அரசியல் திசையில் பயணிக்கும்.

அது போலவே, தாய்மொழித் தமிழ், இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றை முன் நிறுத்தி 'தமிழ் இந்துத்வா' திசையில் பயணித்தால் மட்டுமே இந்துத்வா கட்சிகள் தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியும். அத்தகைய தமிழத்துவா மூலமே, இந்தியர் என்ற அடையாளமும், தேசியக்கட்சிகளும் தமிழ்நாட்டில் வளர முடியும்.

இவையெல்லாம் கந்த சஷ்டி கவசம்மூலமாக வெளிப்பட்டுள்ள பாடங்கள் ஆகும்.


குறிப்பு: 'ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே; ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே';   https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html